Sri Mahavishnu Info: கோயிலில் நுழையும் போது கோயில் கதவைத் தாண்டித் தான் செல்ல வேண்டும் என்று குறிப்பிடுவது ஏன்?.... கோயிலில் நுழையும் போது கோயில் கதவைத் தாண்டித் தான் செல்ல வேண்டும் என்று குறிப்பிடுவது ஏன்?....
```
📿 வைணவ அடிப்படைகள் 🛕 108 திவ்யதேசங்கள் 📜 நாலாயிர திவ்யபிரபந்தம் 🎧 தினசரி ஸ்லோகங்கள் 📅 இன்றைய வைபவம் 🙏 தினசரி பக்தி வழிகாட்டி ❓ பக்தி கேள்வி & பதில்கள் 📖 ஆன்மீக நூல்கள் 🧒 குழந்தைகள் பக்தி பகுதி 🎓 ஸ்ரீவைஷ்ணவ பாடசாலை 🔱 விஷ்ணு சஹஸ்ரநாமம் 🌄 ஸ்ரீ வெங்கடேச மஹாத்மியம் 🌺 திருப்பாவை 👣 வைஷ்ணவ ஆச்சார்யர்கள் 🛕 திருத்தல தரிசனம் 🔔 கோவில் விழாக்கள் 📜 பக்தர் அனுபவங்கள் ✨ அற்புத நிகழ்வுகள் 🕉️ நாமஸ்மரணையின் மகிமை 📚 பக்தி குறிப்புகள் 🌸 ஆழ்வார்கள் வரலாறு 🙏 ஸ்ரீவைஷ்ணவ சம்பிரதாயம் 🎙️ பக்தி உரைகள் & ஆடியோ 📆 ஸ்ரீவைஷ்ணவ நாட்காட்டி 🌟 புதிய பக்தி பதிவுகள்

கோயிலில் நுழையும் போது கோயில் கதவைத் தாண்டித் தான் செல்ல வேண்டும் என்று குறிப்பிடுவது ஏன்?....

Sri Mahavishnu Info
அவ்வாறு கூறுவதற்கான காரணங்களைப் பற்றி இங்கு காண்போம்.
கோயிலில் நுழையும் முன்..

கோயிலில் நுழைவதற்கு முன்னர் ஆறு, குளம் அல்லது வெளியில் நிச்சயம் தண்ணீர் குழாய் இருக்கும். அதில் கால், பாதங்களைக் கழுவி விட்டு தான் கோயிலுக்குள் நுழைய வேண்டும்.

கை மற்றும் கால்களை கழுவிய பின்னர், சில துளிகள் தண்ணீரை எடுத்து தலையில் சுற்றித் தெளித்துக் கொள்ள வேண்டும்.

கடவுளை வணங்குவதற்கு நம் உடலை தயார்படுத்திக் கொள்ள மேற்கண்டவாறு செய்ய வேண்டும். அடுத்ததாக, கோயிலுக்குள் நுழைவதற்கு முன், கோயில் கோபுரத்தையும் அவற்றில் உள்ள கலசங்களையும் பார்த்து முதலில் வணங்கிக் கொள்ள வேண்டும்.

அதன்பின்னர், வாயிலில் காவலுக்காக நின்று கொண்டிருக்கிற துவார பாலகர்களை வணங்கி, அவர்களிடம் உள்ளே செல்வதற்கு அனுமதி வாங்கிக் கொண்டு, உள்ளே செல்ல வேண்டும்.

வாயிற்படியை தாண்டினால் அர்த்தம்.

கோயிலின் நுழைவாயிலில் குறுக்காக இருக்கின்ற வாயிற்படியின் மேல் ஏறி நிற்கக் கூடாது. தாண்டி தான் செல்ல வேண்டும். அந்த படியை தாண்டிச் சென்றால் நாள் கொண்டு வந்திருக்கும் பாவங்கள், எதிர்மறை எண்ணங்கள், மனதில் இருக்கும் கவலைகள், வினையான காரியங்கள், ஆகிய கெட்ட விஷயங்கள் எல்லாவற்றையும் இங்கேயே விட்டுவிட்டு, கோயிலுக்குள் வெறும் சாதாரண மனிதனாக, எந்த எண்ண ஓட்டங்களும் இல்லாமல் தெளிவான நீரோடை போல தான் வருகின்றேன் என்று அர்த்தம்.

வாயிற்படியை மிதித்தால் அர்த்தம்.

வாயிற்படியை தாண்டாமல் மேல் ஏறி, மிதித்து உள்ளே சென்றால், மனதில் இருக்கும் அனைத்து எதிர்மறை எண்ணங்களையும் மனதுக்குள் சுமந்து கொண்டே தான் கோயிலுக்குள் வருகிறேன் என்று அர்த்தம்.

இறைவன் குடியிருக்கும் கோயில் என்பது, நாள் முழுவதும் கூறப்படுகின்ற மந்திரங்களினாலும் நாதஸ்வரம், கெட்டி மேளங்கள் போன்ற மங்களகரமான இசையினாலும் முழுக்க முழுக்க நேர்மறை அதிர்வுகளால் நிரம்பியிருக்கும். அதனாலேயே அந்த நுழைவு வாயிலைத் தாண்டிச் செல்ல வேண்டும் என்பது தான் ஐதீகம்.
4 Vedhas 18 Puranas

📖 4 வேதங்கள் + 18 புராணங்கள்

இப்போது எளிய தமிழில் (PDF)

சனாதன தர்மத்தின் ஆன்மீக பொக்கிஷத்தை
உங்கள் மொபைலில் பெறுங்கள் 🙏

🎁 வெறும் ₹199 மட்டும்!

🔗 மேலும் விவரங்கள் அறிய
💜

பக்தர்கள் சொல்கிறார்கள்

இந்த தளத்தை வாசித்த பிறகு, என் மனம் சாந்தியையும் நம்பிக்கையையும் பெற்றது.
🌸 ரமேஷ், மதுரை

இங்கே உள்ள ஆன்மிக விளக்கங்கள் தெளிவாகவும் எளிமையாகவும் இருக்கின்றன.
🌼 சிந்து, தஞ்சாவூர்

இந்த தளம் என் வீட்டில் ஒரு புனித இடமாகவே மாறியுள்ளது.
🌺 கிருஷ்ணன், கோவை

என் ஆன்மிகப் பயணத்தில் வழிகாட்டியாக இந்த தளம் இருந்தது. நன்றி!
🌹 சுகந்தி, சென்னை

நான் தேடிய பல தகவல்களை இங்கு ஒரே இடத்தில் நேர்த்தியாகப் பெற்றேன்.
💠 லலிதா, ஈரோடு

இந்த தளம் தினசரி ஒரு நல்ல எண்ணத்தை என் உள்ளத்தில் விதைக்கிறது.
🌿 அருண், திருநெல்வேலி

WhatsApp
CHANNEL
🛕
📜
🏠
🎧
📚