📿 வைணவ அடிப்படைகள் | 🛕 திவ்யதேச வரலாறுகள் | 📘 நாலாயிர திவ்யபிரபந்தம் | 🎧 ஸ்லோகங்கள் | 📅 தினசரி பக்தி வழிகாட்டி | ❓ பக்தி கேள்விகள் | 📖 ஆன்மீக நூல்கள் | 🧒 குழந்தைகள் பக்தி பகுதி | 🛕 தரிசன நேரங்கள் | 📜 பக்தர் அனுபவம் | 🛐 ஸ்ரீவைணவ பாடசாலை | 🗓️ ஸ்ரீவைணவ நாட்காட்டி | 🔱 விஷ்ணு சஹஸ்ரநாமம் | 🌄 ஸ்ரீ வெங்கடேச மஹாத்மியம் | 🌺 திருப்பாவை | 🛕 திருத்தல தரிசனம் | ✨ அற்புத நிகழ்வுகள் | 👣 வைஷ்ணவ ஆச்சாரியர்கள் | 🕉️ நாமஸ்மரணையின் மகிமை | 🎙️ பக்தி ஸ்லோகங்கள் | 🔔 கோவில் விழாக்கள்

திருமண் காப்பு பற்றி அறிவோம்

Sri Mahavishnu Info
புண்ட்ரம் என்றால் ரேகை!

ஊர்த்வ புண்ட்ரம் என்பது நெற்றியில் நாசிகாமூலம்  முதல்  கேச பர்யந்தம் மேல்நோக்கி ரேகைகளாக தரிப்பது!

திருமண் காப்பின் வகைகள்!...வடிவங்கள்...!

தீப ஜ்வாலை
மூங்கில் இலை
தாமரை மொட்டு
ஆம்பல்
மீன்
ஆமை
சங்கு
புளியம் இலை
என்று....இப்படியெல்லாம் உண்டு!

ஆனால்...வைணவனுக்கு....விஷ்ணுபாத வடிவம்உள்ள திருமண் காப்பு தரிக்கத்தக்கது!
இரண்டு பாதங்கள் போன்ற ரேகைகள்...

நடுவில்  ஶ்ரீசூர்ணம் . 

 திருமண் காப்பு ..எம்பெருமானின்  இரண்டு திருவடிகள்!

திருவடிகளாகிய  மரத்திற்கு  வேர் போன்றது  மூக்கில் உள்ள பீடம்!

அதில் இருந்து இரண்டு கிளைகள்!
அவைகளுக்கு இடையில் இடைவெளி  குறைந்தது...1 அங்குலம் இருக்க வேண்டுமாம்!
அந்த இடைவெளி ஶ்ரீமஹாலக்ஷ்மீ தாயாரின் ப்ரதிஷ்டைக்காக உள்ளது!
ஹரித்ரா என்ற மஞ்சள்,குங்கும பூ, போன்ற  வஸ்துக்களால் ஶ்ரீசூர்ணம் தயாரிக்கப் படிகிறது!

ஶ்ரீசூர்ணம் தீபத்தின் ஒளியைப்போல ..அதாவது,தீப ஜ்வாலை எப்படி இருக்குமோ அப்படி நாம் நெற்றியில் தரிக்க வேண்டும்!

பெரிய பிராட்டியாரை அங்கு எழுந்தருளப் பண்ணுகிறோம்!

திருமண் காப்பு ப்ரணவ ஸ்வரூபம்!
மூக்கில் உள்ள பீடம்....ஆதிசேஷன் தலைபாகம்...
அல்லது ஆதிசேஷன் அவதாரமான நம் இராமாநுசன் எழுந்தருளி இருக்கும் இடம்!

இரண்டு பாதங்கள்...ஶ்ரீமந் நாராயணனின் திருவடிகள்!
நடுவில் உள்ள சிகப்பு வர்ண ஶ்ரீசூர்ணம்...சாக்ஷஆத்......பெரிய பிராட்டி இருக்கக கூடிய  இடம்!

பெருமாளும்,மஹாலக்ஷ்மியும்,ஆசார்யனும் எழுந்தருளியிருக்கும் இடம் !

எவ்வளவு பவித்ரமானது??!!!

பிறந்த குழந்தைக்கும் புண்யாகவசனத்தன்று ..பூச் சங்கு சக்ர தாரணமும் நெற்றியில் புள்ளி வைத்த திருமண் ஶ்ரீசூர்ணமும் ரக்ஷஐயாக இடுவர்!

பெண்கள் பிறைக்கீற்று போல..மூக்கில் திருமண் இட்டுக் கொள்ள வேண்டும்!
ஶ்ரீசூர்ணம் மூங்கில் இலை போன்று இட்டுக்கொள்வர்!

திருமண்காப்பு இல்லாமல் இருக்கவே கூடாது.....சுமங்கலிப் பெண்களின் திருமாங்கல்யம் போன்றது திருமண் காப்பு! என்று...நஞ்சீயர் அருள்வர்!

எல்லாவற்றையும் காக்கக்கூடியது!

எங்கெல்லாம் திருமண் காப்பு இருக்கிறதோ...அங்கெல்லாம்..பெருமாள்..பிராட்டி...ஆசார்யன் இருப்பதாகவே பாவிக்க வேண்டும்!
நம் பொருள்கள் என எதையெல்லாம்   நினைக்கிறோமோ... அவைகளுக்கெல்லாம்  சாற்றி...அதை எம்பெருமான் சம்பந்தப்படுத்தி விட்டால்..
 ஸ்வருபமும்  தெளியும்!

திருமண் காப்பு தரிக்கும்போது.. ஐந்து தடவை ,”த்வய “மந்தரத்தின் உத்தர வாக்யத்தைச் சொல்லி  ஓம் நமோ பகவதே வராஹரூபாய என்று திருமண் குழைத்துக் கொள்ள வேண்டும்!

ப்ரணவத்தை உச்சரித்து..திருமந்த்ரம், த்வயம்...சொல்லி பிறகு, 
“ ஶ்ரீபூதேவ்யை நம: “  என்று  பூமாதேவியை த்யானித்துக் கொண்டுமுதலில் மூக்கில் பாதம் வைத்து,பின் கேசம் வரை திருமண் காப்பு தரிக்க வேண்டும்!
ஆசார்ய தனியன்... சொல்லலாம்!

12 திருமண் காப்பு இட்டுக் கொள்வதால்...ஸர்வேச்வரனின் கோயில்!

“ நெற்றியில் நின்று என்னை ஆளும் நிறைமலர்ப் பாதங்கள்” என் று  ஆழ்வார் பாசுரமே நமக்கு   ப்ரமாணம்!

ஸந்தான வ்ருத்தியை ப்ரார்த்திப்பவர்கள்...மோதிர விரலாலும்,
மோக்ஷத்தை விரும்புவர்கள்...ஆள்காட்டி விரலாலும் ...,
ஆயுளை விரும்பவர்கள்..சுண்டு விரலாலும். இடலாம்!
கைகளால் இட்டுக்கொண்டு குச்சியால் சரிபடுத்தலாம்!
அசக்தியானால்....அவரவர் சௌர்யம்!
நகத்தால் இடக்கூடாது!
திருமண் குழைக்கும் போது மிகுந்துவிட்டால், வாசுதேவாய நம: என்று தீர்த்தத்தில் அலம்பி தலையில் தெளித்துக்கொள்ள வேண்டும்!

தாயாரின் திருநாமங்களையும் சொல்லி ஶ்ரீசூர்ணம் இட்டுக்கொள்ளலாம்!

“ ஐயனும்  அமைந்து நின்றான் ஆழியான் அளவின் நாமம்...” என்றார் கம்பர்!

“  தன் திருநாமத்தை தானும் சாத்தியே என்று ராமன்...” திருமண் காப்பு சாற்றிக் கொண்டு இருந்தானாம்!

“ ஈராறு நாமம் உரை  செய்து   மண் கொண்டு இடுவார்கள் காணும் இமையோன் ...” என்று வில்லி பாரதம் சொல்கிறது!
த்ரேதாயுகம்.த்வாபரயுகம் ...அங்கும் திருமண்காப்பே அணிந்து இருந்தனர்!

எல்லா நாடிகளும் சேருமிடமான நெற்றியில்  திருமண் தரிப்பதால்....நாடிகளுக்கு நல்லது!

திருமண் அணிபவர்கள் பவித்ரமானவர்கள்!
ஆசார்ய கடாக்ஷம்.பெருமாள் ,தாயார் அநுக்ரஹம் கிடைக்கும்!
ஆக.... யார் ஒருவர் திருமண் காப்பை பழிக்கிறார்களோ.....கிண்டல்,கேலி செய்கிறார்களோ.....அவர்கள்...
ஶ்ரீமந் நாராயணனையும்,....ஶ்ரீமஹாலக்ஷ்மீயையும் பழித்தவர்களாவார்கள்!

ஆசார்யனுக்கும்  அபசாரம் செய்து ...பாகவத அபசாரம் செய்த பாபத்தை ஏற்றிக் கொள்வர்!
💜

பக்தர்கள் சொல்கிறார்கள்

இந்த தளத்தை வாசித்த பிறகு, என் மனம் சாந்தியையும் நம்பிக்கையையும் பெற்றது.
🌸 ரமேஷ், மதுரை

இங்கே உள்ள ஆன்மிக விளக்கங்கள் தெளிவாகவும் எளிமையாகவும் இருக்கின்றன.
🌼 சிந்து, தஞ்சாவூர்

இந்த தளம் என் வீட்டில் ஒரு புனித இடமாகவே மாறியுள்ளது.
🌺 கிருஷ்ணன், கோவை

என் ஆன்மிகப் பயணத்தில் வழிகாட்டியாக இந்த தளம் இருந்தது. நன்றி!
🌹 சுகந்தி, சென்னை

நான் தேடிய பல தகவல்களை இங்கு ஒரே இடத்தில் நேர்த்தியாகப் பெற்றேன்.
💠 லலிதா, ஈரோடு

இந்த தளம் தினசரி ஒரு நல்ல எண்ணத்தை என் உள்ளத்தில் விதைக்கிறது.
🌿 அருண், திருநெல்வேலி

🛕
108 ஆலயம்
📜
பிரபந்தம்
🎧
ஸ்லோகம்
📚
குறிப்புகள்