🕉️ 12 ஆழ்வார்கள்
- பொய்கையாழ்வார் – ஸ்ரீ காஞ்சியதோக்தகாரி
- பூதத்தாழ்வார் – திருக்கடல் மலை
- பேயாழ்வார் – மயிலை பெருமாள்
- திருமிழிசையாழ்வார் – திருமிழிசை
- நம்மாழ்வார் – திருக்குருகூர்
- மதுரகவியாழ்வார் – திருக்கோளூர்
- குலசேகராழ்வார் – மலைநாடு (சேரநாடு)
- பெரியாழ்வார் – ஸ்ரீவில்லிபுத்தூர்
- தொண்டரடிப் பொடியாழ்வார் – திருமண்டங்குடி
- திருப்பாணாழ்வார் – உறையூர் நாச்சியார்
- திருமங்கையாழ்வார் – திருவாலி திருநகரி
- ஆண்டாள் – ஸ்ரீவில்லிபுத்தூர்
🔆 12 ஆழ்வார்கள் திருநட்சத்திரம் பட்டியல்
| எண் | ஆழ்வார் | மாதம் / நக்ஷத்திரம் |
|---|---|---|
| 1 | பொய்கை ஆழ்வார் | ஐப்பசி – திருவோணம் |
| 2 | பூதத்தாழ்வார் | ஐப்பசி – அவிட்டம் |
| 3 | பேயாழ்வார் | ஐப்பசி – சதயம் |
| 4 | திருமழிசை ஆழ்வார் | தை – மகம் |
| 5 | நம்மாழ்வார் | வைகாசி – விசாகம் |
| 6 | மதுரகவி ஆழ்வார் | சித்திரை – சித்திரை |
| 7 | பெரியாழ்வார் | ஆனி – சுவாதி |
| 8 | ஆண்டாள் | ஆடி – பூரம் |
| 9 | குலசேகர ஆழ்வார் | மாசி – புணர்பூசம் |
| 10 | தொண்டரடிப் பொடியாழ்வார் | மார்கழி – கேட்டை |
| 11 | திருப்பாணாழ்வார் | கார்த்திகை – ரோகிணி |
| 12 | திருமங்கை ஆழ்வார் | கார்த்திகை – கார்த்திகை |
🕉️ மங்களாசாசனம் செய்த திவ்யதேசங்கள்
பேயாழ்வார் (1)
- வேளுக்கை – அருள்மிகு அழகிய சிங்கர் திருக்கோயில், வேளுக்கை, காஞ்சிபுரம்
திருமழிசை ஆழ்வார் (2)
- கபிஸ்தலம் – அருள்மிகு கஜேந்திர வரதன் திருக்கோயில், கபிஸ்தலம், தஞ்சாவூர்
- அன்பில் – அருள்மிகு வடிவழகிய நம்பி திருக்கோயில், அன்பில், திருச்சி
நம்மாழ்வார் (17)
- ஸ்ரீவைகுண்டம் – அருள்மிகு வைகுண்ட நாதர் திருக்கோயில் (நவ திருப்பதி), தூத்துக்குடி
- நத்தம் – அருள்மிகு விஜயாசனப் பெருமாள் திருக்கோயில் (நவ திருப்பதி), வரகுணமங்கை, தூத்துக்குடி
- திருப்புளியங்குடி – அருள்மிகு காசினி வேந்தன் திருக்கோயில் (நவ திருப்பதி), தூத்துக்குடி
- திருத்தொலைவில்லி மங்கலம் – அருள்மிகு ஸ்ரீநிவாசன் திருக்கோயில் (நவ திருப்பதி), இரட்டைத் திருப்பதி, தூத்துக்குடி
- திருத்தொலைவில்லி மங்கலம் – அருள்மிகு அரவிந்த லோசனன் திருக்கோயில் (நவ திருப்பதி), இரட்டைத் திருப்பதி, தூத்துக்குடி
- பெருங்குளம் – அருள்மிகு ஸ்ரீநிவாசன் திருக்கோயில் (நவ திருப்பதி), தூத்துக்குடி
- தென்திருப்பேரை – அருள்மிகு மகா நெடுங்குழைக்காதர் திருக்கோயில் (நவ திருப்பதி), தூத்துக்குடி
- திருக்கோளூர் – அருள்மிகு வைத்த மாநிதிப் பெருமாள் திருக்கோயில் (நவ திருப்பதி), தூத்துக்குடி
- வானமாமலை – அருள்மிகு தோத்தாத்ரி நாதன் திருக்கோயில், நாங்குனேரி, திருநெல்வேலி
- திருப்பதிசாரம் – அருள்மிகு திருக்குறளப்பன் திருக்கோயில், நாகர்கோவில், கன்னியாகுமரி
- திருவட்டாறு – அருள்மிகு ஆதிகேசவ பெருமாள் திருக்கோயில், கன்னியாகுமரி
- திருவனந்தபுரம் – அருள்மிகு அனந்த பத்மநாபன் திருக்கோயில், கேரளா
- ஆரம்முளா – அருள்மிகு திருக்குறளப்பன் திருக்கோயில், திருவாறன் விளை, பந்தனம் திட்டா, கேரளா
- திருவண்வண்டூர் – அருள்மிகு பாம்பணையப்பன் திருக்கோயில், ஆழப்புழா, கேரளா
- திருக்கடித்தானம் – அருள்மிகு அற்புத நாராயணன் திருக்கோயில், கோட்டயம், கேரளா
- திருக்காக்கரை – அருள்மிகு காட்கரையப்பன் திருக்கோயில், எர்ணாகுளம், கேரளா
- திருச்செங்குன்றூர் – அருள்மிகு இமையவரம்பன் திருக்கோயில், செங்கனூர், திருச்சிற்றாறு, ஆழப்புழா, கேரளா
குலசேகர ஆழ்வார் (1)
- திருவித்துவக்கோடு – அருள்மிகு உய்யவந்த பெருமாள் திருக்கோயில், திருவித்துவக்கோடு, பாலக்காடு, கேரளா மாநிலம்
பெரியாழ்வார் (2)
- திருவெள்ளறை – அருள்மிகு பூண்டரிகாக்ஷன் திருக்கோயில், திருவெள்ளறை, திருச்சி
- கடிநகர் – அருள்மிகு நீலமேக பெருமாள் திருக்கோயில், தேவப்பிரயாகை, உத்தரப் பிரதேசம்
திருமங்கை ஆழ்வார் மங்களாசாசனம் செய்த திவ்யதேசங்கள் (45)
- 1. திருக்காவளம்பாடி – அருள்மிகு கோபாலகிருஷ்ணன் திருக்கோயில், திருநாங்கூர், நாகப்பட்டினம்
- 2. திருவெள்ளக்குளம் – அருள்மிகு ஸ்ரீ நிவாசன் திருக்கோயில், திருநாங்கூர், நாகப்பட்டினம்
- 3. கீழைச்சாலை – அருள்மிகு தெய்வநாயகன் திருக்கோயில், திருத்தேவனார் தோகை, திருநாங்கூர், நாகப்பட்டினம்
- 4. திருப்பார்த்தன் பள்ளி – அருள்மிகு தாமரையாள் கேள்வன் திருக்கோயில், திருநாங்கூர், நாகப்பட்டினம்
- 5. திருமணிக்கூடம் – அருள்மிகு வரதராஜ பெருமாள் திருக்கோயில், திருநாங்கூர், நாகப்பட்டினம்
- 6. மணிமாடக் கோயில் – அருள்மிகு நாராயணன் திருக்கோயில், திருநாங்கூர், நாகப்பட்டினம்
- 7. அரியமேய விண்ணகரம் – அருள்மிகு குடமாடு கூத்தன் திருக்கோயில், திருநாங்கூர், நாகப்பட்டினம்
- 8. வன் புருஷோத்தமம் – அருள்மிகு புருஷோத்தமன் திருக்கோயில், திருநாங்கூர், நாகப்பட்டினம்
- 9. திருத்தேற்றி அம்பலம் – அருள்மிகு செங்கண்மால் திருக்கோயில், திருநாங்கூர், நாகப்பட்டினம்
- 10. வைகுந்த விண்ணகரம் – அருள்மிகு வைகுண்டநாதன் திருக்கோயில், திருநாங்கூர், நாகப்பட்டினம்
- 11. செம்பொன் சேய் கோயில் – அருள்மிகு பேரருளாளன் திருக்கோயில், திருநாங்கூர், நாகப்பட்டினம்
- 12. தலைசிங்க நான்மதியம் – அருள்மிகு நாண்மதியப் பெருமாள் திருக்கோயில், தலைச்சங்காடு, நாகப்பட்டினம்
- 13. இந்தளூர் – அருள்மிகு பரிமள ரங்கநாதர் திருக்கோயில், திருஇந்தளூர், மயிலாடுதுறை
- 14. தேரழுந்தூர் – அருள்மிகு தேவதிராஜன் திருக்கோயில், தேரழுந்தூர், நாகப்பட்டினம்
- 15. காழிச்சீராம விண்ணகரம் – அருள்மிகு திரிவிக்ரமன் திருக்கோயில், சீர்காழி, நாகப்பட்டினம்
- 16. திருவஹீந்தபுரம் – அருள்மிகு தெய்வநாயகன் திருக்கோயில், திருவகிந்திபுரம், கடலூர்
- 17. திருச்சிறுபுலியூர் – அருள்மிகு அருள் மாகடல் திருக்கோயில், திருச்சிறுபுலியூர், திருவாரூர்
- 18. திருக்கண்ணங்குடி – அருள்மிகு லேகநாதப் பெருமாள் திருக்கோயில், திருக்கண்ணங்குடி, திருவாரூர்
- 19. திருக்கண்ணமங்கை – அருள்மிகு பக்தவத்ஸலப் பெருமாள் திருக்கோயில், திருக்கண்ணமங்கை, திருவாரூர்
- திருச்சேறை – அருள்மிகு சாரநாதன் திருக்கோயில், தஞ்சாவூர்
- திருநறையூர் – அருள்மிகு திருநறையூர் நம்பி திருக்கோயில், தஞ்சாவூர்
- திருவெள்ளியங்குடி – அருள்மிகு கோலவல்வில்லி ராமன் திருக்கோயில், தஞ்சாவூர்
- நந்திபுர விண்ணகரம் – அருள்மிகு ஜகந்நாதன் திருக்கோயில், நாதன் கோயில், தஞ்சாவூர்
- ஆதனூர் – அருள்மிகு ஆண்டளக்கும் ஐயன் திருக்கோயில், தஞ்சாவூர்
- திருப்புள்ளபூதங்குடி – அருள்மிகு வல்வில் ராமன் திருக்கோயில், தஞ்சாவூர்
- திருக்கூடலூர் – அருள்மிகு வையம் காத்த பெருமாள் திருக்கோயில், தஞ்சாவூர்
- கண்டியூர் – அருள்மிகு ஹரசாப விமோசனர் திருக்கோயில், தஞ்சாவூர்
- திருஎவ்வுள் – அருள்மிகு வீரராகவ பெருமாள் திருக்கோயில், திருவள்ளூர்
- தின்னனூர் – அருள்மிகு பக்தவத்சல பெருமாள் திருக்கோயில், திருநின்றவூர், திருவள்ளூர்
- திருத்தண்கா – அருள்மிகு விளக்கொளி பெருமாள் திருக்கோயில், காஞ்சிபுரம்
- திருப்பரமேஸ்வர விண்ணகரம் – அருள்மிகு பரமபதநாதன் திருக்கோயில், காஞ்சிபுரம்
- திருப்பவள வண்ணம் – அருள்மிகு பவள வண்ணர் திருக்கோயில், காஞ்சிபுரம்
- திரு நீரகம் – அருள்மிகு உலகளந்த பெருமாள் திருக்கோயில், காஞ்சிபுரம்
- திரு காரகம் – அருள்மிகு உலகளந்த பெருமாள் திருக்கோயில், காஞ்சிபுரம்
- திருக்கார் வானம் – அருள்மிகு உலகளந்த பெருமாள் திருக்கோயில், காஞ்சிபுரம்
- திருக்கள்வனூர் – அருள்மிகு கள்வப்பெருமாள் திருக்கோயில், காஞ்சிபுரம்
- நிலாத்திங்கள் துண்டான் – அருள்மிகு சந்திரசூடப் பெருமாள் திருக்கோயில், காஞ்சிபுரம்
- திருப்புட்குழி – அருள்மிகு விஜயராகவப் பெருமாள் திருக்கோயில், காஞ்சிபுரம்
- திருப்புல்லாணி – அருள்மிகு கல்யாண ஜகன்னாதர் திருக்கோயில், ராமநாதபுரம்
- திருமயம் – அருள்மிகு சத்தியமூர்த்தி பெருமாள் திருக்கோயில், புதுக்கோட்டை
- திருக்கரம்பனூர் – அருள்மிகு புருஷோத்தமன் திருக்கோயில், உத்தமர் கோயில், திருச்சி
- திருக்கோழி – அருள்மிகு அளகிய மணவாளர் திருக்கோயில், உறையூர், திருச்சி
- சிங்கவேள்குன்றம் – அருள்மிகு நரசிம்மர் திருக்கோயில், அகோபிலம், ஆந்திரா
- நைமிசாரண்யம் – அருள்மிகு தேவராஜர் திருக்கோயில், உத்தரப்பிரதேசம்
- ஜோதிஷ்மட் – அருள்மிகு பரமபுருஷர் திருக்கோயில், நந்தப்பிரயாக், உத்தரப்பிரதேசம்
திருமங்கை ஆழ்வார், பூதத்தாழ்வார் (4)
- திருநீர்மலை – அருள்மிகு நீர்வண்ணன் திருக்கோயில், சென்னை, காஞ்சிபுரம் மாவட்டம்
- திருவிடந்தை – அருள்மிகு லட்சுமி வராகர் திருக்கோயில், காஞ்சிபுரம் மாவட்டம்
- திருக்கடல் மல்லை – ஸ்தல சயன பெருமாள் திருக்கோயில், மகாபலிபுரம், காஞ்சிபுரம் மாவட்டம்
- அத்திகிரி – வரதராஜப் பெருமாள் திருக்கோயில், காஞ்சிபுரம்
பொய்கையாழ்வார், திருமங்கை ஆழ்வார் (1)
- காஞ்சிபுரம் – ஆதி கேசவ பெருமாள் திருக்கோயில், அஷ்டபுஜம், காஞ்சிபுரம்
திருமங்கை ஆழ்வார், திருமழிசை ஆழ்வார் (1)
- திரு ஊரகம் – உலகளந்த பெருமாள் திருக்கோயில், காஞ்சிபுரம்
பேயாழ்வார், திருமங்கை ஆழ்வார் (1)
- திருக்கடிகை – யோக நரசிம்மர் திருக்கோயில், சோளிங்கபுரம், வேலூர் மாவட்டம்
திருமங்கையாழ்வார், நம்மாழ்வார் (5)
- திருமோகூர் – காளமேகப் பெருமாள் திருக்கோயில், திருமோகூர், மதுரை
- திருப்புலியூர் – மாயப்பிரான் திருக்கோயில், திருப்புலியூர், ஆழப்புழா, கேரளா
- திருவல்லவாழ் – திருவாழ்மார்பன் திருக்கோயில், வல்லபக்ஷத்திரம், பந்தனம் திட்டா, கேரளா
- திருமூழிக்களம் – லெட்சுமணப்பெருமாள் திருக்கோயில், திருமூழிக்களம், எர்ணாகுளம், கேரளா
- திருநாவாய் – நாவாய் முகுந்தன் திருக்கோயில், திருநாவாய், மலப்புரம், கேரளா
பெரியாழ்வார், திருமங்கை ஆழ்வார் (3)
- பத்ரிநாத் – பத்ரிநாராயணர் திருக்கோயில், பத்ரிநாத், உத்தரகாண்ட்
- சாளக்கிராமம், முக்திநாத் – மூர்த்தி திருக்கோயில், சாளக்கிராமம், நேபாளம்
- திருக்கூடல் – கூடல் அழகர் பெருமாள் திருக்கோயில், திருக்கூடல், மதுரை
திருமங்கை ஆழ்வார், குலசேகர ஆழ்வார் (2)
- திருச்சித்ர கூடம் – கோவிந்த ராஜ பெருமாள் திருக்கோயில், சிதம்பரம், கடலூர்
- திருவாழித் திருநகரி – லட்சுமி நரசிம்மர் திருக்கோயில், நாகப்பட்டினம்
திருமங்கை ஆழ்வார், பூதத்தாழ்வார் (1)
- திருத்தங்கல் – குண்றின்மேல் நின்ற நாராயணன் திருக்கோயில், திருத்தங்கல், விருதுநகர்
நம்மாழ்வார், மதுரகவி ஆழ்வார் (1)
- ஆழ்வார் திருநகரி – ஆதி நாதன் திருக்கோயில் (நவதிருப்பதி), தூத்துக்குடி
பெரியாழ்வார், ஆண்டாள் (1)
- ஸ்ரீவில்லிபுத்தூர் – வடபத்ரசாயி திருக்கோயில், ஆண்டாள் சன்னதி, விருதுநகர்
ஆண்டாள், பெரியாழ்வார், திருமங்கை ஆழ்வார் (1)
- திருஆய்பாடி – நவமோகன கிருஷ்ணன் திருக்கோயில், கோகுலம், உத்தரப்பிரதேசம்
பேயாழ்வார், திருமழிசை ஆழ்வார், திருமங்கை ஆழ்வார் (1)
- திருவல்லிக்கேணி – பார்த்தசாரதி பெருமாள் திருக்கோயில், சென்னை
பொய்கையாழ்வார், பூதத்தாழ்வார், திருமங்கை ஆழ்வார் (1)
- திருக்கோயிலூர் – திரிவிக்கிரமர் திருக்கோயில், விழுப்புரம்
பேயாழ்வார், திருமங்கை ஆழ்வார், நம்மாழ்வார் (1)
- திரு விண்ணகர் – ஒப்பிலியப்பன் திருக்கோயில், தஞ்சாவூர்
பூதத்தாழ்வார், நம்மாழ்வார், திருமங்கை ஆழ்வார் (1)
- வெண்ணாற்றங்கரை – நீலமேகப் பெருமாள், மணிக்குன்ற பெருமாள் திருக்கோயில்கள், தஞ்சாவூர்
நம்மாழ்வார், ஆண்டாள், பெரியாழ்வார், திருமங்கை ஆழ்வார் (2)
- துவாரகை – கல்யாண நாராயணன் திருக்கோயில், குஜராத்
- திருவடமதுரை – கோவர்த்தனன் திருக்கோயில், மதுரா, உ.பி.
பொய்கையாழ்வார், திருமங்கை ஆழ்வார், பேயாழ்வார், திருமழிசை ஆழ்வார் (1)
- திருவெக்கா – சொன்ன வண்ணம் செய்த பெருமாள் திருக்கோயில், காஞ்சிபுரம்
திருமழிசையாழ்வார், பெரியாழ்வார், நம்மாழ்வார், திருமங்கை ஆழ்வார் (2)
- திருப்பேர்நகர் – அப்பக்குடத்தான் திருக்கோயில், கோயிலடி, தஞ்சாவூர்
- திருக்குறுங்குடி – நின்ற நம்பி திருக்கோயில், திருநெல்வேலி
திருமங்கை ஆழ்வார், பூதத்தாழ்வார், பேயாழ்வார், திருமழிசை ஆழ்வார் (1)
- திருப்பாடகம் – பாண்டவ தூதப் பெருமாள் திருக்கோயில், காஞ்சிபுரம்
பெரியாழ்வார், ஆண்டாள், குலசேகர ஆழ்வார், திருமங்கை ஆழ்வார், நம்மாழ்வார் (1)
- திருக்கண்ணபுரம் – நீலமேகப் பெருமாள் திருக்கோயில், திருவாரூர்
பெரியாழ்வார், குலசேகர ஆழ்வார், தொண்டரடிப் பொடியாழ்வார், நம்மாழ்வார், திருமங்கை ஆழ்வார் (1)
- அயோத்தி – ரகுநாயகன் (ஸ்ரீ ராமர்) திருக்கோயில், சரயு நதி, பைசாபாத், உ.பி.
பூதத்தாழ்வார், பெரியாழ்வார், திருமங்கை ஆழ்வார், திருமழிசையாழ்வார், பேயாழ்வார் (1)
- திருக்கோஷ்டியூர் – சௌம்ய நாராயணப் பெருமாள் திருக்கோயில், சிவகங்கை
ஆண்டாள், பெரியாழ்வார், பூதத்தாழ்வார், திருமங்கை ஆழ்வார், பேயாழ்வார், நம்மாழ்வார் (1)
- திருமாலிருஞ்சோலை – கள்ளழகர் திருக்கோயில், அழகர் கோவில், மதுரை
ஆண்டாள், பெரியாழ்வார், திருமங்கை ஆழ்வார், பூதத்தாழ்வார், பேயாழ்வார், திருமழிசை ஆழ்வார், நம்மாழ்வார் (1)
- கும்பகோணம் – சாரங்கபாணி பெருமாள் திருக்கோயில், தஞ்சாவூர்
10 ஆழ்வார்கள் மங்களாசாசனம் செய்த திவ்யதேசம் (2)
- திருவேங்கடம் – வெங்கடாசலபதி திருக்கோயில், திருப்பதி, சித்தூர், ஆந்திரா
- திருப்பாற்கடல் – பாற்கடல் வண்ணன், விண்ணுலகம்
11 ஆழ்வார்கள் மங்களாசாசனம் செய்த திவ்யதேசம் (1)
- ஸ்ரீரங்கம் – ரங்கநாதன் திருக்கோயில், திருச்சி
8 ஆழ்வார்கள் மங்களாசாசனம் செய்த திவ்யதேசம் (1)
- பரமபதம் – பரமபதநாதன் திருக்கோயில், வைகுண்டம் (விண்ணுலகம்)
📊 மங்களாசாசன எண்ணிக்கைக் கணக்குகள்:
- 1 ஆழ்வார் – 68 திவ்யதேசங்கள்
- 2 ஆழ்வார்கள் – 20 திவ்யதேசங்கள்
- 3 ஆழ்வார்கள் – 5 திவ்யதேசங்கள்
- 4 ஆழ்வார்கள் – 6 திவ்யதேசங்கள்
- 5 ஆழ்வார்கள் – 3 திவ்யதேசங்கள்
- 6 ஆழ்வார்கள் – 1 திவ்யதேசம்
- 7 ஆழ்வார்கள் – 1 திவ்யதேசம்
- 8 ஆழ்வார்கள் – 1 திவ்யதேசம்
- 10 ஆழ்வார்கள் – 2 திவ்யதேசங்கள்
- 11 ஆழ்வார்கள் – 1 திவ்யதேசம்
இதில் திருப்பாற்கடல் மற்றும் பரமபதம் ஆகிய இரண்டும் இப்பூவுலகில் இல்லை. யார் இப்பூவுலகில் உள்ள 106 திவ்யதேசங்களை தரிசிப்பார்களோ, அவரை பெருமாள் இறுதியில் திருப்பாற்கடலும் பரமபதத்திலும் அழைத்துச் சென்று தரிசனம் செய்து தன்னுடன் வைத்துக்கொள்வார் என்று வைஷ்ணவ ஐதீகம் கூறுகிறது.
