Sri Mahavishnu Info: மார்கழி அமுது - 8 மார்கழி அமுது - 8
📿 வைணவ அடிப்படைகள் | 🛕 திவ்யதேச வரலாறுகள் | 📘 நாலாயிர திவ்யபிரபந்தம் | 🎧 ஸ்லோகங்கள் | 📅 தினசரி பக்தி வழிகாட்டி | ❓ பக்தி கேள்விகள் | 📖 ஆன்மீக நூல்கள் | 🧒 குழந்தைகள் பக்தி பகுதி | 🛕 தரிசன நேரங்கள் | 📜 பக்தர் அனுபவம் | 🛐 ஸ்ரீவைணவ பாடசாலை | 🗓️ ஸ்ரீவைணவ நாட்காட்டி | 🔱 விஷ்ணு சஹஸ்ரநாமம் | 🌄 ஸ்ரீ வெங்கடேச மஹாத்மியம் | 🌺 திருப்பாவை | 🛕 திருத்தல தரிசனம் | ✨ அற்புத நிகழ்வுகள் | 👣 வைஷ்ணவ ஆச்சாரியர்கள் | 🕉️ நாமஸ்மரணையின் மகிமை | 🎙️ பக்தி ஸ்லோகங்கள் | 🔔 கோவில் விழாக்கள்

மார்கழி அமுது - 8

Sri Mahavishnu Info

8. தேவாதி தேவன்

வாழ்க்கையில் சில விஷயங்கள் அலுப்பு தட்டுவதில்லை. காரணம் மனம் தான். பிடித்ததையே பேசுகிறது, பாடுகிறது, நினைக்கிறது, பார்ப்பது. இது போலவே படிப்பதும் தான். ;ஏற்கனவே தெரிந்தது தானே, புதிதல்லவே என்று அப்போது நினைப்பதில்லை. ஆண்டாளின் திருப்பாவை பாசுரங்கள் இப்படிப்பட்டவை. எண்ணற்றோர் எத்தனையோ முறை, எத்தனை வருஷங்களாகவோ பக்தியோடு படித்திருக்கிறோம், இன்னும் அதில் படிக்க நிறைய இருக்கிறது. முப்பது பாசுரத்தில் மூன்று லோக விஷயங்களையும் அடைத்து வைத்திருக்கிறாள் அந்த சிறுமி ஆண்டாள்.

இன்றும், ஆமாம் மார்கழி 8 வது நாளும், ஆண்டாள் மற்ற சில பெண்களை துயிலெழுப்பி கூட்டி சென்று பாவை நோன்பை வழக்கம் போல் தொடர்ந்தாள். அந்தச் சிறிய கிராமத்தில் என்ன இருக்கிறது? ஒரு பக்கம் உயிர்நாடியாக ஓடும் யமுனை, ஊர்க்கோடியில் பெருமாள் கோயில், நீண்ட வயல்கள், மரங்கள், செடி கொடிகள், கோபர்களின் மாளிகைகள், வீடுகள்,ஒரு சில வீதிகள், தூர தெரியும் காடு, மலை,அங்கே தான் யாரும் செல்வதில்லையே!

''என்னடி இது, ஆண்டாள் வந்து எழுப்பினா தான் நோன்புக்கு வரது என்று ஒரு வழக்கமாயிட்டுது. நாம வந்து கதவை தட்டி எழுப்பினா தான் வருவார்கள் போலிருக்கிறது" என்று ஒரு சிறுமி பரிந்து பேசினாள்

''அதனால் என்ன, வாங்க போய் எழுப்புவோம் அவர்களை எல்லாம்'' என்று சிரித்துக்கொண்டே பதிலளித்தாள் ஆண்டாள்

''எழுந்திருங்கோ, உள்ளேயிருக்கும் எருமைகளே !! கிழக்கே வெளுத்தாகி விட்டது. வெளிச்சம் வந்ததாலே வெளியிலே கறவை எருமை எல்லாம் கூட நிதானமாக அசைந்து மேச்சலுக்கு வந்துவிட்டனவே. . சிலது காத்திருக்கிறது. எங்களைப் போல!! நாம் எல்லோரும் விரதமிருந்து அந்த கிருஷ்ணனை, சாணுரனை வாய் பிளந்து கொன்றவனை, தேவாதி தேவனை எவ்வளவு போற்றினாலும் மேலும் மேலும் புகழ்ந்து பாட வைக்கிறவனை பூஜிப்போம். எழுந்து வாருங்களேன்.நேரமாகவில்லையா?''

ஆண்டாள் மற்ற சில பெண்களுக்காக அவர்கள் வீட்டு வாசலில் காத்திருக்கும் நேரத்தில் நாம் பொடி நடையாக வில்லிபுத்தூர் வந்து விடுவோம்.

ஆஸ்ரமத்தில் வழக்கம் போலவே வாயிலில் பெரிய கோலம் போட்டு வைத்திருக்கிறாள் கோதை. அதன் அருகே மான் விழியோடு ஒரு இளம் பொன்னிற பசுங் கன்றுக்குட்டி அம்மா என்று நின்றுகொண்டு அம்மாவைத் தேடுகிறது. ஆயர்பாடியில் எருமையும் இங்கே பசுவுமா? ''பலே பலே''

உள்ளே விஷ்ணு சித்தர் முகம் அந்த சிறிய அகல் எண்ணெய் விளக்கொளியிலும் மலர்ந்து காண்கிறதே. தலை ஆடுகிறதே அவ்வளவு சுகமாக ரசிக்கிறார் அன்று அவர் மகள் கோதை எழுதிய பாசுரத்தின் அர்த்தத்தையும் அவள் பாடும் இனிமையும் சேர்த்தே.

ஆயர்பாடி ஆண்டாளின் துயிலெழுப்பலை வில்லிப்புத்தூர் கோதை பல ஆயிரம் வருஷங்கள் கழித்து எப்படி யூகித்து பாசுரமாய் எழுதினாள் என்று யோசிக்கவே ஆச்சர்யமாக இருக்கிறதே! எவ்வளவு அழகாக அந்த கண்ணனின் வீரத்தை, அவன் சாணூரனை வதம் செய்த காட்சியை மனதில் கொண்டு போற்றி, அந்த சிறுமியரின் நோன்பு சிறப்பாக நடைபெற மாதவனைப் போற்றி பாட அழைக்கிறாள். இதோ அந்தப்பாடல்.

''கீழ்வானம் வெள்ளென்று, எருமை சிறுவீடு
மேய்வான் பரந்தனகாண்; மிக்குள்ள பிள்ளைகளும்
போவான் போகின்றாரைப் போகாமல் காத்துன்னைக்
கூவுவான் வந்து நின்றோம், கோதுகலமுடைய
பாவாய்! எழுந்திராய்; பாடிப் பறைகொண்டு
மாவாய் பிளந்தானை, மல்லரை மாட்டிய
தேவாதி தேவனைச் சென்று நாம் சேவித்தால்
ஆவாவென் றாராய்ந் தருளேலோ ரெம்பாவாய்.''

விஷ்ணு சித்தர் இந்த பாடலைத் தானே படித்து மகிழ்ந்து அதன் உள்ளர்த்தத்தை அழகாக புரிந்து புளகாங்கித மடைகிறார்:

ஒரு வார்த்தையில் சொல்லவேண்டுமானால் இதைவிட பரமனிடம் சரணாகதி அடைவதைப்பற்றி யாரும் சுருக்கமாக சொல்லமுடியாது. ''தூக்கத்தை விட்டு எழுந்திரு'' என்பதே உலக மாயையிலிருந்து விடுபடு, பரமனடி பாடு. மோக்ஷம் பெறு என்கிற விஷயம் தான். வெளிச்சம் வந்துவிட்டது என்பதே உன்னை நீ புரிந்துகொண்டாய் என்று பொருள் கொள்ளலாம். இருட்டு என்பதே இந்த பாசுரங்களில் அஞ்ஞானம் தான். கிழக்கே வெளுத்தது என்பது பனியைப்போக்கும் சூர்யன்.

மாயையிலிருந்து நம்மை நீக்கும் கண்ணன் பாதங்களின் சுடரொளி, ஆஹா பிரமாதம். அந்த பாடலை மனதிற்குள் தானே அசை போட்டு ரசித்தவாறு அவர் பூக்குடலையைத் தேடினார். ரங்கனுக்கு மாலை தயாராக வேண்டுமே! பாமாலையோடு பூமாலையும் சூட்டவேண்டுமே!
💜

பக்தர்கள் சொல்கிறார்கள்

இந்த தளத்தை வாசித்த பிறகு, என் மனம் சாந்தியையும் நம்பிக்கையையும் பெற்றது.
🌸 ரமேஷ், மதுரை

இங்கே உள்ள ஆன்மிக விளக்கங்கள் தெளிவாகவும் எளிமையாகவும் இருக்கின்றன.
🌼 சிந்து, தஞ்சாவூர்

இந்த தளம் என் வீட்டில் ஒரு புனித இடமாகவே மாறியுள்ளது.
🌺 கிருஷ்ணன், கோவை

என் ஆன்மிகப் பயணத்தில் வழிகாட்டியாக இந்த தளம் இருந்தது. நன்றி!
🌹 சுகந்தி, சென்னை

நான் தேடிய பல தகவல்களை இங்கு ஒரே இடத்தில் நேர்த்தியாகப் பெற்றேன்.
💠 லலிதா, ஈரோடு

இந்த தளம் தினசரி ஒரு நல்ல எண்ணத்தை என் உள்ளத்தில் விதைக்கிறது.
🌿 அருண், திருநெல்வேலி

🛕
108 ஆலயம்
📜
பிரபந்தம்
🎧
ஸ்லோகம்
📚
குறிப்புகள்