Sri Mahavishnu Info: வைகுண்ட ஏகாதசி நாளில் செய்ய வேண்டியதும்; செய்யக்கூடாததும்! வைகுண்ட ஏகாதசி நாளில் செய்ய வேண்டியதும்; செய்யக்கூடாததும்!
📿 வைணவ அடிப்படைகள் | 🛕 திவ்யதேச வரலாறுகள் | 📘 நாலாயிர திவ்யபிரபந்தம் | 🎧 ஸ்லோகங்கள் | 📅 தினசரி பக்தி வழிகாட்டி | ❓ பக்தி கேள்விகள் | 📖 ஆன்மீக நூல்கள் | 🧒 குழந்தைகள் பக்தி பகுதி | 🛕 தரிசன நேரங்கள் | 📜 பக்தர் அனுபவம் | 🛐 ஸ்ரீவைணவ பாடசாலை | 🗓️ ஸ்ரீவைணவ நாட்காட்டி | 🔱 விஷ்ணு சஹஸ்ரநாமம் | 🌄 ஸ்ரீ வெங்கடேச மஹாத்மியம் | 🌺 திருப்பாவை | 🛕 திருத்தல தரிசனம் | ✨ அற்புத நிகழ்வுகள் | 👣 வைஷ்ணவ ஆச்சாரியர்கள் | 🕉️ நாமஸ்மரணையின் மகிமை | 🎙️ பக்தி ஸ்லோகங்கள் | 🔔 கோவில் விழாக்கள்

வைகுண்ட ஏகாதசி நாளில் செய்ய வேண்டியதும்; செய்யக்கூடாததும்!

Sri Mahavishnu Info

வைகுண்ட ஏகாதசி அன்றைய நாளில் செய்ய வேண்டியதும், செய்யக்கூடாததும் என்ன என்பதைப் பற்றி பார்க்கலாம்.

ஏகாதசி விரதம் தோன்றிய கதை:

விஷ்ணுவை வேண்டி வழிபடும் விரதங்களில் முதன்மையானதாக இருப்பது ‘ஏகாதசி விரதம்’ இந்த விரதத்தை கடைப்பிடிப்பது ‘அஸ்வமேத யாகம்’ செய்த பலனைக் கொடுக்கும் என்கிறது புராணங்கள். ‘காயத்ரிக்கு ஈடான மந்திரம் இல்லை; தாய்க்கு சமமான தெய்வம் இல்லை; கங்கைக்கு ஈடான தீர்த்தம் இல்லை; ஏகாதசிக்கு சமமான விரதம் இல்லை’ என்று இந்த விரதத்தை மகிமைப் பற்றி அக்னி புராணம் எடுத்துரைக்கிறது

இந்த விரதத்தின் சிறப்பு பற்றி சிவபெருமானே, பார்வதி தேவியிடம் எடுத்துக் கூறியுள்ளார் என்பது புராணங்கள் கூறும் தகவல். மாதம் இரு ஏகாதசி என்று 24 ஏகாதசிகள் உள்ளன. ஒவ்வொன்றுக்கும் ஒரு கதை இருக்கிறது. இவற்றில் மார்கழி வளர்பிறையில் வரும் ஏகாதசியான, ‘வைகுண்ட ஏகாதசி’ மிகவும் சிறப்பு வாய்ந்ததாக கருதப்படுகிறது. வைகுண்ட ஏகாதசியை ‘மோட்ச ஏகாதசி’ என்றும் அழைப்பார்கள்.

முன் காலத்தில் முரன் என்ற அசுரன் இருந்தான். அவன் தேவர்களையும், முனிவர்களையும் துன்பப்படுத்தினான். அவன் செய்த கொடுமைகளை தாங்க முடியாத தேவர்கள், கயிலாயம் சென்று சிவபெருமானிடம் முறையிட்டார்கள். சிவபெருமானோ, அவர்களை திருமாலிடம் சென்று முறையிடும்படி கூறினார். அதன்படியே தேவர்களும், முனிவர்களும், பாற்கடலில் பள்ளிகொண்டிருக்கும் திருமாலை சந்தித்தனர். காக்கும் தெய்வமான அந்தக் கருணைக் கடவுள், தேவர்களோடு சேர்ந்து முரனை எதிர்த்து போரிட்டார். போரால் களைப்படைந்த திருமால், பத்ரிகாசிரமம் என்ற இடத்தில் உள்ள ஒரு குகையில் பள்ளிகொண்டார்.

அந்த இடத்திற்கு, திருமாலைத் தேடிவந்த முரன், பள்ளிகொண்டிருந்த திருமாலைக் கொல்ல நினைத்து உடைவாளை உருவினான். அப்போது திருமாலின் உடலில் இருந்து ஒரு பெண் தோன்றி, முரனை அழித்தாள். இது நடந்தபின் கண் விழித்த திருமால், அந்தப் பெண்ணைப் பாராட்டி, அவளுக்கு ‘ஏகாதசி’ என்று பெயரிட்டார்.

ஏகாதசி என்று பெயரிடப்பட்ட அந்தப் பெண், திருமாலிடம் வரம் ஒன்றைக் கேட்டாள். ‘ஏகாதசி அன்று தங்களை (திருமால்) நினைத்து நல்ல மனதுடன் யார் விரதம் இருக்கிறார்களோ, அவர்களைக் காத்தருள வேண்டும்’ என்று வேண்டினாள். அன்று முதல் இந்த விரதம் மேற்கொள்ளப்பட்டு வருவதாக புராணக் கதைகள் தெரிவிக்கின்றன.

சொர்க்கவாசல் திறப்பு விழா:

வைகுண்ட ஏகாதசி அன்று, விஷ்ணு ஆலயங்கள் அனைத்திலும் சொர்க்க வாசல் திறப்பு விழா நடத்தப்படும். இறைவனை தொழும் ஜீவாத்மா, வைகுண்ட வாசலில் வழியாக பரமாத்மாவை சேருகிறது என்ற ஐதீகத்தின் அடிப்படையில், இந்த சொர்க்க வாசல் திறப்பு விழா நடைபெறு கிறது. இந்த விழா அதிகாலை வேளையிலேயே நடை பெறும். இதில் மக்கள் பலரும் கலந்து கொண்டு, இறைவனுக்கு நடைபெறும் சிறப்பு வழிபாடுகளை கண்டுகளித்து, சொர்க்க வாசலின் வழியாக வெளியே வருவார்கள்.
வாழும் அவசர உலகில் மாதந்தோறும் வரும் ஏகாதசியை அனுசரிப்பது மிகவும் நல்லது. பிரதமை திதியிலிருந்து பத்தாவது நாளான தசமியிலும் துவாதசியிலும் ஒரே வேளை உணவைத்தான் உண்ணவேண்டும். ஏகாதசி நாளில் சூரிய உதயத்துக்கு முன்பாகவே எழுந்து நீராடி, பூஜையில் அமர்ந்து அந்தப்பரந்தாமனை மனதில் தியானித்து வழிபடவேண்டும். அன்றைய தினம் முழுவதும் விரதம் இருந்து பகவத் கைங்கர்யத்தில் ஈடுபட வேண்டும். முதியோர்கள் உடல் நலிவுற்றவர்கள், பூஜையில் வைத்து நிவேதனம் செய்யப்பட்ட பழங்களை சாப்பிடலாம்.
பகலில் தூங்காமல் இருந்து, அன்றன்றைக்கு உரிய வேலைகளை கர்மசிரத்தியோடு செய்து முடிக்க வேண்டும். இரவில் விழித்து பகவானின் புகழ் பாடும் பக்திப்பாடல்கள் மற்றும் பாசுரங்களைப் பாடிக்கொண்டு இறை சிந்தனையிலேயே இருக்க வேண்டும். கண்விழித்து இருந்து பகவானின் நாமத்தைச் சொல்லும் பாடல்கள், பஜனைகள் செய்து, ஆன்மிகக் கதைகளைப் படித்துக்கொண்டோ பாராயணம் செய்து கொண்டோ மனதை ஒருங்கிணைக்க வேண்டும்.
ஸ்ரீரங்கம் தொடங்கி திருப்பதி வரை உள்ள வைணவக் கோயில்களில் சொர்க்க வாசல் திறப்பு நிகழ்ச்சி சிறப்பாக நடந்தேறும். இதில் பங்கேற்க லட்சக்கணக்கான மக்கள் இறைவனின் அருட்கடாட்சத்தைப் பெற வரிசையில் காத்திருந்து சொர்க்க வாசல் வழியாகச் சென்று இறையருளைப் பெறுவார்கள். மறுநாள் துவாதசி நாளில் காலைக் கடன்களை முடித்துவிட்டு விருந்தினர்களுக்கு, அகத்திக் கீரை, நெல்லிக்கனி, சுண்டைக்காய் ஆகியவற்றோடு அமுது படைத்து உண்ண வேண்டும்.

வைகுண்ட ஏகாதசி நாளில் செய்ய வேண்டியது!

பகவத் கீதையைப் படியுங்கள்

வழக்கமாக, கீதை ஜெயந்தி வைகுண்ட ஏகாதசி நாளில் நிகழ்கிறது. அர்ஜுனனுக்கு கிருஷ்ணர் பகவத் கீதை என்று அழைக்கப்படும் ஆன்மீக அறிவை வழங்கிய நாள் இது. எனவே, இந்த சிறப்பு நாளில் பகவத் கீதையைப் படிப்பது மிகவும் பரிந்துரைக்கப்பட்ட ஆன்மீக செயலாகும்.

இரண்டு வகையான இலக்கியங்கள் கிருஷ்ணரை மகிமைப்படுத்துகின்றன. ஒன்று தெய்வத்தின் மகிமைகளைப் பற்றி பேசுகிறது, மற்றொன்று கிருஷ்ணரால் அருளப்பட்டது. கீதை கிருஷ்ணரால் அருளப்பட்டதால், இரண்டுக்கும் இடையே எந்த வித்தியாசமும் இல்லை. கீதையைப் படிப்பதே கிருஷ்ணருடன் இணைவது தான். எனவே இந்த நாளில் கீதையின் வசனங்களைப் படிப்பது சிறந்தது. 

விஷ்ணு சகஸ்ரநாமத்தை உச்சரியுங்கள்

விஷ்ணுவின் அருளைப் பெறுவதற்கான மற்றொரு வழி விஷ்ணு சஹஸ்ரநாமத்தை உச்சரிப்பது. அல்லது கேட்பது இது ஒரு சமஸ்கிருத பாடலாகும், இது விஷ்ணுவின் 1000 பெயர்களைக் கொண்டுள்ளது. இது விஷ்ணுவின் பெருமைகளைக் குறிப்பிட்டு புகழ்கிறது.

விஷ்ணுவின் உபன்யாசம் கேளுங்கள் 

செய்யக்கூடாதவை!

இரவில் கண்விழித்திருக்க வேண்டும் என்பதற்காக தாயம் ஆடுவார்கள். அதற்கு பேசாமல் தூங்கி விடுவதே நன்று. ஏனெனில் எந்த வீட்டில் தாய சத்தம் கேட்கிறதோ, அந்த வீட்டில் லட்சுமி தேவி குடியிருக்க மாட்டாள். அந்த விளையாட்டின்போது, இதோ 2 போட்டு உன் தலையை கொய்கிறேன், 4 போட்டு உன் வெட்டுகிறேன் என கூறிக்கொள்வார்கள். ஒரு தெய்வத்திற்கு உகந்த நாளில் இப்படி அபசகுண வார்த்தைகளை கேட்டால் எப்படி இறவனின் அருள் கிட்டும்? சினிமாவுக்கு செல்வார்கள், தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை பார்த்துகொண்டே கண் விழித்திருப்பார்கள். இதுவும் தவறே.

அதேபோல பரமபத விளையாட்டு ஆடும் வழக்கம் உள்ளது. இதையும் செய்யக்கூடாது.

ஏகாதசி அன்று உணவு அளிக்கவும் கூடாது. அந்த உணவை ஏற்கவும் கூடாது எனபது சாஸ்திர நியதி. ஏகாதசி நாளில் விரதம் இருப்பது நம்மைப் படைத்த இறைவனுக்கு நன்றிசெலுத்துவதாகும்.

மனத்தூய்மை அடைந்தாலே, இனிமையான வாழ்க்கை நமக்கு அமைந்திடும். மனம், வாக்கு செயல் மூன்றையும் ஒரே நிலையில் நிறுத்துவதுதான் ஏகாதசியின் நோக்கமாகும்.

Brass Feng Shui Tortoise with Plate
🛕 ஆன்மிக அலங்காரம் 🔔 நல்ல அதிர்ஷ்டம்

🟡 பிராஸ் ஃபெங் ஷூயி ஆமை – பிளேட் உடன் (சிறிய அளவு)

வீடு/ஆபீஸில் செல்வ வளம் • அமைதி • நீண்ட ஆயுள் வேண்டிச் செலுத்தும் அழகிய பூஜை அலங்காரம். தங்க நிற பிராஸ் – தடிமனான கட்டமைப்பு, நீடித்த உபயோகம். 🙏✨

4.4 / 5 ⭐ • 88 மதிப்புரைகள்
  • 🟨 உலோகம்: பிராஸ் (தங்க நிறம்)
  • 🧘‍♂️ பூஜை மேசை / வாஸ்து அலங்காரம்
  • 🌿 அமைதி • செல்வம் • நல்ல அதிர்ஷ்டம்
  • 🎁 குடும்பத்தார்க்கு சிறந்த பரிசு
🔥 இன்று வீட்டில் நல்ல வைபவம் சேர்க்கலாம்!
🛒 அமேசானில் வாங்க
💜

பக்தர்கள் சொல்கிறார்கள்

இந்த தளத்தை வாசித்த பிறகு, என் மனம் சாந்தியையும் நம்பிக்கையையும் பெற்றது.
🌸 ரமேஷ், மதுரை

இங்கே உள்ள ஆன்மிக விளக்கங்கள் தெளிவாகவும் எளிமையாகவும் இருக்கின்றன.
🌼 சிந்து, தஞ்சாவூர்

இந்த தளம் என் வீட்டில் ஒரு புனித இடமாகவே மாறியுள்ளது.
🌺 கிருஷ்ணன், கோவை

என் ஆன்மிகப் பயணத்தில் வழிகாட்டியாக இந்த தளம் இருந்தது. நன்றி!
🌹 சுகந்தி, சென்னை

நான் தேடிய பல தகவல்களை இங்கு ஒரே இடத்தில் நேர்த்தியாகப் பெற்றேன்.
💠 லலிதா, ஈரோடு

இந்த தளம் தினசரி ஒரு நல்ல எண்ணத்தை என் உள்ளத்தில் விதைக்கிறது.
🌿 அருண், திருநெல்வேலி

🛕
108 ஆலயம்
📜
பிரபந்தம்
🎧
ஸ்லோகம்
📚
குறிப்புகள்