Sri Mahavishnu Info: கூடாரை வெல்லும் சீர்க் கோவிந்தா கூடாரை வெல்லும் சீர்க் கோவிந்தா
```
📿 வைணவ அடிப்படைகள் 🛕 108 திவ்யதேசங்கள் 📜 நாலாயிர திவ்யபிரபந்தம் 🎧 தினசரி ஸ்லோகங்கள் 📅 இன்றைய வைபவம் 🙏 தினசரி பக்தி வழிகாட்டி ❓ பக்தி கேள்வி & பதில்கள் 📖 ஆன்மீக நூல்கள் 🧒 குழந்தைகள் பக்தி பகுதி 🎓 ஸ்ரீவைஷ்ணவ பாடசாலை 🔱 விஷ்ணு சஹஸ்ரநாமம் 🌄 ஸ்ரீ வெங்கடேச மஹாத்மியம் 🌺 திருப்பாவை 👣 வைஷ்ணவ ஆச்சார்யர்கள் 🛕 திருத்தல தரிசனம் 🔔 கோவில் விழாக்கள் 📜 பக்தர் அனுபவங்கள் ✨ அற்புத நிகழ்வுகள் 🕉️ நாமஸ்மரணையின் மகிமை 📚 பக்தி குறிப்புகள் 🌸 ஆழ்வார்கள் வரலாறு 🙏 ஸ்ரீவைஷ்ணவ சம்பிரதாயம் 🎙️ பக்தி உரைகள் & ஆடியோ 📆 ஸ்ரீவைஷ்ணவ நாட்காட்டி 🌟 புதிய பக்தி பதிவுகள்

கூடாரை வெல்லும் சீர்க் கோவிந்தா

Sri Mahavishnu Info
கோவிந்தா நாம மகிமை!!

கோவிந்தா என்று உளப்பூர்வமாகச் சொன்னால் பெருமாள் ஓடி வருவார்''  பெருமாள் பக்தர் ஒருவர் அதிகாலை நீராடி, விஷ்ணு சகஸ்ரநாமம் சொல்லி பெருமாளைத் தரிசிப்பார். ஆனாலும், ஏதோ ஒரு குறையை உணர்ந்தார். 

ஒரு குருவிடம் சென்று, ""குருவே! பெருமாளின் கருணையால் செல்வத்திற்கு குறையில்லை. இருந்தாலும், மனதில் குறை இருப்பதை உணர்கிறேன்'' என்றார். 
 
குரு அங்கிருந்த ஒரு பக்தனை அழைத்து,""தம்பி! உன் குடும்பம் நலமா? ஏதேனும் உனக்கு குறை இருக்கிறதா?'' என்று கேட்டார்.  அந்த நபரோ, ""பெருமாளின் மகாமந்திரத்தைச் சொல்லும் எனக்கு ஏது குறை...?''என்றார். உடனே பெருமாள் பக்தர் ஆச்சரியத்துடன்,  ""எனக்கு அந்த மந்திரம் தெரியாதே! அதைச் சொல்லேன்!'' என்றார். 

வந்தவர்,""கோவிந்தா! கோவிந்தா!'' என்றார். 

பக்திமான் ஏமாற்றத்துடன்,""இது தானா! நான் தினமும் விஷ்ணு சகஸ்ரநாமமமே சொல்கிறேன். அதை விடவா இது பெரிது?'' என்றார். 
 
குரு அவரிடம்,""நீ தவறாக நினைக்கிறாய்.  ஆயிரம் பெயர்களால் விஷ்ணுவை வணங்குவதே சகஸ்ரநாமம்.  இது பீஷ்மர் அர்ஜூனனுக்கு உபதேசித்தது. இதைப் போல அற்புதம் வேறில்லை. ஆனால், எல்லாரும் பீஷ்மராக முடியுமா? 

பாமரனும், பெருமாள் அருள் பெற சொல்லப்பட்டதே கோவிந்த நாமம்.  திரவுபதியின் மானம் காத்தது.  அதுவே. எந்த மந்திரமும் அறியாதவன் கூட "கோவிந்தா' என்று உளப்பூர்வமாகச் சொன்னால் பெருமாள் ஓடி வருவார்'' என்றார் குரு. 
 
பக்தரின் மனதில் தெளிவு பிறந்தது.  பகவானின் மற்ற நாமங்கள் எல்லாவற்றையும் விட கோவிந்த நாமம் ஏற்றமானதா? 
 
ஆம் மிகவும் ஏற்றமானது அந்த கோவிந்த நாமம்  இதை பெரியாளவரின் பெண்பிள்ளை கோதைஆண்டாள் தனது திருப்பாவை பாசுரத்தின் முடிவில் மிக அழகாக விவரித்துள்ளாள் எப்படியானால் 

ஆண்டாள் தனதுதிருப்பாவை 27வது பாசுரத்தில் "கூடாரை வெல்லும் சீர்க் கோவிந்தா" என்றும், 
 
28வது பாசுரத்தில் 
"குறைவொன்றுமில்லாத கோவிந்தா" என்றும், 29வது பாசுரத்தில் "இற்றைப் பறைகொள்வான் அன்றுகாண் கோவிந்தா" என்றும் மூன்று முறை வரிசையாக கோவிந்த நாமம் பாடுகிறார். 

"கறவைகள் பின்சென்று" பாசுரத்தில் கோவிந்தனை  "குறைவொன்றுமில்லாத கோவிந்தா"என்று அழைத்து விட்டு கூடவே "அன்பினால் உன் தன்னைச் சிறு பேர் அழைத்தனவும் சீறி அருளாதே" என்று வேண்டுகிறார் ஆண்டாள் 

அப்படியானால் ஆண்டாள் பகவானை சிறுபெயரை வைத்து அழைத்துள்ளாளா 
பார்ப்போம்..
 
ஆண்டாள் முந்தைய 24 திருப்பாவை பாசுரங்களிலும் பகவானை அழைத்த சிறு பெயர்கள் இதோ: 
 
1)நாராயணன், 
2)பரமன் 
3)உத்தமன் 
4)கண்ணன் 
5)பத்மநாபன் 
6)மாயன் 
7) யமுனைத்துறைவன்
8)தாமோதரன் 
9) நாராயணன்மூர்த்தி 
10)கேசவன் 
11)தேவாதிதேவன் 
12)மாதவன் 
13)வைகுந்தன் 
14) புண்ணியன் 
15)மணிவண்ணன் 
16)மனத்துக்கினியான் 
17)மணிவண்ணன் 
18)உம்பர்கோமான் 
19)மலர்மார்பன் 
20)கலி 
21) விமலன் 
22)ஊற்றமுடையாய் 
23)பெரியாய் 
24) சுடர் 
 
இந்த உன்னதமான பெயர்களையே ஆண்டாள் சிறுபேர் என்கிறாள் என்றால்,கோவிந்த நாமத்தின் மகிமையைச் சொல்லவும் வேண்டுமோ? 

சொல்லுவோம் தினமும் கோவிந்தா கோவிந்தா என்ற பகவத் நாமாவை 
தொலைப்போம் நம் ஜென்மத்தை!! 
"கோவிந்தா கோவிந்தா கோவிந்தா"....
4 Vedhas 18 Puranas

📖 4 வேதங்கள் + 18 புராணங்கள்

இப்போது எளிய தமிழில் (PDF)

சனாதன தர்மத்தின் ஆன்மீக பொக்கிஷத்தை
உங்கள் மொபைலில் பெறுங்கள் 🙏

🎁 வெறும் ₹199 மட்டும்!

🔗 மேலும் விவரங்கள் அறிய
💜

பக்தர்களின் மெய்சிலிர்க்கும் அனுபவங்கள்

இந்த தளத்தை வாசித்த பிறகு, என் மனம் சாந்தியையும் நம்பிக்கையையும் பெற்றது.

🌸 ரமேஷ், மதுரை

இங்கே உள்ள ஆன்மிக விளக்கங்கள் தெளிவாகவும் எளிமையாகவும் இருக்கின்றன.

🌼 சிந்து, தஞ்சாவூர்

இந்த தளம் என் வீட்டில் ஒரு புனித இடமாகவே மாறியுள்ளது.

🌺 கிருஷ்ணன், கோவை

என் ஆன்மிகப் பயணத்தில் வழிகாட்டியாக இந்த தளம் இருந்தது. நன்றி!

🌹 சுகந்தி, சென்னை

நான் தேடிய பல தகவல்களை இங்கு ஒரே இடத்தில் நேர்த்தியாகப் பெற்றேன்.

💠 லலிதா, ஈரோடு

இந்த தளம் தினசரி ஒரு நல்ல எண்ணத்தை என் உள்ளத்தில் விதைக்கிறது.

🌿 அருண், திருநெல்வேலி

இங்குள்ள விரத முறைகளும் வழிபாட்டுக் குறிப்புகளும் வாழ்க்கைக்கு மிக உதவியாக உள்ளன.

🌻 மீனாட்சி, திருச்சி

தினசரி ராசிபலன் மற்றும் ஆன்மிக செய்திகள் என் நாளை சுபிட்சமாக தொடங்க உதவுகிறது.

☸️ கார்த்திக், சேலம்

ஸ்லோகங்களின் அர்த்தங்களை இவ்வளவு எளிமையாக இதுவரை நான் படித்ததில்லை!

🪔 காயத்ரி, வேலூர்

மன அழுத்தத்தில் இருந்த எனக்கு இங்குள்ள கட்டுரைகள் பெரிய ஆறுதலை தந்தன.

🪷 சுந்தர், திருப்பூர்

கோயில்களின் தல புராணங்கள் பற்றிய தகவல்கள் மிக அருமை. குடும்பத்துடன் படிக்கிறோம்.

🔔 பத்மநாபன், திண்டுக்கல்

ஒவ்வொரு பண்டிகையின் பின்னணியிலும் உள்ள உண்மையான காரணங்களை இதிலிருந்து புரிந்துகொண்டேன்.

🌾 ரேவதி, நாகர்கோவில்
WhatsApp
CHANNEL
🛕
📜
🏠
🎧
📚