Sri Mahavishnu Info: பிறவி சுழற்சியில் இருந்து விடுபடுவது எப்படி? | Path to Liberation from Birth Cycle பிறவி சுழற்சியில் இருந்து விடுபடுவது எப்படி? | Path to Liberation from Birth Cycle
📿 வைணவ அடிப்படைகள் | 🛕 திவ்யதேச வரலாறுகள் | 📘 நாலாயிர திவ்யபிரபந்தம் | 🎧 ஸ்லோகங்கள் | 📅 தினசரி பக்தி வழிகாட்டி | ❓ பக்தி கேள்விகள் | 📖 ஆன்மீக நூல்கள் | 🧒 குழந்தைகள் பக்தி பகுதி | 🛕 தரிசன நேரங்கள் | 📜 பக்தர் அனுபவம் | 🛐 ஸ்ரீவைணவ பாடசாலை | 🗓️ ஸ்ரீவைணவ நாட்காட்டி | 🔱 விஷ்ணு சஹஸ்ரநாமம் | 🌄 ஸ்ரீ வெங்கடேச மஹாத்மியம் | 🌺 திருப்பாவை | 🛕 திருத்தல தரிசனம் | ✨ அற்புத நிகழ்வுகள் | 👣 வைஷ்ணவ ஆச்சாரியர்கள் | 🕉️ நாமஸ்மரணையின் மகிமை | 🎙️ பக்தி ஸ்லோகங்கள் | 🔔 கோவில் விழாக்கள்

பிறவி சுழற்சியில் இருந்து விடுபடுவது எப்படி? | Path to Liberation from Birth Cycle

Sri Mahavishnu Info

தேகம்

தேங்காய் மட்டையோடு இருக்கும் போது அதை தேங்காய் என்ற பெயர் இருந்தது. தேங்காயிலிருந்து மட்டையைப் பிரித்து எடுத்தபின் அதற்கு தேங்காய் என்ற பெயர் நீங்கி மட்டை என்ற பெயர் வந்து விடுகிறது. அது இறுதியில் மண்ணொடு மண்ணாகி மட்டை என்ற பெயர் மண் என்றாகி விடுகிறது.

நார் தேங்காயோடு இருக்கும் போது அதற்கு தேங்காய் என்ற பெயர் இருந்தது. அதை தேங்காயிலிருந்து பிரித்தபின் அதற்கு தேங்காய் என்ற பெயர் போய் நார் என்ற பெயர் வந்து விடுகிறது. அது இறுதியில் மண்ணொடு மண்ணாகி நார் என்ற பெயர் மண் என்றாகி விடுகிறது.

ஓடு தேங்காயோடு இருக்கும் போது தேங்காய் என்ற பெயர் இருந்தது. உள்ளே உள்ள பருப்பில் இருந்து ஓட்டைப் பிரித்ததும் அதற்கு தேங்காய் என்ற பெயர் போய் தேங்காயோடு அல்லது சிரட்டை என்ற பெயர் வந்து விடுகிறது. அது இறுதியில் மண்ணொடு மண்ணாகி ஓடு என்ற பெயர் மண் என்றாகி விடுகிறது.

தேங்காயின் பருப்பைச் செக்கில் இட்டு ஆட்டியெடுத்தால் பருப்பின் கழிவுகளுக்கு சக்கை என்ற பெயரும் வந்து விடுகிறது. இந்த சக்கை இறுதியில் மண்ணொடு மண்ணாகி சக்கை என்ற பெயர் மண் என்றாகி விடுகிறது.

தேங்காயில் இருந்து இத்தனை பொருட்கள் பிரிந்து இறுதியில் இருக்கும் நீர்ம பொருளுக்கு எண்ணெய் என்ற பெயர் வந்து விடுகிறது.

மண்ணிலிருந்து வந்த தென்னை மரத்தில் இருந்து வந்த தேங்காய் அதிலிருந்து பிரிந்த பொருட்கள் ஒவ்வொன்றாக மண்ணோடு மண்ணாகி விடுகிறது. இறுதியாக இருக்கும் அந்த எண்ணெயில் திரி போட்டு விளக்கேற்றினால் அந்த எண்ணெய் ஒளியாக மாறி ஆகாயத்தோடு கலந்து விடுகிறது.

இப்போது தேங்காய் எங்கே இருக்கிறது? தேங்காய் என்று எதைக் கூறுவது? தன்னை சுற்றியுள்ள பொருளை ஒவ்வொன்றாக பிரிக்க பிரிக்க இறுதியில் உள்ள எண்ணெய் என்ற பொருளும் பிரபஞ்சத்தில் கலந்து விட்டது. இப்போது தேங்காய் என்று எதைக் கூறுவது?

இதுபோல்தான் இந்தத் தேகம். இந்த தேகத்தை நான் என்று சொல்கிறோம். இந்த நான் என்றால் யார்? இந்த கையா? காலா? கண்ணா? முக்கா? உணர்வுகளா? மனமா? சிந்தனையா? உடம்பை மனதை இயக்கும் மூச்சுக் காற்றா?

இவை அனைத்தும் சேர்ந்ததுதான் தேகம். இவை அனைத்தும் எப்படி ஒன்றாக இருக்கிறது. ஆசைகள் வினைகள் இவற்றை அனுபவிக்க இவை அனைத்தையும் இறைவன் ஒன்றாக்கி தேகம் என்ற பெயரில் இறைவன் கொடுத்திருக்கிறார்.

இந்த தேகத்தில் இவற்றை அனுபவிக்கும் போது தேகத்தோடு நிற்பது இன்பம் மற்றும் துன்பம். இறுதியில் அந்த தேகமும் அழிந்து அடுத்த தேகத்தை எடுத்துக் கொண்டு மீண்டும் ஆசைகள் துன்பங்கள் இவற்றை அனுபவித்து இறுதியில் இறத்தல் மீண்டும் பிறத்தல் என்று ஒரு பிறவி சுழற்சியில் மாட்டி இந்த ஆன்மா சுற்றிக் கொண்டிருக்கிறது.

இந்த சுழற்சியில் இருந்து மீள என்ன வழி?

இந்த தேகத்தை சுற்றி இருக்கும் ஆசைகள் மும்மலங்களான ஆணவம் கன்மம் மாயை மற்றும் வினைகள் இவை அனைத்தையும் பிரித்து விட்டால் இறுதியில் இருப்பது ஆன்மா மட்டுமே. அதுவும் நான் என்ற உணர்வு இல்லாத நிலையில் இறைவனோடு இரண்டறக் கலந்து விடுகிறது. பிறவி சுழற்சியில் இருந்து மீள இதுவே வழி.

இந்த தேகத்திலிருந்து இவை அனைத்தையும் பிரிக்க என்ன செய்ய வேண்டும்?

கை கால் கண் காது மூக்கு போன்ற இந்த தேகத்தில் இருக்கும் அனைத்து உறுப்புகளும் நானல்ல. தேகத்திற்குள் ஓடிக் கொண்டு இருந்த சுவாசம் நானல்ல. அந்த சுவாசத்தில் கலந்து ஓடிக் கொண்டிருக்கிற உணர்வும் நானல்ல. மனமும் நானல்ல. நினைவும் நானல்ல. நினைவுக்குள் இருக்கும் அறிவு நானல்ல என்ற பாவனையை முதலில் வளர்த்துக் கொள்ள வேண்டும்.

இன்பம் துன்பம் என்று எதனை அனுபவித்தாலும் அனைத்தும் இறைவன் செயலே என்ற சிந்தனையை வளர்த்துக் கொண்டே சென்றால் இந்த பாவனை நம்பிக்கையாக உணர்வாக மாறி தேகத்தில் உள்ள அனைத்தையும் பிரித்து விடும்.

இறுதியில் ஜோதி வடிவில் ஆத்மாவானது தனித்து நிற்கும். அதன் பெயர்தான் கடவுள். கட + உள் = கடவுள். இந்த உடம்பை கடந்து உள்ளே சென்றால் இருப்பது கடவுள்.

இந்த கடவுளை உணர்ந்து கொள்ள தேங்காய் எப்படி ஒவ்வொன்றாக விட்டு இறுதியில் எண்ணையாக மாறி தீபத்தில் எரிந்து பிரபஞ்சத்தோடு கலந்து விட்டதோ அதுபோல் நாமும் நமது தேகத்தை சுற்றி இருப்பவற்றை ஒவ்வொன்றாக விட இறுதியில் இருக்கும் இந்த ஜீவாத்மா அங்கிங்கெனாதபடி எங்கும் பிரகாசமாய் இருக்கும் அந்த பரமாதவாவோடு கலந்து விடும்.

🧹 தேங்காய் குச்சி தூய்மை துடைப்பம் (4 Pack)

உங்கள் வீட்டை சுத்தமாக வைத்திருக்க உதவும் தரமான தேங்காய் குச்சி துடைப்பம். வீட்டில், தோட்டத்தில், வெளிப்புறம் எல்லாமே எளிதாக சுத்தம் செய்யலாம்.

  • 🌿 இயற்கை தேங்காய் குச்சி
  • 💪 பலமாகவும் நீண்ட நாட்கள் பயன்படுத்தலாம்
  • 🧹 தூசி, குப்பை எளிதாக அகற்றும்
  • 🏡 வீடு & வெளிப்புறம் பயன்படுத்தலாம்
  • 📦 4 துடைப்பம் ஒரு செட்
🛒 இப்போது வாங்க

🙏 நம் ஸ்ரீ மஹாவிஷ்ணு இன்ஃபோ மூலம் பக்தர்களுக்காக அன்புடன் வழங்கப்படும் ஒரு சிறந்த தயாரிப்பு இது. நீங்கள் செய்யும் ஒவ்வொரு ஆர்டரும், நம் சேவைக்கு ஒரு பெரிய ஆதரவாகும் 🙌

🌾 கிராமங்களில் உள்ளவர்களுக்கு வேலை வாய்ப்பு உருவாக வேண்டும் என்ற நல்ல நோக்கத்தில் இந்த முயற்சி செய்யப்படுகிறது. உங்கள் ஒரு சிறிய ஆதரவு, அவர்களின் வாழ்க்கையில் பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும் ✨

📦 தற்போது இந்த தயாரிப்பு தமிழ்நாடு முழுவதும் Meesho மூலம் மட்டுமே அனுப்பப்படுகிறது.

📲 தயாரிப்பு குறித்து ஏதேனும் சந்தேகம் இருந்தால், எங்கள் WhatsApp எண்ணிற்கு message அனுப்பலாம்.

💬 WhatsAppல் தொடர்பு கொள்ள
💜

பக்தர்கள் சொல்கிறார்கள்

இந்த தளத்தை வாசித்த பிறகு, என் மனம் சாந்தியையும் நம்பிக்கையையும் பெற்றது.
🌸 ரமேஷ், மதுரை

இங்கே உள்ள ஆன்மிக விளக்கங்கள் தெளிவாகவும் எளிமையாகவும் இருக்கின்றன.
🌼 சிந்து, தஞ்சாவூர்

இந்த தளம் என் வீட்டில் ஒரு புனித இடமாகவே மாறியுள்ளது.
🌺 கிருஷ்ணன், கோவை

என் ஆன்மிகப் பயணத்தில் வழிகாட்டியாக இந்த தளம் இருந்தது. நன்றி!
🌹 சுகந்தி, சென்னை

நான் தேடிய பல தகவல்களை இங்கு ஒரே இடத்தில் நேர்த்தியாகப் பெற்றேன்.
💠 லலிதா, ஈரோடு

இந்த தளம் தினசரி ஒரு நல்ல எண்ணத்தை என் உள்ளத்தில் விதைக்கிறது.
🌿 அருண், திருநெல்வேலி

WhatsApp
CHANNEL
🛕
📜
🏠
🎧
📚