Sri Mahavishnu Info: திருநாங்கூர் கருட சேவை திருநாங்கூர் கருட சேவை
```
📿 வைணவ அடிப்படைகள் 🛕 108 திவ்யதேசங்கள் 📜 நாலாயிர திவ்யபிரபந்தம் 🎧 தினசரி ஸ்லோகங்கள் 📅 இன்றைய வைபவம் 🙏 தினசரி பக்தி வழிகாட்டி ❓ பக்தி கேள்வி & பதில்கள் 📖 ஆன்மீக நூல்கள் 🧒 குழந்தைகள் பக்தி பகுதி 🎓 ஸ்ரீவைஷ்ணவ பாடசாலை 🔱 விஷ்ணு சஹஸ்ரநாமம் 🌄 ஸ்ரீ வெங்கடேச மஹாத்மியம் 🌺 திருப்பாவை 👣 வைஷ்ணவ ஆச்சார்யர்கள் 🛕 திருத்தல தரிசனம் 🔔 கோவில் விழாக்கள் 📜 பக்தர் அனுபவங்கள் ✨ அற்புத நிகழ்வுகள் 🕉️ நாமஸ்மரணையின் மகிமை 📚 பக்தி குறிப்புகள் 🌸 ஆழ்வார்கள் வரலாறு 🙏 ஸ்ரீவைஷ்ணவ சம்பிரதாயம் 🎙️ பக்தி உரைகள் & ஆடியோ 📆 ஸ்ரீவைஷ்ணவ நாட்காட்டி 🌟 புதிய பக்தி பதிவுகள்

திருநாங்கூர் கருட சேவை

Sri Mahavishnu Info
திருநாங்கூர் என்னும் ஊரில் மட்டும் ஆறு திவ்யதேசங்கள் உள்ளன.திருநாங்கூரில் நடைபெறும் கருடசேவைக்கு பதினொரு பெருமாள்கள் எழுந்தருள்வார்கள்.
108 வைணவ திவ்யதேசங்களில் சோழநாட்டு திருப்பதிகளுள் திருநாங்கூர் என்னும் ஊரில் மட்டும் ஆறு திவ்யதேசங்கள் உள்ளன. இந்த திருநாங்கூரைச் சுற்றி சுமார் ஒரு கி.மீ. தூரத்தில் 5 திவ்யதேசங்கள் உள்ளன. இந்த பதினொன்றையும் சேர்த்து திருநாங்கூர் பதினொரு திவ்யதேசம் என்று வழங்குவர். அவையாவன:-

திருக்காவளம்பாடி

திருஅரிமேயவிண்ணகரம்

திருவண்புருடோத்தமம்

திருச்செம்பொன்செய்கோவில்

திருமணி மாடக்கோவில்

திருவைகுந்த விண்ணகரம்

- இந்த ஆறுதலங்களும் திருநாங்கூருக்குள்ளேயே உள்ளன.

திருத்தேவனார்த் தொகை

திருத்தெற்றியம்பலம்

திருமணிக்கூடம்

திருவெள்ளக்குளம்

திருப்பார்த்தன்பள்ளி

ஒவ்வொரு வருடமும் தை அமாவாசைக்கு மறுநாள் திருநாங்கூரில் நடைபெறும் கருடசேவைக்கு இந்தப் பதினொரு பெருமாள்களும் எழுந்தருள்வார்கள். இந்த பதினொரு பெருமாள்களையும் திருமங்கை யாழ்வார் ஒருவருக்கு அடுத்து ஒருவராக மங்களா சாசனம் செய்வார். பிறகு திருமங்கையாழ்வாரை மணவாள மாமுனிகள் மங்களாசாசனம் செய்வார். இந்தக் கருட சேவையைக் காண்பதற்கு பல இடங்களிலிருந்தும் பக்தர்கள் திரண்டு வருவார்கள்.

ஒவ்வொரு வருடமும் இந்த பெருமாள்களை மங்களாசாசனம் செய்ய திருமங்கையாழ்வாரே இங்கு வருவதாக பக்தர்கள் நம்புகிறார்கள். திருநாங்கூரைச் சுற்றியுள்ள வயல்வெளிகளில் கருட சேவைக்கு முதல் நாள் நள்ளிரவில் காற்றினால் நெற்பயிர்கள் சலசல என்று சப்தமிடும். இந்த சப்தத்தை கேட்டவுடன் திருமங்கையாழ்வார் ஊருக்குள் பிரவேசித்து விட்ட தாக பக்தர்கள் கூறுவார்கள். திருமங்கையால் மிதிக்கப்பட்ட வயல்வெளிகளில் அதிக நெல்விளையும் என்பதும் இங்குள்ள விவசாயிகளின் நம்பிக்கையாகும்.

மணிமாடக்கோவில் எனப்படும் நாராயண பெருமாள் சன்னதியில் இந்தக் கருடசேவை திருவிழா ஒவ்வொரு ஆண்டும் நடைபெறுகிறது. இந்தப் பதினொரு பெருமாள்களையும் கருடசேவையில் சேவிப்பது பதினொரு திவ்ய தேசங்களுக்கு சென்று வழிபட்டதற்கு நிகராகும்.

பெருமாளை கருட வாகனத்தில் சேவை சாதிக்கக் காண்போருக்கு மறு பிறவி கிடையாது என்பது ஐதிகம். ஆகவே நாம் அனைவரும் உய்ய பதினோரு திவ்ய பெருமாள்களும் தரும் கருட சேவையை காணவும், ஆழ்வாரை நெல் வயல்களின் நடுவே நெற்கதிர்களை சாய்த்து மிதித்துக் கொண்டு பக்தர்கள் ஏழப்பண்ணி கொண்டு செய்யும் அழகையும் கண்டு களிக்க எத்தனை கோடி தவம் செய்திருக்க வேண்டுமோ, எனவே கிளம்பிவிட்டீர்களா திருநாங்கூருக்கு? சென்று வந்து உலகளந்த ஊழி பிரானாம், உம்பர் தொழும் திருமாலின் அருள் பெற பிரார்த்திக்கின்றேன்.
4 Vedhas 18 Puranas

📖 4 வேதங்கள் + 18 புராணங்கள்

இப்போது எளிய தமிழில் (PDF)

சனாதன தர்மத்தின் ஆன்மீக பொக்கிஷத்தை
உங்கள் மொபைலில் பெறுங்கள் 🙏

🎁 வெறும் ₹199 மட்டும்!

🔗 மேலும் விவரங்கள் அறிய
💜

பக்தர்கள் சொல்கிறார்கள்

இந்த தளத்தை வாசித்த பிறகு, என் மனம் சாந்தியையும் நம்பிக்கையையும் பெற்றது.
🌸 ரமேஷ், மதுரை

இங்கே உள்ள ஆன்மிக விளக்கங்கள் தெளிவாகவும் எளிமையாகவும் இருக்கின்றன.
🌼 சிந்து, தஞ்சாவூர்

இந்த தளம் என் வீட்டில் ஒரு புனித இடமாகவே மாறியுள்ளது.
🌺 கிருஷ்ணன், கோவை

என் ஆன்மிகப் பயணத்தில் வழிகாட்டியாக இந்த தளம் இருந்தது. நன்றி!
🌹 சுகந்தி, சென்னை

நான் தேடிய பல தகவல்களை இங்கு ஒரே இடத்தில் நேர்த்தியாகப் பெற்றேன்.
💠 லலிதா, ஈரோடு

இந்த தளம் தினசரி ஒரு நல்ல எண்ணத்தை என் உள்ளத்தில் விதைக்கிறது.
🌿 அருண், திருநெல்வேலி

WhatsApp
CHANNEL
🛕
📜
🏠
🎧
📚