
தன் நண்பர்களுக்கு பிரகலாதன் சொன்ன திருநாமம் என்ன தெரியுமா?
'நாராயணாய!'
பகவானுக்கு ஆயிரம் நாமங்கள் உள்ளன. அவற்றுள் மிக உன்னதமானதும் உயிர்ப்பானதுமான திருநாமம் இதுதான். பிரகலாதன் இந்த ஒரே ஒரு திருநாமத்தைதான் நண்பர்களிடம் வலியுறுத்தினான். ஆனால், இந்த ஒற்றைத் திருநாமத்தை, ஆயிரம் திருநாமங்கள் என வர்ணிக்கிறார்கள் ஆன்றோர்கள்.
‘நாராயணா’ எனும் திருநாமம், ஆயிரம் திருநாமங்களுக்குச் சமம் என்று சிலாகிக்கிறார் பராசர பட்டர்.
'நார’ என்றால், ஜீவாத்மாவை விட்டொழிந்தவை என்று அர்த்தம்.
அயனம் என்றால், ஆஸ்ரயம். அதாவது, பகவானே கதி; அவனே நல்வழி; அவனுடைய இருப்பிடமே புகலிடம் என்று அர்த்தம்.
🔹 ஸ்ரீகிருஷ்ணரின் சிறப்பு
அவனே அனைத்துக்கும் ஆதாரம். இதனால்தான் அர்ஜுனன், “ஸ்ரீகிருஷ்ணா! நீ உள்ளேயும் நிறைந்திருக்கிறாய்; வெளியேயும் நிறைந்திருக்கிறாய்!” என வியப்புடன் சொல்கிறான்.
அவன் பகிர் வ்யாபதி (வெளியில் இருந்து தாங்குபவன்), அந்தர் வ்யாபதி (உள்ளிருந்து காத்தருள்பவன்).
இதனால் அவனுக்கு பூதாவாஸஹ எனும் திருநாமம் உண்டானது.
🔹 வாசுதேவ நாமத்தின் ஆழம்
“ஓம் நமோ பகவதே வாசுதேவாய” என்கிற மந்திரத்தை இவ்வுலகில் ப்ரவர்த்தனம் செய்தவன் — அதுவே வாசுதேவன்.
ஓம் = உனக்கு நான் அடிமை
நமஹ = எனக்கு நான் அடிமை அல்ல
இந்த இரண்டும் சேரும் போது அது திவ்ய மந்திரமாகி போகும்!
நாராயணாய வித்மஹே
வாசுதேவாய தீமஹி
தந்நோ விஷ்ணு ப்ரசோதயாத்
🙏 ஆகவே, சந்தர்ப்பம் வரும் போதெல்லாம் ஓம் நமோ நாராயணாய என்றும் ஓம் நமோ வாசுதேவாய என்றும் ஜபிக்க வேண்டும். ஸ்ரீகிருஷ்ணரின் அனுக்ரஹம் நமக்கு சுலபமாகும்!