📿 வைணவ அடிப்படைகள் | 🛕 திவ்யதேச வரலாறுகள் | 📘 நாலாயிர திவ்யபிரபந்தம் | 🎧 ஸ்லோகங்கள் | 📅 தினசரி பக்தி வழிகாட்டி | ❓ பக்தி கேள்விகள் | 📖 ஆன்மீக நூல்கள் | 🧒 குழந்தைகள் பக்தி பகுதி | 🛕 தரிசன நேரங்கள் | 📜 பக்தர் அனுபவம் | 🛐 ஸ்ரீவைணவ பாடசாலை | 🗓️ ஸ்ரீவைணவ நாட்காட்டி | 🔱 விஷ்ணு சஹஸ்ரநாமம் | 🌄 ஸ்ரீ வெங்கடேச மஹாத்மியம் | 🌺 திருப்பாவை | 🛕 திருத்தல தரிசனம் | ✨ அற்புத நிகழ்வுகள் | 👣 வைஷ்ணவ ஆச்சாரியர்கள் | 🕉️ நாமஸ்மரணையின் மகிமை | 🎙️ பக்தி ஸ்லோகங்கள் | 🔔 கோவில் விழாக்கள்

எனது வாழ்வில் பெருமாள் - பகுதி 17

Sri Mahavishnu Info
(பக்தர்களின் வாழ்வில் பெருமாள் நடத்திய நெகிழ்ச்சியான சம்பவங்கள்)
அனுப்பியவர் : V.P. சங்கர் 
முன்னாள் நகரமன்ற உறுப்பினர் மணப்பாறை ( 1996-2011)

வணக்கம் நான் திருச்சி மாவட்டம் மணப்பாறையை சார்ந்தவன் என் வாழ்வில் திருமலையான் நமோ நாராயணா அவர்கள் எனக்கு அளித்த பாக்கியத்தை பற்றி கூறுகிறேன் கடந்த சிலவருடங்களாகவே திருமலையில் கோவில் பணியில் சேவையில் கலந்து கொண்டு சேவை செய்ய வேண்டும் என்று நீண்ட நாட்களாக அதற்க்காக வழி தெரியாமல் ஏங்கி இருந்த நேரத்தில் என் சகோதரி திருச்சியில் இருக்குறார் அவர் முலமாக எனக்கு திருமலையில் ஆண்டவனுக்கு சேவை செய்ய காஞ்சிபுரத்தில் வசித்து வரும் அருமை தாயார் திருமதி விசாலாட்சி அவர்கள் வருடத்திற்க்கு இரண்டு அல்லது மூன்று தடவை பெருமாளுக்கு சேவை செய்ய விரும்புபவர்களை அழைத்து சென்று ஒரு வாரம் கோவில் பணிகளில் ஈடுபட்டு அழைத்து வருகிறார் நான் முதன் முதலில் 2014ஆம் ஆண்டில் திருப்பதியில் சே‌வைக்கு சென்ற போது அடையாள அட்டை வழங்கி ஒருவாரத்திற்க்கு எங்கே வேலை செய்ய வேண்டும் என்று உத்திரவும் வழங்கி விடுவார்கள்  அப்போது தான் எங்களுக்கு அடுத்த நாள் 2ஆம் நாள் டூட்டியானது கோவில்  டூட்டி போடப்பட்டிருந்தது மிகவும் சந்தோஷமாக இருந்தது அதிலும் கோவிலுக்குள் உண்டியல் கொடிமரம் மூலஸ்தானத்தில் என் பிரித்து போடுவார்கள் 6 மணி நேரம் பணி செய்ய வேண்டும் எனக்கு முதன்முதலில் கோவில் மூலஸ்தானத்தில் கருடாழ்வார் பக்கத்தில் நின்று ஆண்டவரை பிரார்த்தனை செய்ய வருகிறவர்களை வரிசைப்படுத்தி அனுப்ப வேண்டிய பணி  எனக்கு ஆண்டவன் கோவிந்தனை 6 மணிநேரமும் மிக அருகில் நின்று காணவேண்டிய பாக்கியத்தை அந்த பரந்தாமன் வழங்கியது இன்றும் என் வாழ்நாளில் மறக்க முடியாத அனுபவம் மேலும் தொடர்ந்து கடந்த 6 ஆண்டுகளாக என்னால் முடிந்த அளவு நம்பிக்கை யுடன் வருபவர்களை சேவைக்கு அழைத்து சென்று வருகிறேன் வருடத்தில் ஒரு முறை யாவது பெருமாளுக்கு சேவை செய்தால் எனது மனது நிறைவை தருகிறது எங்களுடைய டீம் லீடர் திருமதி விசாலாட்சி அவர்கள் நீண்ட ஆயுளும் நிறைந்த செல்வமும் புகழும் பெற்று நீடூழி வாழ இறைவனை வேண்டுகிறேன் நன்றி

நீங்களும் உங்கள் வாழ்வில்  பெருமாளின் அற்புதங்களை எங்களுக்கு அனுப்பலாம் உங்கள் பெயருடன் அதை பதிவு செய்வோம்

அனுப்ப வேண்டிய வாட்ஸ்அப் எண்
9500074173
💜

பக்தர்கள் சொல்கிறார்கள்

இந்த தளத்தை வாசித்த பிறகு, என் மனம் சாந்தியையும் நம்பிக்கையையும் பெற்றது.
🌸 ரமேஷ், மதுரை

இங்கே உள்ள ஆன்மிக விளக்கங்கள் தெளிவாகவும் எளிமையாகவும் இருக்கின்றன.
🌼 சிந்து, தஞ்சாவூர்

இந்த தளம் என் வீட்டில் ஒரு புனித இடமாகவே மாறியுள்ளது.
🌺 கிருஷ்ணன், கோவை

என் ஆன்மிகப் பயணத்தில் வழிகாட்டியாக இந்த தளம் இருந்தது. நன்றி!
🌹 சுகந்தி, சென்னை

நான் தேடிய பல தகவல்களை இங்கு ஒரே இடத்தில் நேர்த்தியாகப் பெற்றேன்.
💠 லலிதா, ஈரோடு

இந்த தளம் தினசரி ஒரு நல்ல எண்ணத்தை என் உள்ளத்தில் விதைக்கிறது.
🌿 அருண், திருநெல்வேலி

🛕
108 ஆலயம்
📜
பிரபந்தம்
🎧
ஸ்லோகம்
📚
குறிப்புகள்