Sri Mahavishnu Info: அன்பே கடவுள் அன்பே கடவுள்
📿 வைணவ அடிப்படைகள் | 🛕 திவ்யதேச வரலாறுகள் | 📘 நாலாயிர திவ்யபிரபந்தம் | 🎧 ஸ்லோகங்கள் | 📅 தினசரி பக்தி வழிகாட்டி | ❓ பக்தி கேள்விகள் | 📖 ஆன்மீக நூல்கள் | 🧒 குழந்தைகள் பக்தி பகுதி | 🛕 தரிசன நேரங்கள் | 📜 பக்தர் அனுபவம் | 🛐 ஸ்ரீவைணவ பாடசாலை | 🗓️ ஸ்ரீவைணவ நாட்காட்டி | 🔱 விஷ்ணு சஹஸ்ரநாமம் | 🌄 ஸ்ரீ வெங்கடேச மஹாத்மியம் | 🌺 திருப்பாவை | 🛕 திருத்தல தரிசனம் | ✨ அற்புத நிகழ்வுகள் | 👣 வைஷ்ணவ ஆச்சாரியர்கள் | 🕉️ நாமஸ்மரணையின் மகிமை | 🎙️ பக்தி ஸ்லோகங்கள் | 🔔 கோவில் விழாக்கள்

அன்பே கடவுள்

Sri Mahavishnu Info
"ஒரு ரூபாய்" 
கடைக்காரரிடம் ஒரு ரூபாய் நாணயத்தை காட்டி உங்கள் கடையில் இறைவன் இருந்தால் ஒரு ரூபாய்க்கு கிடைப்பாரா என்று கேட்டான். சிறுவனின் கையில் இருந்த நாணயத்தை தட்டிவிட்ட கடைக்காரர் சிறுவனை அங்கிருந்து துரத்திவிட்டார் சிறுவனும் அந்த நாணயத்தை எடுத்துக் கொண்டு ஒவ்வொரு கடையாக சென்று ஒரு ரூபாய்க்கு இறைவனை வேண்டுமென்று கேட்டுள்ளான் பல கடைக்காரர்கள் அவனை விரட்டி விட்டாலும் மனம் தளராத சிறுவன் அங்கிருந்த ஒரு பெரிய கடைக்கு சென்று  கடை உரிமையாளரிடம் உங்கள் கடையில் இறைவன் இருந்தால் ஒரு ரூபாய்க்கு வேண்டுமென்று கேட்டு உள்ளான். அதற்கு அந்த கடைக்காரர் மிகுந்த கோபமுற்று இழுத்து கொண்டு போய் வெளியே தள்ளி விட்டார். அவன் வந்து கொண்டிருந்த ஒரு விலையுயர்ந்த சொகுசு காரின் முன்னே சென்று விழுந்தான். அந்த கார் நிறுத்தப்பட்டது. நல்ல வேளை அடியேதும் படவில்லை. அந்த காரில் இருந்து இறங்கிய அந்த பெரியவர் அந்த சிறுவனை பார்த்து என்ன ஆயிற்று என்று கேட்டார். அந்த சிறுவன் நடந்ததை, கூறி பின்னர் அவரிடமே, தன்னுடைய ஒரு ரூபாய் நாணயத்தை காட்டி, உங்களிடம் இறைவன் இருந்தால் இந்த ஒரு ரூபாயை வைத்து கொண்டு எனக்கு கொடுக்க முடியுமா என்று கேட்டான். அதற்கு அந்த பெரியவர், ஒரு ரூபாய்க்கு இறைவனை வாங்கிவிட்டு அந்த இறைவனை வைத்து நீ என்ன செய்யப் போகிறாய் என்று கேட்டுள்ளார். அதற்கு சிறுவன் எனக்கு எல்லாமே என் தாய் தான். சாப்பாடு ஊட்டுவது முதல் தாலாட்டு பாடி என்னை தூங்க வைப்பது வரை என் தாய் தான். தற்போது என் தாய் உடல் நலம் இல்லாமல் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். மருத்துவர்கள் உன் தாயை இறைவன் தான் காப்பாற்றுவார் என்று கூறி விட்டனர். அதனால்தான் என்னிடம் உள்ள ஒரு ரூபாய்க்கு இறைவன் கிடைப்பாரா என்று தேடிக் கொண்டிருக்கிறேன் என்று கூறினான். அதற்கு அந்த பெரியவர் உனக்கு ஒரு ரூபாய்க்கு இறைவனைத் தானே வேண்டும், நான் தருகிறேன் என்று கூறி, ஒரு கடிதம் எழுதி, அதை ஒரு உறையுள் போட்டு கொடுத்து, இதனை கொண்டு போய் உன் தாய் அனுமதிக்கப்பட்ட  மருத்துவமனையில் குறிப்பிட்ட ஒரு மருத்துவரின் பெயரைச் சொல்லி அவரிடம் கொண்டு போய் கொடு என்று கூறி அனுப்பி வைத்தார். சிறுவனும் அவ்வாறே நேராக மருத்துவமனைக்கு சென்று அந்த மருத்துவரை கண்டு அந்த உறையை கொடுத்தான்.  அந்த உறையை  பிரித்து பார்த்த மருத்துவர், மருத்துவமனையின் நிறுவனர் தன் கைப்பட எழுதிய  அந்த கடிதத்தை கண்டு அதிர்ந்து போய் உடனே அந்த தாய்க்கு தீவிர உயர்தர சிகிச்சைக்கு ஏற்பாடு செய்து, அந்த சிறுவனின் தாயை காப்பாற்றினார். 

முக்கிய மருத்துவர்கள் புடை சூழ மருத்துவமனையின் நிறுவனர் (அதாவது அந்த பெரியவர்) உயிர் பிழைத்த தாயை காண வந்தார். அவர்களை பார்த்த தாய், மருத்தவ செலவை பற்றி நினைத்து, என்ன ஆகுமோ என அச்சத்தில் உறைந்து இருந்தாள். அந்த பெரியவர், அந்த ஏழை தாயிடம் கவலை படாதீர்கள், உங்கள் சிகிச்சைக்கான அனைத்து தொகையும் உங்கள் மகன் செலுத்தி விட்டான்.  இதை கேட்டதும் தாய், அதிர்ந்துபோய் தன் அருகே தூங்கிக்கொண்டிருந்த தன் மகனை பார்த்தாள். மேலும் தொடர்ந்த பெரியவர், செலவு போக  மீதித் தொகையை உங்கள் மகனை படிக்க வைப்பதின் மூலம் திருப்பி கொடுத்து விடுகிறேன் என்றார்.

தாய் மிகவும் பயந்து போய் அந்த பெரியவரிடம் காரணத்தை கேட்டபோது, அவர் "உங்கள் மகனின் அந்த கடவுள் மீதான நம்பிக்கை மற்றும் கடவுளை பெற்றே தீருவேன்'' என்ற விடா முயற்சி ஆகியவைதான்  இந்த சேவையை செய்ய காரணம் என்று கூறினார். 

மனதில் நம்பிக்கை மற்றும் விடா முயற்சி இருந்தால் ஒரு ரூபாய்க்கு கூட இறைவன் கிடைப்பார்..

🪔 உங்கள் பூஜை அறையில் ஒளிரும் ஒரு புனித தீபம்!

Brass Shank Chakra Diya

🪔 ஶ்ரீ யஜ்ஞா - சங்குசக்கரத் தீபம்

எளிதாக தூக்கக்கூடிய, ஆன்மீகத் தன்மையுடன் உள்ள ஊதாப்பழை நிற சங்குசக்கரத் தீபம். 5 அங்குல உயரம் – உங்கள் பூஜை அறைக்கு ஒரு அழகு மற்றும் அமைதி தரும் தீபம்!

💜

பக்தர்கள் சொல்கிறார்கள்

இந்த தளத்தை வாசித்த பிறகு, என் மனம் சாந்தியையும் நம்பிக்கையையும் பெற்றது.
🌸 ரமேஷ், மதுரை

இங்கே உள்ள ஆன்மிக விளக்கங்கள் தெளிவாகவும் எளிமையாகவும் இருக்கின்றன.
🌼 சிந்து, தஞ்சாவூர்

இந்த தளம் என் வீட்டில் ஒரு புனித இடமாகவே மாறியுள்ளது.
🌺 கிருஷ்ணன், கோவை

என் ஆன்மிகப் பயணத்தில் வழிகாட்டியாக இந்த தளம் இருந்தது. நன்றி!
🌹 சுகந்தி, சென்னை

நான் தேடிய பல தகவல்களை இங்கு ஒரே இடத்தில் நேர்த்தியாகப் பெற்றேன்.
💠 லலிதா, ஈரோடு

இந்த தளம் தினசரி ஒரு நல்ல எண்ணத்தை என் உள்ளத்தில் விதைக்கிறது.
🌿 அருண், திருநெல்வேலி

🛕
108 ஆலயம்
📜
பிரபந்தம்
🎧
ஸ்லோகம்
📚
குறிப்புகள்