Sri Mahavishnu Info: கருட புராணம் - 01 கருட புராணம் - 01

கருட புராணம் - 01

Sri Mahavishnu Info
கருட புராணம் என்றால் என்ன?

கருட புராணம் என்பது இந்து சமய பதினெண் புராணங்களில் பதினேழாவது புராணமாகும். வைணவ புராணமான இதில் விஷ்ணுவும் கருடனும் உரையாடுவது போன்று அமைந்துள்ளது. மரணத்திற்குப் பின்னுள்ள வாழ்க்கை, ஈமச்சடங்குகள் மற்றும் மறுபிறவி போன்றவைகளைப் பற்றி இதன் இரண்டாம் பகுதி விளக்குகிறது. இப்புராணத்தில் வானியல், மருத்துவம், இலக்கணம், நவரத்தின கட்டமைப்பு மற்றும் பண்புகள் பற்றி விவாதிக்கிறது. மொத்தம் பத்தொன்பது ஆயிரம் செய்யுட்கள் கொண்ட இப்புராணம், பூர்வ கந்த மற்றும் உத்திர கந்த என்ற இரண்டு உட்பிரிவுகளைக் கொண்டுள்ளது.

கருட புராணம் என்பது பறவைகளின் அரசனான கருடனுக்கு ஏற்பட்ட ஐயங்களை தீர்க்கும் பொருட்டு திருமால் எடுத்துரைக்கும் ஒரு அதி அற்புதமான புராணம் ஆகும். மனிதர்களாக பிறந்த அனைவரும் குறிப்பாக எதையும் பகுத்தறிந்து புரிந்துகொள்ளக்கூடிய உயிரினமாக இருப்பதாலும், பிறப்புகளில் உன்னதமான பிறப்பான மானுட பிறவியில் இருக்கக்கூடிய அனைவரும் தெரிந்து கொள்ள வேண்டிய புராணம் கருட புராணம் ஆகும்.

அனைத்து வளங்களும் நிரம்பி இருக்கக்கூடிய மனிதர்கள் மட்டும் அல்லாத, கணக்கில் சொல்ல முடியாத அளவிற்கு உயிரினங்கள் வாழ்வதற்கான வாழிடத்தை அளித்திருக்கக்கூடிய இடம்தான் பூமி. பூமி உருவான பொழுதில் ஓரறிவு உயிரினங்கள் அதிகமாக இருந்த காலக்கட்டத்தில் இருந்து அடுத்தடுத்த காலங்களில் ஏற்பட்ட பரிணாம வளர்ச்சியினால் இன்று ஆறு அறிவு படைத்து, எதையும் பகுத்தறிந்து, நன்மை எது? தீமை எது? என அறிந்து செயல்படும் தன்மை கொண்டு சிறந்த உயிரினமாக இன்றளவும் மனித உயிரினம் இருந்து வருகின்றது.

அணுவாக இருந்தாலும், அண்டமாக இருந்தாலும் அனைத்திலும் நிரம்பி இருக்கக்கூடிய பரம்பொருளால் உருவாக்கப்பட்ட உயிரினங்களில் தேவர்களுக்கு முன் இருக்கக்கூடிய பிறப்பு என்பது மனித பிறப்பு. இந்த ஒரு காரணத்தினாலேயே மற்ற பிறப்புகளை காட்டிலும் மனித பிறப்பு என்பது அதி உன்னதமான பிறவியாக கருதப்படுகின்றது.

இதன் முக்கியத்துவத்தை அறிந்து கொண்ட நமது முன்னோர்கள் மற்றும் தவசீலர்கள் நமது தோற்றத்திற்கு அடிப்படையாக இருக்கக்கூடிய பரம்பொருளிடம் இருந்து பலவிதமான ஆற்றல்களை பெற்றிருந்தனர். அதனால் எதிர்காலம் தொடர்பான செயல்பாடுகளை அறிந்து கொள்ள உதவும் வகையில் எந்தவொரு தொழில்நுட்ப உதவியுமின்றி அன்றே ஒவ்வொரு கிரகத்திற்கும் உள்ள தொலைவு, நிறம் மற்றும் அதனுடைய தன்மைகள் குறித்தும், அந்த ஒளியினால் உயிரினத்தில் ஏற்படக்கூடிய மாற்றங்கள் குறித்தும் ஓலைச்சுவடிகளில் நமக்காக எழுதி அளித்து சென்றுள்ளனர்.

நமது முன்னோர்கள் எதையும் முன்னோக்கியே சிந்தித்து கொண்டு இருப்பதினாலோ என்னவோ அவர்களை நாம் 'முன்னோர்கள்" என்று அழைக்கின்றோம். ஏனெனில் இன்றைய நவீன யுகத்தில் நாம் வாழ்வதற்கு என்ன தேவை? என்பதை மட்டுமே இன்று யோசித்துக் கொண்டிருக்கிறோம்.

ஆனால் அன்றோ பாரத பூமியில் பிறந்த நம்முடைய முன்னோர்கள் அனைவரும் ஒரு பிறவி பிறப்பதற்கான காரணம் என்ன? அதன் பிறப்பு என்பது எதன் அடிப்படையில் அமைகின்றது? எதனால் ஒரு பிறவி பலவித இன்னல்களையும், துன்பங்களையும் அனுபவித்து இந்த பூமியில் வாழ்கின்றது? என்பதை பற்றிய தகவல்களை அளித்துச் சென்றுள்ளனர்.

பிறக்கின்ற அனைத்து பிறவிகளிலும் துன்பங்களை அனுபவிக்காமல் சில பிறவிகள் இன்பத்துடனும், மகிழ்ச்சியுடனும் வாழ்கின்ற காரணத்தை அறிந்து கொள்ளும் பொருட்டு, பலவிதமான தகவல்களையும் நமது முன்னோர்கள் நமக்கு அளித்துச் சென்றுள்ளனர்.

அவர்கள் மேற்கொண்ட அந்த பயணத்தின் விளைவாக பரம்பொருளின் அருளோடும், நமக்கு இந்த பூமியில் வாழ்வது எப்படி? என்றும், தவறான செயல்களில் ஈடுபடுவதால் நமக்கு என்னென்ன விளைவுகள் ஏற்படுகின்றன? என்றும் விரிவாக எடுத்துரைக்கும் பொருட்டு கருடரின் உதவியோடு கருட புராணம் பலவிதமான ரகசியங்களையும் எடுத்துரைக்கின்றது.

கருட புராணம் என்பது பூமியில் பிறந்து, ஆன்மாவுடன் உடலும் இணைந்து இருக்கும் பொழுது நாம் எவ்விதம் வாழ வேண்டும்? என்றும், அவ்விதமாக வாழும்போது நாம் செய்த கர்மாக்களின் அடிப்படையில் உடலை இழந்த ஆன்மா அனுபவிக்கக்கூடிய இன்ப, துன்பங்களை பற்றி எடுத்துரைக்கும் ஒரு வாழ்க்கை சாஸ்திரமாகும்.

கருட புராணத்தை படிப்பதன் மூலமாகவோ அல்லது ஒருவர் வாசிக்க இன்னொருவர் கேட்பதன் மூலமாகவோ இந்த பூமியில் நாம் எப்படி வாழ வேண்டும்? என்பதை பற்றி தெளிவாக அறிந்து கொள்ள இயலும். நாம் செய்யும் சிறு செயல்கள் எவ்விதமான பாதிப்பை ஏற்படுத்தும்? என்பதையும் இந்த புராணம் நமக்கு எடுத்துரைக்கும்.

நமது பெற்றோர்களுக்கு நாம் எவ்விதம் சில கடமைகளை செய்ய வேண்டும்? என்றும், அந்த கடமைகளை செய்ய தவறினால் அதனால் ஏற்படும் விளைவுகள் என்ன? என்பதை பற்றியும், நாம் முழுமையாக அறிந்து கொள்ள ஏதுவாக இருக்கக்கூடிய புராணம் கருட புராணம் ஆகும்.

இந்த பூமியில் வாழும் வரை நம்மால் முடிந்த அளவு எப்படி இருக்க வேண்டும்? என்பதை பற்றிய தெளிவை ஏற்படுத்தும் நோக்கத்தோடு கருட புராணத்தை பற்றி அறிந்து கொள்ள நமது முதல் அடியை எடுத்து வைப்போம்..

தொடரும்...

🔁 நாமஸ்மரணைக்கு சிறந்த தோழன்!

QEEIG Finger Counter

தினசரி நாம ஜெபம் அல்லது மந்திர ஜெபம் செய்வோர்களுக்காக இது ஒரு அருமையான கருவி. QEEIG Digital Finger Counter என்ற இந்த சாதனம், உங்கள் ஜெப எண்ணிக்கையை நம்பிக்கையுடன் பதிவு செய்ய உதவும்.

  • 🧘 நாமஸ்மரணை / மந்திர ஜெபத்திற்கு ஏற்றது
  • 📿 கை விரலில் அணியக்கூடிய டிஜிட்டல் டாலி
  • 🔋 டிஜிட்டல் டிஸ்ப்ளே & ரீசெட் வசதி
  • 🌈 பல நிறங்களில் கிடைக்கும் – நம் சித்தத்திற்கு இனிமை!
💜

பக்தர்கள் சொல்கிறார்கள்

இந்த தளத்தை வாசித்த பிறகு, என் மனம் சாந்தியையும் நம்பிக்கையையும் பெற்றது.
🌸 ரமேஷ், மதுரை

இங்கே உள்ள ஆன்மிக விளக்கங்கள் தெளிவாகவும் எளிமையாகவும் இருக்கின்றன.
🌼 சிந்து, தஞ்சாவூர்

இந்த தளம் என் வீட்டில் ஒரு புனித இடமாகவே மாறியுள்ளது.
🌺 கிருஷ்ணன், கோவை

என் ஆன்மிகப் பயணத்தில் வழிகாட்டியாக இந்த தளம் இருந்தது. நன்றி!
🌹 சுகந்தி, சென்னை

நான் தேடிய பல தகவல்களை இங்கு ஒரே இடத்தில் நேர்த்தியாகப் பெற்றேன்.
💠 லலிதா, ஈரோடு

இந்த தளம் தினசரி ஒரு நல்ல எண்ணத்தை என் உள்ளத்தில் விதைக்கிறது.
🌿 அருண், திருநெல்வேலி

🛕
108 ஆலயம்
📜
பிரபந்தம்
🎧
ஸ்லோகம்
📚
குறிப்புகள்