Sri Mahavishnu Info: எனது வாழ்வில் பெருமாள் - பகுதி 24 எனது வாழ்வில் பெருமாள் - பகுதி 24

எனது வாழ்வில் பெருமாள் - பகுதி 24

Sri Mahavishnu Info
(பக்தர்களின் வாழ்வில் பெருமாள் நடத்திய நெகிழ்ச்சியான சம்பவங்கள்)

அனுப்பியவர் : K.வெங்கடேசன், மணக்காடு சேலம் 7.

நான் போக்குவரத்துவரத்து கழகத்தில்  முதுநிலை கண்காணிப்பாளராக பணியாற்றினேன். எனக்கு கீழே எழு பணியாளர்கள் பணிபுரிந்தனர். ஒழுங்கு நடவடிக்கை பிரிவு என்பதால் ஆயிரக்கணக்கான கோப்புகளை கையாள வேண்டியிருக்கும். அதில் மிக முக்கியமான. கோப்புகள் சுமார் 100 இருக்கும். அவற்றை அடிக்கடி follow செய்து உடனுக்குடன் நடவடிக்கை எடுக்க வேண்டியத அந்த கிளார்க்கின் தலையாய கடமை. நானும் அவரை எச்சரித்து வரவேண்டும். 

ஆனால் ஓரு முறை தவறிவிட்டது. மாலை பணி முடியும் நேரம் பொது மேலாளர் அந்த கோப்பை தரக்கூறினார். நான் அவரிடம் அந்த பணியாளர் இன்று லீவ் நாளை காலை தரகிறேன் என்றேன். சரி என்றார். வந்து நான் அந்த கோப்பை தேடி எடுத்து பார்த்தால் தற்காலிக பணிநீக்கம் செய்ய ஆணையிட்டு பத்து நாட்களுக்கு மேலாகியும் எழுதப்பட்டு கையொப்பம் பெற்று அனுப்ப அந்த பணியாளர் தவறிவிட்டார். நானும் கவனிக்க வில்லை. உடனே நானே அதனை எழுதி தயார் செய்தேன். இரவெல்லாம் தூக்கம் வரவில்லை. எங்கள் இருவரும் மீதும் கடும் நடவடிக்கை எடுக்க நேரிடும். காலை பணிக்கு செல்லும் போது வேங்கடவா என்னை காப்பாற்று (எங்கள் மீதான நடவடிக்கையை விட அலுவலரின் வசவினை தாங்க இயலாது). என மனமுருகி அழுத கண்களோடு சென்றேன். மறுநாள் காலை அலுவலர் பார்வை எல்லாம் முடிந்து ஓரு மணியளவில் அலுவலகம் வந்தார். 

நானும் என் கிளார்க்கும் தாழ்வாரத்தில் காத்திருந்தோம். கோப்பை கேட்டார். பியூனிடம் கொடுத்தனுப்பினோம். சிறிது நேரத்தில் பைல் கையெழுத்தாகி வந்தது. ஏன் காலதாமதம் என்று கேட்கவில்லை. தப்பித்தோம் பிழைத்தோம் என எண்ணி என் வேங்கடவனை மனதார வேண்டினேன். மாலை வீடு வந்ததும் வேங்கடவனை சிறந்த முறையில் திருவாரதனம் செய்தேன். (அந்த கிளார்க் இதுகுறித்து சிறிதும் பயப்படாமல் தைரியமாக இருந்தது எனக்கு தான் அச்சமாக இருந்தது)

நீங்களும் உங்கள் வாழ்வில்  பெருமாளின் அற்புதங்களை எங்களுக்கு அனுப்பலாம்.
  • ➤ உங்கள் பக்தி அனுபவம் பகிர
  • 💜

    பக்தர்கள் சொல்கிறார்கள்

    இந்த தளத்தை வாசித்த பிறகு, என் மனம் சாந்தியையும் நம்பிக்கையையும் பெற்றது.
    🌸 ரமேஷ், மதுரை

    இங்கே உள்ள ஆன்மிக விளக்கங்கள் தெளிவாகவும் எளிமையாகவும் இருக்கின்றன.
    🌼 சிந்து, தஞ்சாவூர்

    இந்த தளம் என் வீட்டில் ஒரு புனித இடமாகவே மாறியுள்ளது.
    🌺 கிருஷ்ணன், கோவை

    என் ஆன்மிகப் பயணத்தில் வழிகாட்டியாக இந்த தளம் இருந்தது. நன்றி!
    🌹 சுகந்தி, சென்னை

    நான் தேடிய பல தகவல்களை இங்கு ஒரே இடத்தில் நேர்த்தியாகப் பெற்றேன்.
    💠 லலிதா, ஈரோடு

    இந்த தளம் தினசரி ஒரு நல்ல எண்ணத்தை என் உள்ளத்தில் விதைக்கிறது.
    🌿 அருண், திருநெல்வேலி

    🛕
    108 ஆலயம்
    📜
    பிரபந்தம்
    🎧
    ஸ்லோகம்
    📚
    குறிப்புகள்