Sri Mahavishnu Info: எனது வாழ்வில் பெருமாள் - பகுதி 27 எனது வாழ்வில் பெருமாள் - பகுதி 27
```
📿 வைணவ அடிப்படைகள் 🛕 108 திவ்யதேசங்கள் 📜 நாலாயிர திவ்யபிரபந்தம் 🎧 தினசரி ஸ்லோகங்கள் 📅 இன்றைய வைபவம் 🙏 தினசரி பக்தி வழிகாட்டி ❓ பக்தி கேள்வி & பதில்கள் 📖 ஆன்மீக நூல்கள் 🧒 குழந்தைகள் பக்தி பகுதி 🎓 ஸ்ரீவைஷ்ணவ பாடசாலை 🔱 விஷ்ணு சஹஸ்ரநாமம் 🌄 ஸ்ரீ வெங்கடேச மஹாத்மியம் 🌺 திருப்பாவை 👣 வைஷ்ணவ ஆச்சார்யர்கள் 🛕 திருத்தல தரிசனம் 🔔 கோவில் விழாக்கள் 📜 பக்தர் அனுபவங்கள் ✨ அற்புத நிகழ்வுகள் 🕉️ நாமஸ்மரணையின் மகிமை 📚 பக்தி குறிப்புகள் 🌸 ஆழ்வார்கள் வரலாறு 🙏 ஸ்ரீவைஷ்ணவ சம்பிரதாயம் 🎙️ பக்தி உரைகள் & ஆடியோ 📆 ஸ்ரீவைஷ்ணவ நாட்காட்டி 🌟 புதிய பக்தி பதிவுகள்

எனது வாழ்வில் பெருமாள் - பகுதி 27

Sri Mahavishnu Info
(பக்தர்களின் வாழ்வில் பெருமாள் நடத்திய நெகிழ்ச்சியான சம்பவங்கள்)

அனுப்பியவர் : பி.சுடலைராஜா,
ஊர்:கோவில்பட்டி.

என் தாயும் தந்தையுமான விஷ்ணு பற்றி அனைவரிடம் பகிர்வதில் ஆனந்தம்

என் வாழ்க்கையில் பிறப்பு முதல் என்னுள் இருந்து என்னை இயக்குகிறார்,இதை நான் என் 22வயதில் தான் உணர்ந்தேன்,நான் குழந்தையாக இருந்தபோது என் தாயும் தந்தையும் என்னை கிருஷ்ணராக வேஷம் போட்டு ரசித்தார்கள்,பின்னர் ஏழு வயதில் எங்கள் ஊர் விநாயகர் சதுர்த்தி திருவிழா ஊர்வலத்தில்  ஸ்ரீராமராக வேடம் அணிந்து என்னை ரசித்தார்கள்,இப்படி என்னுள் இருக்கும் என் விஷ்ணு பகவானை பின்னாளே அறிந்தேன் அடைந்தேன்

அவரே அனைத்தும் ஆனவர், அவரே ஆரம்ப வித்து, அவரே அனைத்தும் உயிரினங்களுக்கும் காரணமானவர், இதில் சிவபெருமானும் பிரம்மதேவரும், சக்திதேவியும்,தேவர்களும்,அசுரர்களும்,முனிவர்களும்,சித்தர்களும்,மகான்களும்,மனிதர்களும் அவருக்குள்ளே அடக்கம்,என் விஷ்ணு அனைத்துமான பரமாத்மா,சுடர் சூரியனும் அவரே,குளிர் சந்திரனும் அவரே,நவக்கிரகங்களும் அவரே,எனக்குள்ளும் அவரே இதை படிக்கும் நீங்களும் அவரே,நம்மை இந்த குழுவில் ஒன்று சேர்த்ததும் அவரே,என் அறிவும் அவரே,என் ஞானமும் அவரே,என் உப புலன்களும் அவரே, காற்றும்அவரே, நெருப்பு அவரே, கடலும்அவரே, ஆகாயமும்அவரே, அனைத்து விலங்குகள்,பறவைகளிடம் ஜீவாத்மாவாக இருப்பவரும் அவரே,தாவரங்கள் அனைத்தும் அவரே,சிறு செடியும் அவரே,பெரிய மரமும் அவரே ஓம் நமோ நாராயணாய நமஹ தற்போது 26வயதாகும் என் வாழ்வில் சிறு வயதில் இருந்தே துன்பம் என்ற ஆனந்த கடலில் வாழ்கிறேன்,இதற்காக என் விஷ்ணுவிடம் நான் எதுவும் வேண்டுவதில்லை,இது முன் ஜென்ம கர்ம படி நடக்கிறது என்பதை நன்கு அறிவேன்,24 மணி நேரம் அவரது சிந்தனை,நாமம் இல்லாமல் இருந்ததில்லை,அவர் ஆயிரம் துன்பமெல்லாம் அவரை நினைக்கும் போது கரைந்து போய்விடும்,என் விஷ்ணுவை நான் வணங்கும் போது கர்ம படி உன்னால் ஆன அனைத்தும் உயிர்களும் நன்றாக இருக்க வேண்டும் என்று தான் வேண்டுவேன், எனக்காக என் முன் ஜென்ம கர்ம பாவ பலனை மிச்ச இல்லாமல் இந்த ஜென்மத்தில் தாருங்கள் தந்தையே என்று வேண்டுவேன்,ஆனால் அவரோ என் மேல் பாச மிகுந்தவர் என் கர்ம துன்பத்தில் இருந்து அன்றாட வாழ்க்கையில் ஓவ்வொரு நொடியும் எனக்குள் இருந்து அவரே என்னை அறியாமலே என்னை இன்று வரை பாதுகாத்து வருகிறார் கர்மமே வாழ்வாயினும் அந்த கர்மத்தின் ஆதி பரமாத்மாவே இறுதி தீர்வாக இருக்கிறார் எனது வாழ்வில் இந்த ஜென்மத்தில் என் விஷ்ணுவை அடைந்ததே போதும் வேறு எதுவும் எனக்கு வேண்டாம்.

நீங்களும் உங்கள் வாழ்வில்  பெருமாளின் அற்புதங்களை எங்களுக்கு அனுப்பலாம்.
  • ➤ உங்கள் பக்தி அனுபவம் பகிர
  • 📚 அர்த்தமுள்ள இந்து மதம் – 10 பாகங்கள் முழுத் தொகுப்பு!

    🙏 இந்து மதம், சனாதன தர்மம் மற்றும் ஆன்மிக அறிவை வளர்க்கும் அரிய PDF நூல்கள் ஒரே இடத்தில்!

    ✨ இதில் இடம்பெறும் நூல்கள்:

    • அர்த்தமுள்ள இந்து மதம் (1-10 பாகங்கள்)
    • 100 ஆண்டுகள் வாழ்வது எப்படி?
    • ஆடும் பெருமானும் அளந்த நெடுமாலும்
    • ஆன்மிக வினா – விடை தொகுப்புகள்
    • மேலும் பல அரிய சனாதன தர்ம நூல்கள்...
    💰 சிறப்புச் சலுகை விலை ₹199 ₹999
    💜

    பக்தர்கள் சொல்கிறார்கள்

    இந்த தளத்தை வாசித்த பிறகு, என் மனம் சாந்தியையும் நம்பிக்கையையும் பெற்றது.
    🌸 ரமேஷ், மதுரை

    இங்கே உள்ள ஆன்மிக விளக்கங்கள் தெளிவாகவும் எளிமையாகவும் இருக்கின்றன.
    🌼 சிந்து, தஞ்சாவூர்

    இந்த தளம் என் வீட்டில் ஒரு புனித இடமாகவே மாறியுள்ளது.
    🌺 கிருஷ்ணன், கோவை

    என் ஆன்மிகப் பயணத்தில் வழிகாட்டியாக இந்த தளம் இருந்தது. நன்றி!
    🌹 சுகந்தி, சென்னை

    நான் தேடிய பல தகவல்களை இங்கு ஒரே இடத்தில் நேர்த்தியாகப் பெற்றேன்.
    💠 லலிதா, ஈரோடு

    இந்த தளம் தினசரி ஒரு நல்ல எண்ணத்தை என் உள்ளத்தில் விதைக்கிறது.
    🌿 அருண், திருநெல்வேலி

    WhatsApp
    CHANNEL
    🛕
    📜
    🏠
    🎧
    📚