Sri Mahavishnu Info: எனது வாழ்வில் பெருமாள் - பகுதி 28 எனது வாழ்வில் பெருமாள் - பகுதி 28

எனது வாழ்வில் பெருமாள் - பகுதி 28

Sri Mahavishnu Info
(பக்தர்களின் வாழ்வில் பெருமாள் நடத்திய நெகிழ்ச்சியான சம்பவங்கள்)

அனுப்பியவர் : திருமதி.பத்மாவதி ஓசூர்
  
என் பெயர் பத்மாவதி எனது கணவர் ஜெயபாலன் இரண்டு பெண் குழந்தைகள், நாங்கள் ஓசூரில்  வசித்து வருகிறோம் மூத்தவள் திருமணமாகி வெளி நாட்டில் இருக்கிறாள். இளையவள் எங்களுடன் இருந்து கொண்டு பெங்களுரில் பணி புரிகிறாள்.

கடந்த 24 -11- 2020 அன்று என் கணவர்  இருசக்கர வாகனத்தில் வெளியில் சென்று வந்தார் பிறகு உணவு  உண்டபின் தொலைபேசியில் பேசிக் கொண்டிருந்தார், தொலைபேசி கீழே விழுந்துவிட்டது அவர் பேசிக் கொண்டே இருந்தார், இதை கண்ட எனது இளையமகள் பயந்து பக்கத்து வீட்டாரின் உதவியுடன் மருத்துவமனைக்கு அழைத்து சென்றோம் செல்லும் வழியில் வலிப்பு வந்து நினைவு இழந்து விட்டார். ஒசூரில் ஒரு தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றோம். அங்கு இருந்த மருத்துவர்கள் Scan, Brain scan எல்லாம் எடுத்துப் பார்த்ததில் மூளையில் இரத்தக்கசிவு ஏற்பட்டுள்ளது, அதிக இரத்த அழுத்தினால் 240/120 இவ்வாறு ஏற்பட்டுள்ளது என்று கூறி பெங்களூருக்கு அழைத்து சென்று விடுங்கள் என்று கூறி விட்டார்கள் அவசரமாக ஆம்புலன்ஸ் அழைத்து சென்றோம். அங்குள்ள மருத்துவர்கள் கொரோனா டெஸ்ட் வரும் வரை கொரோனா வார்டில் தான் வைத்து இருப்போம் என்று கூறிவிட்டார்கள் ரத்தஅழுத்தம் அழுத்தம் குறைய மருந்துகள் கொடுத்தும் குறையவில்லை 25.11.2020 அன்று காலை வெண்டிலேட்டர்  வைத்துவிட்டார்கள் அப்போது நான் பெருமாளையே நம்பி  உருகி ஓம் ஸ்ரீ கேசவாயே நமக என்று கூறி பிராத்தனை செய்துக் கொண்டிருந்தேன் மருத்துவர்கள் எதுவும் சரியாக  கூறுவதில்லை கையெழுத்து மட்டும் வாங்கிக் கொண்டிருந்தார்கள்

பிறகு 27.11.2020 மதியம் எனது கணவர் தொலைபேசியில் தொடர்பு கொண்டு என்னிடம் பேசினார் பெருமாள் தான் இந்த அற்புதத்தை எனக்கு நடத்தினார் மூன்று நாட்கள் ICU விலும் மூன்று நாட்கள் ஜெனரல் வார்டில் இருந்தும் வீட்டுக்கு அழைத்து வந்தோம் பெருமாள் என் வாழ்வில் விளக்கேற்றினார்

நீங்களும் உங்கள் வாழ்வில்  பெருமாளின் அற்புதங்களை எங்களுக்கு அனுப்பலாம்.
  • ➤ உங்கள் பக்தி அனுபவம் பகிர
  • 💜

    பக்தர்கள் சொல்கிறார்கள்

    இந்த தளத்தை வாசித்த பிறகு, என் மனம் சாந்தியையும் நம்பிக்கையையும் பெற்றது.
    🌸 ரமேஷ், மதுரை

    இங்கே உள்ள ஆன்மிக விளக்கங்கள் தெளிவாகவும் எளிமையாகவும் இருக்கின்றன.
    🌼 சிந்து, தஞ்சாவூர்

    இந்த தளம் என் வீட்டில் ஒரு புனித இடமாகவே மாறியுள்ளது.
    🌺 கிருஷ்ணன், கோவை

    என் ஆன்மிகப் பயணத்தில் வழிகாட்டியாக இந்த தளம் இருந்தது. நன்றி!
    🌹 சுகந்தி, சென்னை

    நான் தேடிய பல தகவல்களை இங்கு ஒரே இடத்தில் நேர்த்தியாகப் பெற்றேன்.
    💠 லலிதா, ஈரோடு

    இந்த தளம் தினசரி ஒரு நல்ல எண்ணத்தை என் உள்ளத்தில் விதைக்கிறது.
    🌿 அருண், திருநெல்வேலி

    🛕
    108 ஆலயம்
    📜
    பிரபந்தம்
    🎧
    ஸ்லோகம்
    📚
    குறிப்புகள்