
உண்மையான பக்தி உடையவர் யார்?
ஒரு நாள் இரண்டு தேவதைகளுக்கு ஒரு சந்தேகம் வந்தது – "உண்மையான பக்தி உடையவர் யார்?" என்று. அவர்கள் நேராக இறைவனிடம் சென்று கேட்டனர்.
அப்போது இறைவன், “இந்த ஊரில் சென்று விசாரித்து வாருங்கள்,” என்று கூறினார். தேவதைகள் பலரை சந்தித்து கேட்டன.
முதலவர்: "நான் தினமும் மூன்று வேளை கோவிலுக்குச் செல்வேன்."
இரண்டாவது: "நான் வெள்ளி, செவ்வாய்க்கிழமைகளில் மட்டும் செல்கிறேன்."
மூன்றாவது: "வாரத்தில் ஒரு நாள் போவதுதான் என் வழக்கம்."
நான்காவது: "நான் கஷ்டமான நேரங்களில் மட்டும் கடவுளை நினைக்கிறேன்."
அதிகமா பக்தியோடு இருப்பது போல தோன்றினாலும், தேவதைகள் குழம்பின. அப்போது ஒருவர் அவசரமாக ஓடினார். தேவதைகள் அவரிடம் கேட்டன:
"உனக்குக் கடவுள் பக்தி உண்டா?"
அவர் பதில்: "நேரமில்லை... சிலர் உதவிக்காக காத்திருக்கிறார்கள். கடவுளை நினைக்க நேரமில்லை!" என்று கூறிவிட்டு ஏழைகளுக்கு உதவ ஓடினார்.
தேவதைகள் இறைவனிடம் திரும்பி நடந்ததை விவரித்தன. இறைவன் கேட்டுவிட்டு சொன்னார்:
"உண்மையான பக்தன் – அவன்தான்! என் பெயரை நினைக்க நேரமில்லாமல், என் படைப்புகளுக்குச் சேவை செய்ய விரைந்தவன்தான் எனது உண்மையான பக்தன்!"
இது உண்மைதான்… பக்தி என்றால், மனமாரப் பசியார்த்த சேவை செய்யும் செயல் தான்!