Sri Mahavishnu Info: கருட புராணம் - 26 கருட புராணம் - 26
📿 வைணவ அடிப்படைகள் | 🛕 திவ்யதேச வரலாறுகள் | 📘 நாலாயிர திவ்யபிரபந்தம் | 🎧 ஸ்லோகங்கள் | 📅 தினசரி பக்தி வழிகாட்டி | ❓ பக்தி கேள்விகள் | 📖 ஆன்மீக நூல்கள் | 🧒 குழந்தைகள் பக்தி பகுதி | 🛕 தரிசன நேரங்கள் | 📜 பக்தர் அனுபவம் | 🛐 ஸ்ரீவைணவ பாடசாலை | 🗓️ ஸ்ரீவைணவ நாட்காட்டி | 🔱 விஷ்ணு சஹஸ்ரநாமம் | 🌄 ஸ்ரீ வெங்கடேச மஹாத்மியம் | 🌺 திருப்பாவை | 🛕 திருத்தல தரிசனம் | ✨ அற்புத நிகழ்வுகள் | 👣 வைஷ்ணவ ஆச்சாரியர்கள் | 🕉️ நாமஸ்மரணையின் மகிமை | 🎙️ பக்தி ஸ்லோகங்கள் | 🔔 கோவில் விழாக்கள்

கருட புராணம் - 26

Sri Mahavishnu Info
26. தானச் சிறப்பும் உயிர் பிரியும் விதமும்

ஸ்ரீ மந் நாராயணர், கருடனை நோக்கி, “வைனதேயா! என்னை ஆராதித்து எனது புண்ணிய ஷேத்திரங்களில் தான தருமஞ் செய்பவன் புண்ணியங்களை அதிகமாக அடைவான்.

“ஐப்பசி, கார்த்திகை, மாசி ஆகிய மூன்று மாதங்களிலாவது சதுர்த்தியிலாவது, பௌர்ணமியலாவது ஒருவன் இறந்த தினத்திலாவது தீபதானம் செய்வது சிறப்பாகும். பிரமால்யத்திலும், தேவாலயத்திலும் வடக்கு, கிழக்கு முகத்தில் தீபம் வைக்க வேண்டும். தீபதானம் செய்பவன் தனக்கு எதிர்முகமாக தீபத்தைச் சுடர்விட்டேறியச் செய்து கொடுக்க வேண்டும்.
       
“மனிதனாக பிறந்த ஒருவன், என்றாவது ஒருநாள் இறந்தே தீர வேண்டும் என்பதை உணர்ந்தவன். தானங்களைத் தனக்குத் தானே செய்து கொள்ள வேண்டும்.

“ஆசனப் பலகையையும், செப்புத் தாலியையும் பொருள்களையும் தானம் செய்தவன், மரித்த பிறகு ஆகாய மார்க்கமாகவே இனிதாக எமலோகம் செல்வான்.

“அரிசியும், எள்ளும், பதின்மூன்று கடகமும், மோதிரமும் குடையும், விசிறியும், பாத ரஷயையும் அவசியமாக தானம் செய்ய வேண்டும்.

“வெற்றிலை, பாக்கு, புஷ்பம் ஆகியவற்றைத் தானம் செய்தால் யமதூதர்கள் மகிழ்ச்சியடைந்து ஜீவனை வருந்தச் செய்ய மாட்டார்கள்.

“ஆடைகளைத் தானம் செய்தால், கார்மேகம் போன்று கருத்த மேனியும், பிறை போன்ற கடைவாய்ப் பற்களும், செம்பட்டை ரோமமும், அச்சம் தரும் பயங்கர உருவமும் கொண்ட யமதூதர்கள் ஜீவனின் முன்பு நல்ல உருவத்துடன் தோன்றுவார்கள்.” என்றருளிச் செய்தார்.

கருடன் அவரை நோக்கி, “ஸ்ரீ ஹரியே! அடியார்க்கெளிய ஆபத்பாந்தவரே! மனிதனின் சரீரத்திலிருந்து உயிரானது எப்படி நீங்குகிறது? இதை திருவாய் மலர்ந்தருள வேண்டும்.” என்று கேட்க பகவான் கூறலானார்.

“கருடா! உயிரானது மனிதனது சரீரத்தை விட்டு விலகும் பொது கண் வழியாகவோ, நாசி வழியாகவோ, ரோமக்கால்கள் துவாரங்கள் வழியாகவோ, நீங்கி விடும். ஞானிகளுக்கு கபாலம் விரிந்து உயிர் நீங்கும். உயிர் நீங்கியதும் மனித உடல் கட்டைப் போல கிடக்கும்.

“பிறகு அந்த உடல் பஞ்சபூதாத்மகம் ஆகலாம். உடல்கூறுகள் பஞ்சபூதத்தால் ஆனவை. ஆகையால் ப்ரித்வி என்ற மண்ணிலும், அப்பு என்ற புனலிலும், தேயும் என்ற அக்கினியிலும், வாயு என்ற காற்றிலும் ஆகாயம் என்ற வானத்திலும் லயமாகி விடும்.

‘காமம், குரோதம், லோபம், மோகம், மதம், மாச்சரியமாகிய ஆறும், காமேந்திரியம் ஐந்தும், ஞானேந்திரியம் ஐந்தும், மனித சரீரத்தில் திருடர்கள் போலப் பதுங்கி ஒளிந்து, ஒன்றோடொன்று உறைந்து இருப்பான்.

“உயிரானது நீங்கும் பொது அவையனைத்தும் மனத்தோடு ஒன்றாகும். சேதனனானவன் தனது கர்மத்தாலேயே மறுபிறவியை அடைகிறான். பழைய வீட்டில் வசிப்பவன் பொருள் சம்பாதித்து நல்லதொரு புதிய வீடு கட்டிக் கொண்டு அதில் குடிஏறுவதைப் போலவே புண்ணியஞ் செய்த ஜீவன், தன் வாழ்நாள் முடிந்த பிறகு இந்திரியங்கள் ஐந்தும் அமைந்த ஒரு திவ்விய தேசத்தில் அவன் குடியேறுவான்.

“மலமூத்திரங்களும், பயன்தராத கற்பனைகளும், ஊனும் நரம்பும் எலும்பும் மெய்யோடு நசிக்கப்பட்டோ, எரிக்கப்பட்டோ நாசமடைந்து விடுவதே மனித உடலாகும்.

“ஒ, கருடா! மனிதன் மரிக்கும் விதம் இதுவேயாகும். இனி, மனிதன் இறந்த பிறகு மீண்டும் பிறக்கும் விதத்தினை சொல்கிறேன் கேட்பாயாக!
                     
“பல நரம்புகளோடு துணைப் போல் ஒரு பெரிய நரம்பைக் கொண்டதும் இந்திரியங்கள் பொருந்தியதும் காமக்குரோத லோப மோக மதமார் சரியமாகிய உட்பகைகளுடன் கூடியதும்,காம குரோத இச்சை துவேஷங்களால் வியாபிக்கப் பெற்றதும் மாயையோடு கூடியதுமான தேகம், எல்லாப் பிராணிகளுக்கும் உறுதியாய் உளதாகும். சமஸ்த லோகங்களுக்கும் உரிய சமஸ்த தேவர்களும் தேகத்திலேயே இருக்கிறார்கள்” என்று கூறியருளினார்.

🪔 சிறப்பு பூஜை விளக்கு – RAISOM

  • பித்தளை: சங்க, சக்கரம், திலக வடிவில்
  • உயரம்: 3.5 இன்ச் | எடை: 145g
  • பயன்பாடு: வீடு, அலுவலகம், கோவில்
  • சிறந்த பரிசு: கிரஹபிரவேசம்
🛒 அமேசானில் இப்போது வாங்க
💜

பக்தர்கள் சொல்கிறார்கள்

இந்த தளத்தை வாசித்த பிறகு, என் மனம் சாந்தியையும் நம்பிக்கையையும் பெற்றது.
🌸 ரமேஷ், மதுரை

இங்கே உள்ள ஆன்மிக விளக்கங்கள் தெளிவாகவும் எளிமையாகவும் இருக்கின்றன.
🌼 சிந்து, தஞ்சாவூர்

இந்த தளம் என் வீட்டில் ஒரு புனித இடமாகவே மாறியுள்ளது.
🌺 கிருஷ்ணன், கோவை

என் ஆன்மிகப் பயணத்தில் வழிகாட்டியாக இந்த தளம் இருந்தது. நன்றி!
🌹 சுகந்தி, சென்னை

நான் தேடிய பல தகவல்களை இங்கு ஒரே இடத்தில் நேர்த்தியாகப் பெற்றேன்.
💠 லலிதா, ஈரோடு

இந்த தளம் தினசரி ஒரு நல்ல எண்ணத்தை என் உள்ளத்தில் விதைக்கிறது.
🌿 அருண், திருநெல்வேலி

🛕
108 ஆலயம்
📜
பிரபந்தம்
🎧
ஸ்லோகம்
📚
குறிப்புகள்