கருவறைக்குள் நம் வேண்டுதல்கள் மறந்து போவது ஏன்..?

Sri Mahavishnu Info
ஓர் விசித்திர அனுபவம் பற்றி திருமலை திருப்பதியின் பிரதான அர்ச்சகர் டாக்டர் ரமண தீட்சிதர் சொல்வதை பார்ப்போம்

“சுவாமியை தரிசனம் செய்ய கருவறைக்குள் சென்றதும் நம் வேண்டுதல்கள் மறந்து போய்விடும், அடுத்து, சுவாமியை தரிசனம் செய்துவிட்டு வெளியே வந்ததும், சுவாமியை நாம் தரிசனம் செய்தபோது இருந்து அலங்காரம், சுவாமியின் கோலம் எல்லாம் மறந்துபோகும் இது ஏன்..எல்லோருக்கும் இப்படி ஓர் விசித்திர அனுபவம் ஏற்படுவதுண்டு.

அறிவுக்கு அப்பாற்பட்ட விஷயங்களில் இதுவும் ஒன்று. இதற்கு காரணத்தை இன்று நாம் ஆராய்வோம்.

கருடாழ்வார் சன்னதியில் இருந்து கர்ப்பாலயம் வரையிலும் இருக்கும் ஒரு இடம் மிகவும் சக்தி வாய்ந்த ஒரு எனர்ஜி பீல்ட் என்று சொல்லப்படும் விஷயமாக இருக்கும்.

இந்த எனர்ஜி பீல்டு என்பது ஆகமத்தில் சொல்லியிருக்கும் வகையில், நித்தியமும் சுவாமியை தரிசிக்க கோடானுகோடி தேவர்கள், கிண்ணரா, கிம்புருஷா,கருடா, கந்தர்வா, சித்தா, சாத்யா, யட்சா, ராட்சசா முதலிய இனங்களைச்சேர்ந்த தேவதைகள் எல்லாரும் சுவாமியை தரிசித்துக்கொண்டு இருப்பார்கள் என்றும்,

அரூப தேவதைகள் சுவாமியை தரிசிக்கும் திருப்பதி கர்ப்பாலயம்

சுவாமி அஷ்டோத்ரத்தில் வரும் நாமப்படி ஸ்வேத்ததீபம் எனும் ஒரு முக்தி அடைந்த சித்தர்கள் வசிக்கும் இடத்தில் இருந்து சித்தர்கள் நித்தியமும் சுவாமியை தரிசித்துக்கொண்டிருப்பார்கள் என்றும்,

குமாரதாரா என்ற தீர்த்தத்தில் எப்பவும் தவத்தில் இருக்கும் ஸ்கந்தன் எனும் முருகப்பெருமான் தினமும் சுவாமியை தரிசிப்பார் என்றும்,

பல தேவதைகளும் கர்ப்பகிரகத்தில் சுவாமியை வணங்க வருவார்கள் என்றும்,

அப்படி வருகின்ற தேவதைகளுக்கு பௌதீகமான சொரூபம் (கண்ணுக்கு புலனாகும் உருவம் ) இல்லை என்றும்,

அவர்கள் சக்தி சொரூபமாகவே சூட்சும ரூபத்தில் வந்து அங்கு கர்ப்பாலயத்தில் இருப்பார்கள் என்றும்,

அவர்களுடைய வருகையினால், அவர்களுடைய இருக்கையினால்,சக்தி வளையங்கள் தோன்றிக்கொண்டே இருக்கும்.

இப்படிப்பட்ட தேவதைகள் இருக்கும் சக்திவளையங்களுக்குள் மனிதர்கள் செல்லும்போது மனிதர்களின் அறிவு அலைகள் ஆல்பா வேவ்ஸ் இந்த சக்தி வளையத்தின் தாக்குதலால் ஸ்தம்பித்து போய்விடுகிறது.அதாவது, இட்ஸ் கோயிங் பிளாங்..,

அதனால், அவர்கள் சுவாமியிடம் என்ன வேண்டும் என்று கேட்க வந்தார்களோ,அந்த விஷயங்களை மறந்து விடுவார்கள்…எ லாஸ் ஆப் மெமரி ஹேப்பன்ஸ்..,

அதேசமயத்தில் கருவறையில் சாமியை தரிசித்த ஞாபகங்கள் மூளையில் தங்காமல் துடைத்து விடப்படுகிறது…டெலிட்டிங் தி மெமரி…,

இந்த இரண்டு நிகழ்ச்சிகளும் சக்தி வளையத்தின் மிகத்தீவிரமான தாக்குதலால் ஏற்படும் மாற்றங்கள்.

இது திருமலை ஸ்ரீ வேங்கடமுடையான் கோயில் கருவறைக்குள் நடக்கும் அதிசயங்களில் ஒன்று…”

உள்ளே, சாமிய நாம கூட்டத்துல சரியா பார்த்து வேண்டுதல்கள சொல்லமுடியாத காரணத்துனால, கோபுரத்துல அதே கோலத்துல இருக்குற விமான வெங்கடேஸ்வரர் அமைக்கப்பட்டிருக்காரு..,இவருகிட்ட உங்களோட வேண்டுதல்கள மனசார சொல்லிட்டு வாங்க..அது அப்படியே மூலவர்கிட்ட சொன்னமாதிரி..நிச்சயம் நல்ல பலன் தரும்.."

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Check Out
Ok, Go it!