Sri Mahavishnu Info: இறைநாமத்தின் சிறப்பை நாமருசி என்று குறிப்பிடுவர் இறைநாமத்தின் சிறப்பை நாமருசி என்று குறிப்பிடுவர்
📿 வைணவ அடிப்படைகள் | 🛕 திவ்யதேச வரலாறுகள் | 📘 நாலாயிர திவ்யபிரபந்தம் | 🎧 ஸ்லோகங்கள் | 📅 தினசரி பக்தி வழிகாட்டி | ❓ பக்தி கேள்விகள் | 📖 ஆன்மீக நூல்கள் | 🧒 குழந்தைகள் பக்தி பகுதி | 🛕 தரிசன நேரங்கள் | 📜 பக்தர் அனுபவம் | 🛐 ஸ்ரீவைணவ பாடசாலை | 🗓️ ஸ்ரீவைணவ நாட்காட்டி | 🔱 விஷ்ணு சஹஸ்ரநாமம் | 🌄 ஸ்ரீ வெங்கடேச மஹாத்மியம் | 🌺 திருப்பாவை | 🛕 திருத்தல தரிசனம் | ✨ அற்புத நிகழ்வுகள் | 👣 வைஷ்ணவ ஆச்சாரியர்கள் | 🕉️ நாமஸ்மரணையின் மகிமை | 🎙️ பக்தி ஸ்லோகங்கள் | 🔔 கோவில் விழாக்கள்

இறைநாமத்தின் சிறப்பை நாமருசி என்று குறிப்பிடுவர்

Sri Mahavishnu Info
பகவான் நாமத்தின் மகிமை

இறைவனை விட இறைவனின் நாமத்திற்குச் சிறப்பு அதிகம். மந்திரம்,ஸ்தோத்திரம், ஹோமம் இவை எல்லாவற்றையும் விட, இறைவனின் நாமம் (பெயர்) சொல்வது மிக எளிமையானது. ராமா, கிருஷ்ணா என்று சொல்வதில் என்ன சிரமம்? இது அபரிமிதமான பலன் தரவல்லது என பெரியோர் கூறுகின்றனர்.

கலியுகத்தைக் கடப்பதற்கு நாமஸ்மரணம் என்னும் இறைநாமத்தை ஜெபிப்பதே சிறந்தது என ஞானிகள் கூறுகின்றனர். 

நாரதர், சுகபிரம்மம், பிரகலாதர், உத்தவர் போன்ற மகான்கள் ஆதிகாலத்தில் இறைநாமத்தின் மகிமையை உலகிற்கு எடுத்துரைத்தனர். 

வைகுண்டபதியான நாராயணனே நாம சங்கீர்த்தனத்தின் சிறப்பை எடுத்துக்காட்ட கிருஷ்ண சைதன்யராக அவதரித்தார். நாமத்தின் பெருமையை, ‘‘கேட்டதை தரும் கற்பக விருட்சம்’என குறிப்பிடுகிறார்.

கபீர்தாசர், சூர்தாசர், துக்காராம், ஞானேஸ்வரர், ஏக்நாத், சோகாமேளர், ஜக்குபாய், மீரா முதலிய ஞானிகள் கலியுகத்தில் அவதரித்து நாமசங்கீர்த்தனத்தின் பெருமையை நிலைநாட்டியுள்ளனர்.

கடலிலேயே பெரிய கடல், பிறவிக்கடல். நாமஸ்மரணத்தில் ஈடுபடுபவர்கள் பிறவிக்கடலை சுலபமாக தாண்டி விடுவர். கோடி ஜென்மங்களில் செய்த புண்ணியத்தின் பயனாக மட்டுமே, ஒருவரது மனம் இதில் ஈடுபடும் என துளசிதாசர் கூறுகிறார்.

எங்கெல்லாம் ராமநாமம் ஜெபிக்கப்படுகிறதோ, அந்த இடத்தில் ராமதூதர் ஆஞ்சநேயர் எழுந்தருளி அருள்புரிவார்.

ஹரிநாமம் ஜெபிப்பதற்கு எவ்வித தடையும் இல்லை. காலநேரம் பார்க்கத் தேவையில்லை. யார் வேண்டுமானாலும் ஜெபிக்கலாம். இதனால் வீட்டில் ஐஸ்வர்யம் நிலைத்திருக்கும். அந்த வீடே வைகுண்டம் போலாகிவிடும் என்று ஞானேஸ்வரர் குறிப்பிடுகிறார்.

ராமானுஜர் எல்லோரும் மோட்சத்திற்குச் செல்லவேண்டும் என்பதற்காக, ‘ஓம் நமோ நாராயணாய’ என்னும் அஷ்டாக்ஷர மந்திரத்தை உபதேசித்து அருள்செய்தார். 

ரிக், யஜுர், சாம, அதர்வண வேதங்கள் பகவான் நாம மகிமையைக் கூற முடியாமல் ஓய்ந்து விட்டதாக ஸ்ரீதர ஐயாவாள் குறிப்பிடுகிறார்.

எட்டெழுத்து மந்திரமான நாராயண நாமத்தின் பெருமையை திருமங்கையாழ்வார், ‘‘நலம் தரும் சொல்லை நான் கண்டு கொண்டேன் நாராயணா என்னும் நாமம்,’’ என்று போற்றுகிறார்.

இறைநாமத்தை ஜெபித்தால் உயிரும் உள்ளமும் உருகுவதாக கூறுகிறார் வள்ளலார்.

இதயத்தின் ஆழத்தில் இருந்து பக்தியுடன் தனியாகவோ, கோஷ்டியாகவோ நாமசங்கீர்த்தனம் செய்யும் போது இறைவன் நம்மைத் தேடி வருவது உறுதி.

இசையோடு நாமசங்கீர்த்தனம் செய்யும் போது இறைவனும் நம் இசைக்கேற்ப நர்த்தனமாடி வருவான். நம் இதயக்கோயிலில் ரத்தின சிம்மாசனம் இட்டு அமர்வான். அப்போது பரமானந்தம் நம்முள் ஊற்றெடுக்கும்.

இந்த ஆனந்த அனுபவத்தை பிறருக்கு எடுத்துரைக்க முடியாது. கரும்பின் இனிமையை வார்த்தைகளால் எப்படி வர்ணித்தாலும் கரும்பைச் சுவைத்தவரைத் தவிர மற்றவருக்கு அதனை உணர முடிவதில்லை. 

இறைநாமத்தின் சிறப்பை ‘நாமருசி’ என்று குறிப்பிடுவர். இதனை ரசித்து ருசித்தால்தான், நம் பிறவி அர்த்தமுள்ளதாகும்.

ஓம் நமோ நாராயணாயா

🧹 தேங்காய் குச்சி தூய்மை துடைப்பம் (4 Pack)

உங்கள் வீட்டை சுத்தமாக வைத்திருக்க உதவும் தரமான தேங்காய் குச்சி துடைப்பம். வீட்டில், தோட்டத்தில், வெளிப்புறம் எல்லாமே எளிதாக சுத்தம் செய்யலாம்.

  • 🌿 இயற்கை தேங்காய் குச்சி
  • 💪 பலமாகவும் நீண்ட நாட்கள் பயன்படுத்தலாம்
  • 🧹 தூசி, குப்பை எளிதாக அகற்றும்
  • 🏡 வீடு & வெளிப்புறம் பயன்படுத்தலாம்
  • 📦 4 துடைப்பம் ஒரு செட்
🛒 இப்போது வாங்க

🙏 நம் ஸ்ரீ மஹாவிஷ்ணு இன்ஃபோ மூலம் பக்தர்களுக்காக அன்புடன் வழங்கப்படும் ஒரு சிறந்த தயாரிப்பு இது. நீங்கள் செய்யும் ஒவ்வொரு ஆர்டரும், நம் சேவைக்கு ஒரு பெரிய ஆதரவாகும் 🙌

🌾 கிராமங்களில் உள்ளவர்களுக்கு வேலை வாய்ப்பு உருவாக வேண்டும் என்ற நல்ல நோக்கத்தில் இந்த முயற்சி செய்யப்படுகிறது. உங்கள் ஒரு சிறிய ஆதரவு, அவர்களின் வாழ்க்கையில் பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும் ✨

📦 தற்போது இந்த தயாரிப்பு தமிழ்நாடு முழுவதும் Meesho மூலம் மட்டுமே அனுப்பப்படுகிறது.

📲 தயாரிப்பு குறித்து ஏதேனும் சந்தேகம் இருந்தால், எங்கள் WhatsApp எண்ணிற்கு message அனுப்பலாம்.

💬 WhatsAppல் தொடர்பு கொள்ள
💜

பக்தர்கள் சொல்கிறார்கள்

இந்த தளத்தை வாசித்த பிறகு, என் மனம் சாந்தியையும் நம்பிக்கையையும் பெற்றது.
🌸 ரமேஷ், மதுரை

இங்கே உள்ள ஆன்மிக விளக்கங்கள் தெளிவாகவும் எளிமையாகவும் இருக்கின்றன.
🌼 சிந்து, தஞ்சாவூர்

இந்த தளம் என் வீட்டில் ஒரு புனித இடமாகவே மாறியுள்ளது.
🌺 கிருஷ்ணன், கோவை

என் ஆன்மிகப் பயணத்தில் வழிகாட்டியாக இந்த தளம் இருந்தது. நன்றி!
🌹 சுகந்தி, சென்னை

நான் தேடிய பல தகவல்களை இங்கு ஒரே இடத்தில் நேர்த்தியாகப் பெற்றேன்.
💠 லலிதா, ஈரோடு

இந்த தளம் தினசரி ஒரு நல்ல எண்ணத்தை என் உள்ளத்தில் விதைக்கிறது.
🌿 அருண், திருநெல்வேலி

WhatsApp
CHANNEL
🛕
📜
🏠
🎧
📚