மெய்யன் என்று இவனைச் சொல்ல வேண்டியிருக்க, ‘மாயன்’ என்றது ஆச்சர்யமான சேஷ்டிதங்களை பண்ணி லோகத்தை அனுக்ரஹம் பண்ணுபவன் என்று காட்டவே!
“பஹுலீலம் மாதவம் ஸாவதானா” என்று ஸ்வாமி தேசிகனும், "அலகிலா விளையாட்டுடையான்" என்று அழைக்கும் இந்த மாயன், நம் பாபங்களை மாயமாய் போக்குவதால் மாயன்!
கிருஷ்ணாவதாரம் என்பது, நம்முடன் உரையாடும், விளையாடும், நெருக்கமாய் பழகும் பெருமாள் உருவம். இதற்காகவே பெருமாள் அவதரித்தார்!
“யதா யதாஹி தர்மஸ்ய... ஆத்மானம் ஸ்ருஜாம்யஹம்” (பகவத்கீதை 4.7) — தர்மத்திற்கு இடரென்றால், அவதரிக்கின்றேன் எனும் வாக்கு!
“கிருஷ்ணா! நீ எப்ப வருவே?” என்றால், நீங்கள் தவம் செய்யும் போதல்ல, தவறுகள் செய்யும் போதே வருவேன் என்ற இந்த மாயன்!
ஞான ஸ்வரூபமான எம்பெருமானே மாயன். திருமழிசையாழ்வார் சொல்வது போல,
“தன் மதிக்கு விண்ணெல்லாம் விலையாகுமா?” “ஆதியாகி ஆயனாய மாயமென்ன மாயமோ?”
அயரா குலத்தில் பிறந்து, ஆதியாகிய மாயனாக வந்தவனை சுகர் மஹரிஷியும் 'அத்புதம்' என்றே ப்ரமித்து வியக்கிறார்!
ஸ்வாமி தேசிகனும், “இடைக்குலத்தில் அவதரித்ததே இவனுக்கு பெருமை” என்கிறார். யாதவர்களுக்கே பெருமை வந்தது!
‘மா’ என்ற சொல் லட்சுமி, மங்களம் என்று பொருள் தருகிறது. மாயன் = ஸ்ரிய:பதி. கோபிகைகள் லட்சுமி ஸ்வரூபம் என்பதாலேயே, இந்த அவதாரத்திலே ஸ்ரீமத்வம் மிகுந்தது!
வேங்கடாசல மாஹாத்ம்யம்: “மாயாவி பரமானந்தம் த்யக்த்வா வைகுண்டமுத்தமம்...” — வைகுண்டத்தையே விட்டு புஷ்கரணீ பக்கமாய் வந்த மாயாவி!
இவன் தான் “மம மாயா துரத்யயா” என்று சொல்வது போல, மாயையை உடையவனாகவே, மாயன் என்றழைக்கப்படுகிறான்!
