Sri Mahavishnu Info: Maasi magam - மாசி மகம் சிறப்புகள் Maasi magam - மாசி மகம் சிறப்புகள்
📿 வைணவ அடிப்படைகள் | 🛕 திவ்யதேச வரலாறுகள் | 📘 நாலாயிர திவ்யபிரபந்தம் | 🎧 ஸ்லோகங்கள் | 📅 தினசரி பக்தி வழிகாட்டி | ❓ பக்தி கேள்விகள் | 📖 ஆன்மீக நூல்கள் | 🧒 குழந்தைகள் பக்தி பகுதி | 🛕 தரிசன நேரங்கள் | 📜 பக்தர் அனுபவம் | 🛐 ஸ்ரீவைணவ பாடசாலை | 🗓️ ஸ்ரீவைணவ நாட்காட்டி | 🔱 விஷ்ணு சஹஸ்ரநாமம் | 🌄 ஸ்ரீ வெங்கடேச மஹாத்மியம் | 🌺 திருப்பாவை | 🛕 திருத்தல தரிசனம் | ✨ அற்புத நிகழ்வுகள் | 👣 வைஷ்ணவ ஆச்சாரியர்கள் | 🕉️ நாமஸ்மரணையின் மகிமை | 🎙️ பக்தி ஸ்லோகங்கள் | 🔔 கோவில் விழாக்கள்

Maasi magam - மாசி மகம் சிறப்புகள்

Sri Mahavishnu Info
மாசி மாதத்திற்கு மாகம் என்று பெயர் பௌர்ணமியில் மக நட்சத்திரம் சேருவதால் இன்று மாகம் என்று அழைக்கப்பட்டு இன் மகமாக மாறியது என்பார்கள் அகம் என்றால் பாவங்கள் தோஷங்கள் மா என்றால் இல்லை பாவங்களைப் போக்கும் என்பதினால் இது மாகம் எனப்படுகிறது கடலில் சென்று இறைவனுக்கு நீராட்டி தானும் நீராடுதல் உடல் நலத்திற்கும் உயிர்நலத்திற்கும் நன்மை தரும் என்று ஜோதிட சாஸ்திரங்களும் ஆகம சாஸ்திரங்களும் கூறுகின்றன 

இதற்கு புராண ரீதியான ஒரு கதையும் உண்டு பஞ்சபூதங்களில் நீர் முக்கியமானது நீரின்றி அமையாது உலகம் இந்த நீருக்கு அதிபதியாக வருணனை குறிப்பிடுவார்கள் இந்த வருணன் ஒருமுறை பிரம்மஹத்தி தோஷம் பீடிக்கப்பட்டு நலிந்தான் மலை கொடுக்க வேண்டிய கடவுள் பலமின்றி இருந்ததால் உலகம் வாடியது எங்கு பார்த்தாலும் வறட்சி பஞ்சம் உயிர்களும் உனவின்றி வாடின ஒருவனுடைய குற்றங்கள் நீங்கி தூய்மை பெற வேண்டும் என்று சொன்னால் நீராட வேண்டும் அது மன உறுதியோடும் பக்தியோடும் புண்ணிய தீர்த்தங்களில் நீராடினால் மன குற்றங்களும் நீங்கும் புறந்தூய்மை நீரால் அமையும் அகத்தூய்மையும் வாய்மையால் காணப்படும் என்று வள்ளுவர் இதனை குறிப்பிடுகிறார் தண்ணீர் கடவுள் ஆன வருணனுடைய மாசு தீர இறைவனை வழிபட்டார்

எல்லா குற்றங்களையும் நீக்கும் தண்ணீரின் குற்றத்தை நீக்கி அருளினார் இறைவன் இறைவனுக்கு தீர்த்தன் என்றே ஒரு பெயர் உண்டு

தீர்த்தனுக்கு அற்ற பின் மற்றொரு சரண் இல்லை என்று எண்ணி தீர்த்தனைக்கே தீர்த்த மனத்தனாகி குருகூர் சடகோபன் சொன்ன தீர்த்தங்கள் ஆயிரத்துள் இவை பத்தும் வல்லார்களை தேவர் வைகல் தீர்த்தங்களே என்று பூசித்து நல்கி உரைப்பர் தம் தேவியர்க்கே
- என்று நம்மாழ்வார் பாடுகிறார்

கருட புராணத்தில் கடல் நீராட்டம் என்பது எல்லா நாட்களிலும் செய்யக்கூடாது அப்படி செய்தால் பாவம் என்று சொல்கிறது ஆனால் கடலில் மக்கள் நீராடுவதற்கு சில நாட்களை கருட புராணம் அனுமதிக்கிறது அதில் மிக உயர்வான  நாளாகவும் அவசியம் கடலில் நீராடி குற்றங்களைப் போக்கிக் கொள்ள வேண்டிய நாளாகவும் மாசி மகத்தை குறிப்பிடுகிறது அமாவாசை முதலிய நாட்களில் இது அனுமதிக்கப்பட்டாலும் மாசி மகத்திற்கு உள்ள சிறப்பு வேறு நாட்களுக்கு இல்லை காரணம் இறைவனும் அதே கடற்கரைக்கு வந்து தீர்த்தமாடும் நாள் மாசி மக நாள் அல்லவா அவர் தீர்த்தம் ஆடிய தீர்த்தத்தில் மக்கள் தீர்க்கின்ற வாய்ப்பை பெறும் நாள் அல்லவா  மாசி கடலாடுதல் என்பது நம்முடைய இந்திய ஆன்மீக மரபிலும் தமிழ்நாட்டு தொன்மையான பழக்க வழக்கங்களிலும் இருந்து வரும் உன்னதமான விழாவாகும்

நம்முடைய இந்திய ஆன்மீக மரபில் ஒவ்வொரு மாதத்திற்கும் ஒவ்வொரு சிறப்பு உண்டு அதில் மார்ச் மாதத்தில் வரும் மக நட்சத்திரத்திற்கு பல பல சிறப்புகள் உண்டு அன்றைய தினம் ஒவ்வொரு கிராமத்தில் இருந்தும் எத்தனை ஆலயங்கள் உண்டு அதில் பெரும்பாலான ஆலயத்தில் இருந்து பெருமாள் அருகாமையில் இருக்கக்கூடிய கடற்கரையில் தீர்த்தம் ஆடுவது கண்கொள்ளா காட்சி ஆகும்

மாசி மகம் தீர்த்தவாரி உற்சவம் தமிழகம் முழுவதும் கோலாகலமாக நடைபெறும். சென்னையில் திருவல்லிக்கேணி பார்த்தசாரதி பெருமாள் கோவில், மாதவ பெருமாள் கோவில், ஆலயங்களில் உற்சவர்களை மெரீனா கடற்கரைக்கு கொண்டு வந்து தீர்த்தவாரி நடைபெறும். இதில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்று தரிசனம் செய்வார்கள்.

திருக்கோவிலூர் பெருமாள் கோவிலில் இருந்து புறப்பட்டு சுமார் 80 கிலோ மீட்டர் பயணம் செய்து கடலூர் தேவனாம்பட்டி கடற்கரையை அடைகிறார் அங்கே மாசி மகத்தன்று தீர்த்தவாரி கண்டறிய பிறகு புறப்பட்டு பற்பல ஊர்களில் மண்டபங்களிலும் கோயில்களிலும் இறங்கி மண்டகப்படி கண்டருளுகிறார் பின் தனது ஆஸ்தானமாகிய  திருக்கோவில் இருக்கு சேருகிறார் இடையில் பல ஊர்களில் அந்தந்த ஊர்களில் உள்ள சந்ததி பெருமாளோடு இணைந்து வீதி உலாக்களும் உற்சவங்களும் கண்டருள்வது மிக விசேஷமாகும்

 சிதம்பரத்தில் எழுந்தருளியுள்ள சித்திரக் கூட பெருமாள் அங்கிருந்து புறப்பட்டு வங்க கடல் கிள்ளைக்குச் சென்று தீர்த்தவாரி கண்டருளி வழியில் பல ஊர்களில் தங்கி திருக்கல்யாண உற்சவம் திருமஞ்சன உற்சவங்களும் நடந்து ஆஸ்தானம் அடைகிறார் திருக்கண்ணபுரம் பிரம்மோற்சவம் மாசி மாதம் சார்ந்த நடைபெறும் பெருமாள் திருமலைராயன் கடற்கரையில் மீனவ அன்பர்களால் வரவேற்கப்பட்டு தீர்த்தவாரி நடைபெறும் அவர்கள் இப்பெருமானை மாப்பிள்ளை சாமி என்று பரிவோடும் போற்றுவார்கள் கடல் அரசன் பெண்ணான மகாலட்சுமி மணந்தவர் அல்லவா

இப்படிப்பட்ட மாசி மக நன்னாளில் அந்த இறைவனோடு சென்று மாசி நீராடி வணங்கி வழிபட்டால் இரண்டு நன்மைகளை அடைவோம்

1. இறையருள் கிடைக்கும்
2.முன்னோர்களின் அருள் ஆசி கிடைக்கும்
தேங்காய் துடைப்பம்

🧹 இயற்கை தேங்காய் துடைப்பம்

🌿 100% இயற்கை தேங்காய் குச்சியால் தயாரிப்பு
💪 மிகவும் பலம் – உடையாது, நீண்ட நாட்கள் பயன்படும்
🏡 வீடு, மாடி, தோட்டம் சுத்தம் செய்ய சிறந்தது
✨ தூசி, குப்பை எளிதில் அகற்றும் திறன்
📦 3 துடைப்பம் கொண்ட value pack
🔥 தினசரி பயன்பாட்டுக்கு super choice!

⚡ இன்று order பண்ணுங்க !

🔗 இப்போது வாங்க
💜

பக்தர்கள் சொல்கிறார்கள்

இந்த தளத்தை வாசித்த பிறகு, என் மனம் சாந்தியையும் நம்பிக்கையையும் பெற்றது.
🌸 ரமேஷ், மதுரை

இங்கே உள்ள ஆன்மிக விளக்கங்கள் தெளிவாகவும் எளிமையாகவும் இருக்கின்றன.
🌼 சிந்து, தஞ்சாவூர்

இந்த தளம் என் வீட்டில் ஒரு புனித இடமாகவே மாறியுள்ளது.
🌺 கிருஷ்ணன், கோவை

என் ஆன்மிகப் பயணத்தில் வழிகாட்டியாக இந்த தளம் இருந்தது. நன்றி!
🌹 சுகந்தி, சென்னை

நான் தேடிய பல தகவல்களை இங்கு ஒரே இடத்தில் நேர்த்தியாகப் பெற்றேன்.
💠 லலிதா, ஈரோடு

இந்த தளம் தினசரி ஒரு நல்ல எண்ணத்தை என் உள்ளத்தில் விதைக்கிறது.
🌿 அருண், திருநெல்வேலி

WhatsApp
CHANNEL
🛕
📜
🏠
🎧
📚