Sri Mahavishnu Info: Thirukaaragam | Ulagalantha Perumal | உலகளந்த பெருமாள் | திவ்ய தேசம் - 52 Thirukaaragam | Ulagalantha Perumal | உலகளந்த பெருமாள் | திவ்ய தேசம் - 52
```
📿 வைணவ அடிப்படைகள் • 🛕 108 திவ்யதேசங்கள் • 📜 நாலாயிர திவ்யபிரபந்தம் • 🎧 தினசரி ஸ்லோகங்கள் • 📅 இன்றைய வைபவம் • 🙏 தினசரி பக்தி வழிகாட்டி • ❓ பக்தி கேள்வி & பதில்கள் • 📖 ஆன்மீக நூல்கள் • 🧒 குழந்தைகள் பக்தி பகுதி • 🎓 ஸ்ரீவைஷ்ணவ பாடசாலை • 🔱 விஷ்ணு சஹஸ்ரநாமம் • 🌄 ஸ்ரீ வெங்கடேச மஹாத்மியம் • 🌺 திருப்பாவை • 👣 வைஷ்ணவ ஆச்சார்யர்கள் • 🛕 திருத்தல தரிசனம் • 🔔 கோவில் விழாக்கள் • 📜 பக்தர் அனுபவங்கள் • ✨ அற்புத நிகழ்வுகள் • 🕉️ நாமஸ்மரணையின் மகிமை • 📚 பக்தி குறிப்புகள் • 🌸 ஆழ்வார்கள் வரலாறு • 🙏 ஸ்ரீவைஷ்ணவ சம்பிரதாயம் • 🎙️ பக்தி உரைகள் & ஆடியோ • 📆 ஸ்ரீவைஷ்ணவ நாட்காட்டி • 🌟 புதிய பக்தி பதிவுகள்

Thirukaaragam | Ulagalantha Perumal | உலகளந்த பெருமாள் | திவ்ய தேசம் - 52

Sri Mahavishnu Info
மூலவர் : கருணாகரப்பெருமாள்
அம்மன்/தாயார் : பத்மாமணி நாச்சியார்
தீர்த்தம் : அக்ராய தீர்த்தம்
பழமை : 1000-2000 வருடங்களுக்கு முன்
புராண பெயர் : திருகாரகம்
ஊர் : காஞ்சிபுரம்
மாவட்டம் : காஞ்சிபுரம்
மாநிலம் : தமிழ்நாடு
மங்களாசாசனம் : 
திருமங்கையாழ்வார்

நீரகத்தாய் நெடுவரையின் உச்சி மேலாய்
நிலாத்திங்கள் துண்டத்தாய் நிறைந்த கச்சி
ஊரகத்தாய் ஒண்துறை நீர் வெஃகாகவுள்ளாய்
உள்ளுவார் உள்ளத்தாய் உலகமேத்தும்
காரகத்தாய் கார்வானத் துள்ளாய் கள்வா
காமரு பூங்காவிரியின் தென்பால் மன்னு
பேரகத்தாய் பேராதென் நெஞ்சினுள்ளாய்
பெருமானுன் திருவடியே பேணினேனே.
- திருமங்கையாழ்வார்

திருவிழா
வைகுண்ட ஏகாதசி

தல சிறப்பு
பெருமாளின் மங்களாசாசனம் பெற்ற 108 திவ்ய தேசங்களில் இது 52 வது திவ்ய தேசம்.

இத்தலத்தில் உள்ள உலகளந்த பெருமாள் வலது கால் ஊன்றி இடது கால் தூக்கிய நிலையில் இருப்பது காண்பதற்கரிய சிறப்பாகும். இக்கோயிலின் எதிரில் உள்ள ஆஞ்சநேயர் சதுர்புஜத்துடன் கையில் சங்கு, சக்கரத்துடன் அருள்பாலிக்கிறார்.
பொது தகவல்
இத்தல இறைவனை கார்ஹ மகரிஷி தரிசனம் செய்துள்ளார். இங்கு மூலவர் சன்னதியின் மேல் உள்ள விமானம் வாமன விமானம் எனப்படும். இத்தல இறைவன் வடக்கு நோக்கி நின்ற திருக்கோலத்தில் காட்சி தருகிறார்.

பிரார்த்தனை
ஆணவம் நீங்க வழிபாடு செய்யப்படுகிறது.

நேர்த்திக்கடன்
பிரார்த்தனை நிறைவேறியதும் இங்குள்ள பெருமாளுக்கு திருமஞ்சனம் செய்து, புது வஸ்திரம் சாத்தி வழிபாடு செய்கின்றனர்.

தலபெருமை
பெருமாளின் 108 திருப்பதிகளுள் இது திருகாரகம் எனப்படும். இது உலகளந்த பெருமாள் கோயிலின் உள்ளேயே உள்ள திவ்ய தேசம் ஆகும். இந்த கோயிலின் உள்ளேயே திருஊரகம், திருநீரகம், திருக்கார்வானம் என்ற மூன்று திவ்ய தேசங்கள் உள்ளது. அதாவது ஒரு கோயிலுக்குள்ளேயே 4 திவ்ய தேசங்கள் அமைந்துள்ளது. இதைப்போல் வேறு எங்கும் பார்க்க முடியாது. திருஊரகத்தை தவிர மற்ற மூன்றும் வேறு இடத்தில் இருந்ததாகவும் பிற்காலத்தில் ஒரே தலத்தில் பிரதிஷ்டை செய்யப்பட்டதாகவும் கூறுவதுண்டு. ஊரகம், நீரகம், காரகம், கார்வானம் ஆகிய நான்கு திவ்ய தேசத்து பெருமாளையும் சேர்த்து திருமங்கை ஆழ்வார் ஒரே பாசுரத்தில் மங்களாசாசனம் செய்துள்ளார்.

தல வரலாறு
கார்ஹ மகரிஷி என்னும் முனிவர் இந்த பெருமாளை குறித்து தவம் இருந்து அளவற்ற ஞானம் பெற்றார். அவர் பெயராலேயே இந்த திவ்ய தேசம் "காரகம்' எனப்பட்டது என்பர். இந்த பெருமாளை வழிபட்டால் கல்வி, கேள்விகளில் சிறந்து விளங்கலாம் என்பது ஐதீகம்.திருங்கையாழ்வார் மங்களாசாசனம் செய்ய இங்கு எழுந்தருளிய போது இந்தக்கோயிலில் உள்ள திருநீரகம், திருக்கார்வனம் ஆகிய இந்த மூன்று தலங்களும் "திருஊரகத்துடன்' வந்து விட்டதா? அல்லது வெவ்வேறு இடங்களில் இந்த திவ்ய தேசங்களை மங்களாசாசனம் செய்தாரா? அல்லது எந்த காலச்சூழ்நிலையில் இந்த மூன்று திவ்ய தேசங்கள் இங்கு வந்தது என்றும் கண்டுபிடிக்க முடியவில்லை.
சிறப்பம்சம்
பெருமாளின் 108 திருப்பதிகளுள் ஒன்று. இத்தலத்தில் உள்ள உலகளந்த பெருமாள் வலது கால் ஊன்றி இடது கால் தூக்கிய நிலையில் இருப்பது காண்பதற்கரிய சிறப்பாகும்.

அமைவிடம் : 
காஞ்சிபுரம் பஸ்ஸ்டாண்டிலிருந்து காமாட்சி அம்மன் கோயிலுக்கு செல்லும் வழியில் கோயில் உள்ளது.

அருகிலுள்ள ரயில் நிலையம் : காஞ்சிபுரம்

அருகிலுள்ள விமான நிலையம் : சென்னை

தங்கும் வசதி : காஞ்சிபுரம்

திறக்கும் நேரம் : 
காலை 7 மணி முதல் 12 மணி வரை, மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும்.

முகவரி :
அருள்மிகு உலகளந்த பெருமாள் கோயில்,திருகாரகம்,காஞ்சிபுரம் - 631 502.காஞ்சிபுரம் மாவட்டம்.

போன் : +91- 94435 97107, 98943 88279
4 Vedhas 18 Puranas

📖 4 வேதங்கள் + 18 புராணங்கள்

இப்போது எளிய தமிழில் (PDF)

சனாதன தர்மத்தின் ஆன்மீக பொக்கிஷத்தை
உங்கள் மொபைலில் பெறுங்கள் 🙏

🎁 வெறும் ₹199 மட்டும்!

🔗 மேலும் விவரங்கள் அறிய
💜

பக்தர்களின் மெய்சிலிர்க்கும் அனுபவங்கள்

❝ இந்த தளத்தை வாசித்த பிறகு, என் மனம் சாந்தியையும் நம்பிக்கையையும் பெற்றது.

🌸 ரமேஷ், மதுரை

❝ இங்கே உள்ள ஆன்மிக விளக்கங்கள் தெளிவாகவும் எளிமையாகவும் இருக்கின்றன.

🌼 சிந்து, தஞ்சாவூர்

❝ இந்த தளம் என் வீட்டில் ஒரு புனித இடமாகவே மாறியுள்ளது.

🌺 கிருஷ்ணன், கோவை

❝ என் ஆன்மிகப் பயணத்தில் வழிகாட்டியாக இந்த தளம் இருந்தது. நன்றி!

🌹 சுகந்தி, சென்னை

❝ நான் தேடிய பல தகவல்களை இங்கு ஒரே இடத்தில் நேர்த்தியாகப் பெற்றேன்.

💠 லலிதா, ஈரோடு

❝ இந்த தளம் தினசரி ஒரு நல்ல எண்ணத்தை என் உள்ளத்தில் விதைக்கிறது.

🌿 அருண், திருநெல்வேலி

❝ இங்குள்ள விரத முறைகளும் வழிபாட்டுக் குறிப்புகளும் வாழ்க்கைக்கு மிக உதவியாக உள்ளன.

🌻 மீனாட்சி, திருச்சி

❝ தினசரி ராசிபலன் மற்றும் ஆன்மிக செய்திகள் என் நாளை சுபிட்சமாக தொடங்க உதவுகிறது.

☸️ கார்த்திக், சேலம்

❝ ஸ்லோகங்களின் அர்த்தங்களை இவ்வளவு எளிமையாக இதுவரை நான் படித்ததில்லை!

🪔 காயத்ரி, வேலூர்

❝ மன அழுத்தத்தில் இருந்த எனக்கு இங்குள்ள கட்டுரைகள் பெரிய ஆறுதலை தந்தன.

🪷 சுந்தர், திருப்பூர்

❝ கோயில்களின் தல புராணங்கள் பற்றிய தகவல்கள் மிக அருமை. குடும்பத்துடன் படிக்கிறோம்.

🔔 பத்மநாபன், திண்டுக்கல்

❝ ஒவ்வொரு பண்டிகையின் பின்னணியிலும் உள்ள உண்மையான காரணங்களை இதிலிருந்து புரிந்துகொண்டேன்.

🌾 ரேவதி, நாகர்கோவில்
🙏
Donate Bhakti Services
🛕
📜
🏠
🎧
📚