📿 வைணவ அடிப்படைகள் | 🛕 திவ்யதேச வரலாறுகள் | 📘 நாலாயிர திவ்யபிரபந்தம் | 🎧 ஸ்லோகங்கள் | 📅 தினசரி பக்தி வழிகாட்டி | ❓ பக்தி கேள்விகள் | 📖 ஆன்மீக நூல்கள் | 🧒 குழந்தைகள் பக்தி பகுதி | 🛕 தரிசன நேரங்கள் | 📜 பக்தர் அனுபவம் | 🛐 ஸ்ரீவைணவ பாடசாலை | 🗓️ ஸ்ரீவைணவ நாட்காட்டி | 🔱 விஷ்ணு சஹஸ்ரநாமம் | 🌄 ஸ்ரீ வெங்கடேச மஹாத்மியம் | 🌺 திருப்பாவை | 🛕 திருத்தல தரிசனம் | ✨ அற்புத நிகழ்வுகள் | 👣 வைஷ்ணவ ஆச்சாரியர்கள் | 🕉️ நாமஸ்மரணையின் மகிமை | 🎙️ பக்தி ஸ்லோகங்கள் | 🔔 கோவில் விழாக்கள்

ஆதிசங்கரர் அருளிய ஷட்பதீ ஸ்தோத்ரம் - Shatpadi Stotram

Sri Mahavishnu Info
ஆறுகால் ஸ்தோத்திரம் என்று தமிழில் அழைக்கப்படும் ஷட்பதி ஸ்தோத்ரம் ஆறு ஸ்தோத்ரங்களையும் பல ஸ்ருதியையும் கொண்டது. வண்டு ஸ்தோத்ரம் என்றும் இது சொல்லப்படுவதுண்டு.

1.அவினய மபநய விஷ்ணோதமய மந:சமயம் ருகத்ருஷ்ணாம்!
பூததயாம் விஸ்தாரய தாரய ஸம்ஸார ஸாகரத: !!

ஹே விஷ்ணோ!எனது பண்வின்மையைப் போக்கு!மனதை அடங்கச் செய். பேராசையையும் தணித்து விடு. எல்லா ஜீவராசிகளிடத்தும் தயை வரச்செய். என்னை ஸம்ஸாரக் கடலிலிருந்து அக்கரை சேர்ப்பித்து விடு.

2.திவ்யதுனீ மகரந்தே பரிமல பரிபோகஸச்சிதானந்தே !
ஸ்ரீபதிபதாரவிந்தே பவபயகேதச்சிதே வந்தே !!

கங்கையை மகரந்தமாகக் கொண்டதும், ஸத்-சித்-ஆனந்தமாகியவற்றை வைசனையாகக் கொண்டதும், உலகில் துன்பத்தைப் போக்குவதுமான ஸ்ரீபதியான நாராயணனின் திருவடித்தாமரைகளை வணங்குகின்றேன்.

3.ஸத்யபிபேதாப்கமே நாத!தவாஹம் நமாமகீனஸ்த்வம்!
ஸாமுத்ரோஹி தரங்க:க்வசன ஸமுத்ரோ ந தாரங்க: !!

ஜீவாத்மாவான எனக்கும், பரமாத்மாவான எனக்கும் உமக்குமிடையில் வேற்றுமை இல்லையெனினும், ஹே ஸ்வாமி நான் உம்மைச் சேர்ந்த அடிமையே:தாங்கள் எனது உடைமையானவரல்ல. அலைதானே ஸமுத்திரத்தையண்டிது. ஒரு போதும் கடல், அலைகளில் அடங்கியதில்லையன்றோ!

4.உத்ருதநக நகபிதனுஜ தனுஜகுலாமித்ர மித்ரசசித்ருஷ்டே !
த்ருஷ்டே பவதி ப்ரபவதி ந பவதி கிம் பவதிரஸ்கார: !!

கோவர்தன மலையை தூக்கியவரே!இந்திரனின் இளையவரே!அசுரக்கூட்டத்தை அழித்தவரே!சூர்ய சந்திரர்களை கண்களாகக் கொண்டவரே!தாங்கள் கண்ணுக்கெதிரே வந்து திறமையைக் காட்டும் பொழுது எவருக்குத்தான் உலகியலில் இழிவு தோன்றாது?

5.மத்ஸ்யாதிபிரவதாரை ரவதாரவதாஷிவதாஸதா வஸுதாம் !
பரமேச்வர பரிபால்யோ பவதா பவதாப பீதோஷிஹம் !!

மத்ஸ்ய-கூர்மாதி அவதாரங்களால் இறங்கிவந்து பூமியை காத்தருளும் தங்களால், ஸம்ஸார தாபத்தால் மருண்ட நான் காக்கப்பட வேண்டியவரன்றோ! ஹே பெருமாளே!

6.தாமேதர குணமந்திர ஸுந்தரவதனாரவிந்த கோவிந்த !
பவஜலதிமதன மந்தர பரமம் தரமபநய த்வம் மே !!

தாமோதரனே!குணங்களுக்கு கோயிலானவனே! அழகிய தாமரையத்த முகம் கொண்டவனே! கோவிந்த! ஸம்ஸாரக்கடலை கடையும் மந்தர மலையானவனே! எனது பெரும் துன்பத்தைப் போக்குவாயாக!

7.நாராயண கருணாமய சரணம் கரவாணி தாவகௌ சரணௌ !
இதி ஷட்பதீ மதீயே வதன ஸரோஜே ஸதா வஸது !!

ஹே நாராயண!கருணை வடிவானவனே! உனது திருவடிகளை சரணம் அடைகிறேன் என்ற இந்த ஆறு சொற்கள் என் முகத்தில் எப்பொழுதும் தங்கட்டும்.

ஷட்பதீ ஸ்தோத்திரம் முற்றுப் பெறுகிறது.

இதனைப் பாராயணம் செய்தால் பகவானிடத்தில் பக்தி, வைராக்யம், மோக்ஷம், ஞானம் ஆகியவை உண்டாகி மனக்கவலையும் கிரஹதோஷமும் நீங்கும் என்பது ஆசார்யாள் அருள்வாக்கு!

ஏராளமான, நுட்பமான அர்த்தங்கள் அடங்கிய ஸ்ரீ ஷட்பதீ ஸ்தோத்ரம் நமக்கு ஆதி சங்கரரால் அருளப்பட்ட அற்புத ஸ்தோத்ரமே!

💜

பக்தர்கள் சொல்கிறார்கள்

இந்த தளத்தை வாசித்த பிறகு, என் மனம் சாந்தியையும் நம்பிக்கையையும் பெற்றது.
🌸 ரமேஷ், மதுரை

இங்கே உள்ள ஆன்மிக விளக்கங்கள் தெளிவாகவும் எளிமையாகவும் இருக்கின்றன.
🌼 சிந்து, தஞ்சாவூர்

இந்த தளம் என் வீட்டில் ஒரு புனித இடமாகவே மாறியுள்ளது.
🌺 கிருஷ்ணன், கோவை

என் ஆன்மிகப் பயணத்தில் வழிகாட்டியாக இந்த தளம் இருந்தது. நன்றி!
🌹 சுகந்தி, சென்னை

நான் தேடிய பல தகவல்களை இங்கு ஒரே இடத்தில் நேர்த்தியாகப் பெற்றேன்.
💠 லலிதா, ஈரோடு

இந்த தளம் தினசரி ஒரு நல்ல எண்ணத்தை என் உள்ளத்தில் விதைக்கிறது.
🌿 அருண், திருநெல்வேலி

🛕
108 ஆலயம்
📜
பிரபந்தம்
🎧
ஸ்லோகம்
📚
குறிப்புகள்