Sri Mahavishnu Info: Aravindalochanar Temple | ஸ்ரீ அரவிந்தலோசனர் ஆலயம் | திவ்ய தேசம் - 94 Aravindalochanar Temple | ஸ்ரீ அரவிந்தலோசனர் ஆலயம் | திவ்ய தேசம் - 94
📿 வைணவ அடிப்படைகள் | 🛕 திவ்யதேச வரலாறுகள் | 📘 நாலாயிர திவ்யபிரபந்தம் | 🎧 ஸ்லோகங்கள் | 📅 தினசரி பக்தி வழிகாட்டி | ❓ பக்தி கேள்விகள் | 📖 ஆன்மீக நூல்கள் | 🧒 குழந்தைகள் பக்தி பகுதி | 🛕 தரிசன நேரங்கள் | 📜 பக்தர் அனுபவம் | 🛐 ஸ்ரீவைணவ பாடசாலை | 🗓️ ஸ்ரீவைணவ நாட்காட்டி | 🔱 விஷ்ணு சஹஸ்ரநாமம் | 🌄 ஸ்ரீ வெங்கடேச மஹாத்மியம் | 🌺 திருப்பாவை | 🛕 திருத்தல தரிசனம் | ✨ அற்புத நிகழ்வுகள் | 👣 வைஷ்ணவ ஆச்சாரியர்கள் | 🕉️ நாமஸ்மரணையின் மகிமை | 🎙️ பக்தி ஸ்லோகங்கள் | 🔔 கோவில் விழாக்கள்

Aravindalochanar Temple | ஸ்ரீ அரவிந்தலோசனர் ஆலயம் | திவ்ய தேசம் - 94

Sri Mahavishnu Info
Aravindalochanar Temple
அரவிந்தலோசனர் ( நவதிருப்பதி - 9)
மூலவர் : அரவிந்த லோசனர்
உற்சவர் : செந்தாமரைக் கண்ணன்
தாயார் : கருந்தடங்கண்ணி
தீர்த்தம் : தாமிரபரணி தீர்த்தம், வருண தீர்த்தம்
பழமை : 1000-2000 வருடங்களுக்கு முன்
புராண பெயர் : திருத்தொலைவில்லி மங்கலம்
ஊர் : தொலைவிலிமங்கலம்
மாவட்டம் : தூத்துக்குடி
மாநிலம் : தமிழ்நாடு
மங்களாசாசனம் : நம்மாழ்வார்

திருந்து வேதமும் வேள்வியும் திருமாமகளிரும்தாம் மலிந் திருந்து வாழ்பொருநல் வடகரை வண் துலைவில்லி மங்கலம் கருந்தடங்கண்ணி கைதொழுத அந்நாள் தொடங்கி இந்நாள் தொழும் இருந்திருந்தரவிந்த லோசன வென்றன்றே நைந்து இரங்குமே.
- நம்மாழ்வார்


திருவிழா
வைகுண்ட ஏகாதசி

தல சிறப்பு
பெருமாளின் மங்களாசாசனம் பெற்ற 108 திவ்ய தேசங்களில் இது 94 வது திவ்ய தேசம்.

நவதிருப்பதிகளில் இது 9வது திருப்பதி, இரட்டைத் திருப்பதியில் இது 2வது திருப்பதி. நவகிரகங்களில் இது கேது தலம்.

பொது தகவல்
இங்கு பெருமாள் குப்த விமானத்தின் கீழ் அருள்பாலிக்கிறார்.

பிரார்த்தனை
திருமணத்தடை, குழந்தை பாக்கியம், கல்வியில் சிறந்து விளங்க இறைவனை பிரார்த்திக்கலாம்.

நேர்த்திக்கடன்
பெருமாளுக்கு திருமஞ்சனம் செய்து வஸ்திரம் சாற்றி வழிபடுகின்றனர்.

தலபெருமை
சோழநாட்டில் அமைந்துள்ள நவகிரகங்களுக்கு ஒப்பாக இப்பாண்டி நாட்டு நவதிருப்பதிகள் நவகிரகங்களாக போற்றப்படுகிறது. இங்கு பெருமாளே நவகிரகங்‌களாக செயல்படுவதால் நவ கிரகங்களுக்கு என தனியே சன்னதி அமைக்கப்படுவதில்லை. அவரவர்க்கு உள்ள கிரக தோஷங்கள் நீங்க நவதிருப்பதி வந்து வணங்கி வழிபட்டால் கிரக தோஷம் நீங்கும்.

இவற்றை தரிசிக்க ஒவ்வொரு ஊருக்கும் பஸ் ஏறிச் சென்று வருவது சிரமம். நாள் பிடிக்கும். அ‌தைவிட கார் ஒன்று அமர்த்தி சென்று வந்தால் ஒ‌‌ரே நாளில் அனைத்துத் தலங்களையும் தரிசித்து விடலாம். சென்னையில் இருப்பவர்களுக்கு தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக்கழகம் ஏற்பாடு செய்து தருகிறது. மாதம் இருமுறை சென்னையிலிருந்து நடத்தப்படும் இச்சுற்றுலா முதல் மற்றும் மூன்றாவது வெள்ளிக்கிழமைகளில் புறப்படுகிறது. புதன் விடிகாலையில் திரும்பிவிடலாம்.

நவதிருப்பதிகள் என்றழைக்கப்படும் ஒன்பது வைணவ சேத்திரங்களும், நவகிரகங்களுடன் தொடர்புடையவை எனக்கருதி வழிபடப்பட்டு வருகிறது. ஒன்பது திருப்பதிகளிலும் உள்ள பெருமா‌ளே நவகிரகங்களாகக் கருதப்பட்டு வழிபடப்படுகிறது. அதன்படி
1. சூரியன் : ஸ்ரீவைகுண்டம்
2. சந்திரன் : வரகுணமங்கை (நத்தம்)
3. செவ்வாய் : திருக்கோளுர்
4. புதன் : திருப்புளியங்குடி
5. குரு : ஆழ்வார்திருநகரி
6. சுக்ரன் : ‌தென்திருப்பேரை
7. சனி : பெருங்குளம்
8. ராகு : 1. இரட்டைத் திருப்பதி ( தொலைவில்லிமங்கலம்)
9. கேது : 2. இரட்டைத் திருப்பதி

தல வரலாறு
தென்திருப்பேரை அருகிலேயே உள்ளது. இங்கு இரண்டு கோயில்கள் உள்ளது. இவை இரண்டும் இரட்‌டைத்திருப்பதி என்று அழைக்கப்படுகிறது. ஷேத்திரத்திலேயே ஒரே திவ்ய தேசமாக கருதப்படுகிறது. கோயில் அடர்ந்த காட்டில் அமைந்துள்ளது. அருகில் வீடுகள் அதிகம் இல்‌லை. அர்ச்சகர்கள் வரும் நேரம் அறிந்து சென்று தரிசனம் செய்வது நல்லது. நம்மாழ்வார் 11 பாசுரங்களைப் பாடியுள்ளார். நவகிரகங்களில் ராகு கேது என்ற இரு சாயாகிரகங்களுக்கு உரிய தலங்களாக விளங்குகிறது.

அமைவிடம்
நெல்லை, திருச்செந்தூரிலிருந்து பஸ்ஸில் சென்று தரிசிக்கலாம். எனினும் வா‌டகை கார் அல்லது வேன் எடுத்துகொள்வது நலம்.

முக்கிய ஊர்களிலிருந்து தூரம் : திருநெல்வேலியிலிருந்து - 39 கி.மீ.,

அருகிலுள்ள ரயில் நிலையம் : திருநெல்வேலி, திருச்செந்தூர்.

அருகிலுள்ள விமான நிலையம் : திருவனந்தபுரம், மதுரை.

தங்கும் வசதி : தூத்துக்குடி


திறக்கும் நேரம்
காலை 8 மணி முதல் 12 மணி வரை, மதியம் 1 மணி முதல் மாலை 5 மணி வரை திறந்திருக்கும்.

முகவரி
அருள்மிகு அரவிந்தலோசனர் திருக்கோயில், நவதிருப்பதி (இரட்டை திருப்பதி), திருத்தொலைவில்லி மங்கலம் - 628 752 தூத்துக்குடி மாவட்டம்.

🪔 சிறப்பு பூஜை விளக்கு – RAISOM

  • பித்தளை: சங்க, சக்கரம், திலக வடிவில்
  • உயரம்: 3.5 இன்ச் | எடை: 145g
  • பயன்பாடு: வீடு, அலுவலகம், கோவில்
  • சிறந்த பரிசு: கிரஹபிரவேசம்
🛒 அமேசானில் இப்போது வாங்க
💜

பக்தர்கள் சொல்கிறார்கள்

இந்த தளத்தை வாசித்த பிறகு, என் மனம் சாந்தியையும் நம்பிக்கையையும் பெற்றது.
🌸 ரமேஷ், மதுரை

இங்கே உள்ள ஆன்மிக விளக்கங்கள் தெளிவாகவும் எளிமையாகவும் இருக்கின்றன.
🌼 சிந்து, தஞ்சாவூர்

இந்த தளம் என் வீட்டில் ஒரு புனித இடமாகவே மாறியுள்ளது.
🌺 கிருஷ்ணன், கோவை

என் ஆன்மிகப் பயணத்தில் வழிகாட்டியாக இந்த தளம் இருந்தது. நன்றி!
🌹 சுகந்தி, சென்னை

நான் தேடிய பல தகவல்களை இங்கு ஒரே இடத்தில் நேர்த்தியாகப் பெற்றேன்.
💠 லலிதா, ஈரோடு

இந்த தளம் தினசரி ஒரு நல்ல எண்ணத்தை என் உள்ளத்தில் விதைக்கிறது.
🌿 அருண், திருநெல்வேலி

🛕
108 ஆலயம்
📜
பிரபந்தம்
🎧
ஸ்லோகம்
📚
குறிப்புகள்