ஸ்ரீ ஹரி என்றால்...
பிறப்பு, இறப்பு எனும் வாழ்க்கை துயரத்தில் இருந்தும், பிறவிச் சுழற்சியிலிருந்தும் நமக்கு விடுதலை அளிப்பவர் ஸ்ரீ ஹரி.”'...

"ஸ்ரீ ஹரி” என்ற சமஸ்கிருத வார்த்தை பச்சை அல்லது மஞ்சள் நிறத்தை குறிப்பதாக உள்ளது..

ஹரி மற்றும் ஹரன் என்ற சொற்களுக்கு, அபகரிப்பவன் என்ற பொருளும் உண்டு. அதாவது, நம்மையெல்லாம் உழலச் செய்யும் இந்த வாழ்க்கை என்னும் பாவக் கடலில் இருந்து, நம்மை அபகரித்து, தம்மிடத்தில் சேர்த்துக் கொள்பவர் என்று பொருள்..

இந்து சமய நூல்களான பாகவத புராணம், மகாபாரதம், பகவத் கீதை மற்றும் சில புராணங்களில் “ஹரி” என்ற பெயருக்கு இன்னும் வேறு பன்னிரு திருநாமங்கள்
குறிப்பிடப்பட்டு உள்ளன..

அவை
1)கோவிந்தன்
2) கேசவன்
3)வாசுதேவன்
4)தாமோதரன்
5)மதுசூதனன்
6) அச்சுதன்
7)மாதவன்
8)ரிஷிகேசன்
9)ஜனார்தனன்
10)நாராயணன்
11)பத்மநாதன்
12)ஸ்ரீதரன்..

ஆங்கிலத்தில்” ஹரி” என்பதனை, HARI என்று குறிப்பிடுகிறோம். அந்த எழுத்துக்களை சற்று விரிவாக்கம் செய்து பாருங்கள்..!!
H–heavenly (தெய்வீகமான),
A–absolute (முற்றிலும்),
R–rare (அபூர்வமான)
I–immortal (அழியாதவர்)..

அதாவது தெய்வீகமான, முற்றிலும் அபூர்வமான, அழியாத, பரம்பொருள் என்று அர்த்தப்படுகிறது..

விஷ்ணு ஸகஸ்ர நாமத்திற்கு விளக்கவுரை எழுதிய
ஸ்ரீ ஆதிசங்கரர் “ஹர்” என்ற வினைச் சொல்லுக்கு, விஷ்ணுவின் திருவடியை பற்றுதல், அடைதல் என்ற பொருளில் குறிப்பிட்டுள்ளார்.

வைணவ மரபில், ஹரி என்பதற்கு அனைத்து பாவங்களிலிருந்தும் விடுதலை அளிப்பவர் என விளக்கப்பட்டுள்ளது.

ஹரி எனப்படும் விஷ்ணு, பிறப்பு, இறப்பு எனும் வாழ்க்கை துயரத்தில் இருந்தும் பிறவிச் சுழற்சியிலிருந்தும் நமக்கு விடுதலை அளிப்பவர்.

கௌடிய வைணவ மரபில், ஹரி என்ற பெயர், ஸ்ரீ கிருஷ்ணர் மற்றும் விஷ்ணுவைக் குறிக்கும்..

சீக்கிய மதத்தில் ஹரி எனப்படும் “ஹர்” என்ற சொல் மிகவும் புனிதமானதாக கருதப்படுகிறது.

வையகம் வாழ்க வையகம் வாழ்க வளத்துடன் வாழ்க