Sri Mahavishnu Info: வாழ்க்கைக்கு உதவும் ஸ்ரீ விஷ்ணு சகஸ்ரநாமம் வாழ்க்கைக்கு உதவும் ஸ்ரீ விஷ்ணு சகஸ்ரநாமம்

வாழ்க்கைக்கு உதவும் ஸ்ரீ விஷ்ணு சகஸ்ரநாமம்

Sri Mahavishnu Info

sri vishnu sahasranamam
அம்புப் படுக்கையில் இருந்த பீஷ்மர் ஸ்ரீ நாராயணனைத் துதித்துப் பாடிய ஆயிரம் நாமாவாளிகள்தான் "விஷ்ணு சகஸ்ர நாமம்" எனப்படுகிறது. இந்த விஷ்ணு சகஸ்ர நாமத்தைப் பாராயணம் செய்வதால் பல நன்மைகள் ஏற்படும். இந்த விஷ்ணு சகஸ்ர நாமங்களைப் படித்துப் பாராயணம் செய்வதன் மூலம் வாழ்வில் பல வளங்களை அடைய முடியும். குறிப்பாக கீழ்காணும் சில நாமாவளிகள் இன்றைய வாழ்க்கைக்குத் தேவையானதாயிருக்கிறது.

3வது நாமாவளி - "ஓம் வஷ்ட காராய நம"

வியாபாரத்தில் வெற்றி, தேர்வுகளில் வெற்றி, வெளிநாடு செல்ல, நல்ல நட்பு கிடைக்க உதவுகிறது.

9வது நாமாவளி - "ஓம் பூத் பாவனாய நம"

நல்ல ஆரோக்கியம், உடல் உறுதி கிடைக்க உதவும்.

10வது நாமாவளி - "ஓம் பூதாத்மனே நம"

மன கிலேசம் அகல, மன அமைதி பெற உதவுகிறது.

11வது நாமாவளி - "ஓம் பரமாத்மனே நம"

சொந்தத் தொழிலில் மேன்மை அடைய, பதவி உயர்வு பெற, விளையாட்டுப் போட்டிகளில் வெற்றியடைய உதவுகிறது.

16வது நாமாவளி - "ஓம் க்ஷேத்ரஜ்ஞாய நம"

சொந்த வீடு அமைய, சொந்த நிலங்கள் வாங்க உதவுகிறது.

17வது நாமாவளி - "ஓம் அக்ஷ ராய நம"

கல்வியில் மேன்மை அடைய, பணபலம் பெருக உதவுகிறது.

21வது நாமாவளி - "ஓம் நாரஸிம்ஹவபுஷே நம"

மிக நெருக்கடியான நிலையில் இருந்து மீண்டு வர உதவுகிறது.

29வது நாமாவளி - "ஓம் பூதாதயே நம"

கசப்புணர்வு நீங்கி அனைவரும் நண்பர்களாக மாற உதவுகிறது.

43வது நாமாவளி - "ஓம் தாத்ரே நம"

சந்தான புத்ர பாக்கியம் கிடைக்க உதவுகிறது.

44வது நாமாவளி - "ஓம் விதாத்ரே நம"

ஆரோக்கியமான குழந்தையைப் பெற கர்ப்பிணிப் பெண்களுக்கு உதவுகிறது.

47வது நாமாவளி - "ஓம் ஹ்ரு ஷீ கேசாய நம"
கெட்ட நடத்தை மற்றும் தீயப் பழக்க வழக்கங்களில் இருந்து மீண்டு வர உதவுகிறது.

53வது நாமாவளி - "ஓம் ஸ்த்த விஷ்டாய நம"

கெடுதல் செய்யும் சக்திகள், தீவினைகள் விலகி ஓட உதவுகிறது.

220வது நாமாவளி - "ஓம் ஸ்ரீமதே நம"

எப்பொழுதும் அழகுடன் இருக்க, குறையாத செல்வம் பெற உதவுகிறது.

556வது நாமாவளி -"ஓம் புஷ்காரக்ஷாய நம"

கெட்ட நேரங்களில் இருந்து காப்பாற்றி உதவுகிறது.

-இது தவிர மற்ற நாமாவளிகள் ஒவ்வொன்றும் வாழ்விற்குப் பயனளிப்பதாகவே இருக்கிறது. முழுமையாகப் பாராயணம் செய்வதால் முழுப் பயனும் அடையலாம்.

💜

பக்தர்கள் சொல்கிறார்கள்

இந்த தளத்தை வாசித்த பிறகு, என் மனம் சாந்தியையும் நம்பிக்கையையும் பெற்றது.
🌸 ரமேஷ், மதுரை

இங்கே உள்ள ஆன்மிக விளக்கங்கள் தெளிவாகவும் எளிமையாகவும் இருக்கின்றன.
🌼 சிந்து, தஞ்சாவூர்

இந்த தளம் என் வீட்டில் ஒரு புனித இடமாகவே மாறியுள்ளது.
🌺 கிருஷ்ணன், கோவை

என் ஆன்மிகப் பயணத்தில் வழிகாட்டியாக இந்த தளம் இருந்தது. நன்றி!
🌹 சுகந்தி, சென்னை

நான் தேடிய பல தகவல்களை இங்கு ஒரே இடத்தில் நேர்த்தியாகப் பெற்றேன்.
💠 லலிதா, ஈரோடு

இந்த தளம் தினசரி ஒரு நல்ல எண்ணத்தை என் உள்ளத்தில் விதைக்கிறது.
🌿 அருண், திருநெல்வேலி

🛕
108 ஆலயம்
📜
பிரபந்தம்
🎧
ஸ்லோகம்
📚
குறிப்புகள்