Sri Mahavishnu Info: தீபாவளிக்கு முன் தீபம் ஏற்றுவது ஏன் தெரியுமா? தீபாவளிக்கு முன் தீபம் ஏற்றுவது ஏன் தெரியுமா?
```
📿 வைணவ அடிப்படைகள் 🛕 108 திவ்யதேசங்கள் 📜 நாலாயிர திவ்யபிரபந்தம் 🎧 தினசரி ஸ்லோகங்கள் 📅 இன்றைய வைபவம் 🙏 தினசரி பக்தி வழிகாட்டி ❓ பக்தி கேள்வி & பதில்கள் 📖 ஆன்மீக நூல்கள் 🧒 குழந்தைகள் பக்தி பகுதி 🎓 ஸ்ரீவைஷ்ணவ பாடசாலை 🔱 விஷ்ணு சஹஸ்ரநாமம் 🌄 ஸ்ரீ வெங்கடேச மஹாத்மியம் 🌺 திருப்பாவை 👣 வைஷ்ணவ ஆச்சார்யர்கள் 🛕 திருத்தல தரிசனம் 🔔 கோவில் விழாக்கள் 📜 பக்தர் அனுபவங்கள் ✨ அற்புத நிகழ்வுகள் 🕉️ நாமஸ்மரணையின் மகிமை 📚 பக்தி குறிப்புகள் 🌸 ஆழ்வார்கள் வரலாறு 🙏 ஸ்ரீவைஷ்ணவ சம்பிரதாயம் 🎙️ பக்தி உரைகள் & ஆடியோ 📆 ஸ்ரீவைஷ்ணவ நாட்காட்டி 🌟 புதிய பக்தி பதிவுகள்

தீபாவளிக்கு முன் தீபம் ஏற்றுவது ஏன் தெரியுமா?

Sri Mahavishnu Info

தீபாவளிக்கு முன் தீபம் ஏற்றுவது ஏன் தெரியுமா?
எம தீபம் என்றால் என்ன?
நம்முடைய முன்னோர்கள் புரட்டாசி மாதம் மாஹாளய பட்சத்தில் பூலோகத்துக்கு முன்னோர்கள் வருகிறார்கள். அவர்களுக்கு மாஹாளய அமாவாசையில் திதி கொடுத்து வருகிறோம். எமலோகத்திலிருந்து வந்த முன்னோர்களுக்கு திரும்பி செல்வதற்கு வழிகாட்டுவது இந்த எம தீபம் மட்டுமே. அந்த தீபத்தை எப்படி ஏற்ற வேண்டும் என்பதை இந்த பதிவில் படித்து தெரிந்துகொள்வோம் வாங்க..!

அதேபோல் இந்த தீபத்திற்கு இன்னொரு காரணமும் உள்ளது. இந்த தீபத்தை சனிபகவான் மற்றும் எமதர்ம ராஜ என இருவருக்கும் இந்த தீபத்தை ஏற்றுவார்கள். அவர்களுடைய கோவமான பார்வை நம்முடைய குடும்பத்தின் மீது பட்டால் நமக்கு கஷ்டம் ஏற்படலாம், அதனால் அவர்களை மகிழ்விக்கும் விதத்திலும் இந்த எம தீபத்தை ஏற்றுகிறார்கள்.

எம தீபம் ஏற்றும் முறை:

இந்த தீபத்தை வீட்டுற்குள் ஏற்றக்கூடாது. ரோட்டிலும் ஏற்றக்கூடாது. நீங்கள் இந்த தீபத்தை வீட்டில் வெளியில் வாசல் இருக்கும் அந்த நிலை வாசல் படியில் ஏற்றலாம். அப்படி ஏற்றும் விளக்கு தெற்கு திசையை நோக்கித்தான் ஏற்ற வேண்டும். அந்த விளக்கு ஏற்ற பயன்படுத்தும் பொருட்களை அனைத்தையுமே வீட்டிற்குள் மறுமுறை எடுத்து சென்று பயன்படுத்த கூடாது.

வட நாட்டில் விளக்குகளை கோதுமை மாவால் செய்யப்பட்ட விளக்குகளை ஏற்றுவார்கள். ஆனால் அது தேவையில்லை மணலால் செய்யப்பட்ட விளக்குகளை அதாவது அகல் விளக்கை ஏற்றலாம். அந்த விளக்கில் நல்லஎண்ணெய் ஊற்றவேண்டும்.

அதேபோல் ஒரு வீட்டிற்கு ஒரு விளக்குதான் ஏற்ற வேண்டும். பெரிய அளவில் தான் ஏற்ற வேண்டும் என்றால் 8 தீபம் ஏற்றலாம் எட்டு திசையையும் நோக்கி ஏற்றவும்.

இந்த தீபம் ஏற்றும் போதும் விளக்கிற்கு நேரில் நின்று ஏற்றக்கூடாது. முதலில் விளக்கை வைத்து விட்டு அதனை சுற்றி நறுமணம் தரும் மலர்களை வைக்கவும். பின் அதன் மீது கோதுமை தானியம் மேல் தூவி விடவும். அதன் பிறகு மஞ்சள் தூள் தூவி விடவும். பின்பு கடைசியில் விளக்கு பின் புறம் நின்று விளக்கை ஏற்றவேண்டும். இந்த தீபம் ஏற்று போது விளக்கு முன்பு யாரும் நிற்க கூடாது. முக்கியமாக குழந்தைகைளை முன்பு வர கூடாது.

பின்பும் திரியை எடுத்துவிடுவதாக இருந்தாலும் அதனையும் பின் புறத்தில் நின்று தான் செய்ய வேண்டும். எக்காரணத்தினாலும் விளக்கை கையாலோ அல்லது ஊதியோ அணைக்க கூடாது. அது தானாகவே அணைய வேண்டும்.

இந்த தீபாவளிக்கு முதல் நாள் மாலை 5.45 மணி முதல் 1 மணி நேரம் எரிந்தால் போதும். இரவு முழுவதும் எறியவேண்டும் என்றால் இரவு எண்ணெய் ஊற்றி விட்டு தூக்கலாம்.

எம தீபம் யார் ஏற்ற வேண்டும்? | யார் ஏற்றக்கூடாது?

♦ இந்த தீபத்தை பெண்கள் தான் ஏற்றவேண்டும் என்று ஒரு கட்டாயம் இல்லை ஆண்களும் ஏற்றலாம்.

♦ அதேபோல் கருவுற்ற காலமாக இருந்தால் அந்த பெண் 3 மாதம் இந்த தீபம் ஏற்றக்கூடாது.

♦ அதேபோல் 5 மாதத்திற்கு மேல் குழந்தை பெரும் வரை இந்த பெண்கள் ஏற்றக்கூடாது.

♦ கர்ப்பமாக இருப்பவர்கள் 4 மாதம் உள்ளவர்கள் மட்டுமே இந்த தீபத்தை ஏற்றலாம்.

♦ உடலில் வலி உள்ளவர்கள் இந்த தீபத்தை ஏற்றக்கூடாது. உடலில் ஏதேனும் காயம் அடைந்தவர்கள் இந்த தீபத்தை ஏற்றக்கூடாது. அதேபோல் நோய் உள்ளவர்கள் இந்த தீபத்தை கண்டிப்பாக ஏற்றக்கூடாது.

♦ திருமணம் ஆகிய 6 மாதம் காலம் தான் ஆகிறது என்றால் அவர்கள் இருவருமே இந்த தீபத்தை ஏற்றக்கூடாது.

♦ குழந்தை பிறந்து 30 நாட்களுக்கு பிறகு தான் இந்த தீபத்தை ஏற்றவேண்டும்.

♦ முக்கியமாக இந்த தீபத்தை ஏற்றுபவர்கள் தாய் தந்தையை அவமதித்து இருக்கிற பெண்களோ, ஆண்கள் இருவருமே இந்த தீபத்தை ஏற்றக்கூடாது.

♦ இந்த நியதிகளுக்கு ஏற்றவர்கள் மட்டுமே இந்த தீபத்தை ஏற்றலாம்.

4 Vedhas 18 Puranas

📖 4 வேதங்கள் + 18 புராணங்கள்

இப்போது எளிய தமிழில் (PDF)

சனாதன தர்மத்தின் ஆன்மீக பொக்கிஷத்தை
உங்கள் மொபைலில் பெறுங்கள் 🙏

🎁 வெறும் ₹199 மட்டும்!

🔗 மேலும் விவரங்கள் அறிய
💜

பக்தர்களின் மெய்சிலிர்க்கும் அனுபவங்கள்

இந்த தளத்தை வாசித்த பிறகு, என் மனம் சாந்தியையும் நம்பிக்கையையும் பெற்றது.

🌸 ரமேஷ், மதுரை

இங்கே உள்ள ஆன்மிக விளக்கங்கள் தெளிவாகவும் எளிமையாகவும் இருக்கின்றன.

🌼 சிந்து, தஞ்சாவூர்

இந்த தளம் என் வீட்டில் ஒரு புனித இடமாகவே மாறியுள்ளது.

🌺 கிருஷ்ணன், கோவை

என் ஆன்மிகப் பயணத்தில் வழிகாட்டியாக இந்த தளம் இருந்தது. நன்றி!

🌹 சுகந்தி, சென்னை

நான் தேடிய பல தகவல்களை இங்கு ஒரே இடத்தில் நேர்த்தியாகப் பெற்றேன்.

💠 லலிதா, ஈரோடு

இந்த தளம் தினசரி ஒரு நல்ல எண்ணத்தை என் உள்ளத்தில் விதைக்கிறது.

🌿 அருண், திருநெல்வேலி

இங்குள்ள விரத முறைகளும் வழிபாட்டுக் குறிப்புகளும் வாழ்க்கைக்கு மிக உதவியாக உள்ளன.

🌻 மீனாட்சி, திருச்சி

தினசரி ராசிபலன் மற்றும் ஆன்மிக செய்திகள் என் நாளை சுபிட்சமாக தொடங்க உதவுகிறது.

☸️ கார்த்திக், சேலம்

ஸ்லோகங்களின் அர்த்தங்களை இவ்வளவு எளிமையாக இதுவரை நான் படித்ததில்லை!

🪔 காயத்ரி, வேலூர்

மன அழுத்தத்தில் இருந்த எனக்கு இங்குள்ள கட்டுரைகள் பெரிய ஆறுதலை தந்தன.

🪷 சுந்தர், திருப்பூர்

கோயில்களின் தல புராணங்கள் பற்றிய தகவல்கள் மிக அருமை. குடும்பத்துடன் படிக்கிறோம்.

🔔 பத்மநாபன், திண்டுக்கல்

ஒவ்வொரு பண்டிகையின் பின்னணியிலும் உள்ள உண்மையான காரணங்களை இதிலிருந்து புரிந்துகொண்டேன்.

🌾 ரேவதி, நாகர்கோவில்
🙏 DONATE Support Bhakti Services
🛕
📜
🏠
🎧
📚