தீராத நோயையும் தீர்க்கும் தன்வந்திரி பகவான் பற்றிய அரிய தகவல்கள்
திருமால் மக்களுக்காக மருத்துவராக தோன்றிய நாளே தன்வந்திரி ஜெயந்தியாகும். நோய் வராமல் நல்ல உடல் ஆரோக்கியம், நீண்ட ஆயுள் கிடைக்க தன்வந்திரி வழிபாடு செய்யப்படுகிறது.

ஸ்ரீ தன்வந்திரி, விஷ்ணு அம்சமாக பின்னிரு கரங்களில் சங்கு, சக்கரத்துடனும் முன் வலக்கையில் அட்டைப்பூச்சியை ஏந்தியும், இடக்கையில் அமிர்த கலசத்துடனும் காட்சி அளிக்கிறார்.

அக்கால மருத்துவமுறையில் நோயாளியின் உடலிலிருந்து கெட்ட ரத்தத்தை உறிஞ்சி எடுத்து நோயை குணமாக்க அட்டைப்பூச்சிகள் பயன்படுத்தப்பட்டனவாம்.

திருமாலின் 24 அவதாரங்களில் 17ஆவது அவதாரம் தன்வந்திரி அவதாரமாகும். இந்து மதத்தில் தன்வந்திரி உடல் நலத்திற்காக வழிபடக்கூடிய கடவுள் ஆவார். தன்வந்திரியை தேவர்களின் மருத்துவர் என்றும் கூறலாம்.

தன்வந்திரி அவதாரம்

அசுரர்கள் எப்போதும் தேவர்களை துன்பப்படுத்தும் சுபாவம் கொண்டவர்கள். தேவர்களது சொகுசு வாழ்வு தங்களுக்கு கிடைக்க வேண்டும் என்று அசுரர்கள் தேவர்களுடன் சண்டை இடுவது உண்டு. தேவர்களைவிட அசுரர்கள் பலசாலிகள். அசுரர்களிடம் இருந்து தங்களைக் காக்குமாறு தேவர்கள் மூம்மூர்த்திகளிடம் சரணடைந்தனர். சாகாவரம் கொண்ட அமிர்தத்தை உண்டால் என்றென்றும் சாவு கிடையாது. அமிர்தத்தை பெற பாற்கடலை தேவர்கள் அசுரர்களின் உதவியுடன் கடைந்தனர்.

பாற்கடலை கடையும்போது ஆலகால விஷம் வந்தது.அதை சிவபெருமான் எடுத்து கொண்டதால் ,அதனை அடுத்து காமதேனு,கற்பக விருட்சம்,ஐராவதம்,மூதேவி,மகாலக்ஷ்மி தோன்றினர்.கடைசியாக அமிர்தத்துடன் விஷ்ணுவின் அவதாரமான தன்வந்திரி தோன்றினார். இவரின் திருக்கரத்தில் உள்ள கலசத்திலிருந்து வழங்கிய அமிர்தத்தை தேவர்கள் உண்டதால் சாவாவரம் பெற்றனர்.

"ஹிமா"என்ற அரசனுக்கு திருமணமான நான்காவது நாள் பாம்பு கடித்து இறக்க நேரிடும் என்ற சாபம் இருந்தது.இதை அறிந்த அவள் மனைவி அந்த நாள் (தன் திரேயாஸ்) இரவில் கணவனைச் சுற்றிலும் ஏராளமான விளக்கு ஏற்றி,நடுவே ஆபரணங்களையும் வைத்து கணவனுக்கு புராணக் கதை கூறி தூங்காது பார்த்து கொண்டாளாம். பாம்பு உருவத்தில் வந்த எமன் தீப எண்ணெயில் ஆபரணங்களின் பிரகாசத்தில் கூசவே,காலைவரை காத்திருந்துவிட்டு திரும்பி சென்றதாகவும்,மனைவி யமனிடம் இருந்து காப்பாற்றியதாகவும் கருக்கதை உள்ளது.

தன்வந்திரி நாளன்று தன்னை சுற்றிலும் தீபங்கள் ஏற்றி தன் மனைவி காப்பாற்றியது தன்வந்திரி கடவுளே காரணம் என்று மன்னன் நம்பினான். மக்கள் அனைவரையும் தன்திரேயாஸ் தினத்தன்று , இரவில் யமதீபம் ஏற்றி வழிபடவேண்டும் என்று உத்தரவிட்டார்.

ஐப்பசி மாத அமாவாசை 2 நாட்களுக்கு முன்பாக வரும் திரியோதசி நாளன்று தீபாவளி திருநாள் துவங்கி விடுகிறது. அன்று தன்வந்திரி ஜெயந்தி தன்திரேயாஸ் என்றும் சொல்வர்.

வைணவ ஆலயங்களில் தன்வந்திரிக்கென்று தனி சந்நிதி உள்ளது. திருவரங்கம் ஆலயத்தில் தன்வந்திரி சந்நிதி பிரசித்தமானது. தன்வந்திரி ஹோமம் செய்வதால் நோய் தீரும். கோவையிலும், கேரளாவிலும் தன்வந்திரி பகவானுக்கு ஆலயம் உள்ளன.

நோய்கள் எல்லாம் நீக்கும் தன்வந்திரி பகவானின் மூல மந்திரம்

ஓம் நமோ பகவதே வாஸுதேவாய!
தன்வந்தரயே! அம்ருத கலச ஹஸ்தாய!
ஸர்வ ஆமய விநாசநாய த்ரைலோக்ய நாதாய ஸ்ரீ மகாவிஷ்ணுவே நம!

மந்திரங்களுக்கு சக்தியும், பலமும் அளவிட முடியாது. தன்வந்திரி ஜெயந்தியன்று கோதுமை மாவும், வெல்லமும் சேர்த்து தயாரித்த பிரசாதத்தை நெய்வேத்தியம் படைக்கலாம். தன்வந்திரி போற்றி சொல்லி நோய்களிலிருந்து விடுபடலாம்.

தன்வந்திரி 108 போற்றி நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம். உடல்நலத்துடன் திகழ இந்த 108 தன்வந்தரி போற்றியை தினமும் விளக்கேற்றி பக்தியுடன் பாடுங்கள்.

1. ஓம் தன்வந்திரி பகவானே போற்றி
2. ஓம் திருப்பாற்கடலில் உதித்தவரே போற்றி
3. ஓம் தீர்க்காயுள் தருபவரே போற்றி
4. ஓம் துன்பத்தை துடைப்பவரே போற்றி
5. ஓம் அச்சம் போக்குபவரே போற்றி
6. ஓம் அஷ்டாங்க யோகியே போற்றி
7. ஓம் அபயம் அளிப்பவரே போற்றி
8. ஓம் அன்பு கொண்டவரே போற்றி
9. ஓம் அமரர் தெய்வமே போற்றி
10. ஓம் அகிலம் புகழ்வோனே போற்றி
11. ஓம் அட்சய பாத்திரமே போற்றி
12. ஓம் அருளை வழங்குபவரே போற்றி
13. ஓம் அடைக்கலம் தருபவரே போற்றி
14. ஓம் அழிவற்றவரே போற்றி
15. ஓம் அழகுடையோனே போற்றி

16. ஓம் அமிர்தகலசம் ஏந்தியவரே போற்றி
17. ஓம் அமைதியின் வடிவே போற்றி
18. ஓம் அல்லல் தீர்ப்பவரே போற்றி
19. ஓம் அனைத்தும் அறிந்தவரே போற்றி
20. ஓம் அண்டமெல்லாம் நிறைந்தாய் போற்றி
21. ஓம் ஆயுர்வேத தலைவரே போற்றி
22. ஓம் ஆரோக்கியம் தருபவரே போற்றி
23. ஓம் ஆயுள் பலம் நீட்டிப்பாய் போற்றி
24. ஓம் ஆயுதக்கலை நிபுணரே போற்றி
25. ஓம் ஆத்ம பலம் தருபவரே போற்றி
26. ஓம் ஆசாபாசம் அற்றவரே போற்றி
27. ஓம் ஆனந்த ரூபனே போற்றி
28. ஓம் ஆகாயத் தாமரையே போற்றி
29. ஓம் ஆற்றலின் வடிவே போற்றி
30. ஓம் உள்ளம் நிறைந்தவரே போற்றி

31. ஓம் உலக ரட்சகரே போற்றி
32. ஓம் உலக நாதனே போற்றி
33. ஓம் உலக சஞ்சாரியே போற்றி
34. ஓம் உலகாள்பவரே போற்றி
35. ஓம் உலகம் காப்பவரே போற்றி
36. ஓம் உயிர்களின் காவலரே போற்றி
37. ஓம் உயிர் தருபவரே போற்றி
38. ஓம் உயிர்களின் உறைவிடமே போற்றி
39. ஓம் உண்மை சாதுவே போற்றி
40. ஓம் எங்கும் நிறைந்தவரே போற்றி
41. ஓம் எமனுக்கு எமனானவரே போற்றி
42. ஓம் எழிலனே போற்றி
43. ஓம் எளியார்க்கும் எளியவரே போற்றி
44. ஓம் எல்லாம் தருபவரே போற்றி
45. ஓம் எல்லையில்லா தெய்வமே போற்றி

46. ஓம் எவர்க்கும் நோய் தீர்ப்பாய் போற்றி
47. ஓம் எல்லா பொருளின் இருப்பிடமே போற்றி
48. ஓம் எல்லையில்லா பேரின்பமே போற்றி
49. ஓம் எதற்கும் மருந்தளிப்பாய் போற்றி
50. ஓம் கண்ணுக்கு கண்ணானவரே போற்றி
51. ஓம் கருணைக் கடலே போற்றி
52. ஓம் கருணை அமுதமே போற்றி
53. ஓம் கருணா கரனே போற்றி
54. ஓம் காக்கும் தெய்வமே போற்றி
55. ஓம் காத்தருள் புரிபவரே போற்றி
56. ஓம் காருண்ய மூர்த்தியே போற்றி
57. ஓம் காவிரிக்கரை வாழ்பவரே போற்றி
58. ஓம் குருவே போற்றி
59. ஓம் கும்பிடும் தெய்வமே போற்றி
60. ஓம் ஸ்ரீதன்வந்திரி பகவானே போற்றி

61. ஓம் சகல நன்மை தருபவரே போற்றி
62. ஓம் சகல செல்வம் வழங்குபவரே போற்றி
63. ஓம் சகல நோய் தீர்ப்பவரே போற்றி
64. ஓம் சம தத்துவக் கடவுளே போற்றி
65. ஓம் சகிப்புத் தன்மை மிக்கவரே போற்றி
66. ஓம் சங்கு சக்கரம் ஏந்தியவரே போற்றி
67. ஓம் சமத்துவம் படைப்பவரே போற்றி
68. ஓம் சர்வ லோக சஞ்சாரியே போற்றி
69. ஓம் சர்வ லோகாதிபதியே போற்றி
70. ஓம் சர்வேஸ்வரனே போற்றி
71. ஓம் சர்வ மங்களம் அளிப்பவரே போற்றி
72. ஓம் சந்திரனின் சகோதரரே போற்றி
73. ஓம் சிறப்பாற்றல் கொண்டவரே போற்றி
74. ஓம் சித்தி அளிப்பவரே போற்றி
75. ஓம் சித்தமருந்தே போற்றி

76. ஓம் ஸ்ரீ ரங்கத்தில் வாழ்பவரே போற்றி
77. ஓம் சுகம் அளிப்பவரே போற்றி
78. ஓம் சுகபாக்யம் தருபவரே போற்றி
79. ஓம் சூரியனாய் ஒளிர்பவரே போற்றி
80. ஓம் சூலைநோய் தீர்ப்பாய் போற்றி
81. ஓம் தசாவதாரமே போற்றி
82. ஓம் தீரரே போற்றி
83. ஓம் தெய்வீக மருந்தே போற்றி
84. ஓம் தெய்வீக மருத்துவரே போற்றி
85. ஓம் தேகபலம் தருபவரே போற்றி
86. ஓம் தேவாதி தேவரே போற்றி
87. ஓம் தேஜஸ் நிறைந்தவரே போற்றி
88. ஓம் தேவாமிர்தமே போற்றி
89. ஓம் தேனாமிர்தமே போற்றி
90. ஓம் பகலவனே போற்றி

91. ஓம் பட்டதுயர் தீர்ப்பாய் போற்றி
92. ஓம் பக்திமயமானவரே போற்றி
93. ஓம் பண்டிதர் தலைவரே போற்றி
94. ஓம் பாற்கடலில் தோன்றியவரே போற்றி
95. ஓம் பாத பூஜைக்குரியவரே போற்றி
96. ஓம் பிராணிகளின் ஜீவாதாரமே போற்றி
97. ஓம் புருளஷாத்தமனே போற்றி
98. ஓம் புவனம் காப்பவரே போற்றி
99. ஓம் புண்ணிய புருஷரே போற்றி
100. ஓம் பூஜிக்கப்படுபவரே போற்றி
101. ஓம் பூர்ணாயுள் தருபவரே போற்றி
102. ஓம் மரணத்தை வெல்பவரே போற்றி
103. ஓம் மகா பண்டிதரே போற்றி
104. ஓம் மகாவிஷ்ணுவே போற்றி
105. ஓம் முக்தி தரும் குருவே போற்றி
106. ஓம் முழு முதல் மருத்துவரே போற்றி
107. ஓம் சக்தி தருபவரே போற்றி
108. ஓம் தன்வந்திரி பகவானே போற்றி போற்றி!

ஓம் நமோ பகவதே வாசுதேவாய
தன்வந்த்ரயே அமிர்த கலச ஹஸ்தாய
சர்வ ஆமய விநாசநாய த்ரைலோக்ய நாதாய
ஸ்ரீ மஹா விஷ்ணவே நமஹ.

அமுதத்தை ஏந்திநிற்கும் அருள்கரத்தோய் சரணம்
குமதச் செல்வி மணவாளன் மறுவடிவே சரணம்
சேய் எங்கள் நோய் நீக்கி காத்திடுவாய் சரணம்
தாய் போலே தரணிக்கும் தன்வந்த்திரியே சரணம்.