செல்வங்கள் அனைவருக்கும் தேவைப்படும் ஒரு பொருள். திருமணமான தம்பதியினர், பெரியவர்கள் காலில் விழுந்து ஆசீர்வாதம் செய்யும் போது 16ம் பெற்று பெருவாழ்வு வாழ்க என்று சொல்வார்கள். அந்த 16 எதை குறிக்கும் என்பதை பற்றி இங்கு பார்ப்போம்.
🌷 கல்வியை கற்று வாழ்தல் வேண்டும்.
🌷 தவறாத மக்கட்பேறு கிடைத்து வாழ வேண்டும்.
🌷 வெற்றி, வீரத்துடன் வாழ்தல் வேண்டும்.
🌷 நன்மைகளை பெற்று வாழ வேண்டும்.
🌷 பொன்னோடும், பொருளோடும் வாழ வேண்டும்.
🌷 வார்த்தை தவறாத நேர்மையுடன் வாழ வேண்டும்.
🌷 நல்ல ஊழ் நமக்கு துணை நிற்க வேண்டும்.
🌷 பாடுபட்டு தேடிய பலனை அனுபவிக்க பாக்கியம் வேண்டும்.
🌷 பிறர் துன்பம் போக்கிட பரந்த மனம் வேண்டும்.
🌷 பிறர் நம்மைக்கண்டு பழிக்காமல் வாழ்தல் வேண்டும்.
🌷 பிற உயிர்களிடம் அன்பு செலுத்தி வாழ வேண்டும்.
🌷 எதற்கும் கலங்காத மனவலிமை வேண்டும்.
🌷 அடுத்தவர்களுக்கு அஞ்சாமல் வாழ வேண்டும்.
🌷 நோயின்றி சுகமுடன் வாழ வேண்டும்.
🌷 நீண்ட நாட்கள் முதிர்ந்த வயதோடு வாழ வேண்டும்.
இந்த 16 செல்வங்களும் பெற்று வாழ வேண்டும் என்று புதுமண தம்பதியினரை பெரியோர்கள் வாழ்த்துவார்கள். வாழ்வில் இந்த 16 செல்வங்களையும் பெற சுத்தமான மனம் இருந்தால் போதும். எதுவும் நல்லதாகவே நடக்கும்.
அறிவு
ஆயுள்
ஆற்றல்
இளமை
துணிவு
பெருமை
பொன்
பொருள்
புகழ்
நிலம்
நன்மக்கள்
நல்லொழுக்கம்
நோயின்மை
முயற்சி
வெற்றி
---------------------------------------------
கலையாத கல்வி
கபடட்ற நட்பு
குறையாத வயது
குன்றாத வளமை
போகாத இளமை
பரவசமான பக்தி
பிணியற்ற உடல்
சலியாத மனம்
அன்பான துணை
தவறாத சந்தானம்
தாழாத கீர்த்தி
மாறாத வார்த்தை
தடையற்ற கொடை
தொலையாத நிதி
கோணாத கோல்
துன்பமில்லா வாழ்வு