திருமாலை விட்டு நீங்காத பேறு பெற்றவை சங்கும் சக்கரமும். இவற்றில் சங்கு, மங்கலப் பொருள்களில் ஒன்றாகப் போற்றப்படுகிறது. சங்கு வழிபாடு குறித்து பல அரிய தகவல் களைச் சொல்கின்றன ஞானநூல்கள்.
பூஜையறையில் சங்கு எப்படி வைக்கப்பட வேண்டும்?
வீட்டில் சங்கினை வைத்துப் பூஜிப்பது மகாலட்சுமியைப் பூஜிப்பதற்குச் சமம்.செவ்வாய், வெள்ளி போன்ற தினங்களில் சங்கினைப் பூஜிப்பது லட்சுமி வாசத்தினை நிலைத்திடச் செய்யும் எளிய வழி ஆகும்.
சங்குகளைத் தரையில் வைக்கக் கூடாது. சங்கில் எப்போதும் பிரணவ ஒலி எழுந்து கொண்டே இருக்கும். இதன் விசேஷ அதிர்வுகள் தரையில் பட்டால், நமக்குத் தோஷம் உண்டாகும்.
சங்கினை தீர்த்தப் பாத்திரம் போன்றவற்றின் மேல் நிமிர்ந்த நிலையில்தான் வைக்க வேண்டும். பூஜையறையில் வைக்கப்படும் சங்கு, எப்போதும் ஜல சம்பந்தத்துடன் இருக்கவேண்டும் என்பர்.
சங்கின் தலைப்பகுதி வடக்கு நோக்கியும்; நுனிப்பகுதி தெற்கு நோக்கியும் இருக்கும்படி வைக்கவேண்டும். எக்காரணம் கொண்டும் சங்கினைக் குப்புறக் கவிழ்த்து வைக்கக் கூடாது.
ஓர் இலை அல்லது தட்டில் நெல்லைப் பரப்பி அதன்மேல் சங்கை வைத்துப் பூஜிப்பது சிறப்பு. இதனால் அன்ன தரித்திரம் ஏற்படாது. நெல்லுக்குப் பதிலாக அரிசியும் வைக்கலாம்.
சங்கு வழிபாடு தரும் பலன்கள்
ஆலயங்களில் செய்யப்படும் சங்காபிஷேகம் மிகுந்த புண்ணிய பலன்களை தரக் கூடியது. அதேபோல், வீட்டிலுள்ள விக்கிரகங்களை சங்கில் இட்ட புனிதநீர் கொண்டு திருமஞ்சனம் செய்வதும் மிகவும் விசேஷம். இதனால் பன்மடங்கு பலன் கிடைக்கும்.
ஆயிரம் இடம்புரிச் சங்குகளுக்கு இணையானது ஒரு வலம்புரிச் சங்கு. ஆயிரம் வலம்புரி சங்குகளுக்குச் சமமானது ஒரு சலஞ்சலம். ஆயிரம் சலஞ்சல சங்குகளுக்குச் சமமானது ஒரு பாஞ்சசன்யம். எங்கு இவை முறையாக ஆராதிக்கப்படுகின்றனவோ, அங்கே செல்வ வளம் நிறைந்து இருக்கும்.
சங்குகளில் கோமடிச் சங்கு விசேஷமானது. ஒரு கோமடிச் சங்கினைப் பூஜிப்பது, கோடி வலம்புரி சங்குகளைப் பூஜித்த புண்ணியத்தைத் தரவல்லது.
துளசி மற்றும் தாமரை மலர்களால் சங்கைப் பூஜித்தால் திருமகள் கடாட்சம் பெருகும். வீட்டில் செல்வம் நிலைத்திருக்கும்.
சங்கில் இட்டு அபிஷேகம் செய்த பாலைப் பிரசாதமாக அருந்தி வந்தால், முகப்பொலிவு - தோற்றப்பொலிவு உண்டாகும்.
சாதாரண நீர், சங்கில் இடப்படும்போது புனித நீராக மாறிவிடும் என்கிறது சாஸ்திரம். அந்த நீரை நாள்தோறும் பிரசாதமாகப் பருகி வந்தால், நோய்களின் தாக்கம் கட்டுப்படும். உடல் ஆரோக்கியம் மேம்படும்.
சங்குகளை வாங்கி ஆலயங்களுக்கு அளிப்பதால், ஜன்மாந்திர பாவங்கள் தீரும். சங்கை தானமாக அளிப்பதால் திருமாலின் அருள் பரிபூரணமாகக் கிடைக்கும். வம்சவிருத்திக்குக் குறைவு ஏற்படாது.
சங்கினை முறையாக வழிபடுவோர் இல்லத்தில் எதிர்மறை வினைகள் அணுகாது. கண்ணேறு, திருஷ்டி பாதிப்புகள் ஏற்படாது. அந்த வீட்டில் எப்போதும் செல்வச் செழிப்பு நிறைந்திருக்கும்.
பிரம்ம முகூர்த்த காலத்தில் சங்கு தீபம் ஏற்றி வழிபட, குபேரன் அருள் எளிதில் கிடைத்திடும். சங்கின் ஸ்பரிசம் கிருமித்தொற்றினை அழிக்கவல்லது.
கோமாதாவாகப் போற்றப்படும் பசுக்களின் கழுத்தில் சங்கு அணிவிக்கும் வழக்கம் உண்டு. இப்படி பசுவுக்கு அணிவிக்கப்பட்ட சங்கினை, வீட்டு நிலைப் படி உயரத்தில், கருப்புக் கம்பளிக்கயிற்றில் கட்டி வைத்தால் கெட்ட சக்திகள் வீட்டிற்குள் நுழையாது என்பது நம்பிக்கை.
16 சங்கு வடிவங்களைக் கோலமாகப் போட்டு, பௌர்ணமி இரவில் குங்குமத்தால் அர்ச்சனை செய்து, குளிகை காலத்தில் கடன் கொடுத்தவரைச் சந்தித்து சிறிதளவு பணத்தைத் திரும்பக் கொடுத்தால், விரைவிலேயே முழுக்கடனும் அடைபடும்.
பிரம்ம முகூர்த்தக் காலத்தில் சங்கு தீபம் ஏற்றி வழிபட, வீட்டில் குபேர சம்பத்து உண்டாகும்!
சங்கு தோன்றிய வரலாறு என்ன
தேவர்களும் அசுரர்களும் அமிர்தம் வேண்டி திருப்பாற்கடலைக் கடைந்தனர். அப்போது, தோன்றிய அரிய பொக்கிஷங்களில் சங்கும் ஒன்று. பாற்கடலில் மகாலட்சுமியுடன் தோன்றிய திவ்ய பொருள்களில் சங்கும் ஒன்று என்கின்றன புராணங்கள்.
கிருஷ்ணாவதாரத்திலும் ஒரு திருக்கதை சொல்லப்படுவது உண்டு. குருகுல வாசம் முடிந்ததும் குருநாதர் சாந்தீபனி முனிவரிடம், ''குருதட்சணையாக என்ன வேண்டும்?'' எனக் கேட்டார் கிருஷ்ண பரமாத்மா. அவரும் அவர் மனைவியும், தங்கள் ஒரே மகனை பஞ்சஜனன் எனும் அசுரன் கடத்தி கடலுக்குள் வைத்திருப்பதாகவும், அவனை மீட்டுத் தரும்படியும் வேண்டினார்கள். கிருஷ்ணரும் அந்த அசுரனுடன் போரிட்டு குருவின் மகனை மீட்டு வந்தார். அந்த அசுரன் எரிந்து சாம்பலாகி ஒன்று திரண்டு சங்கு வடிவமானதால், அதற்கு 'பாஞ்ச ஜன்யம்’ எனப் பெயர் வந்தது என்பார்கள்.
கண்ணனைப் போன்று பாண்டவர்கள் ஐவருமே ஒவ்வொரு வகையான சங்கை கொண்டிருந்தனர்: தருமர்- அனந்த விஜயம்; அர்ஜுனன்- தேவதத்தம்; பீமன்- மகாசங்கம்; நகுலன்- சுகோஷம்; சகாதேவன்- மணிபுஷ்பகம்.
கடலில் உருவாகும் சங்குகளில் பல வகை உண்டு. மணி சங்கு, துவரி சங்கு, பாருத சங்கு, வைபவ சங்கு, பார் சங்கு, துயிலா சங்கு, வெண் சங்கு, பூமா சங்கு, திரிசங்கு ஆகியவற்றில் வலம்புரியாகக் கிடைக்கும் சங்குகளுக்கு சக்தி அதிகம் என்கின்றன ஆகமசாஸ்திரங்கள்
திருமால் தனது கரங்களில் ஏந்தியுள்ள சங்குக்குத் தலம்தோறும் பல பெயர்கள் உண்டு. என்பார்கள். திருப்பதி பெருமாள் மணிசங்கு கொண்டிருக்கிறார். இவரைப் போன்றே திருவனந்தபுரம் அனந்தபத்மநாப ஸ்வாமி பாருத சங்கும், திருவல்லிக்கேணி பார்த்தசாரதி பெருமாள் வைபவ சங்கும், திருக்கண்ணபுரம் சௌரிராஜ பெருமாள் துயிலா சங்கும் கொண்டு திகழ்கிறார்கள். பொய்கை ஆழ்வார் சங்கின் அம்சமாக அவதரித்தவர்.
1.ஒரு வீட்டில் இச்சங்கு அலங்காரமாக வைக்கப்பட்டிருந்தால் குபேரன் அருள், மகாலட்சுமியின் நித்திய வாசம் தொடர்ந்து இருக்கும்.
2. கடலில் உள்ள ஒரு வகை நத்தையின் கழிவு மூலம் ஓடு போன்று உருவாகி வருவதே சங்கு என்றாலும் குபேரன் அருளைப் பெற்றுத் தருவது.
3. வலம்புரிச் சங்கில் தீர்த்தம் துளசி இட்டு பூஜை செய்து மங்கள ஸ்நானம் செய்தால் நமக்கு பிரம்மகத்திதோஷம் இருப்பின் போய்விடும்.
சுவாமிக்கு அபிஷேகம் செய்தாலும் நமக்கு உள்ள தோஷம் நீங்கிவிடும்.
4. நாலாயிர திவ்ய பிரபந்தத்தில் சங்கு நாதத்தால் ஆழ்வார்கள் பக்திப் பரவசம் அடைவதை, பேதாண்டப் பெதுவி என்ற வார்த்தையால் குறிப்பிடுகின்றனர்.
5. வாஸ்து தோஷம் உள்ள வீட்டில் துளசி தீர்த்தத்தை சங்கில் இட்டு பிரதி வெள்ளி தெளித்து வர தோஷம் விலகி நலம் உண்டாகும்.
6. செவ்வாய் தோஷம் உள்ள பெண்கள் செவ்வாய் தோறும் வலம்புரிச்சங்கில் பால் வைத்து அங்காரக பூஜை செய்ய தோஷம் விலகி திருமணம் நடந்து விடும்.
7. அதிகக் கடன் வாங்கியவர்கள் பௌர்ணமி தோறும் சங்குக்கு குங்கும், அர்ச்சனை செய்து வர கண்ணுக்குத் தெரியாமல் கடன் தீரும். 16-வலம்புரிச் சங்கு கோலமிட்டு நடுவில் தீபம் ஏற்றிட கடன் தீரும்.
8.சுத்தமான உண்மையான வலம்புரிச்சங்கு பூஜிக்கப்படும் வீட்டில் பில்லி சூன்யங்கள், ஏவல்கள் நெருங்காது. ஓடிவிடும்.
9. ஒரு தெய்வத்துக்கு சங்கால் அபிஷேகம் செய்வதால் 10 பங்கு அபிஷேகம் செய்த பலனைப் பெறுகிறோம்.
10. பிறந்த குழந்தைக்கு ஜுரம் வந்தால் சங்கில் நீர்விட்டு உத்ராட்சம் இட்டு அது ஊறிய நீரை மட்டும் ஊட்டி விட ஜுரம், தோஷங்கள் அனைத்தும் விலகும்.
11. பூஜை அறையில் ஒரு சிறு தட்டில் அரிசி போட்டு அதில் சங்கை வைத்து பூ, பொட்டிட்டு வணங்கி வருவதால் உணவுக்குப்பஞ்சமே வராது சங்கை பூஜை அறையில் வைத்திருப்பது மிகவும் நன்மை பயக்கும், ஏனேன்றால் பல அரிய புண்ணிய சக்திகளும், தர்ம சக்திகளும் சங்குகளில் குடிகொண்டிருக்கின்றன புனித தீர்த்தங்கள், கடல்களில் சங்குகளில் நீரை ஏந்தி தர்ப்பணம் செய்வது பித்ருக்களின் ஆசியை நமக்கு பெற்றுத் தருகிறது. நல்ல ஒழுக்கத்திற்கும் நலவழி காட்டுகிறது.