Sri Mahavishnu Info: பூசணிக்காயை வைத்து திருஷ்டி செய்வது எப்படி? பூசணிக்காயை வைத்து திருஷ்டி செய்வது எப்படி?

பூசணிக்காயை வைத்து திருஷ்டி செய்வது எப்படி?

Sri Mahavishnu Info
How to do dhrushti with pumpkin?
மற்றவர்களின் தீய பார்வைகளை கண் திருஷ்டி என்கிறோம். இந்த கண் திருஷ்டி நமக்கு பலவிதமான துன்பங்கள், தடைகள், உடல்நல பாதிப்புகளை ஏற்படுத்தும். இவற்றில் இருந்து தப்பிப்பதற்காக, தீய பார்வைகளால் நமக்கு பாதிப்பு ஏதும் ஏற்படாமல் இருக்க திருஷ்டி கழிக்கும் முறை தமிழ் பாரம்பரிய முறையில் வழக்கத்தில் உள்ளது. இவ்வாறு திருஷ்டி கழிப்பதற்காக கற்பூரம், உப்பு, மிளகாய், தேங்காய்ல பூசணிக்காய், எலுமிச்சம் பழம் உள்ளிட்ட பல பொருட்களை நாம் பயன்படுத்துகிறோம். இவற்றில் அதிகம் பயன்படுத்தப்படுவது பூசணிக்காய் தான். இதனால் வெள்ளை நிற பூசணிக்காய்க்கு திருஷ்டி பூசணிக்காய் என்று ஒரு பெயரும் உண்டு.

பூசணிக்காயை இப்படி சுற்றி உடைத்தால் கண் திருஷ்டி அனைத்தும் நீங்கும். உங்களைப் பிடித்த துஷ்ட சக்திகள் அனைத்தும் ஓடோடி விடும்.

பொதுவாகவே திருஷ்டி கழிப்பதில் இந்த பூசணிக்காய்க்கு முன்னுரிமை உண்டு. இதை சைவ பலி என்று சொல்லுவார்கள். இந்த பூசணிக்காயை திருஷ்டி கழித்தால், கெட்ட நேரம் நம்மை விட்டு ஓடோடி போகும். பூசணிக்காயில் திருஷ்டி கழிக்க கூடிய ஒரு புது முறையை பற்றி தான் இன்று நாம் தெரிந்து கொள்ள போகின்றோம். ஆன்மீகம் சார்ந்த இந்த தாந்திரீக பரிகாரத்தை பின்பற்றி ஒருமுறை திருஷ்டி கழித்து பாருங்கள். உங்களைப் பிடித்த துரதிஷ்டம் விட்டு விலகும். வெற்றிகள் வந்து குவியம் கண் திருஷ்டி நீங்கும்.

பூசணிக்காயில் திருஷ்டி சுற்றும் முறை

கூடுமானவரை பூசணிக்காயை வாங்கி முழுசாக சுற்றுவது தான் நல்லது. சில பேர் அதை கத்தியால் வெட்டி எடுத்து அதன் உள்ளே சிவப்பு நிற குங்குமத்தை போட்டு, சில நாணயங்களை போட்டு அதற்குப் பிறகு திருஷ்டி சுற்றி உடைப்பார்கள். ஆனால் அது தவறு. பூசணிக்காயை அறுத்துவிட்டால் அதனுடைய உயிர் முன்னாடியே போய்விட்டது என்று அர்த்தம்.

பிறகு அந்த பூசணிக்காயை சுற்றி உடைப்பதில் எந்த ஒரு பலனும் நமக்கு முழுசாக கிடைக்காது என்று சொல்லப்பட்டுள்ளது. ஆகவே வாங்கிய பூசணிக்காயை கழுவி விட்டு தரையில் வைத்து விடுங்கள். பிறகு அந்த பூசணிக்காயை நான்கு முறை தாண்ட வேண்டும். நான்கு திசைகளில் இருந்தும் தாண்ட வேண்டும்.

முன்பக்கமாகத்தான் காலை வைத்து தாண்ட வேண்டும். எக்காரணத்தைக் கொண்டும் காலை முன்னாடி வைத்து தாண்டி விட்டு, இன்னொரு காலை பூசணிக்காய்க்கு பின்பக்கமாக வைத்து தாண்டாதீங்க. அது தவறு. வலது கால் முன்னிருந்துதான் எடுத்து வைத்து தாண்ட வேண்டும்.

4 திசைகளிலும் நான்கு முறை பூசணிக்காயை தாண்டி விட்டு அதன் பிறகு முழு பூசணிக்காயை சுற்றி வீட்டிற்கோ அல்லது கடைக்கு திருஷ்டி கழித்தால் முழு பலனும் கிடைக்கும். கண் திருஷ்டி கெட்ட சக்தி எல்லாம் உங்களை விட்டு ஓடோடி விடும். இதே போல அமாவாசை தினங்களில் திருஷ்டி கழித்துக் கொள்ளலாம்.

பூசணிக்காயை போன்று எலுமிச்சை, தேங்காய், ஸ்படிகம், படிகாரம் போன்றவற்றிற்கும் இது போல் கண் திருஷ்டிகளை ஈர்த்து தனக்குள் வைத்துக் கொண்டு, அந்த இடத்தை தூய்மையாக்கும் ஆற்றல் உண்டு என்பதால் தான் அவற்றை திருஷ்டி கழிப்பதற்கும், வீட்டின் வாசலில் பதிப்பதற்கும் பயன்படுத்துகிறார்கள்.
Sri Andal Book

📘 தவப்புதல்வி ஸ்ரீ ஆண்டாள் பற்றிய
அறிய தகவல்கள்

🖋️ வெளியீட்டாளர்: Vanathi Pathippagam

📅 வெளியீட்டு தேதி: 1 ஜனவரி 2022

📚 பக்கங்கள்: 584

📖 மொழி: தமிழ்

🛍️ அமேசானில் வாங்குங்கள்
💜

பக்தர்கள் சொல்கிறார்கள்

இந்த தளத்தை வாசித்த பிறகு, என் மனம் சாந்தியையும் நம்பிக்கையையும் பெற்றது.
🌸 ரமேஷ், மதுரை

இங்கே உள்ள ஆன்மிக விளக்கங்கள் தெளிவாகவும் எளிமையாகவும் இருக்கின்றன.
🌼 சிந்து, தஞ்சாவூர்

இந்த தளம் என் வீட்டில் ஒரு புனித இடமாகவே மாறியுள்ளது.
🌺 கிருஷ்ணன், கோவை

என் ஆன்மிகப் பயணத்தில் வழிகாட்டியாக இந்த தளம் இருந்தது. நன்றி!
🌹 சுகந்தி, சென்னை

நான் தேடிய பல தகவல்களை இங்கு ஒரே இடத்தில் நேர்த்தியாகப் பெற்றேன்.
💠 லலிதா, ஈரோடு

இந்த தளம் தினசரி ஒரு நல்ல எண்ணத்தை என் உள்ளத்தில் விதைக்கிறது.
🌿 அருண், திருநெல்வேலி

🛕
108 ஆலயம்
📜
பிரபந்தம்
🎧
ஸ்லோகம்
📚
குறிப்புகள்