Sri Mahavishnu Info: பசுவும் புண்ணியங்களும் பசுவும் புண்ணியங்களும்
📿 வைணவ அடிப்படைகள் | 🛕 திவ்யதேச வரலாறுகள் | 📘 நாலாயிர திவ்யபிரபந்தம் | 🎧 ஸ்லோகங்கள் | 📅 தினசரி பக்தி வழிகாட்டி | ❓ பக்தி கேள்விகள் | 📖 ஆன்மீக நூல்கள் | 🧒 குழந்தைகள் பக்தி பகுதி | 🛕 தரிசன நேரங்கள் | 📜 பக்தர் அனுபவம் | 🛐 ஸ்ரீவைணவ பாடசாலை | 🗓️ ஸ்ரீவைணவ நாட்காட்டி | 🔱 விஷ்ணு சஹஸ்ரநாமம் | 🌄 ஸ்ரீ வெங்கடேச மஹாத்மியம் | 🌺 திருப்பாவை | 🛕 திருத்தல தரிசனம் | ✨ அற்புத நிகழ்வுகள் | 👣 வைஷ்ணவ ஆச்சாரியர்கள் | 🕉️ நாமஸ்மரணையின் மகிமை | 🎙️ பக்தி ஸ்லோகங்கள் | 🔔 கோவில் விழாக்கள்

பசுவும் புண்ணியங்களும்

Sri Mahavishnu Info
பசுவும் புண்ணியங்களும்
இந்து சமயத்தில் பசுவை வணங்குவதைப் பெரும் புண்ணியமாகக் கருதுகின்றனர். இந்தப் பசுவை கோமாதா என்றும் பெருமையுடன் அழைக்கின்றனர் பசுவின் உடலில் ஒவ்வொரு பகுதியிலும் தெய்வங்களும், புனிதத்திற்குரியவர்களும் இருப்பதாகக் கருதுகின்றனர்.

பசுவுக்கு நாம் அகத்திக் கீரை தருவதால் , முதலில் அறியாமல் செய்த பாவங்கள் அனைத்தும் நீங்கிவிடும். பிரம்ம ஹத்தி தோஷங்கள் விலகிவிடும். நீண்ட நாட்களாக திதி, கர்மா செய்யாமல் இருந்தால் அந்த பாவம் பதினாறு அகத்தி கீரை கட்டை பசுவுக்கு தருவதால் நீங்கும். பித்ரு தோஷங்கள் இருந்தால் நீங்கும்.

பசுவை ஒரு முறை பிரதட்சணம் செய்வதால் பூலோகம் முழுவதும் பிரதட்சணம் செய்த புண்ணியம் கிடைக்கும்.

பசுவை பூஜித்தால் அனைத்து தெய்வங்களையும் பூஜித்த புண்ணியம் உண்டாகும்.

பசு உண்பதற்கு புல் கொடுத்தாலும் ( கோக்ராஸம் ), பசுவின் கழுத்து பகுதியில் சொரிந்து கொடுத்தாலும் ( கோகண்டுயனம் ) கொடிய பாவங்கள் விலகும்.

பசுக்கள் மேய்ந்து விட்டு வீடு திரும்பும் சந்தியா காலம் கோதூளி காலம் ( லக்னம் ) என்று அழைக்கப்படுகிறது. இது மிக புண்ணியமான காலமாகும்.

பசு நடக்கும் போது எழும் புழுதியானது நம் உடலில் படுவது 8 வகை புண்ணிய ஸ்நானங்களில் ஒன்றாகும். பசுவின் கால் பட்ட தூசியைதான் மாமன்னர்கள் பூசிக்கொண்டார்கள்.

" மா " என்று பசு கத்தும் ஓசை அப்பகுதிக்கு மங்கலத்தை தருகிறது.

பசு வசிக்கும் இடத்தில் , அதன் அருகில் அமர்ந்து சொல்லும் மந்திர ஜபமோ , தர்ம காரியங்களோ 100 மடங்கு பலனைத் தரும்.

மனிதன் கண்களுக்கு புலப்படாத ம்ரத்யு , எமன் , எமதூதர்கள் பசுவின் கண்களுக்கு மட்டுமே புலப்படுவார்கள்.

ஒருவர் இறந்த பின் பூலோகத்திற்கு அழைத்து செல்லப்படும் ஜீவன் அஸிபத்ர வனத்தில் வைதரணிய நதியை ( மலம் , சலம் , சளி , சுடு நீர் ஓடும் நதி ) கடக்க இயலாமல் தவிக்கிறது. பசு தானம் செய்பவர்களுக்கு இத்துன்பம் இல்லை. அவர் தானம் செய்த பசுமாடு அங்கு தோன்றி அதன் வாலைப் பிடித்துக்கொண்டு வைதரணிய நதியை கடந்து விடலாம் என்று கருட புராணம் கூறுகிறது.

உலகத்தில் விஞ்ஞானத்தால் எத்தனை பாதிப்பு நிகழ்ந்தாலும் , பசுக்கள் வசிக்கும் இடத்தி்ல் மட்டும் எவ்வித பாதிப்பும் இருக்காது.

கோமாதா என் குல மாதா கோமாதாவை காப்போம் , நேசிப்போம் , பூஜிப்போம்.

ஓம் நமோ நாராயணாய | I ஜெய் ஸ்ரீமன் நாராயணா ||
தேங்காய் துடைப்பம்

🧹 இயற்கை தேங்காய் துடைப்பம்

🌿 100% இயற்கை தேங்காய் குச்சியால் தயாரிப்பு
💪 மிகவும் பலம் – உடையாது, நீண்ட நாட்கள் பயன்படும்
🏡 வீடு, மாடி, தோட்டம் சுத்தம் செய்ய சிறந்தது
✨ தூசி, குப்பை எளிதில் அகற்றும் திறன்
📦 3 துடைப்பம் கொண்ட value pack
🔥 தினசரி பயன்பாட்டுக்கு super choice!

⚡ இன்று order பண்ணுங்க !

🔗 இப்போது வாங்க
💜

பக்தர்கள் சொல்கிறார்கள்

இந்த தளத்தை வாசித்த பிறகு, என் மனம் சாந்தியையும் நம்பிக்கையையும் பெற்றது.
🌸 ரமேஷ், மதுரை

இங்கே உள்ள ஆன்மிக விளக்கங்கள் தெளிவாகவும் எளிமையாகவும் இருக்கின்றன.
🌼 சிந்து, தஞ்சாவூர்

இந்த தளம் என் வீட்டில் ஒரு புனித இடமாகவே மாறியுள்ளது.
🌺 கிருஷ்ணன், கோவை

என் ஆன்மிகப் பயணத்தில் வழிகாட்டியாக இந்த தளம் இருந்தது. நன்றி!
🌹 சுகந்தி, சென்னை

நான் தேடிய பல தகவல்களை இங்கு ஒரே இடத்தில் நேர்த்தியாகப் பெற்றேன்.
💠 லலிதா, ஈரோடு

இந்த தளம் தினசரி ஒரு நல்ல எண்ணத்தை என் உள்ளத்தில் விதைக்கிறது.
🌿 அருண், திருநெல்வேலி

WhatsApp
CHANNEL
🛕
📜
🏠
🎧
📚