Sri Mahavishnu Info: ராமாயணம் | 1 பால காண்டம் | பகுதி - 22 ராமாயணம் | 1 பால காண்டம் | பகுதி - 22
📿 வைணவ அடிப்படைகள் | 🛕 திவ்யதேச வரலாறுகள் | 📘 நாலாயிர திவ்யபிரபந்தம் | 🎧 ஸ்லோகங்கள் | 📅 தினசரி பக்தி வழிகாட்டி | ❓ பக்தி கேள்விகள் | 📖 ஆன்மீக நூல்கள் | 🧒 குழந்தைகள் பக்தி பகுதி | 🛕 தரிசன நேரங்கள் | 📜 பக்தர் அனுபவம் | 🛐 ஸ்ரீவைணவ பாடசாலை | 🗓️ ஸ்ரீவைணவ நாட்காட்டி | 🔱 விஷ்ணு சஹஸ்ரநாமம் | 🌄 ஸ்ரீ வெங்கடேச மஹாத்மியம் | 🌺 திருப்பாவை | 🛕 திருத்தல தரிசனம் | ✨ அற்புத நிகழ்வுகள் | 👣 வைஷ்ணவ ஆச்சாரியர்கள் | 🕉️ நாமஸ்மரணையின் மகிமை | 🎙️ பக்தி ஸ்லோகங்கள் | 🔔 கோவில் விழாக்கள்

ராமாயணம் | 1 பால காண்டம் | பகுதி - 22

Sri Mahavishnu Info
ராமாயணம் | 1 பால காண்டம் | பகுதி - 22
சாதானந்தர் ராமரிடம் கூறிய விஸ்வாமித்ரரின் வரலாற்றுக்கு சாட்சியாக விஸ்வாமித்ரரே அமர்ந்திருந்தார். மேனகையினால் தன் தவ பலன் போனது. அகங்காரத்தினால் திரிசங்கு சொர்க்கத்தை உருவாக்கியது. வசிஷ்டரை கொல்ல முயற்சித்தது என தன்னுடைய குறைகளை அனைவரும் தெரிந்து கொண்டார்களே என்ற எண்ணம் சிறிதும் இல்லாமல் வேறு யாருடைய வரலாற்றை கேட்பது போல் அனைத்தும் கடந்த பிரம்மரிஷி நிலையில் எதனாலும் பாதிக்கப்படாமல் அமைதியாக அமர்ந்திருந்தார் விஸ்வாமித்ரர். அவரின் வரலாற்றை கேட்ட ராமரும் லட்சுமனனும் விஸ்வாமித்ரரை வணங்கி தங்கள் மரியாதையை செலுத்தினார்கள். பின் அனைவரும் ஓய்வெடுக்க சென்றனர்.

காலையில் இடி இடிப்பது போல் முரசொலிக்க இந்திரலோகம் போலிருந்த மணி மண்டபத்தில் யாகசாலையில் அனைவரும் சந்தித்தனர். ராம லட்சுமனனின் தந்தையை பற்றி சொல்லுங்கள் என்று விஸ்வாமித்ரரிடம் ஜனகர் கேட்டார். சூரிய குலத்தின் முதல் மன்னனான மனுவின் வழி வந்தவர்கள் இவர்கள். பூமியில் வாழும் அனைத்து உயிர்களும் பசி என்னும் துயரம் நீங்கி வாழ்வதற்கும் பூமியில் எல்லா வளமும் பெருகும்படி ஆட்சி செய்த புருது மன்னனும் இவர்கள் குலத்தவரே ஆவார். பாம்பினை படுக்கையாக கொண்ட திருமாலின் திருவரங்கத்தை நமக்கு தோற்றுவித்து தந்த இஷ்வாகு மன்னனும் இவர்கள் குலத்தவரே ஆவார். இந்திரனையே வாகனமாகக்கொண்ட காகுத்தன் இவர்கள் குலத்தவரே ஆவார். புலியும் பசுவும் ஒரே நீர் நிலையில் நீர் அருந்துமாறு அறத்தோடு ஆட்சி செய்த மந்தாதா என்னும் அரசனும் இவர்கள் குலத்தவரே ஆவார். இந்திரனுக்குரிய நகரமான அமராவதியை அசுரர்களிடம் இருந்து மீட்டு கொடுத்த திலீபன் அரசனும் இவர்கள் குலத்தவரே ஆவார். இவர்கள் குலத்தவர்களின் பெருமையை பல தலைகளுடைய ஆதிஷேசனாலும் சொல்லமுடியாத பெருமை வாய்ந்த குலம் இவர்களுடையது. அரசர்களில் பெருமை வாய்ந்த தசரத சக்ரவர்த்திக்கும் கௌசலைக்கும் மகனாக பிறந்தவன் ராமன். தசரத சக்ரவர்த்திக்கும் சுமித்ரைக்கும் மகனாக லட்சுமனனும் சத்துருக்கனன் பிறந்தார்கள். தசரத சக்ரவர்த்திக்கும் கைகேயிக்கும் பிறந்தவன் பரதன். இங்கு ராமனும் லட்சுமனனும் இருக்கின்றார்கள் என்று ராமரின் குலத்தை பற்றி யாகத்திற்கு வந்த அனைவரும் அறியும்படி ஜனகரிடம் விஸ்வாமித்ரர் கூறினார்.

யாகம் சிறப்பாக நிறைவடைந்தது. யாகம் நிறைவடைந்ததும் சீதாவிற்கு பொருத்தமான வாழ்க்கை துணைவனை தேடி திருமணம் செய்யவேண்டும் என்று ஜனகர் ஏற்கனவே தீர்மானம் செய்திருந்தார். அதன்படி யாகசாலையில் இருந்த மன்னர்கள் அனைவரும் அரண்மனை மண்டபத்திற்கு அழைத்து வரப்பட்டனர். அரண்மனை மண்டபத்தில் அனைத்து அரசர்களும் அமர இடம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. சுயவரப்போட்டி நடத்தி சீதையின் திருமணம் செய்யப்போவதாக ஜனகர் அறிவித்தார்.

🧹 தேங்காய் குச்சி தூய்மை துடைப்பம் (4 Pack)

உங்கள் வீட்டை சுத்தமாக வைத்திருக்க உதவும் தரமான தேங்காய் குச்சி துடைப்பம். வீட்டில், தோட்டத்தில், வெளிப்புறம் எல்லாமே எளிதாக சுத்தம் செய்யலாம்.

  • 🌿 இயற்கை தேங்காய் குச்சி
  • 💪 பலமாகவும் நீண்ட நாட்கள் பயன்படுத்தலாம்
  • 🧹 தூசி, குப்பை எளிதாக அகற்றும்
  • 🏡 வீடு & வெளிப்புறம் பயன்படுத்தலாம்
  • 📦 4 துடைப்பம் ஒரு செட்
🛒 இப்போது வாங்க

🙏 நம் ஸ்ரீ மஹாவிஷ்ணு இன்ஃபோ மூலம் பக்தர்களுக்காக அன்புடன் வழங்கப்படும் ஒரு சிறந்த தயாரிப்பு இது. நீங்கள் செய்யும் ஒவ்வொரு ஆர்டரும், நம் சேவைக்கு ஒரு பெரிய ஆதரவாகும் 🙌

🌾 கிராமங்களில் உள்ளவர்களுக்கு வேலை வாய்ப்பு உருவாக வேண்டும் என்ற நல்ல நோக்கத்தில் இந்த முயற்சி செய்யப்படுகிறது. உங்கள் ஒரு சிறிய ஆதரவு, அவர்களின் வாழ்க்கையில் பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும் ✨

📦 தற்போது இந்த தயாரிப்பு தமிழ்நாடு முழுவதும் Meesho மூலம் மட்டுமே அனுப்பப்படுகிறது.

📲 தயாரிப்பு குறித்து ஏதேனும் சந்தேகம் இருந்தால், எங்கள் WhatsApp எண்ணிற்கு message அனுப்பலாம்.

💬 WhatsAppல் தொடர்பு கொள்ள
💜

பக்தர்கள் சொல்கிறார்கள்

இந்த தளத்தை வாசித்த பிறகு, என் மனம் சாந்தியையும் நம்பிக்கையையும் பெற்றது.
🌸 ரமேஷ், மதுரை

இங்கே உள்ள ஆன்மிக விளக்கங்கள் தெளிவாகவும் எளிமையாகவும் இருக்கின்றன.
🌼 சிந்து, தஞ்சாவூர்

இந்த தளம் என் வீட்டில் ஒரு புனித இடமாகவே மாறியுள்ளது.
🌺 கிருஷ்ணன், கோவை

என் ஆன்மிகப் பயணத்தில் வழிகாட்டியாக இந்த தளம் இருந்தது. நன்றி!
🌹 சுகந்தி, சென்னை

நான் தேடிய பல தகவல்களை இங்கு ஒரே இடத்தில் நேர்த்தியாகப் பெற்றேன்.
💠 லலிதா, ஈரோடு

இந்த தளம் தினசரி ஒரு நல்ல எண்ணத்தை என் உள்ளத்தில் விதைக்கிறது.
🌿 அருண், திருநெல்வேலி

WhatsApp
CHANNEL
🛕
📜
🏠
🎧
📚