Sri Mahavishnu Info: விஷ்ணு புராணம் – பகுதி 99 | Vishnu Purana Ep 99 விஷ்ணு புராணம் – பகுதி 99 | Vishnu Purana Ep 99
```
📿 வைணவ அடிப்படைகள் • 🛕 108 திவ்யதேசங்கள் • 📜 நாலாயிர திவ்யபிரபந்தம் • 🎧 தினசரி ஸ்லோகங்கள் • 📅 இன்றைய வைபவம் • 🙏 தினசரி பக்தி வழிகாட்டி • ❓ பக்தி கேள்வி & பதில்கள் • 📖 ஆன்மீக நூல்கள் • 🧒 குழந்தைகள் பக்தி பகுதி • 🎓 ஸ்ரீவைஷ்ணவ பாடசாலை • 🔱 விஷ்ணு சஹஸ்ரநாமம் • 🌄 ஸ்ரீ வெங்கடேச மஹாத்மியம் • 🌺 திருப்பாவை • 👣 வைஷ்ணவ ஆச்சார்யர்கள் • 🛕 திருத்தல தரிசனம் • 🔔 கோவில் விழாக்கள் • 📜 பக்தர் அனுபவங்கள் • ✨ அற்புத நிகழ்வுகள் • 🕉️ நாமஸ்மரணையின் மகிமை • 📚 பக்தி குறிப்புகள் • 🌸 ஆழ்வார்கள் வரலாறு • 🙏 ஸ்ரீவைஷ்ணவ சம்பிரதாயம் • 🎙️ பக்தி உரைகள் & ஆடியோ • 📆 ஸ்ரீவைஷ்ணவ நாட்காட்டி • 🌟 புதிய பக்தி பதிவுகள்

விஷ்ணு புராணம் – பகுதி 99 | Vishnu Purana Ep 99

Sri Mahavishnu Info
விஷ்ணு புராணம் – பகுதி 99 | Vishnu Purana Ep 99

05_19. யமுனையில் மூழ்கியிருந்தவாறே க்ருஷ்ணனைத் துதித்தார் அக்ரூரர். மானஸீகமாக புஷ்பங்களால் அர்ச்சித்து, தூப உபசாரங்களைச் செய்தார். மற்றதையெல்லாம் மறந்து வெகுநேரம் அவர் மனம் அந்த பரப்ரஹ்மத்தினிடமே நிலைத்திருந்தது. இப்படி த்யானத்தில் இருந்து விட்டுப் பின் ஆத்ம லாபம் பெற்றதை நினைத்துக் கொண்டே நீரிலிருந்து வெளியேறி தேரிருக்கும் இடத்தை அடைந்தார். ஒன்றுமறியாத குழந்தைகளாக அங்கே தேரில் பலராமனும், க்ருஷ்ணனும் இருக்கக் கண்டார். அவரது ஆச்சர்யமான பார்வையைப் பார்த்த கண்ணன் "அக்ரூரரே, உமது கண்கள் மலர்ந்திருக்கின்றனவே. ஏதோ அற்புதமான ஒன்றைப் பார்த்தால் தான் கண்கள் இப்படியாகும். யமுனை நீரில் என்ன அற்புதத்தைக் கண்டீர்" என்றான்.


அக்ரூரர் "கண்ணா! நீரினுள் நான் எந்த அற்புதத்தைக் கண்டேனோ அதுவேதான் இதோ என்னெதிரில் உருக்கொண்டிருக்கிறது. உலகையே உடலாகக் கொண்ட பரமாத்மாவாகவேதான் நீ காட்சி தருகிறாய். அங்கும் இங்கும் ஒரே பரம்பொருளுடன் தான் நான களித்திருக்கிறேன். ஆனாலும் இப்போது என்னை கம்ஸ பயம் வாட்டுகிறது. உன் விளையாட்டால் நேரமும் ஆகிவிட்டது. இனிமேல் கம்ஸன் நேரமாகிவிட்டதே என்று கோபிப்பான். அடுத்தவரிடம் வேலை செய்து அவர்கள் தருவதைக் கொண்டு ஜீவனம் செய்யும் எவர்க்கும் இதுதான் கதி. எனவே நாம் விரைந்து மதுரையை அடைவோம்" என்று கூறிக் கொண்டு, தேரிலேறி குதிரைகளை விரட்டினார்.


மாலைப் பொழுதில் மதுரை நகர எல்லையை வந்தடைந்ததும், அக்ரூரர் ராம, க்ருஷ்ணர்களிடம் "நீங்களிருவரும் நடந்தே கம்ஸன் மாளிகைக்கு வாருங்கள். நான் தேரில் செல்கிறேன். வாஸுதேவர் க்ருஹத்திற்குச் செல்லாதீர்கள். ஏற்கனவே அவர் உங்களால் பல துன்பங்களை கம்ஸனிடம் அனுபவித்து வருகிறார். எனவே நேராக கம்ஸன் மாளிகைக்கே வந்து விடுங்கள்" என்று கூறிவிட்டுத் தான் மட்டும் தேரில் கம்ஸனிடம் சென்றார். ராம, க்ருஷ்ணர்கள் ராஜ வீதியில் நடந்து செல்லலானார்கள். வழியெங்கிலும் ஆண்களும், பெண்களுமாக பலர் நின்று இவர்களைத் தர்ஸித்து ஆனந்திக்க, இரு இளம் யானைகள் போல இவர்கள் விளையாடிக் கொண்டே சென்று கொண்டிருந்தனர்.


வழியில் கம்ஸனுக்குத் துணிகளை எடுத்துச் செல்லும் வண்ணான் சென்று கொண்டிருந்தான். அவன் வைத்திருக்கும் உயர்ந்த வஸ்த்ரங்களைப் பார்த்ததும், தங்களுக்கு உடுத்திக் கொள்ள அவற்றில் இரண்டைத் தருமாறு அவனிடம் புன்சிரிப்புடன் கேட்டனர். கம்ஸனின் ஆதரவில் இருக்கும் அவன் இவர்கள் இருவரையும் வாயில் வந்தபடி தீய சொற்களால் அர்ச்சித்தான். இதனால் கோபம் கொண்ட கண்ணன் அவனை அங்கேயே அடித்துக் கொன்று போட்டான். பொன்னிறப் பட்டாடை ஒன்றை எடுத்து க்ருஷ்ணனும், நீல நிறத்தில் ஒன்றை பலராமனும் உடுத்திக் கொண்டு, ஒரு பூக்கடைக்காரனிடம் சென்றனர் இருவரும். அவன் அவர்களை ஆச்சர்யத்தோடு பார்த்தான்.


இவர்கள் யாராக இருக்கக் கூடும், எங்கிருந்து வந்திருப்பார்கள் என்று திகைப்போடு யோசித்தான். இவ்வளவு அழகாக பொன்னிறத்திலும், நீல நிறத்திலும் பட்டாடைகள் அணிந்து வந்திருக்கும் இவர்கள் பூலோகத்திற்கும் வந்திருக்கும் தேவர்களோ என்று நினைத்தான். குழந்தைகள் அவனிடம் கொஞ்சம் பூக்கள் கேட்டதும் அவன் மகிழ்ச்சியில் துள்ளினான். கீழே விழுந்து கைகூப்பி, சிரஸால் அவர்களை வணங்கினான். "தெய்வங்கள் பெருங்கருணையோடு என்னை உய்விக்க என் வீட்டிற்கே வந்திருக்கின்றன. எவ்வளவு புண்ணியம் செய்திருக்கிறேன் நான். இவர்களுக்கு நன்கு மரியாதை செய்வேன்" என்று கூறிக் கொண்டே அந்த பூக்காரர் பலமுறை அவர்கள் பாதங்களில் விழுந்து வணங்கியபடி, ஸந்தோஷமான முகத்தோடு, குழந்தைகள் விரும்பியபடி, அவர்கள் த்ருப்தி அடையும்படி, உயர்ந்த, பல வண்ணங்களில், அழகழகாக, பல வாசனைகளில், புத்தம் புதிதாக பூக்களை எடுத்து, எடுத்து அவர்களிடம் கொடுத்துக் கொண்டே இருக்கிறார்.


இப்படி இந்த பூக்காரரின் உபஸரிப்பில் பெரிதும் மகிழ்ந்த க்ருஷ்ணன் "நண்பா, புண்யம் செய்தவனே, என்னை அர்ச்சித்த உன்னை நான் ஒரு போதும் கைவிடேன். லக்ஷ்மி உன்னிடம் எப்போதும் நிலையாக இருப்பாள். உனக்கு சோர்வோ, பொருட்குறைவோ ஒருபோதும் நேராது. உன் ஸந்ததிகள் மேன் மேலும் பெருகும். பூலோகத்தில் பல போகங்களையும் அனுபவித்து, இறுதியில் என்னையே த்யானத்து, என் அனுக்ரஹத்தால் உயர்ந்த லோகத்தை அடைவாய். உன் மனம் எப்போதும் தர்மத்திலேயே லயித்திருக்கும். நீயும் உன் ஸந்ததிகளும் எந்தவொரு இயற்கை உபாதைகளும் அண்டாது, நீண்ட ஆயுளோடு வாழ்வீர்களாக" என்று பல ஆசிகளை அவனுக்கு அருளிச் செய்து விட்டு, பலராமனோடு அங்கிருந்து சென்றான்.

4 Vedhas 18 Puranas

📖 4 வேதங்கள் + 18 புராணங்கள்

இப்போது எளிய தமிழில் (PDF)

சனாதன தர்மத்தின் ஆன்மீக பொக்கிஷத்தை
உங்கள் மொபைலில் பெறுங்கள் 🙏

🎁 வெறும் ₹199 மட்டும்!

🔗 மேலும் விவரங்கள் அறிய
💜

பக்தர்களின் மெய்சிலிர்க்கும் அனுபவங்கள்

❝ இந்த தளத்தை வாசித்த பிறகு, என் மனம் சாந்தியையும் நம்பிக்கையையும் பெற்றது.

🌸 ரமேஷ், மதுரை

❝ இங்கே உள்ள ஆன்மிக விளக்கங்கள் தெளிவாகவும் எளிமையாகவும் இருக்கின்றன.

🌼 சிந்து, தஞ்சாவூர்

❝ இந்த தளம் என் வீட்டில் ஒரு புனித இடமாகவே மாறியுள்ளது.

🌺 கிருஷ்ணன், கோவை

❝ என் ஆன்மிகப் பயணத்தில் வழிகாட்டியாக இந்த தளம் இருந்தது. நன்றி!

🌹 சுகந்தி, சென்னை

❝ நான் தேடிய பல தகவல்களை இங்கு ஒரே இடத்தில் நேர்த்தியாகப் பெற்றேன்.

💠 லலிதா, ஈரோடு

❝ இந்த தளம் தினசரி ஒரு நல்ல எண்ணத்தை என் உள்ளத்தில் விதைக்கிறது.

🌿 அருண், திருநெல்வேலி

❝ இங்குள்ள விரத முறைகளும் வழிபாட்டுக் குறிப்புகளும் வாழ்க்கைக்கு மிக உதவியாக உள்ளன.

🌻 மீனாட்சி, திருச்சி

❝ தினசரி ராசிபலன் மற்றும் ஆன்மிக செய்திகள் என் நாளை சுபிட்சமாக தொடங்க உதவுகிறது.

☸️ கார்த்திக், சேலம்

❝ ஸ்லோகங்களின் அர்த்தங்களை இவ்வளவு எளிமையாக இதுவரை நான் படித்ததில்லை!

🪔 காயத்ரி, வேலூர்

❝ மன அழுத்தத்தில் இருந்த எனக்கு இங்குள்ள கட்டுரைகள் பெரிய ஆறுதலை தந்தன.

🪷 சுந்தர், திருப்பூர்

❝ கோயில்களின் தல புராணங்கள் பற்றிய தகவல்கள் மிக அருமை. குடும்பத்துடன் படிக்கிறோம்.

🔔 பத்மநாபன், திண்டுக்கல்

❝ ஒவ்வொரு பண்டிகையின் பின்னணியிலும் உள்ள உண்மையான காரணங்களை இதிலிருந்து புரிந்துகொண்டேன்.

🌾 ரேவதி, நாகர்கோவில்
🙏
Donate Bhakti Services
🛕
📜
🏠
🎧
📚