பெருமாள் - ஸ்ரீமந் நாராயணன், விஷ்ணு
பிராட்டி - ஸ்ரீதேவி, லக்ஷ்மி, மற்றும் பூதேவி, நீளாதேவி
தாயார் -ஸ்ரீதேவி, லக்ஷ்மி, மற்றும் பூதேவி, நீளாதேவி
நம்பெருமாள்* - ஸ்ரீரங்க கோவில் உற்சவர்
பெரியபெருமாள்* -ஸ்ரீரங்க கோவில் மூலவர்
பெரியபிராட்டி* - ஸ்ரீரங்கநாயகி (ஸ்ரீதேவி)
தேவபெருமாள்* -காஞ்சீபுரம் வரதராஜப் பெருமாள்
உற்சவர்* - கோவிலிலிருந்து வெளியே எழுந்து அருளும் மூர்த்தி
மூலவர்* - கோவிலேயே நிரந்தரமாக எழுந்து அருளும் மூர்த்தி
செல்வர்* - உற்சவரின் பிரதிநிதி (உற்சவரைப் போலவே வழிபடும் மூர்த்தி)
யாகபேரர்* - பவித்ரோற்சவம் முதலிய உற்சவங்களில் யாகசாலையில் எழுந்து அருளும் உற்சவ மூர்த்தி.
கோயிலொழுகு* - கோவிலின் வரலாறு
கிடந்த திருக்கோலம் - சயநினித்து எழுந்தருளும் சேவை.
வீற்றிருந்த* *திருக்கோலம்* - அமர்ந்து எழுந்தருளும் சேவை.
நின்றதிருக்கோலம்* -நின்றோ, நடந்தோ எழுந்தருளும் சேவை.
ஆழ்வார்* - பொதுவாக 12 ஆழ்வார்களைக் குறிக்கும்
பெரியஉடையார்* -ஜடாயு
இளையபெருமாள்* - இலக்குவன்/லக்ஷ்மணன்
எம்பெருமானார்* - இராமாநுஜாசார்யன்
இளையாழ்வார்* - இராமாநுஜாசார்யன்
யதிராசர்* - இர்ராமாநுஜாசார்யன் (சன்யாசிகளின் தலைவன்)
யதீந்திரர்* - இர்ராமாநுஜாசார்யன் (சன்யாசிகளின் தலைவன்)
ஸ்வாமி* - முதலாளி
ஆழ்வான்* - கூரத்தாழ்வான்
ஆண்டான்* - முதலியாண்டான்
லோகாச்சார்யர்* - நம்பிள்ளையின் மற்றொரு பெயர்
பட்டர்* - பராசர பட்டர்
நாயனார்* - அழகிய மணவாள பெருமாள் நாயனார் (பிள்ளை லோகாச்சார்யரின் தம்பி)
வேதாந்தாசாரியார்* - வேதாந்த தேசிகன்
ஜீயர்* - ஸன்யாசி
பெரியஜீயர்* , யதீந்திர ப்ரவணர் - மணவாள மாமுனிகள்
வரத த்வய ப்ரஸாதம் - பிள்ளை *லோகாச்சார்யார்* - 2 வரதனுக்கான வெகுமதி - காஞ்சி வரதன், நம்பூர் வரதாச்சாரியார்
சடாரி* (ஸ்ரீ சடகோபம்) - எம்பெருமானாரின் பாத கமலங்கள்
ஸ்ரீராமானுஜம்* - ஆழ்வார்திருநகரியிலுள்ள நம்மாழ்வாரின் பாத கமலங்கள்
மதுரகவிகள்* - நம்மாழ்வாரின் பாத கமலங்கள்
முதலியாண்டான்* - இராமாநுஜரின் பாத கமலங்கள்
அந்ந்தாழ்வான்* - திருமலையில் இராமானுஜரின் பாத கமலங்கள்
பொன்னடியாம்* *செங்கமலம்* - மணவாள மாமுனியின் பாத கமலங்கள்
அரையர்* - எம்பெருமானின் முன் பிரபந்த்த்தை இசையுடனும் பாவத்துடனும் அனுசந்திப்பவர்
தேவரீர்* - பிறரை குறிக்கும் முறை
அடியேன்* - தன்னை கூறிக்கொள்ளும் முறை
அடியோங்கள்* - தன்னை கூறிக்கொள்ளும் முறை
தாஸன்* - அடிமை, அடியேன்
ஆசார்யர்* - குரு, ஆசான்
பூர்வாசார்யர்* - ஆசாரியரின் முன்னோடிகள்
பரமாசார்யர்* - ஆசாரியரின் ஆசார்யர்
திவ்யப்ரபந்தம்* -அருளிச்செயல் ஆழ்வார்களின் பாசுரங்கள்
உபயவேதாந்தம்* - ஸமஸ்கிருத வேதம் (வேதம், உபநிஷது, புராணம், இதிஹாஸம்) மற்றும் திராவிட வேதம் (திவ்யப்ப்ரபந்தம்)
ஸ்ரீசூக்தி* - ஆழ்வார் ஆசார்யரின் பாசுரங்கள்
க்ரந்தம்* - புத்தகம்
வ்யக்யானம்* - விளக்கம்
காலக்ஷேபம்* - க்ரந்தம் மற்றும் வியாக்யான்ங்களின் வரி விளக்கங்கள்/சொற்பொழிவு
உபன்யாசம்* - சொற்பொழிவு
உபயவிபூதி* - நித்ய மற்றும் லீலா விபூதிகள்
நித்யவிபூதி* - ஸ்ரீவைகுண்டம் - எம்பெருமானின் ஆன்மீக பாகம் - லௌகீக பாகத்தின் 3 மடங்கு
லீலாவிபூதி* - எம்பெருமானின் சொத்தின் லௌகீக பாகம் - ஆயிரமாயிரம் லோகங்களைக் கொண்ட 14 லோகங்கள்
விரஜா* - நித்ய விபூதி மற்றும் லீலா விபூதியை பிரிக்கும் நதி
விஷயந்தரம்* - எம்பெரும்மானை தவிர உள்ள மற்ற விஷயங்கள்
சேஷி* - தலைவன்
சேஷன்* - தொண்டன்
சேஷத்வம்* - தலைவனுக்கு தொண்டனாய் பணி செய்யும் அறிவு
பாரதந்த்ரியம்* - தொண்டனாய் இருந்து தலைவனின் ஆசைகளை நிறைவேற்றுதல்
அன்யசேஷத்வம்* - எம்பெருமான் மற்றும் பாகவதர்களை தவிர மற்றுள்ளவர்களின் தொண்டனாக விளங்குதல்
தேவதாந்த்ரம்* - ப்ரம்மா, சிவன், இந்திரன் மற்றும் இதர தேவதைகள்
பஞ்சஸம்ஸ்காரம்* - ஒருவரை ஸ்ரீவைஷ்ணவராக நியமிக்கும் பொழுது செய்யும் 5 சடங்குகள்
பரஅன்னநியமம்* - தன் வீட்டில் சமைத்த பிரஸாத்த்தை மட்டும் உட்கொள்ளுதல் (கோயில் மற்றும் மடங்கள் விதிவிலக்கு)- குறிப்பு: ஸ்ரீவைஷ்ணவர்* புஜிக்கும் உணவு மற்றும் எம்பெருமானுக்கு படைக்கும் உணவுகளில் கட்டுப்பாடு உள்ளன
பொன்னடிசாற்றுதல்* - ஸ்ரீவைஷ்ணவரை இல்லத்திற்கு அழைத்தல்
நோவு சாற்றிக்கொள்ளுதல் - ஸ்ரீ *வைஷ்ணவர்* உடல் நலமின்மை
கண்வளருதல்* - உறக்க நிலை
கண்டருளப்* *பண்ணுதல்* , அமுது செய்தல் - சாப்பிடுதல், நெய்வேத்யம் (எம்பெருமான் மற்றும் ஸ்ரீவைஷ்ணவருக்கு உணவு பரிமாறுதல்)
எழுந்தருளபண்ணுதல்* - எம்பெருமானார், ஆழ்வார், ஆசார்யர்களை ஒரிடத்திலிருந்து மற்றொரு இட்த்திருக்கு எடுத்துச் செல்லுதல்
புறப்பாடுகண்டருளல்* - திரு உலா
குடிசை* - தன் இல்லத்தை குறிக்கும் சொல்
திருமாளிகை* - மற்றொரு ஸ்ரீவைஷ்ணவரின் இல்லத்தை குறிக்கும் சொல்
நீராட்டம்* - குளித்தல்
போனகம்* - உணவு
ப்ரஸாதம்* , சேஷம் - எம்பெருமானார், ஆழ்வார், ஆசார்யன் மற்றும் ஸ்ரீவைஷ்ணவர் உணவு உண்ட மிச்சம்
காலக்ஷேபம்* பண்ணுகிரார் - எம்பெருமானார், ஆழ்வார், ஆசார்யன் மற்றும் ஸ்ரீவைஷ்ணவர் பற்றிய விஷயஙகள் கேட்கிறார்
காலக்ஷேபம்* சாதிக்கிரார் - எம்பெருமானார், ஆழ்வார், ஆசார்யன் மற்றும் ஸ்ரீவைஷ்ணவர் பற்றிய விஷயஙகள் சொல்லுகிறார்
சாதித்து* அருள்* (சாத்துமறை ) - பாசுரம் மற்றும் வேதம் ஓத ஆரம்பித்தல்
நாயந்தே* - அடியேன்
திருநாடு* *அலங்கரித்தார்* - உடலை விடுத்து வைகுண்டம் எய்தல்
திருவடிசம்பந்தம்* - ஆசார்யனின் சம்பந்தம்
அலகிடுதல்* - பெருக்குதல் (சுத்தம் செய்தல்)
ப்ரஸாதம்* - அன்னம்
குழம்பமுது* (நழிகரமது) - குழம்பு/சாம்பார்
சாற்றமுது* - ரசம்
கரியமுது* - காய்கரி/பொரியல்
திருக்கண்ணமுது* - பாயசம்
தயிரமுது* (தோத்தியோனம், தாச்சி மம்மு) -தயிர் சாதம்
புளியோதரை* - புளி சாதம்
அக்காரஅடிசில்* - சர்க்கரையால் செய்த சாதம்...
#mahavishnuinfo