Sri Mahavishnu Info: ஸ்ரீ ராமானுஜரின் வரலாற்று மகிமை பகுதி 3 ஸ்ரீ ராமானுஜரின் வரலாற்று மகிமை பகுதி 3
📿 வைணவ அடிப்படைகள் | 🛕 திவ்யதேச வரலாறுகள் | 📘 நாலாயிர திவ்யபிரபந்தம் | 🎧 ஸ்லோகங்கள் | 📅 தினசரி பக்தி வழிகாட்டி | ❓ பக்தி கேள்விகள் | 📖 ஆன்மீக நூல்கள் | 🧒 குழந்தைகள் பக்தி பகுதி | 🛕 தரிசன நேரங்கள் | 📜 பக்தர் அனுபவம் | 🛐 ஸ்ரீவைணவ பாடசாலை | 🗓️ ஸ்ரீவைணவ நாட்காட்டி | 🔱 விஷ்ணு சஹஸ்ரநாமம் | 🌄 ஸ்ரீ வெங்கடேச மஹாத்மியம் | 🌺 திருப்பாவை | 🛕 திருத்தல தரிசனம் | ✨ அற்புத நிகழ்வுகள் | 👣 வைஷ்ணவ ஆச்சாரியர்கள் | 🕉️ நாமஸ்மரணையின் மகிமை | 🎙️ பக்தி ஸ்லோகங்கள் | 🔔 கோவில் விழாக்கள்

ஸ்ரீ ராமானுஜரின் வரலாற்று மகிமை பகுதி 3

Sri Mahavishnu Info

குருவே! தங்கள் ஆசியோடு இப்பதத்திற்கான பொருளைக் கூறுகிறேன், என பணிவுடன் துவங்கினார். ஆசிரியர் பெருமானே! கப்யாஸம் என்ற சொல்லில் உள்ள அஸ என்ற மறைவுச்சொல்லுக்கு மலர்தல் எனப் பொருள். இதனடிப்படையில், அஸ என்பதற்கு மலர்ந்தது என பொருள் கொள்ள வேண்டும். கப்யாஸம் என்ற வார்த்தையை உள்ளடக்கிய மந்திரத்தை முழுமையாகக் கேளுங்கள்.
தஸ்ய யதா கப்யாஸம் புண்டரீக- மேவ மக்ஷீணி என்பதாகும்.
இதன் பொருள், சூரிய மண்டலத்திலுள்ள அந்த பரந்தாமனின் கண்கள் மலர்ந்த தாமரைப் பூப்போல் அழகாக இருக்கும், என்பதாகும். தாமரை சிவப்பை குரங்கின் ஆசனவாய் சிவப்பு என குறிப்பிட்டதைத் தான் மறுத்தேன், என்றார். இந்தப் பொருள் கேட்டு யாதவப்பிரகாசர் துள்ளிக்குதித்தார்.
ஏ ராமானுஜா! நான் சொன்ன விளக்கம் சங்கராச்சாரியார் சொன்னதின் அடிப்படையிலானது. நீ சொல்வது ஒரு வாக்கியத்தை பிரித்து வருவதால் ஆனது. இதை ஒப்புக் கொள்ள முடியாது. வேண்டுமானால், நீ இலக்கணத்தில் கெட்டிக்காரன் என்று வேண்டுமானால் பீற்றிக் கொள்ளலாம், என்றார் ஆவேசத்துடன்.
இந்த சம்பவம் யாதவப்பிரகாசரை மிகவும் பாதித்தது. பெரியவர்கள் சிறியவர்கள் சொல்லும் நற்கருத்தை ஏற்றுக்கொள்வதில் தவறில்லை என்ற உலக வாதத்திற்கு புறம்பாக அவர் இவ்விஷயத்தில் நடந்து கொண்டார். இதையடுத்து மற்றொரு நாளும் இதே போன்ற வாதம் எழுந்தது. யாதவப்பிரகாசர் அன்று வகுப்பெடுக்கும் போது,
ஸத்யம் ஜ்ஞானம் அனந்தம் ப்ரஹ்ம என்ற மந்திரத்திற்கு, பரப்பிரம்மம் (இறைவன்) சத்தியமும், அறிவுமயமானதும், முடிவில்லாததும் ஆகும், என பொருள் சொன்னார்.
அப்போது எழுந்த ராமானுஜர், குருவே! அம்மந்திரத்திற்கு அப்படி பொருளல்ல.
பரப்பிரம்மம் சத்தியம் என்ற பண்பை உடையது. ஞானமும் அதன் பண்பு தான். முடிவற்றதும் என்பதும் அதன் பண்பு தானே தவிர, அதுவே முடிவற்றதோ, சத்தியமானதோ, ஞானமோ என்று அறுதியிட்டு பொருள் கொள்ள முடியாது, என்றார் மிக்க அடக்கத்துடன். இதைக் கேட்டு பிரகாசர் கொதித்தே போய் விட்டார்.
ஏனடா! உனக்கு அகங்காரம் அதிகமாகி விட்டது. இங்கே நீ குருவா? நான் குருவா? நான் சொல்வதைக் கேட்பதாக இருந்தால் நீ இங்கே இரு. இல்லாவிட்டால், நீயே ஒரு பள்ளிக்கூடம் தொடங்கி, உன் சொந்தக் கருத்துக்களையெல்லாம் உன்னிடம் படிக்க வரும் மட சீடர்களிடம் திணி. சங்கரரின் கொள்கைக்கு எதிராக உன் கருத்துக்கள் உள்ளன. இனியும் நீ எழுந்து பேசினால், உன்னை குருகுலத்தில் இருந்து வெளியே அனுப்பி விடுவேன். ஜாக்கிரதை, என எச்சரித்தார்.
ஏதோ ராமானுஜரை அடக்க வேண்டும் என்பதற்காக ஆசிரியர் இப்படி சொல்லி விட்டாரே தவிர, அவரது உள்ளத்துக்குள் அச்சம் தோன்றலாயிற்று. யாதவப்பிரகாசர் அத்வைதக் கொள்கையில் ஊறிப்போனவர். அத்வைதம் என்றால், இரண்டாவது என்ற சொல்லுக்கே இடமில்லை எனக் கூறுவதாகும்.
அதாவது, உலகம் என்ற ஒன்றே கிடையாது. அது மாயை. அப்படியானால் நம் கண் முன்னால் காணும் இந்தப் பொருள்கள் எல்லாம் எப்படி வந்தன என்றால், அதெல்லாம் வெறும் மனபிரமை தான். மனம் தான் இப்படியெல்லாம் இருப்பதாக கற்பனை செய்து கொள்கிறது என்று வாதம் செய்வதாகும்.
நாராயணனை தெய்வமாக ஏற்கும் இந்த வாதம், அவருக்கு உருவமில்லை என்கிறது. இந்தக் கொள்கையைக் கடைபிடிக்கும் யாதவப்பிரகாசர், ராமானுஜரை துவைதத்தில் ஊறிப்போனவரோ என சந்தேகித்தார். துவைதம் உருவ வழிபாட்டுக்கு ஒப்புக்கொள்கிறது. இவர்களும் நாராயணனே உயர்ந்தவர் எனக் கூறினாலும், சில காரியங்கள் வெற்றி பெற பிற கடவுள்களையும் வழிபடுவர். ஒன்றுக்கு மேற்பட்டது என்பது துவைதத்தின் சுருக்கமான பொருள்.
இந்நிலையில் அவர் மனதில் விபரீதமான எண்ணமும் தோன்றியது. எந்த ஆசிரியர் மாணவனுக்கு நல்வழி காட்ட வேண்டுமோ, அதே ஆசிரியர் தன் மாணவனைக் கொலை செய்ய வேண்டும் என்று முடிவெடுத்து விட்டார். ஒரு மாணவன் தன்னை முந்துவதா என்ற பொறாமையா அல்லது தான் கொண்ட கொள்கையை நிலைநிறுத்த வேண்டும் என்ற வேட்ககையா...எப்படியிருப்பினும் மனதில் கொலைத்திட்டம் உருவாயிற்று.
காஞ்சிபுரத்திலுள்ள பல இளைஞர்கள் யாதவப்பிரகாசரை இரண்டாம் சங்கராச்சாரியார் என செல்லமாக அழைப்பார்கள். அவர் மீது மிகுந்த மதிப்பு கொண்டிருந்தார்கள். அப்படிப்பட்ட தன் சீடர்களை ரகசியமாக அழைத்து, என் அன்புக் குழந்தைகளே! ராமானுஜன் என்னை எதிர்க்கிறான். என் உரைக்கு பதில் உரை கூறுகிறான். எனது புலமையில் குற்றம் கண்டுபிடிக்கிறான்.
அவன் இவ்வாறு சொல்வதற்கு காரணம் துவைதத்தின் மீது அவனுக்கு பிடிப்பிருப்பதால் தான். அவன் ஒரு நாத்திகன். அதனால் தான் இப்படியெல்லாம் பேசுகிறான். அவனை ஒழித்துக் கட்ட வேண்டும், என பிஞ்சுமனங்களில் நஞ்சை விதைத்தார். ஒரு மாணவன் எழுந்தான். குருவே! இதொன்றும் பிரமாதமான காரியமில்லை. உங்கள் கருத்துக்கு மறு கருத்து சொல்பவனை நம் குருகுலத்தை விட்டு விலக்கி விடுங்கள். அவ்வளவு தானே. இதற்காக கவலைப்படவே தேவையில்லையே, என்றான்.
உடனே மற்றொரு மாணவன் எழுந்தான்.
அட அசடே! உனக்கு ஆசிரியர் சொல்வது முழுமையாகப் புரியவில்லை. அவன் மகாபிரகஸ்தனாக இருக்கட்டும். நம் ஆசிரியரை எதிர்த்துப் பேசட்டும். அதுபற்றியா ஆசிரியர் கவலைப்படுகிறார். அத்வைதத்தை அழித்து, துவைதத்தை அவன் புகுத்தி விடுவானோ என்றல்லவா அஞ்சுகிறார்.
ஒருவேளை நம்மிடமிருந்து விலக்கப்படும் ராமானுஜன், வெளியே போய் தனியாக குருகுலம் துவங்கி, துவைதத்தை போதித்தால் நிலைமை என்னாவது? எனவே அவனைக் கொன்று விடுவது தான் இப்பிரச்னைக்கு நிரந்தர தீர்வு, என்றான். ஒரு பெரிய ஆசானின் தலைமையில், காஞ்சிமாநகரில் கொலைத்திட்ட சதி உருவாகிக் கொண்டிருந்தது.

ஸ்ரீ மதே ராமானுஜாய நமஹ
தொடரும்.....

🌿 நல்ல அதிர்ஷ்டம் தரும் Lucky Bamboo 🌿

Lucky Bamboo 3 Layer

🍀 வீட்டில், அலுவலகத்தில் செல்வம், ஆரோக்கியம், அமைதி சேர்க்க உதவும் Ugaoo Lucky Bamboo – 3 Layer Feng Shui செடி. 🪴 பராமரிக்க எளிது, நீண்ட காலம் பசுமையாக இருக்கும்!

  • 💚 வீட்டிற்கு நேர்மறை ஆற்றல் தரும்
  • 🎁 பரிசளிக்க சிறந்த தேர்வு
  • 🌱 Feng Shui & Vastu இரண்டிற்கும் ஏற்றது
  • ⭐ 4.2/5 மதிப்பீடு – 7,400+ விமர்சனங்கள்
💜

பக்தர்கள் சொல்கிறார்கள்

இந்த தளத்தை வாசித்த பிறகு, என் மனம் சாந்தியையும் நம்பிக்கையையும் பெற்றது.
🌸 ரமேஷ், மதுரை

இங்கே உள்ள ஆன்மிக விளக்கங்கள் தெளிவாகவும் எளிமையாகவும் இருக்கின்றன.
🌼 சிந்து, தஞ்சாவூர்

இந்த தளம் என் வீட்டில் ஒரு புனித இடமாகவே மாறியுள்ளது.
🌺 கிருஷ்ணன், கோவை

என் ஆன்மிகப் பயணத்தில் வழிகாட்டியாக இந்த தளம் இருந்தது. நன்றி!
🌹 சுகந்தி, சென்னை

நான் தேடிய பல தகவல்களை இங்கு ஒரே இடத்தில் நேர்த்தியாகப் பெற்றேன்.
💠 லலிதா, ஈரோடு

இந்த தளம் தினசரி ஒரு நல்ல எண்ணத்தை என் உள்ளத்தில் விதைக்கிறது.
🌿 அருண், திருநெல்வேலி

🛕
108 ஆலயம்
📜
பிரபந்தம்
🎧
ஸ்லோகம்
📚
குறிப்புகள்