Sri Mahavishnu Info: பக்தி என்றால் என்ன ? பக்தி என்றால் என்ன ?
📿 வைணவ அடிப்படைகள் | 🛕 திவ்யதேச வரலாறுகள் | 📘 நாலாயிர திவ்யபிரபந்தம் | 🎧 ஸ்லோகங்கள் | 📅 தினசரி பக்தி வழிகாட்டி | ❓ பக்தி கேள்விகள் | 📖 ஆன்மீக நூல்கள் | 🧒 குழந்தைகள் பக்தி பகுதி | 🛕 தரிசன நேரங்கள் | 📜 பக்தர் அனுபவம் | 🛐 ஸ்ரீவைணவ பாடசாலை | 🗓️ ஸ்ரீவைணவ நாட்காட்டி | 🔱 விஷ்ணு சஹஸ்ரநாமம் | 🌄 ஸ்ரீ வெங்கடேச மஹாத்மியம் | 🌺 திருப்பாவை | 🛕 திருத்தல தரிசனம் | ✨ அற்புத நிகழ்வுகள் | 👣 வைஷ்ணவ ஆச்சாரியர்கள் | 🕉️ நாமஸ்மரணையின் மகிமை | 🎙️ பக்தி ஸ்லோகங்கள் | 🔔 கோவில் விழாக்கள்

பக்தி என்றால் என்ன ?

Sri Mahavishnu Info
நம்மில் பலருக்கு பக்தி, ஆன்மீகம், இவற்றைப் பற்றிய தெளிவான அறிவு இருப்பதில்லை. நம்மனம் நல்ல எண்ணங்களால் நிறைந்து, நல்லவனாக திகழும் போது, இறைவன் மீது நமக்கு ஏற்படும் அன்பு தான் பக்தி எனப்படுகிறது. தீய எண்ணங்களால் நிறைந்தவன், செலுத்தும் பக்தி போலியானது !!! அதை இறைவன் ஏற்பதில்லை !!! ஆக, நல்லவனின் அன்புதான் பக்தி எனப்படுவது.

பக்தியானது சிலருக்கு அதிகமாகவும் சிலருக்கு குறைவாகவும் இருப்பதை நாம்  காண்கின்றோம். அப்படியானால் பக்தியை  அளக்கும் கருவி எது?  அதுவே இறை நம்பிக்கை !!! அதாவது, "இறைவன் என்னை கைவிடமாட்டார் என்கிற நம்பிக்கையின் அளவுதான் பக்தியின் அளவு.  ஆக  இறைவன் மீது அதிக நம்பிக்கை  உள்ளவனே சிறந்த பக்தன்.

இந்த உண்மையான பக்தி ஒருவனது உள்ளத்தில் நிறைந்திருக்கும் போது, அது செயலிலும் வெளிப் படுகிறது.   இந்த செயல் தான் ஆன்மீகம் எனப்படும்.  அதாவது, பக்தி செயல் வடிவம் பெற்றால்,  அது ஆன்மீகம் எனப்படுகிறது.
      
ஆன்மீகம் இருவகை உண்டு.

(1) இறைவனுக்கு, நாம் விரும்புவதை செய்தல் முதல் வகை. இறைவன் விரும்புவதை,  நாம் இறைவனுக்கு செய்தல், இரண்டாம் வகை ஆன்மீகம் !!! அதாவது, இறைவன் மீது நாம் வைத்திருக்கும் அளவற்ற பக்திப் பரவசத்தால், இறைவனைப் புகழ்ந்து பாடுதல், நோம்பு இருந்து, கடுமையான விரதங்களைக் கடைபிடித்து, கோவிலுக்குச் செல்லுதல், தீ மிதித்தல், (கடவுளுக்கு நன்றி செலுத்துவதின் அடையாளமாக) உண்டி காணிக்கை செலுத்துதல்,  வேண்டுதலுக்காக (அழகைத் தியாகம் செய்வதாக), மொட்டை அடித்தல், இசையில் மூழ்கி, பக்திப்பாடல்கள் மூலம் இறைவனைப் போற்றுதல்,  இவையாவும் முதல் வகை ஆன்மீகம் !!! போற்றத் தகுந்த ஆன்மீகமே !!! இறைவன்மீதுள்ள நமதன்பை உணர்ச்சிவசத்தோடு காட்டுகின்ற ஆன்மீகமே !!!இவையாவும், இறைவனுக்கு, நாம் விரும்புவதை செய்தல் முதல் வகை ஆன்மீகம்.

அடுத்தாக, இறைவன் விரும்புவதை,  நாம் இறைவனுக்கு செய்தலே இரண்டாம் வகை ஆன்மீகம் !!!

நம்மில், பலபேர், இறைவனின் குணத்தை அறிய மறந்து விடுகிறோம் !!! எல்லாம் வல்ல இறைவனுக்கு மனிதனிடம் உண்மையில் என்ன எதிர்பார்ப்பு இருந்துவிடப் போகிறது என்கிற அறியாமையே இதற்கு காரணம் !!!

இறைவனுக்கு நம்மீது அன்பும் இரக்கமும் பாசமும் இருக்காதா என சிந்திக்கத் தவறி விட்டோம் !!!

ஆனால், இறைவன் விரும்புவது என்ன? ஆன்மீகம் அறியாமல் வாழ்ந்தாலும் பரவாயில்லை, அடித்துக் கொள்ளாமல்  வாழுங்கள், என்கிறார் !!! ஆத்மஞானம் தெரியாமல் வாழ்ந்தாலும் பரவாயில்லை, கலைகள் இல்லாமல் வாழலாமே, என்கிறார் !!!

கடவுளையே கவலைப்பட வைத்துவிட்டாயே மானிடா - நீ கவலைப்பட வைத்துவிட்டாயே !!! அடுத்ததாக, நாம் இறைவனிடம்  வேண்டுகின்ற பட்டியல் தான், மிகவும் நீண்டு கொண்டே செல்லுகிறது. ஹாஹாஹா, அந்தப்  பட்டியலும், நாளுக்கு நாள் மாறிக்கொண்டே இருக்கிறது.  ஆனால் இறைவன், மனிதனிடம் எதிர்பார்ப்பது என்றைக்குமே ஒன்றே ஒன்றுதான் !!! அதுவே, அஹிம்சை !!! அதாவது, அஹிம்சை = உன்னையும் ஹிம்சை செய்து கொள்ளாதே !!! + பிறரையும் ஹிம்சை செய்யாதே !!! அதுவே,
வாழு+வாழவிடு !!!

அதாவது, கடவுள் மனிதனிடம் என்ன எதிர்பார்க்கிறார் தெரியுமா? "பக்தா !!! எத்தனை சோதனைகள் வந்தாலும், உறுதியுடன் நீ அஹிம்சையை கடைபிடிக்க வேண்டுமென, நான் விரும்புகிறேன், எதிர்பார்க்கிறேன் !!!" என்கிறார் !!!
      
(a) "அனைத்து ஜீவன்களையும், நீ ஹிம்சை செய்யாமல் "வாழவிடு"தல். விளக்கம் : (a), அஹிம்சை என்கிற இந்த ஒற்றை நற்குணமானது, அனைத்து நற்குணங்களையும் உனக்கு தந்து உண்மையான கடவுள் பக்தியை உனக்குள் உருவாக்கும் !!!"
      
அதன்பின் நீ எதுவுமே செய்ய வேண்டாம் !!! உடனே, இந்நிலையில் இருந்தே, இறைவனால் நீ வழிநடத்தப் படுவாய் !!! சரி, அப்புறம் என்ன நடக்கும் ?உன்னைப் பிறர் எவ்வாறு நடத்த வேண்டும் என நீ விரும்புகின்றாயோ (சனாதன தரமம்) அவ்வாறே நீயும் அவர்களிடம் நடந்து கொள்வாய் !!!

இந்த கலிகாலத்தில்,  நல்லவனாக வாழ்வது மிகக் கடினம் என்றாலும், பற்பல சோதனைகளைக் கடந்த பின்பும் நீ நல்லவனாகத்தான் இருப்பேன் அப்பியாசம் செய்து மனஉறுதிகொள்.

ஏனெனில், உண்மையான நற்குணத்தில் பிறப்பது தான் நிஜமான பக்தி !!!  எனவே, மற்றவர்களைப் போல போலி பக்தியோடு நிகழ்காலத்தை வீனாக்காதே !!! ஏனெனில் திடீரென மரணம் நெருங்கி விட்டால்,  உனது மனிதப்பிறவி 'புஸ்ஸ்ஸ்' என்று வீணாகிவிடும்.

அதுமட்டுமின்றி, பொதுநலம், கருணை, தானம் இரக்கம் போன்ற நற்குணம் இல்லாதவர்கள் செலுத்தும் போலியான பக்திகளை பகவான் ஸ்ரீ கிருஷ்ணர் எப்போதும் ஏற்பதில்லை !!!

எனவே, நற்குணங்களோடு வாழ்ந்து, உண்மையான பக்தர்களாகி, ஜீவன்முக்தி பெற்று, பிறவிப் பயனை அடைவோமே !!!

(b)அடுத்த படியாக, உனக்கு நீயே ஹிம்சை செய்து கொள்ளாமல், "வாழ்"வது !!!
என்ன? எனக்கு நானே ஹிம்சை செய்து  கொள்கிறேனா? நானே என்னை சாட்டையால் அடித்துக் கொள்கிறேனா ? என்ன? எந்த ஒரு முட்டாளும் "தன்னையே ஹிம்சை செய்து கொள்ள மாட்டான்", என்றும் சிலர் வாதிடுவர்.

உண்மையைச் சொல்லப்போனால்,  கவலையும், வெறுப்பும், கோவமும் கூட, சுய தண்டனைகளே !!! புள்ளிவிவரக் கணக்குப்படிப் பார்த்தால்,   நாமே நம்மை அதிகபட்சமாக தண்டித்துக் கொள்கிறோம் !!!

எனவேதான் கவலை வெறுப்பு கோபம் இவையாவும்  கொண்டிருப்பவன் ஆன்மீகவாதி அல்ல !!! அதையும் இப்போதே நிரூபித்து விடுகின்றேன்.

ஆன்மீகத்தை மூன்று படிகளில் அடையலாம் என வேதம் கூறுகிறது.

1. இவ்வுலகிலுள்ள, எந்தவொரு பொருளும், நபரும் உன் பிரச்சனைக்கு காரணம் அல்ல !!! எனவே, வெளி சூழ்நிலை, உனக்கு  வெறுப்பைத் தராதிருந்தால், நீ ஆன்மீகத்தின் முதல் படியை கடந்து விட்டாய்.
2. அனைத்துப் பிரச்சனைகளுக்கும் உன்மனமே காரணம் என்றுணர்ந்தால்,  நீ ஆன்மீகத்தின் 2ம் படியை கடந்து விட்டாய்.
3.  உன் மனமானது, உனது எந்த பிரச்சனைக்கும் காரணம் இல்லை என்று உணரும்போதுதான், நீ 3ம் படியை கடக்கின்றாய். நீ ஆன்மீகத்தில் நிறைவடைகிறாய்.
Point number 2 & 3, இரண்டையும், மீண்டும் மீண்டும் படித்துப் பார்ப்போம்.

இரண்டாவது படியில், கவலைக்கு உன்மனமே காரணமாம் !!! மூன்றாவது படியில், உன் மனமும் கவலைக்கு காரணம் இல்லையாம்.

இதை எவ்வாறு ஏற்றுக்கொள்வது? அதாவது இரண்டாவது படியில் குறிப்பிடப்பட்டது நமது மனம் பக்குவம் அடையாத மனம். உனது அனைத்து பிரச்சினைகளுக்கும் உன் மனமே காரணம் என்று உணர்ந்து, உன் மனம் பக்குவம் அடைகிறது. இந்த பக்குவமடைந்த மனமும் உன் கவலைக்கு காரணம் இல்லை என்று மூன்றாவது படியில் கூறப்படுகிறது.

Point number 1 & 3,  மீண்டும் படித்து பார்ப்போம்.  முதல் படியில் "உனது பிரச்சினைகளுக்கு காரணம் வெளி சூழ்நிலை அல்ல" என்றும் மூன்றாம்  படியில் உன் பிரச்சனைக்கு காரணம் "பக்குவப்பட்ட உன் மனமும் அல்ல" என்றும்  தெளிவாகிறது.  இதன் முடிவுதான் என்ன?  இட் இஸ் வெரி சிம்பிள் !!!  பிரச்சனைகளுக்கு காரணம் வெளியிலும் இல்லை !!! உன்-உள்ளேயும் இல்லை !!!   அப்படியென்றால், "பிரச்சனைக்கு காரணமே இல்லை !!!" என்பதே உபநிஷத்துக்களில்  மறைந்திருக்கும் சத்தியம் !!!

குருசேத்திரப் போரில் அர்ஜுனன் எக்கச்சக்கமான கவலைகளுடனும் + பிரச்சனைகளுடனும், சோர்ந்து போய் தரையில்  அமர்ந்து விடுவான். ஈரேழு லோகங்களையும் வென்ற,  அர்ஜுனனுக்கு ஏற்பட்டிருந்த சோகம் அளப்பரியது !!!  இச்சமயத்தில்,  பகவான் ஸ்ரீ கிருஷ்ணர், "அர்ஜுனா நீ கவலைப் படத் தகுதியற்ற பிரச்சினைகளுக்காக கவலைப்படுகிறாய் !!!", என்று கூறுகின்றார்.
இங்கு நடக்கும் உற்சாகமான நிகழ்வுகளின் விவரம் தான் என்ன?

அர்ஜுனனிக்கோ, மிகப்பெரிய கவலை !!! பகவான் கிருஷ்ணரோ, "அது கவலையே இல்லை" என்கிறார். கண்கூடாக நாம் பார்க்கின்ற அர்ஜுனனின்  கவலைகளை "இல்லை" என்று சொல்வதா?  அல்லது பகவான் சொல்ல வருகின்ற "ஞானம் நமக்கு புரியவில்லையா?"

இதன் சூட்சமமான-பொருள்தான் என்ன? இருவேறு எதிரெதிர் சூழ்நிலைகளுக்கும் பொருந்தி போகின்றது - அந்த ஒரே பதில் இதுவாகத்தான் இருக்க முடியும் !!! "உலகில் கவலை என்று, ஒன்று இல்லவே இல்லை !!!

கவலைக்கு காரணமே இல்லாத காரணத்தால் தான் தகுதியற்றவைகளுக்கு கவலைப்படாதே என கிருஷ்ணர் கூறுகின்றார்.  அதேசமயம் அஞ்ஞானியாகிய  அர்ஜுனனுக்கு  இருக்கின்ற கவலை என்பது ஒரு மாயவலை !!!  அது ஒரு தோற்றம் மட்டுமே !!! உண்மை அல்ல !!! இதை விளக்கவே கீதாஉபதேசம் தொடங்கப்பட்டது !!!

மனிதன்  அனுபவிக்கின்ற எந்தக்  கவலைக்கும் காரணமே இல்லை என்பது இதிலிருந்து தெளிவாகிறது.

அன்று அர்ஜுனனின்  ஒரு கவலை க்காக  பகவான் ஸ்ரீ கிருஷ்ணரால்,  கீதா உபதேசம்  கூறப்பட்டது !!!

ஆனால், 700 கோடி உலக மக்களின்  95 லட்சம் கோடி கவலைகளையும் போக்கும் சக்தி ஆத்ம ஞானத்துக்கும் உண்டு !!! ஆனால், குருநாதர்?  பகவான் ஸ்ரீ கிருஷ்ணருக்கு எங்கே போவது?

எனவே, நமது கையில் இருக்கும் கீதை கூறும்  ஆத்மஞானத்தை   ஒவ்வொரு அஞ்ஞானிக்கும் உபதேசிக்க வேண்டும் !!!  அவ்வாறு கிடைக்கப் பெற்ற ஆத்மஞானத்தை,  அவர்களும் மற்றவர்களுக்கு உபதேசிக்க வேண்டும் !!!  அப்படியானால், நாம் எல்லாம் கிருஷ்ணபரமாத்மா ஆகிவிட முடியுமா என்று தானே கேட்க விரும்புகிறீர்கள் !!!

மிக நல்ல கேள்வியை சரியான நேரத்தில் கேட்டு விட்டீர்கள் !!! "உடலை கடந்தவன் மனதைக் கடந்தவனே, "நான்" என்று சொல்லப் படுகின்ற நீ அல்லவா? அந்த ஆன்மாவாக இருப்பவனே "நான்" எனப்படும் நீதான் !!!"  அதாவது இந்த  மனித  உடலுக்குள் ஆத்மாவாக தற்காலிகமாக வாசம் செய்வது,  பரமாத்மாவின் ஒரு அங்கமே !!!

எனவே,  ஸ்ரீகிருஷ்ண பரமாத்மாவாக நாமே பலருக்கு உபதேசித்து, 'அர்ஜுனன்' களாக துன்பங்களை அனுபவிக்கும் அஞ்ஞானிகளின் கவலைகளைப் போக்குவோம் !!!

எனவே,  மனிதனாக படைக்கப்பட்ட நாம் ஒவ்வொருவரும் ஆத்மஞானம் அடைந்து, பிறருக்கும் அதை கொடுக்க வேண்டும் !!!

ஏனெனில் கொடுக்க கொடுக்க குறையாதது ஆத்மஞானம் !!! மேலும் சொல்ல வேண்டுமானால், கொடுக்க கொடுக்க அதிகமாவதும்  இந்த ஆத்மஞானம் தான் !!!

Two Moustaches — Ethnic Handcarved Brass Diya

Two Moustaches Brass Diya

இறைவனுக்கு தீபராதனை 🪔 — அழகான செம்ம தங்க நிற மிளிரும் மண்ணித்தட்டு. வீட்டுக்கும் பக்தி அனுசரணைக்கும் சிறந்த பரிசு.

  • Ethnic handcarved design with curved handle
  • Standard size — Golden finish
  • Suitable for pooja & home decor
💜

பக்தர்கள் சொல்கிறார்கள்

இந்த தளத்தை வாசித்த பிறகு, என் மனம் சாந்தியையும் நம்பிக்கையையும் பெற்றது.
🌸 ரமேஷ், மதுரை

இங்கே உள்ள ஆன்மிக விளக்கங்கள் தெளிவாகவும் எளிமையாகவும் இருக்கின்றன.
🌼 சிந்து, தஞ்சாவூர்

இந்த தளம் என் வீட்டில் ஒரு புனித இடமாகவே மாறியுள்ளது.
🌺 கிருஷ்ணன், கோவை

என் ஆன்மிகப் பயணத்தில் வழிகாட்டியாக இந்த தளம் இருந்தது. நன்றி!
🌹 சுகந்தி, சென்னை

நான் தேடிய பல தகவல்களை இங்கு ஒரே இடத்தில் நேர்த்தியாகப் பெற்றேன்.
💠 லலிதா, ஈரோடு

இந்த தளம் தினசரி ஒரு நல்ல எண்ணத்தை என் உள்ளத்தில் விதைக்கிறது.
🌿 அருண், திருநெல்வேலி

🛕
108 ஆலயம்
📜
பிரபந்தம்
🎧
ஸ்லோகம்
📚
குறிப்புகள்