Sri Mahavishnu Info: கருட புராணம் - 07 கருட புராணம் - 07

கருட புராணம் - 07

Sri Mahavishnu Info
07.தான தருமங்களும் விருஷோற்சனமும்

வேத வடிவனாகிய கருடன், சர்வலோக நாதரான ஸ்ரீமந் நாராயணனை வணங்கி, “ஹே பரமாத்மா!  ஒருவன் மனத்தூய்மையோடு தானதர்மங்களைத் தன கையாலே செய்வானாயின், அதனால் அவன் அடையும் பயன் என்ன? அவனுக்காக அவனுடைய மகன் முதலியோர் தான தர்மம் செய்பவர்களானால் அதனால் உண்டாகும் பயன் என்ன? இவற்றைத் திருவாய் மலர்ந்தருள வேண்டுகிறேன்!” என்று விண்ணபஞ் செய்ய பாம்பணையில் துயிலும் பரமாத்மா கூறலானார்.

“கருடனே! மனத்தூய்மை இல்லாமலும், மனவுறுதி இல்லாமலும் செய்யப்படும் நூறு கோதானங்களுக்கு எத்தனைப் பயன் உண்டோ?

“அதனை சித்த சுத்தத்தோடு சாஸ்திரங்களில் விதித்த வண்ணம் ஒரு பசுவை நல்லவருக்கு தானம் செய்தால், அதன் பயனும் கிடைக்கும். கோதானம் கொடுப்பவரும், வாங்குபவரும் மனத்தூய்மை உள்ளவராகயிருக்க வேண்டும். வாங்குபவர் உத்தமராக இருக்க வேண்டும். கற்றுணர்ந்த சான்றோருக்குக் கொடுக்கப்படும் தானம், தானம் கொடுப்பவருக்கும் வாங்குபவருக்கும் புண்ணியமுன்டாகும்.

“வேத சாஸ்திரங்களை ஓதாமலும், ஒழுக்க வழியில் நில்லாமலும், பிராமணன் என்ற பெயரை மட்டும் கொண்டவனுக்கு தானம் கொடுத்தால், அந்த தானமே தானங் கொடுத்தவனுக்கு நரகத்தைக் கொடுக்கும். மேலும் தானம் வாங்குவதற்கே தகுதியில்லாதவன் தானம் வாங்குவானாயின் அவன் இருபத்தோரு தலைமுறை உள்ளவர்களோடு நரகம் புகுவான்.
                                                           
“ஒரு பசுவை, ஒருவருக்கு மட்டுமே தானம் கொடுக்க வேண்டும். சாதுக்களிடம் நல்லப் பொருள்களைப் பக்தி சிரத்தையோடு தானம் கொடுத்தவன், அந்தப் பிறவியிலாவது, மறுபிறவியிலாவது அதற்குரிய நற்பயனைச் சந்தேகமின்றி அடைவான்.

“தானம் கொடுப்பவன் எளியவனாக இருந்தால் ஏதாவது ஒருபொருளைக் கொடுத்தாலும் போதுமானது. கருடா! மரித்த பிறகு செய்ய வேண்டிய கிரியைப் பற்றி உனக்கு ஒருவாறு கூறினேன்.” என்று ஸ்ரீமந் நாராயணர் கூறியருளினார்.
💜

பக்தர்கள் சொல்கிறார்கள்

இந்த தளத்தை வாசித்த பிறகு, என் மனம் சாந்தியையும் நம்பிக்கையையும் பெற்றது.
🌸 ரமேஷ், மதுரை

இங்கே உள்ள ஆன்மிக விளக்கங்கள் தெளிவாகவும் எளிமையாகவும் இருக்கின்றன.
🌼 சிந்து, தஞ்சாவூர்

இந்த தளம் என் வீட்டில் ஒரு புனித இடமாகவே மாறியுள்ளது.
🌺 கிருஷ்ணன், கோவை

என் ஆன்மிகப் பயணத்தில் வழிகாட்டியாக இந்த தளம் இருந்தது. நன்றி!
🌹 சுகந்தி, சென்னை

நான் தேடிய பல தகவல்களை இங்கு ஒரே இடத்தில் நேர்த்தியாகப் பெற்றேன்.
💠 லலிதா, ஈரோடு

இந்த தளம் தினசரி ஒரு நல்ல எண்ணத்தை என் உள்ளத்தில் விதைக்கிறது.
🌿 அருண், திருநெல்வேலி

🛕
108 ஆலயம்
📜
பிரபந்தம்
🎧
ஸ்லோகம்
📚
குறிப்புகள்