அனுப்பியவர் : செந்தில்வடிவு, திருப்புவனம்
நான் 21/11/2011 ல் திருக்கோஷ்யூர் அரசு மேல்நிலைப்பள்ளியில் கணித ஆசிரியையாக ஆண்டவன் அருளால் பணியில் சேர்ந்தேன். கோவிலின் பெருமை பற்றி கேள்விப்பட்டுள்ளேன். ஆனால் நான்அனுபவித்துக் கொண்டுள்ளேன் எனக்கு இரு தம்பிகள் பெரிய தம்பிக்கு 7 வருடங்களாகியும் மழலைப்பேறு இல்லை இந்த கோவிலில் விளக்கு எடுத்தபின்பு தான் குழந்தை பிறந்தது. இளையதம்பிக்கும் இந்த கோவிலில் வேண்டியபிறகு தான் திருமணம் நடைபெற்றது. என் கணவரின் உடல்நிலையில் நல்ல மாற்றம் வந்ததும் அவன் அருளால் தான். வேண்டுவோர்க்கு வேண்டியதை தருபவன். ஒரு முறை மாசிமகம் அன்று கோவிலுக்குச் செல்லும் போது பெரிய விபத்தில் மாட்டிக்கொண்டேன். முகத்தில் அடிபட்டு மூக்கில் ஒரு எலும்பு உடைந்துவிட்டது. அந்நிலையில் என்னைக்காப்பாற்றியவன் பெருமாள். மருத்துவமனையில் ஆண்டவனைப் பார்க்க முடியவில்லையே என மனம் வருந்தினேன். என்னே ஆச்சரியம் நான் இருந்த அறையின் ஜன்னல் வழியே பெருமாள் நான் இருக்கிறேன் என்பது போல் காட்சிதந்தார். என் ஆனந்தகண்ணீருக்கு அளவேயில்லை. பெருமாளுக்கு ஒவ்வொரு மைக்ரோ செகண்டிலும் நன்றி சொல்கிறேன்
நீங்களும் உங்கள் வாழ்வில் பெருமாளின் அற்புதங்களை எங்களுக்கு அனுப்பலாம் உங்கள் பெயருடன் அதை பதிவு செய்வோம்.
அனுப்ப வேண்டிய வாட்ஸ்அப் எண் : 9500074173