Sri Mahavishnu Info: எனது வாழ்வில் பெருமாள் - பகுதி 20 எனது வாழ்வில் பெருமாள் - பகுதி 20

எனது வாழ்வில் பெருமாள் - பகுதி 20

Sri Mahavishnu Info
(பக்தர்களின் வாழ்வில் பெருமாள் நடத்திய நெகிழ்ச்சியான சம்பவங்கள்)

அனுப்பியவர் : குருராஜன், சேலம்

எனக்கு வயது இப்பொழுது 63 எனக்கு 25 வயதில் நடந்த சம்பவம் இங்கே பதிவு செய்து உள்ளேன் நான் அந்த வயது ஓட்டத்தில் ஒரு இஞ்னியரிங் ஒர்க்ஷாப்பில் வேலை செய்து கொண்டு இருந்தேன் நான் வேலை செய்யும் நிறுவன முதலாளி பிரபு அவர்கள் வருடாவருடம் பிரம்ம உற்சவம் சமயம் தவறாமல் திருமலை செல்வது வழக்கமாக கொண்டு உள்ளார். 

பெருமாளின் தீவிர பக்தர்.

திருமலை மற்றும் அல்லாமல் உள்ளூர் பெருமாள் கோயில் களுக்கும் சென்று வழிபாடு செய்யகூடியவர் அது மட்டும் இல்லாமல் பெருமாள் பெயரை சொல்லி ஏதாவது உதவி பெற நாடினால் அந்த உதவியை இல்லை என்று சொல்லாமல் செய்யகூடியவர்

அவர் பெருமாள் கோயில்களுக்கு தன்னால் ஆனதை மிகவும் பய பக்தியுடன் விருப்பத்துடன் செய்ய கூடியவர்

அவர் பெருமாள் கோயில்களுக்கு செய்த தொண்டினை சொல்லி கொண்டே போகலாம்.

அவர் வாழ்க்கையில் நடந்த சம்பவம்

அவர் வருடா வருடம் செல்வதை போல் நான் சொன்ன வருடமும் திருமலைக்கு பிரம்ம உற்சவத்திற்கு சென்றார்

வருடா வருடம் செல்லும் போது அவர் பரம்பரை  பரம்பரையாக வீட்டீல் பூஜைசெய்யும் போது உபயோகித்து வரும் ஒரு பெரிய வெள்ளி தட்டை எடுத்து செல்வது வழக்கம்

இந்த வருடம் திருமலை செல்லும் போது வெள்ளி தட்டை எடுத்து சென்று உள்ளார்

திருமலையில் பெருமாளை தரிசனம் செய்து விட்டு   பிரகாரம் சுற்றி வரும்பொழுது அந்த வெள்ளி தட்டை தவற விட்டு விட்டு மறந்து சேலமும் வந்து விட்டார்

சேலம் வந்து 30 நாட்களுக்கு பிறகு தான் அந்த வெள்ளி தட்டை பார்த்து இருக்கிறார் தட்டு வீட்டில் எங்கு தேடியும்  இல்லை அப்பொழுது தான் அவருக்கு நினைவிற்கு வந்து இருக்கிறது திருமலை தரிசனம் செய்து விட்டு வரும் சமயம் பிரகாரத்தில் தவற விட்டது நினைவு உள்ளது. அப்பொழுது இரவு 2.30 மணி இரவு நேரம் என்று  பார்க்காமல் என் வீட்டிற்கு வந்து

ஒர்க்ஷாப் சென்றோம் போகும் வழியில் நடந்ததை சொல்லி பெருமாள் என்னை சோதனை செய்கிறார் ஏமாற்றமாட்டார். தட்டுகிடைத்து விடும் என்று அவர் சொன்னது என்னுடைய காதில் ஒழித்து கொண்டே இருக்கிறது அவர் சொல்லும் போது தட்டு தொலைந்து 30 நாட்கள் ஆகி விட்டது தட்டு தொலைந்து திருமலையில் திருமலைக்கு பல மாநில மக்கள் வந்து போகிறார்கள் யார் கையில் தட்டு உள்ளதோ இவருக்கு எப்படி கிடைக்கும்

இந்த இரவு நேரத்தில் தூக்கத்தை கெடுத்து உளறுகிறார் என நினைத்து அவருடன் சென்றேன்

வொர்க் ஷாப்  சென்று விபரத்தை சொல்லி திருமலையில் அவருக்கு தெரிந்த நண்பருக்கு டைப் அடித்து திருமலைக்கு கடிதம் எழுதி அனுப்பினார்

என்ன அதிசயம் கடிதம் அனுப்பி 3 வது நாள் தட்டுடன் அவர் நண்பர் சேலத்தில் தட்டு கிடைத்தது முதலாளி சொன்னது போல் பெருமாள் சோதனை தான் செய்து உள்ளார் ஏமாற்றவில்லை

நீங்களும் உங்கள் வாழ்வில்  பெருமாளின் அற்புதங்களை எங்களுக்கு அனுப்பலாம் உங்கள் பெயருடன் அதை பதிவு செய்வோம்

அனுப்ப வேண்டிய வாட்ஸ்அப் எண்
9500074173
💜

பக்தர்கள் சொல்கிறார்கள்

இந்த தளத்தை வாசித்த பிறகு, என் மனம் சாந்தியையும் நம்பிக்கையையும் பெற்றது.
🌸 ரமேஷ், மதுரை

இங்கே உள்ள ஆன்மிக விளக்கங்கள் தெளிவாகவும் எளிமையாகவும் இருக்கின்றன.
🌼 சிந்து, தஞ்சாவூர்

இந்த தளம் என் வீட்டில் ஒரு புனித இடமாகவே மாறியுள்ளது.
🌺 கிருஷ்ணன், கோவை

என் ஆன்மிகப் பயணத்தில் வழிகாட்டியாக இந்த தளம் இருந்தது. நன்றி!
🌹 சுகந்தி, சென்னை

நான் தேடிய பல தகவல்களை இங்கு ஒரே இடத்தில் நேர்த்தியாகப் பெற்றேன்.
💠 லலிதா, ஈரோடு

இந்த தளம் தினசரி ஒரு நல்ல எண்ணத்தை என் உள்ளத்தில் விதைக்கிறது.
🌿 அருண், திருநெல்வேலி

🛕
108 ஆலயம்
📜
பிரபந்தம்
🎧
ஸ்லோகம்
📚
குறிப்புகள்