Sri Mahavishnu Info: கருட புராணம் - 05 கருட புராணம் - 05
📿 வைணவ அடிப்படைகள் | 🛕 திவ்யதேச வரலாறுகள் | 📘 நாலாயிர திவ்யபிரபந்தம் | 🎧 ஸ்லோகங்கள் | 📅 தினசரி பக்தி வழிகாட்டி | ❓ பக்தி கேள்விகள் | 📖 ஆன்மீக நூல்கள் | 🧒 குழந்தைகள் பக்தி பகுதி | 🛕 தரிசன நேரங்கள் | 📜 பக்தர் அனுபவம் | 🛐 ஸ்ரீவைணவ பாடசாலை | 🗓️ ஸ்ரீவைணவ நாட்காட்டி | 🔱 விஷ்ணு சஹஸ்ரநாமம் | 🌄 ஸ்ரீ வெங்கடேச மஹாத்மியம் | 🌺 திருப்பாவை | 🛕 திருத்தல தரிசனம் | ✨ அற்புத நிகழ்வுகள் | 👣 வைஷ்ணவ ஆச்சாரியர்கள் | 🕉️ நாமஸ்மரணையின் மகிமை | 🎙️ பக்தி ஸ்லோகங்கள் | 🔔 கோவில் விழாக்கள்

கருட புராணம் - 05

Sri Mahavishnu Info
05. அறிதினும் அரிது மானுடப் பிறவி!

“பறவைகளுக்கு அரசே! உலகில் எண்பத்து நான்கு லட்சம் யோனி பேதங்கள் உள்ளன. அவை அண்டகம், உற்பிசம், சராவுசம், சுவேதசம் என்று நான்கு வகையில் உள்ளன.

“அண்டகம் என்ற வகையில் முட்டையிலிருந்து இருபத்தோரு லட்சம் பறவைகள் தோன்றின. உற்பிச வகையில் இருபத்தோரு லட்சம் மரஞ், செடி, கொடி, தாவர வகைகள் தோன்றின. கருப்பப் பையிலிருந்து தோன்றுவதான சிராயுசம் வகையில் இருபத்தோரு லட்சம் மனிதர்கள் தோன்றினர். வேர்வையிலிருந்து தோன்றுவதான சுவேதசம் வகையில்  இருபத்தோரு லட்சம் கொசு முதலியவைகளும் தோன்றியுள்ளன.

“கருடா! பிறவிகள் அனைத்திலும் மானுடப் பிறவி அரிதினும் அரிது. மனிதப் பிறவியே புண்ணியப் பிறவியாகும். எல்லா விதத்திலும் மானிடப் பிறவியே சிறப்புடையது. புண்ணியத்தால் அடைந்த மானுடப் பிறவியால் பாக்கியம் அடையாதவர்கள், தமக்குத் தானே வஞ்சனை செய்து கொள்பவர்களாவார்கள். 

“மண், பொருள், ஆசைகள் எனப்படும் இம்மூன்று ஆசைகளால், மயக்கமுற்று செய்யத் தகாதவற்றைச் செய்து தன் மனசாட்சிக்கும், மனிதாபிமான உணர்வுக்கும், மாறுபாடான தீயச் செயல்களைச் செய்து, தர்மங்களை அறியாமல் உழல்பவன் எவனோ, அவன் மிருகங்களுக்கு ஒப்பாவான்.

“இதனால் அறிவுணர்வும், அன்புணர்வும், அறநெறி வாழ்வும் வளராது. அளவில்லாமல் ஆசைகள் வளர்ந்து கொண்டேயிருக்கும். ஆசையே அழிவுக்குக் காரணம் என்று போதிக்கும் மகான்களோ, யாவராலும் போற்றப்பட்டு, நம் இறுதி நாளான அந்திம காலத்தில் சுவர்க்க லோகத்தை அடைவார்கள்.

“ஆசைக்கு அடிமையானவர்கள் வயோதிகப் பருவம் வந்ததும், தன் புத்திரர், பௌத்திரர்கள் துணித்து, ‘கிழப் பிணமே!  வாய் திறவாமலே வெறுமனே விழுந்து கிட!’ என்று இழித்தும், பழித்தும், அதட்டியும் பேசும் ஏச்சு மொழியைக் கேட்டு,  மனம் பொறுமிக்கிடப்பான். ஆகையால் கல்வியும் வித்தையும் கற்றுணர்ந்தவனேயானாலும் ஞானம் (மெய்யறிவு) இல்லாவிட்டால் பொண்ணுக்கு அடிமையாகி கிடப்பான்.
                                         
“கருடா! இந்திரிய உணர்வினாலேயே ஒவ்வோர் ஜீவராசிகள் நாசம் அடையும் போது பஞ்ச இந்திரிய இச்சைகளையுடைய மனிதன் அடையக்கூடிய கேடுகள் கொஞ்சமாகயிராது என்பதில் சந்தேகமில்லை. இல்லற வாழ்வின் சுகதுக்கங்களில் எது அதிகமாயினும் பெண்டுபிள்ளைகள் அதிகமாகிப் பந்தபாசத்தால் கட்டுண்ட மனிதன் நிம்மதியடைய மாட்டான்.

“உலகில் மனிதன் பிறந்து பிறந்தே இறக்கிறான்.ஆசைகளால் நோயுற்று மாண்டு விடுகின்றான். ஒருவரும் தனக்கு துணையில்லாமல் ஒருவனாகவே யாருக்கும் சொல்லாமல் மடிந்து போகிறான். பொய்யான பத்திரங்கள் எழுதி பொய் சொல்லி, ஏமாற்றி, வழிப்பறி, கொலை புரிந்து, தீயச் செயல்களைச் செய்து, தான் சேர்த்த பொருள்களை, உரியவருக்கு அளித்து, பழி பாவங்களோடு போகிறான்.

“அவன் மனைவி மக்கள் பாவங்களில் பங்கு ஏற்றுக் கொள்வாரில்லை. முக்திக்குச் சாதனமான, தவம், தருமம், தானம் செய்து, பிரபக்தி மார்க்கம் எனப்படும் தேவ சேவைகளை செய்வதே உத்தமமாகும்.” இவ்வாறு ஸ்ரீ நாராயணர் உணர்த்தியருளினார்.

உடம்பு - சில புள்ளி விவரங்கள்
நவீன விஞ்ஞானம் கூட தடுமாறக்கூடிய உடலைப் பற்றிய விளக்கங்களை, கருடபுராணம் துல்லியமாய் நம் கண் முன் வைக்கிறது.

உடம்பில் மூன்று கோடியே ஐம்பது இலட்சம் உரோமங்கள், தலையில் எழுபது இலட்சம் உரோமங்கள், இருபது நகங்கள், முப்பத்திரண்டு பற்கள் உள்ளதாகவும், மனிதனின் உடம்பில் உள்ள மொத்த தசையின் எடை ஆயிரம் பலம், இரத்தம் நூறு பலம், கொழுப்பு பத்து பலம், தோலின் எடை ஏழு பலம், மஜ்ஜையின் எடை பன்னிரெண்டு பலம், மிகவும் உயர்ந்த இரத்தம் மூன்று பலமும் உள்ளதாக கூறுகிறது.

நவீன வசதிகள் இல்லாத காலத்தில் கூறப்பட்டுள்ள இந்த புள்ளி விபரங்களை, நவீன மருத்துவம் முழுமையாக கூற முடியாமல் இன்றும் எல்லாவற்றிக்கும் ஒரு சராசரியான அளவைத் தான் கூறி வருகிறது.

(ஒரு தோலா- பத்து கிராம் (வடஇந்திய நகை கடைகளில் இந்த தோலா அளவு இன்றும் சொல்லப்படுகிறது), மூன்று தோலா = ஒரு பலம், ஒரு பலம் = முப்பத்தி ஐந்து கிராம், அதாவது ஒரு பலம் என்பது 6/5 அவுன்ஸ்)

🪷 வேத வாசனை பரிமளம் – உங்கள் பூஜைக்கு அருமையான தேர்வு!

Betala Fragrance Dhoop

🕉️ Betala Fragrance - மஸ்க் வாசனை கொண்ட தூபக் குச்சிகள்
🌺 200 கிராம் பேக் + ஹோல்டர் உடன்
🔥 நறுமணமும், ஆன்மிகத்தும் இணைந்த மனதை அமைதிப்படுத்தும் வாசனை
🌼 பூஜை, தியானம், சந்தன வாசனை விரும்புவோருக்கான சிறந்த தேர்வு!

4.2 ★ (139 மதிப்பீடுகள்) | Amazon Verified

💜

பக்தர்கள் சொல்கிறார்கள்

இந்த தளத்தை வாசித்த பிறகு, என் மனம் சாந்தியையும் நம்பிக்கையையும் பெற்றது.
🌸 ரமேஷ், மதுரை

இங்கே உள்ள ஆன்மிக விளக்கங்கள் தெளிவாகவும் எளிமையாகவும் இருக்கின்றன.
🌼 சிந்து, தஞ்சாவூர்

இந்த தளம் என் வீட்டில் ஒரு புனித இடமாகவே மாறியுள்ளது.
🌺 கிருஷ்ணன், கோவை

என் ஆன்மிகப் பயணத்தில் வழிகாட்டியாக இந்த தளம் இருந்தது. நன்றி!
🌹 சுகந்தி, சென்னை

நான் தேடிய பல தகவல்களை இங்கு ஒரே இடத்தில் நேர்த்தியாகப் பெற்றேன்.
💠 லலிதா, ஈரோடு

இந்த தளம் தினசரி ஒரு நல்ல எண்ணத்தை என் உள்ளத்தில் விதைக்கிறது.
🌿 அருண், திருநெல்வேலி

🛕
108 ஆலயம்
📜
பிரபந்தம்
🎧
ஸ்லோகம்
📚
குறிப்புகள்