Sri Mahavishnu Info: எனது வாழ்வில் பெருமாள் - பகுதி 21 எனது வாழ்வில் பெருமாள் - பகுதி 21

எனது வாழ்வில் பெருமாள் - பகுதி 21

Sri Mahavishnu Info

(பக்தர்களின் வாழ்வில் பெருமாள் நடத்திய நெகிழ்ச்சியான சம்பவங்கள்)

அனுப்பியவர்
அடியேன் சத்யநாராயண ராமானுஜ தாஸன்,கிருஷ்ணராயபுரம், கரூர் மாவட்டம்.

அனைவரது வாழ்விலும் ஸ்ரீமந் நாராயணன் தம் கருணை இல்லாமல் இருக்காது. அடியேனுக்கு அவர் என்னுடனிருந்து எனக்கு ஆத்மார்த்தமான சத்விஷயங்களை தந்தருளியதை பறை சாற்றிக் கொள்ள வேண்டாம் என எண்ணினேன்.

ஆனால் வேளுக்குடி கிருஷ்ணன் ஸ்வாமிகள் தம் காலக்ஷேபத்தில், இது போன்ற விஷயங்களை பகிர்ந்து கொள்ளவதால் அனைவருக்கும் தன்னம்பிக்கை உருவாகும் என்ற கூற்றால் தற்போது பகிர்ந்து கொள்ள தங்களுடன் இணைக்கிறேன்.

என் வாழ்க்கையில் ஸ்ரீஹரி தம் கருணை எண்ணிலடங்காதவை. ஒவ்வொன்றாக தங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்.

எனக்கு திருமணம் ஆன  நூறு நாட்களில் என் திருத்தகப்பனார் ஆச்சாரியார் தம் திருவடிகளை அடைந்தார். அது சமயம் அடியேனுக்கு வயது இருபத்தி ஒன்று. அது நாள் முதல் பரந்தாமன் என்னுடன் இருக்கிறார் என்பதை உணர ஆரம்பித்தேன். எனக்கு ஒரு விபத்தில் இரண்டு கால்களும், வலது கையும் அடிபட்டு முப்பத்து ஆறு நாட்கள் எண்ணெய் கட்டு போட்டு சரிசெய்யப்பட்டது‌.

அப்போது எனது தாயார், நான் பிறந்த உடன் சோளிங்கர் நரசிம்ம பெருமாளை மங்களாசாசனம் செய்ய அழைத்து வருவதாகஒரு பிரார்த்தனை செய்து இருந்ததாகத் தெரிவித்தார்.

கட்டுகள் பிரித்து ஒரு மாதம் கழித்து என் மனைவியுடன் சன்னதிக்குப் புறப்பட்டேன். என் தாயார் மிகவும் பயந்தார். சிறிது காலம் கழித்து செல்லலாம் என்று கூறினார்.

அடியேன் அவரிடம் பெருமாளே எனக்கு மலை ஏறும் போது பாதுகாப்பாக வருவார் என்று கூறி விட்டு, தாயாரின் ஆசிகளுடன் புறப்பட்டேன்.

அடியேன் கூறியது போலவே உற்சவ நரசிம்மர் அடியேன் பின்னாலேயே வந்தது, ஆயிரம் படிகளை கடந்த பிறகு தான் தெரிந்தது. அப்போது தான், பெருமாளுக்கு வழி விடுங்கள் என்று சத்தம் கேட்டது. நரசிம்மர் அங்கு இருந்து முன் சென்று அலங்காரத்துடன் ஸேவை சாதித்தார். மனதார இறைவனை நம்பினால் கண்டிப்பாக நம்முடன் இருப்பார் என்று தெரிந்து கொள்ளலாம்.

நீங்களும் உங்கள் வாழ்வில்  பெருமாளின் அற்புதங்களை எங்களுக்கு அனுப்பலாம்.
  • ➤ உங்கள் பக்தி அனுபவம் பகிர
  • 💜

    பக்தர்கள் சொல்கிறார்கள்

    இந்த தளத்தை வாசித்த பிறகு, என் மனம் சாந்தியையும் நம்பிக்கையையும் பெற்றது.
    🌸 ரமேஷ், மதுரை

    இங்கே உள்ள ஆன்மிக விளக்கங்கள் தெளிவாகவும் எளிமையாகவும் இருக்கின்றன.
    🌼 சிந்து, தஞ்சாவூர்

    இந்த தளம் என் வீட்டில் ஒரு புனித இடமாகவே மாறியுள்ளது.
    🌺 கிருஷ்ணன், கோவை

    என் ஆன்மிகப் பயணத்தில் வழிகாட்டியாக இந்த தளம் இருந்தது. நன்றி!
    🌹 சுகந்தி, சென்னை

    நான் தேடிய பல தகவல்களை இங்கு ஒரே இடத்தில் நேர்த்தியாகப் பெற்றேன்.
    💠 லலிதா, ஈரோடு

    இந்த தளம் தினசரி ஒரு நல்ல எண்ணத்தை என் உள்ளத்தில் விதைக்கிறது.
    🌿 அருண், திருநெல்வேலி

    🛕
    108 ஆலயம்
    📜
    பிரபந்தம்
    🎧
    ஸ்லோகம்
    📚
    குறிப்புகள்