📿 வைணவ அடிப்படைகள் | 🛕 திவ்யதேச வரலாறுகள் | 📘 நாலாயிர திவ்யபிரபந்தம் | 🎧 ஸ்லோகங்கள் | 📅 தினசரி பக்தி வழிகாட்டி | ❓ பக்தி கேள்விகள் | 📖 ஆன்மீக நூல்கள் | 🧒 குழந்தைகள் பக்தி பகுதி | 🛕 தரிசன நேரங்கள் | 📜 பக்தர் அனுபவம் | 🛐 ஸ்ரீவைணவ பாடசாலை | 🗓️ ஸ்ரீவைணவ நாட்காட்டி | 🔱 விஷ்ணு சஹஸ்ரநாமம் | 🌄 ஸ்ரீ வெங்கடேச மஹாத்மியம் | 🌺 திருப்பாவை | 🛕 திருத்தல தரிசனம் | ✨ அற்புத நிகழ்வுகள் | 👣 வைஷ்ணவ ஆச்சாரியர்கள் | 🕉️ நாமஸ்மரணையின் மகிமை | 🎙️ பக்தி ஸ்லோகங்கள் | 🔔 கோவில் விழாக்கள்

வாசனை - இது எவ்வாறு செயல்படுகிறது ?

Sri Mahavishnu Info
ஒருவர் செருப்பை மற்றொருவர் போட்டாலோ, இல்லை துணி மணியை உபயோகித்தாலோ, இல்லை ஒருவர் படுக்கையில் அடுத்தவர் படுத்தாலோ, இல்லை ஒருவர் மாலையை இன்னொருவர் சூட்டிக்கொண்டாலோ, ஒருவர் பாத்திரத்தை இன்னொருவர் உபயோகித்தாலோ, ஒருவர் உள்ளங்கையை இன்னொருவர் உள்ளங்கையால் தொட்டாலோ, அவர்கள் குணங்கள் வாசனைகளாக நமக்கு வரும்

திருமணத்தின் பிறகு இருவருடைய மனமும் ஒத்து போக வேண்டும், சண்டை போட கூடாது என்பதால் இருவேறு குடும்பங்களில் இருந்து வந்த இவர்களுடைய குணங்களும் வாசனைகளும் இருவருக்கும் ஒன்றாக வேண்டும்.

அதற்க்கு தான் திருமண சடங்குகளில் ஒருவர் மாலையை இன்னொருவருக்கு போடுதல், ஒருவர் எச்சில் செய்த தட்டில் இன்னொருவர் சாப்பிடுதல், இருவர் உள்ளங்கையையும் சேர்த்து பாணிக்கிரஹணம் என்று பிடித்தல், ஒருவர் காலை இன்னொருவர் தொடுதல், ஒருவர் கட்டிக்கொண்டிருக்கும் துணியை இன்னொருவர் துணியுடன் முடி போடுதல், என்று இருவருடைய வாசனைகள், குணங்களை பரிமாறி கொள்ளும் சடங்குகளாக வைத்து இருக்கின்றனர்.

அதனால் மனமும் குணமும் வாசனைகளும் ஒத்துப்போனால், சண்டைகள் குறைந்து ஒற்றுமையாக வாழ்வார்கள் என்பதே காரணம்.

இதனால் தான் சாஸ்திரங்கள் மஹான்கள் /பக்தர்கள் சாப்பிட்ட எச்சிலை சாப்பிடு, அவர்களுக்கு கால் பிடித்து விடு, அவர்கள் உடுத்திய வஸ்திரத்தை நீ வாங்கிக்கொள், அவர்களுக்கு போட்ட பூமாலையை நீ போட்டு கொள், அவர்கள் கால் பட்ட மண்ணை தலையில் போட்டு கொள் என்றெல்லாம் சொல்வதற்கு காரணமும் இதுவே . 

அப்படியாவது அவர்களிடம் உள்ள தெய்வீகத்தில், குணங்களில் ,வாசனைகளில் கொஞ்சமாவது அழுக்கு படிந்த நமக்கு தப்பி தவறி வந்து விடாதா?? என்ற காரணமே.

கோயில்களில் இறைவனுக்கு சாத்திய புஷ்பங்கள் வஸ்திரங்கள் பிரசாதங்கள் நமக்கு கொடுக்கும் காரணமும் இதுவே .

உபநிஷத்துகளில் மிக பெரிய தவங்கள் செய்த ஒரு மகரிஷி இன்னொருவர் செருப்பை போட்டு கொண்டதினால் இன்னொரு பிறவி எடுத்தார் .

தண்ணீருக்கு இந்த வாசனைகளை போக்கும் சக்தி உண்டு. அதனால் தான் ரிஷிகள் ஒரு கமண்டலுவில் அருகில் தண்ணீர் வைத்து கொள்வார்கள். 

ஒரு திருடனின் வாசனையை மோப்பம் பிடிக்கும் நாய், தொடர்ந்து சென்று அவன் போகும் பாதையை கண்டுபிடிக்கிறது. ஆனால் அவன் ஒரு நீர் நிலையை தாண்டிவிட்டால் அந்த நாயினால் அவனுடைய வாசனைகளை கண்டுபிடிக்க முடிவதில்லை. தண்ணீருக்கு அத்தனை சக்தி உண்டு. அதனால் தான் பெரியோர்கள், மஹான்கள் அடிக்கடி குளித்துக் கொண்டே இருக்கின்றனர் ,

எனவே நல்ல எண்ணம் கொண்டவர்களுடன் பழகி நல்ல இறை சிந்தனையை வளர்த்து மற்றவர்களுக்கு தீங்கிழைக்காமல் வாழும் எண்ணம் கொண்டவர்களுடன் இணைந்து அந்த எண்ணம் உங்களுக்கும் மேன்மேலும் அதிகரித்து வாழ்வில் பல இன்பங்களை பெற்று மகிழுங்கள் 
💜

பக்தர்கள் சொல்கிறார்கள்

இந்த தளத்தை வாசித்த பிறகு, என் மனம் சாந்தியையும் நம்பிக்கையையும் பெற்றது.
🌸 ரமேஷ், மதுரை

இங்கே உள்ள ஆன்மிக விளக்கங்கள் தெளிவாகவும் எளிமையாகவும் இருக்கின்றன.
🌼 சிந்து, தஞ்சாவூர்

இந்த தளம் என் வீட்டில் ஒரு புனித இடமாகவே மாறியுள்ளது.
🌺 கிருஷ்ணன், கோவை

என் ஆன்மிகப் பயணத்தில் வழிகாட்டியாக இந்த தளம் இருந்தது. நன்றி!
🌹 சுகந்தி, சென்னை

நான் தேடிய பல தகவல்களை இங்கு ஒரே இடத்தில் நேர்த்தியாகப் பெற்றேன்.
💠 லலிதா, ஈரோடு

இந்த தளம் தினசரி ஒரு நல்ல எண்ணத்தை என் உள்ளத்தில் விதைக்கிறது.
🌿 அருண், திருநெல்வேலி

🛕
108 ஆலயம்
📜
பிரபந்தம்
🎧
ஸ்லோகம்
📚
குறிப்புகள்