Sri Mahavishnu Info: கருட புராணம் - 15 கருட புராணம் - 15

கருட புராணம் - 15

Sri Mahavishnu Info

15. யமபுரியும், யமதர்மராஜனும்

“பறவைகளுக்கு அரசே! அங்குஷ்ட பரிமாணமுள்ள ஜீவன் கர்ம சரீரம் பெற்று வன்னிமரத்தை விட்டு யமகிங்கரர்களுடன் 20 காத தூரவழி விஸ்தாரமுள்ள சித்திரகுப்தனது பட்டினத்தின் வழியாக யமபுரிக்குச் செல்வான்.

“அந்த யம பட்டணம் புண்ணியஞ் செய்தோரின் பார்வைக்கு மிகவும் ரம்மியமாகக் காணப்படும்.

“எனவே, இறந்தவனைக் குறித்துப் பூவுலகில் இரும்பாலாகிய ஊன்றுகோல், உப்பு, பருத்தி, எள்ளோடு பாத்திரம் ஆகிய பொருள்களைத் தானம் செய்ய வேண்டும்.

“இத்தகைய தானங்களால் யமபுரியுல்லுள்ள யமபரிசாரகர்கள் மிகவும் மகிழ்ந்து ஜீவன் யம பட்டினத்தை நெருங்கியதுமே காலதாமத படுத்தாமல் அவன் வந்திருப்பதை யமதர்மராஜனுக்குத் தெரிவிப்பார்கள்.

“கருடா! பாபம் செய்த ஜீவனுக்கோ! அந்த யமபுரியே பயங்கரமாகத் தோன்றும். அவனுக்கு தர்ம ராஜனாகிய யமனும் அவனது தூதர்களும், அஞ்சத்தக்க பயங்கர ரூபத்தோடு தோற்றமளிப்பார்கள். அந்த பாவஞ் செய்தவனும் அவர்களைக் கண்டு பயந்து பயங்கரமாக ஓலமிடுவான்.

“புண்ணியஞ் செய்த ஜீவனுக்கு யமதர்மராஜன் நல்ல ரூபத்தோடு தோற்றமளிப்பான். புண்ணியம் செய்த ஜீவன் யமனைக் கண்டு மகிழ்ந்து இறைவனின் தெய்வீக ஆட்சியை கண்டு வியப்பான்.

“யம தர்மராஜன் ஒருவனேதான் என்றாலும், ‘பாபிக்குப் பயங்கர ரூபதொடும், புண்ணியஞ் செய்தவனுக்கு நல்ல ரூபதொடும்’ தோன்றுவான். புண்ணியஞ் செய்த ஜீவன் யமனருகே தோன்றுவானாயின், 'இந்த ஜீவன் மண்டல மார்க்கமாக பிரம்ம லோகம் சேரத் தக்கவன்' என்று தான் வீற்றிருக்கும் சிம்மாசனிதிலிருந்து சட்டென்று எழுந்து நின்று மரியாதை செலுத்துவான். யம தூதர்களும் வரிசையாக மரியாதை செலுத்துவார்கள்.

“பாவஞ் செய்த ஜீவனை பாசத்தில் கட்டிப் பிணைத்து உலக்கையால் ஓச்சி ஆடுமாடுகளைப் போல இழுத்துக் கொண்டு காலன்முன் நிறுத்துவார்கள். அங்கு பூர்வ ஜென்மத்தில் அந்த ஜீவன் செய்த புண்ணிய பாவங்களுக்கு ஏற்ப வேறு ஜென்மம் அடைவான்.

“அதிகம் புண்ணியம் செய்திருந்தால் அந்த ஜீவன் யம தூதர்களால் துன்புறுத்தப்படாமல் யமதர்மன் முன்பு சென்று தேவனாக மாறித் தேவருலகம் செல்வான். பாபம் செய்தவனாகின் யமதர்மனைக் காண்பதற்கும் அஞ்சுவான். உடல் நடுங்க பயப்படுவான். தூதர்கள் யமதர்மன் கட்டளை ஏற்று நரகத்தில் விழுந்து பிறகு கிருமி புழு முதலியவற்றின் ஜென்மத்தை அடைவான்.

“அந்த ஜீவனுக்குப் புண்ணியம் மிதமாக இருக்குமானால் முன்பு போல் மானிடப் பிறவியை பெறுவான். தான தருமங்களைச் செய்தவன் யாராயினும், எந்த ஜென்மத்தை அடைந்தாலும் அவன் செய்த தானதர்ம பயன்களை அந்த ஜென்மத்தில் அடைவான்.
                                         
“செல்வந்தன், அறிவிலே பேரறிஞன், வலுவிலே பலசாலி, கலைத் துறையில் பெருங் கலைஞன், விஞ்ஞானி, மதத் தலைவர் என்றெல்லாம் புகழ்ப் பெறுவான். அவன் இறந்தவுடனேயே அவன் உடலில் அரைஞான் கயிறு கூட அறுத்தெறியப்பட்டு விடும். அவன் ஜீவன் பிரிந்த உடனே, அவன் உடலை குழியில் புதைத்து மண்ணோடு மண்ணாகும்.

“மானிடப் பிறவி கிடைப்பது அரிது. அப்படியே கிடைத்தாலும் கூன், குருடு, செவிடு, மலடு நீங்கிப் பிறத்தல் அரிது. ஒழுக்கத்தில் பெற வேண்டிய முக்தியை பெறவில்லை என்றால், தவம் முதலியவற்றைச் செய்து வருந்தித் தன் கரத்தில் அடைந்த அமிர்தம் நிறைந்த பொற்கவசத்தைச் சிந்தி பூமியில் கவிழ்ந்தவனுக்கு ஒப்பாகுவான்!” என்று திருமால் ஓதியருளினார்.

“தர்மத்துவஜன் என்ற ஒருவன், சதாசர்வ காலமும், யமனருகிலேயே இருந்து கொண்டிருப்பான். பூமியில் இறந்தவனைக் குறித்து கோதுமை, கடலை, மொச்சை, எள், கொள்ளு, பயிறு, துவரை ஆகிய இந்த ஏழு வகையான தானியங்களைப் பாத்திரங்களில் வைத்துத் தானஞ் செய்தால், அந்தத் தர்மத்துவஜன் திருப்தி அடைந்து யமனிடத்தில் ‘இந்த ஜீவன் நல்லவன், புண்ணியஞ் செய்த புனிதன்!’ என்று விண்ணபஞ் செய்வான்.
💜

பக்தர்கள் சொல்கிறார்கள்

இந்த தளத்தை வாசித்த பிறகு, என் மனம் சாந்தியையும் நம்பிக்கையையும் பெற்றது.
🌸 ரமேஷ், மதுரை

இங்கே உள்ள ஆன்மிக விளக்கங்கள் தெளிவாகவும் எளிமையாகவும் இருக்கின்றன.
🌼 சிந்து, தஞ்சாவூர்

இந்த தளம் என் வீட்டில் ஒரு புனித இடமாகவே மாறியுள்ளது.
🌺 கிருஷ்ணன், கோவை

என் ஆன்மிகப் பயணத்தில் வழிகாட்டியாக இந்த தளம் இருந்தது. நன்றி!
🌹 சுகந்தி, சென்னை

நான் தேடிய பல தகவல்களை இங்கு ஒரே இடத்தில் நேர்த்தியாகப் பெற்றேன்.
💠 லலிதா, ஈரோடு

இந்த தளம் தினசரி ஒரு நல்ல எண்ணத்தை என் உள்ளத்தில் விதைக்கிறது.
🌿 அருண், திருநெல்வேலி

🛕
108 ஆலயம்
📜
பிரபந்தம்
🎧
ஸ்லோகம்
📚
குறிப்புகள்