
இறைவனின் திருநாமத்தைத் தியானித்திருத்தல் – நாமஸ்மரணை என்பது மனமாசுகளை நீக்கக் கூடியது. உடம்பின் அழுக்கு நீங்க நீராடுகிறோம்; மனதின் அழுக்கு நீங்க நாமஸ்மரணை தான் தேவை.
உடல் தூய்மையாக இருந்தால் நோய்கள் அணுகாது, மனம் தூய்மையாக இருந்தால் இன்னலுக்கு உள்ளாகும் நிலை இருக்காது. நம்முடைய அமைதியும், மகிழ்ச்சியும் மனத்தூய்மையைப் பொறுத்ததாகும்.
நேர்மறையான எண்ணங்களே உடல்நலத்துக்கும் மனோபலத்துக்கும் ஆதாரம்.
இதயம் அன்பால் நிரம்பியிருக்க வேண்டியது அவசியம். அப்படி இருந்தால் நம் எண்ணங்களும் நேர்மறையாகவே இருக்கும். அது நம்மை நேரிய வழியில் நடத்தும்.
'எண்ணம் போல் வாழ்வு' என்பார்கள். தூய்மையற்ற எண்ணங்கள் நம்மை தவறான செயல்களுக்கு இட்டுச் செல்கின்றன.
வெற்றி & நற்பலன் பெற வெறும் ஆசை மட்டும் போதாது – எண்ணத்தூய்மை வேண்டும். அதற்கே நாமஸ்மரணை முக்கியம்.
நம்மால் ஒருநாளாவது உணவை தவிர்க்க முடியாது – உடலை பாதுகாப்பது முக்கியம். அதே போல மனதிற்கும் நாமஸ்மரணை உணவாக வேண்டும் என்பதை நாம் உணர வேண்டும்.
நம்முள் உறையும் தெய்வ சக்தியை ஒளிவிட்டு வைத்திருக்கும் ஆன்மீக வழி நாமஸ்மரணை தான்.