Sri Mahavishnu Info: கருட புராணம் - 24 கருட புராணம் - 24

கருட புராணம் - 24

Sri Mahavishnu Info
24. எள் , தருப்பை முதலியன பற்றி

கருடன், திருமாலைப் பணித்து, “சர்வேசா! தாங்கள் இதுவரை கூறிய விசயங்களை மிகவும் சுருக்கமாக சொல்லிவிட்டீர்கள். கருமங்களைச் செய்யும் போது கருமஞ் செய்ய வேண்டிய ஸ்தலத்தை கோமியத்தால் ஏன் மெழுக வேண்டும். பிதுர்களுக்குரிய கர்மங்களைச் செய்யும் போது மட்டும் எள்ளையும், தர்ப்பைப் புற்களையும் உபயோகிப்பதேன்?

“கட்டிலில் படுதுறங்கியபடியே இறந்தவர்கள் நற்கதியடைய மாட்டார்கள். அப்படியானால் இறக்கும் நிலையை அடைந்தவன் எந்த இடத்தில் எப்படி இறத்தல் வேண்டும்? தானங்களை யெல்லாம் எப்படிச் செய்தல் வேண்டும். இவற்றையெல்லாம் அடியேனுக்குத் தெளிவாகவும் விளக்கமாகவும் கூறியருள வேண்டும்.” என்று பிரார்த்தித்தார். உடனே புருஷோத்தமன் கருடனை நோக்கிக் கூறலானார்:

“வைனதேயா! நல்ல கேள்வி! சொல்கிறேன். நீயும் கவனமாக கேட்பாயாக. புத்திரனைப் பெறாதவனுக்கு எந்த உலகத்திலும் இன்பமில்லை. தர்மமும் தவமும் செய்யவில்லை என்றால் அவனது மனைவியின் வயிற்றில் கர்ப்பம் தரிக்காது. அப்படியே தரித்தாலும் அது பத்து மாதம் நிரம்புவதற்கு முன்னாலேயே கரைந்து, கழிந்து போகும்.

“கருவானது கரைந்து சிதைந்தால் புருஷனுக்கு நற்கதி கிடைக்காது. நன்மைகனைப் பெற்றவனே எல்லா உலகங்களிலும் நன்மையை அடைவான்.

“கருமங்களைச் செய்யத் துவங்குவதற்கு முன்னாலேயே ஒரு குறிப்பிட்ட ஸ்தலத்தில் திருவலக்கால் துடைத்து சுத்தம் செய்து, கோமியத்தால் நன்றாக மெழுகிய பிறகே, எந்தக் கர்மத்தையும் செய்ய வேண்டும்.

“சுத்தம் செய்யாமல் செய்தால், அரக்கரும், பூதங்களும், பிரேதங்களும், பைசாசங்களும், அங்கு செய்யவிடாமல் அக்கர்மங்களை முற்றுப்பெறாதவாறும் தடுத்து நிறுத்தி விடும்.

“சுத்தம் செய்த ஸ்தலத்தில் கருமம் செய்தால் தேவர்கள் அங்கு வந்து அக்கருமங்களை நிறைவேறச் செய்வார்கள். தூய்மை செய்யாதிடத்தில் கர்மம் செய்தால் பயனை இறந்தவன் அடைய முடியாமற் போவதோடு, இறந்தவன் நரகத்தை அடைய நேரிடும்.
     
“எள் என்பது எனது வியர்வையிலிருந்து தோன்றியதாகையால் அந்தத் தானியம் மிகவும் பரிசுத்தமானதாகும். அந்த எள் இருவகைப்படும். கருப்பு எள், வெள்ளை எள் என்ற இரு வகையில் எந்த நிறமுள்ள எள்ளையேனும் தானங்களோடு சேர்த்துக் கொடுத்தால் அதிகப் பயன் உண்டாகும். சிரார்த்த காலத்தில் கருப்பு எள்ளைச் சேர்த்தால் பிதுர்த் தேவர்கள் மிகவும் திருப்தியடைவார்கள்.

“சூசைப் புல்லாகிய தர்ப்பைப்புள், ஆதியில் ஆகாயத்தில் உண்டாயிற்று. அந்தத் தருப்பையின் இருகடையிலும் பிரமனும் சிவனும் அதன் நடுவே ஸ்ரீ ஹரியும் வாசஞ் செய்கின்றனர். தர்ப்பை இல்லாமல் சிரார்த்தம் எதுவும் செய்யலாகாது. பிராமணருக்கும், மந்திரத்திற்கும் தர்ப்பைக்கும், அக்கினிக்கும், திருத்துழாயக்கும் (துளசி) நிர்மாலிய தோஷமில்லை. ஆகையால் பயன்படுத்திய தர்ப்பைப் புல்லையே மீண்டும் உபயோகப்படுத்தலாம்.

“ஏகாதசி விரதமும், திருத்துழாயாகிய துளசியும், பகவத் கீதையும், பசுவும் பிராமண சக்தியும், ஸ்ரீ ஹரியின் சரனுமும் ஆகிய இவையனைத்தும் சம்சார சாகரத்தை கடக்க வேண்டியவருக்கு நல்ல தெப்பமாகும்.

“இறக்கும் நிலையை அடைந்தவன் கோமயத்தில் நன்றாக மெழுகப்பட்ட ஸ்தலத்தில் சூசைப் புல்லை பரப்பி, அதன் மீது எள்ளை இறைத்து, அந்தத் தர்ப்பைப் புல்லனையின் மீது சயனித்து, தருப்பைப் புல்லையும் துளசியையும் கையில் ஏந்தி, எனது நாமங்களை வாயார புகழ்ந்த வண்ணம் மடிவாநாகில், அயனரனாதியருக்கும் அரிதாகிய நிரதிசிய இன்பவீடாகிய நமது உலகத்தை வந்தடைவான்.

“மாய்ப்பவன் தர்ப்ப சயனத்தில் குப்புறப்படுத்தலாகாது. முதுகு கீழறவே சயனஞ் செய்தல் வேண்டும். உயிர் நீங்கும் முன்பே திருத்துழாயோடு, தனது நல்லுலக வாழ்வைக் கருதி தானங்களை எல்லாம் கொடுத்து விட வேண்டும். அவற்றில் உப்பை தானம் செய்வது மிகவும் சிறப்பாகும். உப்பானது, விஷ்ணு லோகத்தில் உண்டானதாகும். ஆகையால் அதற்கு மகிமை அதிகம். மரித்தவன் உப்பைத் தானம் செய்வதால் சுவர்க்கலோகத்தை அடைவான்.” என்றார் திருமால்.
Two Moustaches Brass Diya

🪔 Two Moustaches – சங்கு சக்ர நாமம்: வடிவம் கொண்ட பிரத்யேக பித்தளைக் கம்பத் தீபம்

✨ சங்கம், சக்கரம், பத்மம், கதாயுடன் வடிவமைக்கப்பட்ட பரந்த கால் அடிப்படையுடன் அழகிய தீபம்

🎉 இப்போது 40% தள்ளுபடி!

⭐ மதிப்பீடு: 4.3 / 5 (703 பேர்)

💜

பக்தர்கள் சொல்கிறார்கள்

இந்த தளத்தை வாசித்த பிறகு, என் மனம் சாந்தியையும் நம்பிக்கையையும் பெற்றது.
🌸 ரமேஷ், மதுரை

இங்கே உள்ள ஆன்மிக விளக்கங்கள் தெளிவாகவும் எளிமையாகவும் இருக்கின்றன.
🌼 சிந்து, தஞ்சாவூர்

இந்த தளம் என் வீட்டில் ஒரு புனித இடமாகவே மாறியுள்ளது.
🌺 கிருஷ்ணன், கோவை

என் ஆன்மிகப் பயணத்தில் வழிகாட்டியாக இந்த தளம் இருந்தது. நன்றி!
🌹 சுகந்தி, சென்னை

நான் தேடிய பல தகவல்களை இங்கு ஒரே இடத்தில் நேர்த்தியாகப் பெற்றேன்.
💠 லலிதா, ஈரோடு

இந்த தளம் தினசரி ஒரு நல்ல எண்ணத்தை என் உள்ளத்தில் விதைக்கிறது.
🌿 அருண், திருநெல்வேலி

🛕
108 ஆலயம்
📜
பிரபந்தம்
🎧
ஸ்லோகம்
📚
குறிப்புகள்