📿 வைணவ அடிப்படைகள் | 🛕 திவ்யதேச வரலாறுகள் | 📘 நாலாயிர திவ்யபிரபந்தம் | 🎧 ஸ்லோகங்கள் | 📅 தினசரி பக்தி வழிகாட்டி | ❓ பக்தி கேள்விகள் | 📖 ஆன்மீக நூல்கள் | 🧒 குழந்தைகள் பக்தி பகுதி | 🛕 தரிசன நேரங்கள் | 📜 பக்தர் அனுபவம் | 🛐 ஸ்ரீவைணவ பாடசாலை | 🗓️ ஸ்ரீவைணவ நாட்காட்டி | 🔱 விஷ்ணு சஹஸ்ரநாமம் | 🌄 ஸ்ரீ வெங்கடேச மஹாத்மியம் | 🌺 திருப்பாவை | 🛕 திருத்தல தரிசனம் | ✨ அற்புத நிகழ்வுகள் | 👣 வைஷ்ணவ ஆச்சாரியர்கள் | 🕉️ நாமஸ்மரணையின் மகிமை | 🎙️ பக்தி ஸ்லோகங்கள் | 🔔 கோவில் விழாக்கள்

ஒரு ரகஸ்யம் உங்களுக்கு...

Sri Mahavishnu Info
''ஓம்'' எனும்  ப்ரணவ மந்திரத்தைப் பற்றி எவ்வளவோ சொல்லலாம்.  எல்லா மந்திரங்களுக்கும் அது மூலாதாரம். உயிர்.  

''அ, உ, ம்''  எனும்  மூன்று அக்ஷரங்கள் தொகுப்பு.

அ: அண்டம், ப்ரபஞ்சம் .
உ:  பிண்டம், உடல்.   
ம்: அண்டத்திலும் பிண்டத்திலும் எங்கும்  கலந்துள்ள விளக்கமுடியாத விண்ணொலி.

ஓங்கார ஓசை. நாதம்.

நம் தேகத்தின் உள்ளே  சுற்றும்  வாயுக்கள். அக்னி கலந்த  சக்தி ஓம்காரம்.  கீழிருந்து  சிரசு நோக்கி செல்லும் அதற்கு  பெயர், எல்லை, ஒளி, நிறம், இல்லை.   தெய்வீகம், அளவு, வடிவம், சூனியம் என்று  பல  கலவைகள்  ஒன்றி  அது உடலில் பரவுவதை  ஞானிகள்  அனுபவிக்கிறார்கள். இந்த ஞான ஒளி உள் ஒளியாகி குண்டலினி  சக்தியாக வெளிப்படும்.

பிரபஞ்சத்தில் தோன்றும் எல்லாவற்றுக்கும் உரிய  தேவர்கள் உண்டு. 

ஓம் எனும் பிரணவத்தில் ‘அ’ என்பது முதலில் தோன்றுவதால் 
‘அ’ : ஸ்ரிஷ்டி .  
‘உ’ :  வளர்ச்சி.   எங்கும் வியாபித்து பரவ செய்வது. ஸ்திதி.       
ம் :  முடிவு. ஸம்ஹாரம் . 

படைத்தல், காத்தல், அழித்தல் மூன்றும் தான்  ஓம்கார சக்தி. ப்ரம்மா, விஷ்ணு, சிவன் இதன் காரண தெய்வங்கள்.

மூச்சை உள்ளிழுக்கும் போது,  மனதில் வைக்கவேண்டிய   அக்ஷரம்: ஓ.  வெளிவிடும்போது   ம்:
வேதங்கள்  உபநிஷதங்கள்    நிறைய   ஓம்   பற்றி சொல்கின்றன.

கீதை :  8.13 ஸ்லோகம்:  ओमित्येकाक्षरं ब्रह्म व्याहरन्मामनुस्मरन् | य: प्रयाति त्यजन्देहं स याति परमां गतिम् || 13||
எவனொருவன்  உயிர் பிரியும் தருணத்திலாவது என்னை நினைத்து  ஓம் என்கிறானோ, அவன் பர கதி அடைவான். மோக்ஷம் பெறுவான்.

திருமூலர் : ஓமெனு ஓங்காரத் துள்ளே ஒரு மொழிஓமெனு ஓங்காரத் துள்ளே உருவம்ஓமெனு ஓங்காரத் துள்ளே பல பேதம்ஓமெனு ஓங்காரம் ஒண்முத்தி சித்தியே''
ஓம்:  ஒரு  சொல்.  ஒரு உருவம், எண்ணற்ற  பேதம். எல்லாவற்றிலும் மேலான  சித்தி அருள்வது.

ஆதிசங்கரர்:  உபதேச ஸாஹஸ்ரி:    ''எது ஞானவடிவமோ,.ஆகாயம்  போல்  உருவமற்றதோ,  சகலத்துக்கும்  மேலானதோ, எப்பொழுதும் ஒளிர்வதோ,  இறப்பு பிறப்பற்றதோ,   இரண்டற்ற ஒன்றோ, எதோடும் சேராத  தனித்வமாக எங்கும் நிறைந்ததோ, சுதந்திரமானதோ  அது தான் நான்  எனும்  ஓம்.''

ஆகவே  ஓம்  ஆத்மாவின் ஒலி . ஸர்வ சக்தி. உணர்ச்சிகளை விலக்குவது . முதுகெலும்பை பலப்படுத்தும் ஆரோக்ய  யோக சக்தி. வியாதி நிவாரணி. ஜீவநாதம்.ஜீவானந்தம்.

நாம் செய்ய வேண்டியது:

தனிமையில் ஒரு சில நிமிஷங்கள் தினமும்  ஓம் என்று அடிவயிற்றிலிருந்து மூச்சு உள்ளிழுத்து உச்சரிப்போம்.  ஒரு நிமிஷ நேரத்தில்   ஆறுமுறை   ஓம்  நிதானமாக சொல்லலாம்.   உடல்,  உள்ள ஆரோக்கியத்துக்கு இது அவசியம்.   பிரபஞ்ச சக்தியை நமக்குள் தரும்.  மூளைக்கும், உடலில் சீரான ரத்த ஓட்டத்துக்கும் இது  சிறந்த யோக பயிற்சி. இதயத்துக்கு நல்லது. அழுத்தங்கள் உணர்ச்சிகளின் ஆக்கிரமிப்பு அடங்கும். மனது ஒருநிலைப்படும்.  ஜீரண சக்தி வலுப்படும். புலன்களை கட்டுப்படுத்தும்.  ஆக்க பூர்வ  சிந்தனை வளரும். வாழ்வில்   வெற்றியடைந்து முன்னேற்றம்,  நீண்ட ஆயுள் தரும். எல்லோராலும் விரும்பப்படும் தகுதி உண்டாகும். முகத்தில் தேஜஸ் ஒளிரும். 

108 தடவை சொல்பவன் பாக்யசாலி.  18 நிமிஷம் தானே  ஆகும்.  நேரம் காலம்  நிர்ப்பந்தமில்லை, எப்போது வேண்டுமானாலும்  உச்சரிக்கலாம்.  இந்த  அபூர்வ மருந்து காசில்லாமல், கலப்படமில்லாமல் எல்லோருக்கும் கிடைக்கிறதே. உபயோகித்து ஆனந்தம் அடையலாமே .
💜

பக்தர்கள் சொல்கிறார்கள்

இந்த தளத்தை வாசித்த பிறகு, என் மனம் சாந்தியையும் நம்பிக்கையையும் பெற்றது.
🌸 ரமேஷ், மதுரை

இங்கே உள்ள ஆன்மிக விளக்கங்கள் தெளிவாகவும் எளிமையாகவும் இருக்கின்றன.
🌼 சிந்து, தஞ்சாவூர்

இந்த தளம் என் வீட்டில் ஒரு புனித இடமாகவே மாறியுள்ளது.
🌺 கிருஷ்ணன், கோவை

என் ஆன்மிகப் பயணத்தில் வழிகாட்டியாக இந்த தளம் இருந்தது. நன்றி!
🌹 சுகந்தி, சென்னை

நான் தேடிய பல தகவல்களை இங்கு ஒரே இடத்தில் நேர்த்தியாகப் பெற்றேன்.
💠 லலிதா, ஈரோடு

இந்த தளம் தினசரி ஒரு நல்ல எண்ணத்தை என் உள்ளத்தில் விதைக்கிறது.
🌿 அருண், திருநெல்வேலி

🛕
108 ஆலயம்
📜
பிரபந்தம்
🎧
ஸ்லோகம்
📚
குறிப்புகள்