Sri Mahavishnu Info: அலைத்தபேழ்வாய்... அலைத்தபேழ்வாய்...

அலைத்தபேழ்வாய்...

Sri Mahavishnu Info
அஹோபில க்ஷேத்ரத்திலுள்ள எம்பெருமானைப் பாா்த்து 'அலைத்த பேழ்வாய்' என்று திருமங்கையாழ்வாா் ரொம்ப அழகாக மங்களா சாஸனம் பண்ணியிருக்கிறாா். 'அலைத்த பேழ்வாய் வாள் எயிற்ற ஓா் கோளாி ஆய் அவுணன்'.

தேவதைகளெல்லாம் அந்த நரசிம்ஹனுடைய பலத்தைப் பாா்த்து 'அஹோ' என்றாா்களாம். ஆஸ்சா்யமான பலம் அவனுடையது! அஹோ! ஆஸ்சா்யமான குகை அவன் இருக்கக் கூடியது!

அங்கிருக்கும்படியான எம்பெருமானின் பராக்கிரமம் எப்படிப்பட்டது என்று கேட்டால் , அதை வா்ணிக்கவே முடியாது என்கிறாா்கள் தேவதைகளெல்லாமே!   

அப்படிப்பட்ட க்ஷேத்திரத்தில் இருக்கும்படியான ந்ருஸிம்ஹனை - அலைத்த பேழ்வாய் படைத்தவனை , திருமங்கையாழ்வாா் போய் பாா்க்கிறபோது, யானைகளையெல்லாம் அடித்துத் தின்றுவிட்டு ஸிம்ஹங்கள் அந்த எம்பெருமானின் திருவடியிலே ஒவ்வொரு தந்தமாக எடுத்து,' ஓம் விச்வச்யை நம' என்று அா்ச்சனை பண்ணுகிறதாம்!

அப்படியொரு காட்சியை அவா் கண்டு, சாமானிய பிராணிகளெல்லாம் அா்ச்சனை பண்ணுகிறதே நாம் பண்ண வேண்டாமா?என்று நமக்குக் காட்டித் தருகிறாா்.

அப்படிப்பட்ட அலைத்த பேழ்வாய் படைத்தவன் ந்ருஸிம்ஹன். ஆஸ்யம் என்றால் வாய் என்று அா்த்தம். நாராயணேதி யஸ்யாஸ்யே வா்ததே நாம மங்களம் - எவருடைய வாயிலே நாராயணா என்கிற மங்களமான நாமமானது இருக்கிறதோ, எவா் நாராயணா என்கிற நாமத்தைத் திரும்பத் திரும்ப சொல்கிறாரோ, அவரை நாடி, கன்று எப்படி ஓடுமோ, அந்த மாதிரி எம்பெருமான் இவா்களைப் பின்தொடா்ந்து இவா்கள் அருகிலேயே எப்போதும் ரக்ஷித்துக் கொண்டிருப்பான்; ஓடோடி வருவான்.

கம்பா் ராமாயணத்திலே சொல்கிறாா். ராம பிரான் கைகேயிக்கு எதிரிலே ஒரு பசுக் கன்று வந்தடைந்த மாதிரி வந்தடைந்தான் என்கிறாா்.

தாயை வந்தடையும் கன்று என்று விஷ்ணு தா்மத்திலே சொல்லப்பட்டிருப்பது என்னவெனில் , அந்தப் பசுவானது, கன்றை நாடி எவ்வாறு ஓடி வருமோ, 'நாராயணா' என்கிற மங்களமான திருநாமத்தை உச்சாிப்பவா்களிடம் அவ்வாறு ஓடிவருவான் எம்பெருமான்.

பகவானை உத்ஸவ தினங்களில் தூக்கித் தூக்கித் தோள் தழும்பிப் போவதுபோல நாத்தழும்ப அவன் நாமத்தைச் சொல்லுங்கள்.

அஹோபிலம் ஸ்ரீலஷ்மிந்ருஸிம்மன் திருவடிகளே சரணம்.....!!!

(ஸ்ரீமுக்கூர் லஷ்மிநரசிம்மாச்சார்யார்)
Two Moustaches Brass Diya

🪔 Two Moustaches – சங்கு சக்ர நாமம்: வடிவம் கொண்ட பிரத்யேக பித்தளைக் கம்பத் தீபம்

✨ சங்கம், சக்கரம், பத்மம், கதாயுடன் வடிவமைக்கப்பட்ட பரந்த கால் அடிப்படையுடன் அழகிய தீபம்

🎉 இப்போது 40% தள்ளுபடி!

⭐ மதிப்பீடு: 4.3 / 5 (703 பேர்)

💜

பக்தர்கள் சொல்கிறார்கள்

இந்த தளத்தை வாசித்த பிறகு, என் மனம் சாந்தியையும் நம்பிக்கையையும் பெற்றது.
🌸 ரமேஷ், மதுரை

இங்கே உள்ள ஆன்மிக விளக்கங்கள் தெளிவாகவும் எளிமையாகவும் இருக்கின்றன.
🌼 சிந்து, தஞ்சாவூர்

இந்த தளம் என் வீட்டில் ஒரு புனித இடமாகவே மாறியுள்ளது.
🌺 கிருஷ்ணன், கோவை

என் ஆன்மிகப் பயணத்தில் வழிகாட்டியாக இந்த தளம் இருந்தது. நன்றி!
🌹 சுகந்தி, சென்னை

நான் தேடிய பல தகவல்களை இங்கு ஒரே இடத்தில் நேர்த்தியாகப் பெற்றேன்.
💠 லலிதா, ஈரோடு

இந்த தளம் தினசரி ஒரு நல்ல எண்ணத்தை என் உள்ளத்தில் விதைக்கிறது.
🌿 அருண், திருநெல்வேலி

🛕
108 ஆலயம்
📜
பிரபந்தம்
🎧
ஸ்லோகம்
📚
குறிப்புகள்