
ஸ்ரீவைஷ்ணவர்களின் பத்துவித வகைகள்
ஸ்ரீ வைஷ்ணவத்தில், பக்தர்களின் ஆன்மிக நிலைகளின் அடிப்படையில் பத்துவித வகைப்படுத்தல்கள் உள்ளன:
- 1. அத்வேஷி – விஷ்ணுவுக்கும் அவனது பக்தர்களுக்கும் எதிராக வெறுப்பில்லாதவன்.
- 2. அனுகூலன் – வைஷ்ணவர்களுடன் நட்புடன் பழகி, கோயில் வழிபாடுகளில் ஆர்வம் கொண்டவன்.
- 3. நாமதாரி – விஷ்ணுவின் திருநாமங்களில் ஒன்றைத் தன் பெயராக கொண்டிருப்பவன்.
- 4. சக்ராங்கி – சங்கு சக்கர சின்னங்களைத் தோள்களில் தரித்திருப்பவன்.
- 5. மந்திரபாடி – திருஎட்டெழுத்து மந்திரம் ஜபித்து காரியசித்தி பெறுபவன்.
- 6. வைஷ்ணவன் – ஐம்புலன்களின் ஆசைகளையும், இதர தேவர்களின் வழிபாடுகளையும் விட்டவன்.
- 7. ஸ்ரீ வைஷ்ணவன் – ஸ்ரீமன் நாராயணனை மட்டுமே மனதில் நிலைநிறுத்தி தியானிப்பவன்.
- 8. ப்ரபந்நன் – சரணாகதியே ஒரே வழியாகக் கருதி, பகவான் அருளை நாடுபவன்.
- 9. ஏகாந்தி – பகவானையே உபாயமாகப் பற்றிக்கொள்பவன்.
- 10. பரம ஏகாந்தி – ஆச்சார்யனை சரணம் அடைந்து, அவரது வழியில் பகவனை அடைய நினைப்பவன்.
🌿 ஸ்ரீ வைஷ்ணவ நெறியை பின்பற்றுவது எப்படி?
முதல் ஆறு நிலைகளை பஞ்சசம்ஸ்காரம் மூலம் அடையலாம். நாமதாரி என்பது தாஸ்யநாமம் மூலம். சக்ராங்கி என்பது சங்க சக்கர சின்னங்களை பெறுவதன் மூலம். மந்திரபாடி என்பது ரகஸ்யத்ரய உபதேசத்தின் மூலம்.
மீதமுள்ள நிலைகள் நம் முறையான ஆன்மிக சாதனையின் மூலம் அடைய வேண்டியவை. இது சுலபமாகத் தோன்றலாம்; ஆனால், உண்மையில் கடைபிடிப்பதே சிரமம்.
மின்னின் நிலையில மன்னுயிர் ஆக்கைகள் – ஆகவே உடனே ஆச்சார்யனை சரணம் அடைந்து, பரமபதத்தை நோக்கி பயணிக்க வேண்டும்!
📌 முக்கிய அறிவுரை
பஞ்சசம்ஸ்காரம் பெறாதவர்கள் ஒரு நல்ல ஆசார்யனைத் தேடி, சரணாகதி செய்து இந்த பத்துத் தகுதிகளையும் நோக்கிச் செல்லுங்கள். கலியுகத்தில் இது மிக அவசியம்.