Sri Mahavishnu Info: கோடியில் ஒரு சிலரே அறிவார்கள்.. அப்படிபட்டவர்களுக்கே எமது காட்சி கிட்டும் கோடியில் ஒரு சிலரே அறிவார்கள்.. அப்படிபட்டவர்களுக்கே எமது காட்சி கிட்டும்
```
📿 வைணவ அடிப்படைகள் • 🛕 108 திவ்யதேசங்கள் • 📜 நாலாயிர திவ்யபிரபந்தம் • 🎧 தினசரி ஸ்லோகங்கள் • 📅 இன்றைய வைபவம் • 🙏 தினசரி பக்தி வழிகாட்டி • ❓ பக்தி கேள்வி & பதில்கள் • 📖 ஆன்மீக நூல்கள் • 🧒 குழந்தைகள் பக்தி பகுதி • 🎓 ஸ்ரீவைஷ்ணவ பாடசாலை • 🔱 விஷ்ணு சஹஸ்ரநாமம் • 🌄 ஸ்ரீ வெங்கடேச மஹாத்மியம் • 🌺 திருப்பாவை • 👣 வைஷ்ணவ ஆச்சார்யர்கள் • 🛕 திருத்தல தரிசனம் • 🔔 கோவில் விழாக்கள் • 📜 பக்தர் அனுபவங்கள் • ✨ அற்புத நிகழ்வுகள் • 🕉️ நாமஸ்மரணையின் மகிமை • 📚 பக்தி குறிப்புகள் • 🌸 ஆழ்வார்கள் வரலாறு • 🙏 ஸ்ரீவைஷ்ணவ சம்பிரதாயம் • 🎙️ பக்தி உரைகள் & ஆடியோ • 📆 ஸ்ரீவைஷ்ணவ நாட்காட்டி • 🌟 புதிய பக்தி பதிவுகள்

கோடியில் ஒரு சிலரே அறிவார்கள்.. அப்படிபட்டவர்களுக்கே எமது காட்சி கிட்டும்

Sri Mahavishnu Info
"நான் யாராக இருக்கின்றேன்.. எப்படி இருக்கின்றேன்.. என்று கோடியில் ஒரு சிலரே அறிவார்கள்.. அப்படிபட்டவர்களுக்கே எமது காட்சி கிட்டும் " என மன்னனிடம் விளக்கும் ஸ்ரீ மகா விஷ்ணு

ஸ்ரீ மகா விஷ்ணுவின் தரிசனம் வேண்டி பலகாலம் தவம் இருந்த மகேந்திரபுரி நாட்டு மன்னன் கார்கோடனுக்கு அன்று ஸ்ரீ விஷ்ணுவின் தரிசனம் கிடைத்தது.....!!

பெரும் மகிழ்ச்சி அடைந்த மன்னன் பகவான் மகாவிஷ்ணுவிடம் ஒரு வரம் கேட்டான்.....!!

ஸ்ரீ மகா விஷ்ணுவும் என்ன வரம் வேண்டுமோ கேள் என்று மன்னனிடம் சொல்ல..

எப்படி நீங்கள் எனக்கு தரிசனம் தந்தீர்களோ...... அதேபோல.. 

என் மனைவி ராணியாருக்கும்.. 
மந்திரி மற்றும் 
அரச குடும்பத்தினருக்கும்... 
நாட்டின் மக்கள் 
அனைவருக்கும்
நீங்கள் காட்சி தரவேண்டும்.. 
என்று மிகவும் ஆவலான வரத்தை கேட்டான்.

இதற்கு மகாவிஷ்ணு அவரவர்களின் கர்ம வினையைப் பொறுத்தே அமையும் இருந்தாலும்,
மன்னன் வரத்தை கேட்டுவிட்டதால் மகா விஷ்ணுவும் அதற்கு சம்மதித்தார்.....!!

அதோ  தெரிகின்றதே ஒரு உயர்ந்த மலை அங்கே அனைவரையும் அழைத்துக்கொண்டு வா..
காட்சி தருகின்றேன் என்று சொல்லி மறைந்தார்.....!

மன்னனும் நாட்டில் அனைவருக்கும் தண்டோரா போட்டு

அரச குடும்பத்தினருடனும்.. மக்களுடனும் மலையை நோக்கி புறப்பட்டான்....!

அனைவரும் பகவான் ஸ்ரீமகா விஷ்ணுவை காணும் ஆவலில் மலையேற துவங்கினர்....!

சிறிது உயரம் சென்றவுடன்.. 
அங்கே செம்பு பாறைகள் தென்பட்டன....!
உடனே,
மக்களில் நிறைய பேர்.. 
செம்பை மடியில் கட்டிக்கொண்டு..
சிலர் பாறைகளை உடைத்து தலையில் வைத்துக் கொள்ளவும் ஆரம்பித்தனர்.

மன்னன் அனைவருக்கும் கடவுளின் காட்சி கிடைக்க போகின்றது.....!!

இதெல்லாம் அவர் அருளுக்கு முன்னால் ஒன்றுமே இல்லை அனைவரும் வாருங்கள் என்று உரக்க சப்தமிட்டான்.

அதற்கு மன்னா இப்பொழுது 
இதுதான் எங்களுக்கு தேவை

பகவான் ஸ்ரீமகா விஷ்ணுவின் காட்சியை வைத்து என்ன செய்வது" என்று ஒட்டுமொத்தமாக கூட்டத்தில் சிலரின் குரல் எழும்பியது.

எப்படியோ போங்கள் என்று மீதி இருப்பவர்களை அழைத்துக்கொண்டு மலையேற துவங்கினான் மன்னன்..

மலையின் சில மைல் தூரத்தை கடந்தவுடன் அங்கே வெள்ளியிலான பாறைகளும் வெள்ளி துண்டுகளும் நிறைய இருந்தன...

அதை பார்த்த கொஞ்சம் மீதி இருந்த மக்கள் ஓடிச்சென்று வெள்ளி துண்டுகளை மூட்டை
கட்ட ஆரம்பித்தனர்...

மன்னன் மறுபடியும் மக்களுக்கு 
உரக்க சொன்னான் விலைமதிக்க முடியாத பகவான் ஸ்ரீமகா விஷ்ணுவின் காட்சி நமக்கு கிடைக்க போகின்றது

அதற்கு முன்னால் இந்த வெள்ளிக்கட்டிகள் எதற்கு பயன்பட போகின்றன" என்று உரைத்தான்.

மன்னா இப்பொழுது கடவுளின் காட்சியை விட,
வெள்ளிக் கட்டிகளே பிழைப்புக்கு உதவும் என்று சொல்லிக் கொண்டே 
மக்கள் முடிந்த அளவு அள்ள துவங்கினர். உங்கள் தலையெழுத்து என்று சொன்ன மன்னன்.. 

மீதி இருந்த ராஜ குடும்பத்தினரோடு மலையேற ஆரம்பித்தான். 
இப்பொழுது சிறிதுதொலைவில் தென்பட்டது தங்கமலை
ராஜகுடும்பத்தினர் பாதி பேர் அங்கே சென்றுவிட

மீதி இருந்தவர்கள் 
ராணியும்..
மந்திரியும்,
தளபதியும், 
மற்றும் முக்கியமானவர்கள் மட்டுமே

சரி வாருங்கள்,
செல்வோம் என்று மீதி இருந்தவர்களை அழைத்துக்கொண்டு முக்கால் வாசி மலையை கடந்திருப்பான் மன்னன்

அங்கே தென்பட்டது வைரமலை....!!
அதைப்பார்த்த ராணி முதற்கொண்டு அங்கே இருந்தவர்கள் ஓடிவிட

மலையின் உச்சியில் தன்னந்தனியாக போய் நின்றான் மன்னன்

பகவான் ஸ்ரீமகா விஷ்ணு மன்னன் முன் தோன்றி  "எங்கே உன் மக்கள்" என்றார்.

மன்னன் தலை குனிந்தவனாக
அவர்களது வினைப்பயன் அவர்களை அழைத்து சென்றது அய்யனே
என்னை மன்னியுங்கள்
என்றான் மன்னன்

அதற்கு கடவுள் ,
"நான் யாராக இருக்கின்றேன் எப்படி இருக்கின்றேன் என்று கோடியில் ஒரு சிலரே அறிவார்கள்.
அப்படிபட்டவர்களுக்கே 
எமது காட்சி என்பது கிட்டும்

உலக இச்சைகள் என்ற சேற்றை பூசிக்கொண்டவர்கள் சிலருக்கு,
உடல்..செல்வம்..சொத்து... என்ற,
செம்பு.. வெள்ளி..
தங்கம்..வைரம்..
போன்ற ஏமாற்றும் மாயைகளில் சிக்கிக் கொண்டுள்ளனர்.

இவற்றையெல்லாம் கடந்து இச்சையற்ற நிலையில் இருப்பவரே..
எம்மை அடைவர்
என்று சொல்லி விண்ணில் மறைந்தார் பகவான் ஸ்ரீமகா விஷ்ணு....!!
4 Vedhas 18 Puranas

📖 4 வேதங்கள் + 18 புராணங்கள்

இப்போது எளிய தமிழில் (PDF)

சனாதன தர்மத்தின் ஆன்மீக பொக்கிஷத்தை
உங்கள் மொபைலில் பெறுங்கள் 🙏

🎁 வெறும் ₹199 மட்டும்!

🔗 மேலும் விவரங்கள் அறிய
💜

பக்தர்களின் மெய்சிலிர்க்கும் அனுபவங்கள்

❝ இந்த தளத்தை வாசித்த பிறகு, என் மனம் சாந்தியையும் நம்பிக்கையையும் பெற்றது.

🌸 ரமேஷ், மதுரை

❝ இங்கே உள்ள ஆன்மிக விளக்கங்கள் தெளிவாகவும் எளிமையாகவும் இருக்கின்றன.

🌼 சிந்து, தஞ்சாவூர்

❝ இந்த தளம் என் வீட்டில் ஒரு புனித இடமாகவே மாறியுள்ளது.

🌺 கிருஷ்ணன், கோவை

❝ என் ஆன்மிகப் பயணத்தில் வழிகாட்டியாக இந்த தளம் இருந்தது. நன்றி!

🌹 சுகந்தி, சென்னை

❝ நான் தேடிய பல தகவல்களை இங்கு ஒரே இடத்தில் நேர்த்தியாகப் பெற்றேன்.

💠 லலிதா, ஈரோடு

❝ இந்த தளம் தினசரி ஒரு நல்ல எண்ணத்தை என் உள்ளத்தில் விதைக்கிறது.

🌿 அருண், திருநெல்வேலி

❝ இங்குள்ள விரத முறைகளும் வழிபாட்டுக் குறிப்புகளும் வாழ்க்கைக்கு மிக உதவியாக உள்ளன.

🌻 மீனாட்சி, திருச்சி

❝ தினசரி ராசிபலன் மற்றும் ஆன்மிக செய்திகள் என் நாளை சுபிட்சமாக தொடங்க உதவுகிறது.

☸️ கார்த்திக், சேலம்

❝ ஸ்லோகங்களின் அர்த்தங்களை இவ்வளவு எளிமையாக இதுவரை நான் படித்ததில்லை!

🪔 காயத்ரி, வேலூர்

❝ மன அழுத்தத்தில் இருந்த எனக்கு இங்குள்ள கட்டுரைகள் பெரிய ஆறுதலை தந்தன.

🪷 சுந்தர், திருப்பூர்

❝ கோயில்களின் தல புராணங்கள் பற்றிய தகவல்கள் மிக அருமை. குடும்பத்துடன் படிக்கிறோம்.

🔔 பத்மநாபன், திண்டுக்கல்

❝ ஒவ்வொரு பண்டிகையின் பின்னணியிலும் உள்ள உண்மையான காரணங்களை இதிலிருந்து புரிந்துகொண்டேன்.

🌾 ரேவதி, நாகர்கோவில்
🙏
Donate Bhakti Services
🛕
📜
🏠
🎧
📚